Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 8

வேலையெல்லாம் முடித்துவிட்டு அருன் வீட்டிற்கு வரும் போது நித்யா தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை.அதிதியை அழைத்தவன்

"எப்படி இருக்கா.ஏதும் அதிர்ச்சியில் இருக்காளா இல்லை நோர்மலுக்கு ஆகிட்டாலா"என்றவனை

"உனக்கு அவள பத்தி தெரியலன்னா.அவ என்ன பெரிய பிரச்சினை வந்தாலும் டென்சன்லாம் ஆக மாட்டா.அப்படியே ஆனாலும் உடனே பழைய நிலமைக்கு வந்துடுவா.நீ விட்டுட்டு போய் 2 மணித்தியாலத்துலயே அந்த பக்கி என்ன கலாய்க்க ஆரம்பிச்சிட்டா"என்றவளை

"சரிடா.அவ அம்மாவும் தங்கச்சியும் ஏதோ வேலையா பெங்களூர் போயி இருக்காங்க போல.இப்போ அவ தன்னோட சித்தி வீட்லதான் தங்கி இருக்கா.இன்னும் 2 நாளைக்கு அவ இங்கேயே இருக்கட்டும்.சரியா"என்றவனை நக்கலாக சிரித்து

"ஆமா நீ எப்படின்னா அந்த இடத்துக்கு போன.அவள ஏதும் பாலோ பன்றியோ"என்றவளை

"ச்சேச்சே என்ன பேசுர.அவள நான் எதுக்கு பாலோ பன்ன போறேன்.உன் போன் திடீரென ஆன் ஆச்சா.ஆனா அது போன ரூட் கொஞ்சம் சரியில்லாத மாதிரி இருந்திச்சி.நீயும் வெளில எங்கயும் போகல.அவ தனியா ஏன் போறான்னு சும்மா பார்க்க போனேன்.போன இடத்துல இப்படி ஆகிடுச்சு.நல்ல வேல ஜீவாவ வர வெச்சேன்.இல்லன்னா நம்ம டிபார்ட்மண்டுக்கு இதெல்லாம் பன்ன முடியாது" என்றவனை

"நீ சொல்ரத பார்த்தா நம்புற மாதிரி இல்லயே.ஏதோ இவள பாலோ பன்னி போன மாதிரி இல்ல இருக்கு.உன்ன நம்ப முடியாது.என்ன ஏதும் லவ்ஸா.அப்படின்னா சொல்லுன்னா.நான் பேசுறேன் அவகிட்ட "என்றவளின் தலையில் குட்டியவன்

"போய் வேலய பாரு குட்டிச்சாத்தான்"என்று கூறிச்சென்றவனை அதிதி

'நான் குட்டிச்சாத்தானா.இருடா,உனக்கு என்ன பன்றேன்னு பாரு.ஆனா கடைசி வரைக்கும் நீ அவள லவ் பன்றேன்னும் சொல்ல, பன்னலைன்னும் சொல்லலயே.சரி இந்த நாயாச்சும் சொல்லுதான்னு பார்க்கலாம்'என்று மனதுக்குள் என்னியவள் தன் அறைக்குள் சென்று பார்த்தால்.நித்யா அப்போதுதான் தூங்கி எழுந்தவள்

"அதிதி என் போன் உங்கிட்டதானே இருக்கு .கொஞ்சம் கொடுக்கிறியா"என்றவளை

"ஏன் ,மேடத்துக்கு அதுல இருக்குற ஆள பார்க்கனுமோ"என்று நிஜமாகவே கோவித்துக்கொண்டாள்.அப்போதுதான் நித்யாக்கு உறைத்த தன்னுடைய போனை அவள் அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருப்பாள் என்று.உடனே நித்யா பதறி

"ஹேய் அதிதி ,ப்ளீஸ்டி .தப்பா நினைக்காத.நான் வேனும்னு உங்கிட்ட சொல்லாம இருக்கலடி.உங்கிட்ட சொன்னா நீ எப்படியும் அவங்க கிட்ட சொல்லுவ.அது எனக்கு பிடிக்கலப்பா .என் மனசுல எப்படி ஆசை வந்திச்சோ அது போலவே அவங்க மனசுலயும் வரனும்னு நினைச்சேன்.ப்ளீஸ்டி கோவிக்காதப்பா"என்றவளை

"அடி லூசு என்கிட்ட நான் உன் அண்ணண காதலிக்கிறேன்,ஆனா அவருகிட்ட சொல்லாதனு சொன்னா நான் சொல்லாம இருக்க போறேன்.ஆனாலும் நீ மறைச்சது எனக்கு எவ்வளவு கவலை தெரியுமா"என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டவளை

"ஏய் அதிதி ப்ளீஸ்டி ,இப்படி இருக்காத.எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா"என்றவளை

"அப்படியா .அப்படின்னா நான் சொல்ரத நீ செய்.அதுதான் உனக்கு பனிஷ்மண்ட் "என்றாள்.

"சரிடி என்ன சொல்லித்தொலை"என்றாள் நித்யா.

"இன்னைக்கு நீ மட்டன் பிரியானி போடுறே"என்று ஒரே குண்டாக போட்டாள்.அதற்கு நித்யாவும்

"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல மேடம்.உன் கையால நீ போட்ட காபிய நான் குடிச்சிட்டேன்.சோ உனக்கு முதல்ல நம்ம சால்ஞ்ல நான் வின் பன்னிட்டேன்.சோ இனி உனக்கு ப்ரியானி என்னமா..ப்ரைட் ரைஸ் கேட்டாலும் நான் செஞ்சு தாரேன்"என்றவளை
அதிதி தலையில் அடித்துக்கொண்டு

"எங்கண்ணன் ஒரு அப்புறானிடி.உன்ன கட்டிக்கிட்டு அவன் என்ன பாடு பட போறானோ"என்றவளை

"அதெல்லாம் எங்க ஆள நாங்க நல்லா பார்த்துக்குவோம்.ஆனா தயவு செய்து யார்கிட்டயும் இது பத்தி பேசாத.எனக்கு அவரோட விருப்பம் முக்கியம்டி "என்றவளை அருன் சத்தமிட்டு

"ஓய் அதிதி ..அம்மாவும் அப்பாவும் வெடிங்க் முடிச்சிட்டு சேகர் அங்கிள் வீட்டுக்கு போய் இருக்காங்க.அங்க ரொம்ப மழை பெய்யுதாம்.சோ அவங்க நைட் வரமாட்டாங்களாம். வருன் அவன் ப்ரெண்ட் கூட பாண்டிச்சேரி போறானாம். நைட்கு நம்ம மூணு பேரும்தான்.என்ன செய்யலாம்.சமையலா இல்ல ஆடர் பன்னலாமா "என்றவனை அதிதி

"அண்ணா நீ இரு 2 கிலோ மட்டன் வாங்கி வா.இவ நல்லா பிரியானி போடுவா"என்று கூறிவிட்டு மெதுவாக நித்யாக்கும் மட்டும் கேட்கும் விதமாக

"அடியே .நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.நல்லா சமைச்சு அவன் கிட்ட நல்ல பேரு வாங்கு ஓக்கே.அவன் ஒரு சாப்பாட்டு ராமன்.பார்த்து நல்லா பன்னுடி,ஆல் த பெஸ்ட் "என்றால் அதிதி.

அதிரிச்சியாக தன் தங்கையை ஏறிட்டவன்

"ஏண்டி நம்ம மூணு பேருக்கும் எதுக்குடி 2 கிலோ மட்டன்.தின்னி மாடு"என்று திட்ட அதிதியோ

"டேய் சகோதரா..இவ இன்னைக்குதான் எனக்கு சமைச்சு தரேன்னு சொல்லிருக்கா.நீ அதுல மண் அள்ளி போட்டுடாத.ப்ளீஸ் முதல்ல இடத்த விட்டு கிளம்பு.காத்து வரட்டும்"என்றவளை முறைத்துக்கொண்டு சென்றான்.

சமையல் அறையினுள் "ஓய் நித்ஸ்.நீ இன்னைக்கு எங்கண்ணண எப்படி சரி கவுக்கிற.ஓக்கே.சோ கொஞ்சம் மசாலா எல்லாம் அதிகமாவே போடு "என்றவளை முறைத்த நித்யா

"உனக்கு சமைக்க தெரியாது ஓக்கே.அதுக்காக ஒரு கொமன்சென்ஸ் கூடவா இல்ல.லூசு.டீ குடிக்கும் போது 4 கரண்டி சக்கரை போட்டா குடிக்க ஏலுமாடி.அது போலதான் .எல்லாமே அளவா போடனும்.நீ வாய முடிக்கிட்டு வந்து இந்த வெங்காயத்த கட் பன்னு"என்று நைசாக அவளிடம் வெங்காயத்தை தள்ளியவளை

"ஏண்டி உன்னையெல்லாம்...பேச்சோட பேச்சா எங்கிட்ட வெங்காயத்த தள்ளிவிட்டுட்ட.சரி சரி..அண்ணியாக போறவளாச்சே.இல்லைன்னா ..."

"இல்லைன்னா மட்டும் என்ன பன்னி கிழிப்பீங்க மேடம்"என்ற நித்யாவை

"ஏண்டி ஒரு நாத்தனார் எண்ட மரியாதை இருக்கா.இரு எங்கம்மா வரட்டும்.அவங்க கிட்ட சொல்லி உன் ஆட்டத்தை அடக்கிறேன்"என்றாள் அதிதி.

உடனே நித்யாவின் முகம் மாற

"அதிதி உங்கம்மா அப்பாக்கு என்ன பிடிக்குமாடி"என்று கவலையாக கேட்க

"அட போடி ...உன்ன யாருக்கு பிடிக்காம போகும்.நீதான் தி க்ரேட் நித்யா ஆச்சே.எங்கம்மாக்கு நித்யா என்ற பேரு ரொம்ப பிடிக்கும்.இப்போ கடைசியா மெர்சல் படம் பார்க்கும் போது ஹேய் நித்யாதான் இதுல ஹீரோயினா என்று கேட்குறாங்க.என்னடான்னு பார்த்த எங்கம்மாக்கு சமந்தா பேரு நித்யானு தான் தெரியுது ..அவங்களுக்கு அந்த பேரு மேல அவ்வளவு லவ்.சோ உன் பேர வெச்சே எங்கம்மாவ மடக்கிடலாம்"என்று கலாய்த்த தன் தோழியை

"ஓஹ் அப்போ என் பேராலதான் உங்கம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்கிறியா.பாரு மவளே உங்கம்மாக்கும் ஒரு நாளைக்கு நல்லா சமைச்சு போட்டு நல்ல பேரு வாங்கி...நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா இந்த பொண்ணுதான் வரனும்னு சொல்ல வைக்கல ஏன் பேரு நித்யா இல்லடி"என்றவளை

"அடி லூசு நீ பேர மாத்தினா எங்கம்மாக்கு பிடிக்காது"என்று கூறிவிட்டு நித்யாவை கலாய்த்த சந்தோசத்தில் அதிதி சிரித்துக்கொண்டு அவளே

"அப்புறம் எங்கம்மா உன்ன மருமகள் எண்டு சொல்லி எங்க ரெண்டாவது அண்ணனுக்கு கட்டி வெச்சிட போறாங்க கவணம் "என்று கண்ணடித்தவளை

"பேச்ச பாரு.நாயே...சரி சரி வாசல்ல அண்ணனோட வண்டி சத்தம் கேட்குது போய் மட்டன எடுத்து வா"என்று அதிதியை விரட்ட

"ஏன் உங்க ஆளுகிட்ட போய் நீங்க வாங்க மாட்டீங்களோ "என்றாள் அதிதி.

அவளை முறைத்து வாய மூடிகிட்டு கிளம்பு என்று சைகையால் வாயை பொத்தி கை நீட்டினால்.

-----------
புது கதாசிரியர் sunshine9261
நேரம் கிடைக்கும் போது படிங்க
https://my.w.tt/UuU01yZ20K

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro