Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 7






அருன் போலீஸ் ஜீப்பில் வராமல் தனது ரோயல் இன்பீல்டில் வந்ததால் நித்யாவும் அவனுடன் பைக்கிலேயே செல்ல ஜீவா சுமியிடம்

"ஹேய் டார்லிங்.அவன் பன்றதெல்லாம் பார்த்தா சம்திங்க் ஏதோ டிபரண்டா தெரியல.என்னோட டிபார்ட்மண்ட் மாதிரி இல்ல அவனோடது.ஏன்னா அவன் டிபார்ட்மண்ட்ல செம்மயா க்யூட்டான பொண்ணுங்கல்லாம் இருக்காளுங்க.எல்லாமே ஐடி பீல்ட்ல உள்ள பொண்ணுங்க.ஓவ்வொருத்தியும் ஹிந்தி நடிகை மாதிரி இருப்பாளுங்க.ஆனா இவன் எவளையுமே ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.ஆனா அந்த பொண்ணுங்களுக்கெல்லாம் இவன் மேல ஒரு க்றேஸ்.அதுலயும் அந்த சஹானா இருக்காலே அப்படியே அவிக்கா மாதிரி இருப்பா.. ஏப்ப பாரு இவன் பின்னாடியே சுத்துவா.. நமக்குதான் அப்படி எதுமே அமையல.ஹ்ம்ம்ம் "என்று பெருமூச்சு விட்டு

"நம்ம டிபார்ட்மெண்ட்லயும்தான் இருக்குதுங்களே"என்று இழுத்தவனை சுமித்றா முறைக்க அப்போதுதான் அவனுக்கு உரைத்தது அவளும் அவனது டிபார்ட்மெண்ட் என்று.

"என்கவுண்டர் பன்ன வேண்டியவன வெச்சிகிட்டு பேசுர பேச்ச பாரு.மவனே இனிமே சைபர் க்றைம் பக்கம் போனே,,,அப்புறமா இருக்கு உனக்கு"என்றவளை அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தான் (நான் சொல்ல வாரது என்கவுண்டர் வேலைய மக்காள்ஸ்.நீங்க ஏடாகூடமா ஏதும் நினைத்தாள் அதற்கு கம்பனி பொறுப்பல்ல).

நித்யாவை பைக்கில் ஏற்றிய அருன் உடனே தன் தங்கைக்கு கால் செய்து

"அதிதிமா.நான் நித்யாவ நம்ம வீட்டிற்கு கூட்டி வரேன்.அம்மா அப்பா எங்க?" என்று கேட்டவனை

"என்னது,நீ நித்யாவ கூட்டி வாரியா.டேய் என்னடா நடக்குது" என்ற தன் தங்கையை

"லூசு.முதல்ல அம்மா,அப்பா எங்க.அத சொல்டி"என்றவனை

"அம்மா ,அப்பா இரண்டும் பேரும் அப்பாவோட ப்ரெண்டோட சிஸ்டர்க்கு வெடிங்க்காம்.சோ நைட்தான் வருவாங்கன்னு சொல்லிட்டு போனாங்க.ஏன்னா"என்றாள்.

உடனே அவன் "நல்லாத போச்சு.அதிதி , அவளா சொல்ர வரை நீ நித்யாகிட்ட எதுமே கேட்காத ,அப்புறம் அவள கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க வை.டைம்கு சாப்பிட குடு ஓக்கே"என்றதும் அதிதி பயந்து

"அண்ணா என்னாச்சு.ஏதும் ப்ராப்ளமா "என்றவளை

"பராப்ளம் ஆக பார்த்துச்சு.ஆனா டைம்கு நான் போயிட்டேன் .சரி நீ ஏதும் டென்சன் ஆகாதா.நான் வந்து மத்தத விவரமா சொல்ரேன்"என்று கூறிவிட்டு காலை கட் செய்தான்.

நேற்று இரவில் இருந்து நடந்தவற்றை அருன் அசைபோட தொடங்கினான்.

இரவு வீட்டிற்கு வந்தவன் தன் மொபைலில் இரவு 11 மணியாகியும் அதிதியின் போன் வீட்டை ரீச் ஆகாதது அவனுக்கு ரெட் அலேர்ட் வர உடனே அதிதி வீட்டிற்கு வந்தாளா இல்லையா என பார்க்க அதிதியின் ரூமை தட்டியவனை

"டேய் எருமை.ஏண்டா அர்த்த ராத்திரியில எழுப்புற"என்றளை அவன் முறைத்து

"உன் மொபைல் எங்க"என்று கேட்க

"டேய் ஜேம்ஸ்பாண்ட்.அதான் நீ டிரக்கர் பிக்ஸ் பன்னிருக்கியே நீயே கண்டுபிடி"என்று கூறிவிட்டு அடுத்த பக்கம் திரும்பி படுக்க போனவளை தண்ணீர் பாட்டிலுடன் வந்து

"இப்ப நீ சொல்லல.அப்புறம் இந்த தண்ணிய உன் பெட்ல ஊத்திட்டு நான் போய்கிட்டே இருப்பேன்"என்றான்.

இவளோ 'இந்த குரங்கு செஞ்சாலும் செய்யும்' என நினைத்து

"அது நானும் நித்யாவும் ,ரெண்டு பேரோட ஹேண்ட் பேக்கும் ஒரே மாதிரி இருந்துச்சா.சோ தவறி மாத்தி எடுத்துட்டு வந்துட்டமா...."என்று தொடர போனவலை கையை நீட்டி

"போதும். உன் ரேடியோவ ஆப் பன்னு..ஆனா அவ ஏன் உன் போன ஆப் பன்னி வெச்சிருக்கா"என்றவனை

"ஏன் நீ அவளுக்கு கால் பன்னி கடலை போட போறியா"என்று கூறிவிட்டு அவனின் முகத்தை கூர்ந்து பார்த்தவளுக்கு எதுவும் பிடிபடாமல் போக அவனோ

"வாய மூடு குரங்கு.அண்ணா கிட்ட பேசுர பேச்சா இது"என்றவனை

"ஏண்டா நடுராத்திரி எழுப்பி ஏதோ கொலை கேசுக்கு கேள்வி கேட்குற மாதிரி கேட்டுட்டு இப்ப நீ என்ன சொல்ரியா...மவனே ஓடிடு ,இல்ல நிஜமாவே இங்க கொலை விழும்"என்ற தன் தங்கையின் தலையில் செல்லமாக குட்டி விட்டு

"குட்நைட் ஸ்வீட் ஹார்ட்"என்று கூறி தன் அறைக்கு வந்தான்.

காலையில் எழுந்தவன் 9.30 மணியளவில் அதிதியின் போன் ஆன் ஆவதை கான அது பயனித்த வழி வழமைக்கு மாற்றமாக இருந்ததால் மறுபடி அலேர்ட் கொடுத்தது.ஏனென்றால் அதிதி புதிதாக ஏதும் இடத்துக்கு சென்றால் அது அலேர்ட் பன்ன கூடிய விதத்தில் அந்த டிராக்கரை அருண் தயார் செய்திருந்தான். எனவே நித்யா அதிதி இல்லாமல் புதிதாக எங்கே செல்கின்றாள் என்பதை அறிய அவன் அவள் போகும் இடத்திற்கு செல்ல தயாரானான்.ஏனென்றால் நித்யா எப்போதுமே அதிதி இல்லாமல் வெளியில் செல்ல மாட்டால் என்பதை அறிந்தவன் ,யாருக்கும் கூறாமல் அவளை பின் தொடர தன் மோட்டார்சைக்கிளில் பயணித்தான்.

அவளின் மொபைல் ஸ்டாப் ஆன இடத்தில் இறங்கியவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.ஏனென்றால் எப்போதும் கலகலப்பாக இருக்கும் நித்யாவின் முகம் கலை இழந்து போய் அங்குமிங்கும் திரும்பி யாரும் தன்னை பார்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த கெஸ்ட்ஹவுசின் உள்ளே செல்ல அவனுக்கு இது ஏதோ சம்திங்க் ராங்க் என்று புரிந்தது.அவள் உள்ளே சென்றதும் இவனும் சத்தமில்லாமல் உள்ளே சென்று என்ன நடக்கின்றது என்று பார்த்தவனுக்கு அங்கு அவள் ஒருத்தனுடன் அழுது கெச்ஞ்சிக்கொண்டிருப்பது புரிய அவன் ஏதோ இவளை மிரட்டுகிறான் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.அதன் பிரகு நடந்ததுதான் நம்ம எல்லோருக்குமே தெரியுமே......

வீட்டிற்கு வந்தவன் நித்யாவை இறக்கிவிட்டு

"அதிதி எனக்கு அவசர வேலை இருக்கு.என்னோட டிராயர்ல ஸ்லீப்பிங்க் டேப்லட் இருக்கு.அவகிட்ட எதுவும் பேசி அவள டார்ச்சர் பன்னாம அந்த டாப்லெட் ஒன்ன கொடுத்து அவள தூங்க வை.தூங்கி எந்திரிச்சதுக்கு அப்புறமா பேசிக்க.ஓக்கே" என்று கூறி சிட்டாக பறந்துவிட்டான்.

அவன் போய் 30 நிமிடத்தில் ஜீவாவிற்கு கால் செய்து

"மச்சி எல்லாமே ரெடி.சீசிடிவி ,அப்புறம் நித்யாவோட கால் ரெகார்ட்ஸ் எல்லாமே டிலீட் பன்னிட்டேன்.நீ உன் வேலய ஆரம்பிடா"என்று கூற எதிர் முனையில் ஜீவா

"சுமியும் கேஸ் பைல் பன்னிட்டா.பே(f)க் கேஸ்தான்.சோ ஒரு ப்ராப்ளமும் இல்ல.இனி இவன் கதைய முடிக்கிறது மட்டும்தான் பாக்கி "என்றவனுக்கு

"மச்சி .இவன மாதிரி ஆளுங்க உயிர் வாழவே கூடாதுடா.எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடி இருப்பான்.இன்னையோட அழிஞ்சான்" என்றவனை

"டேய் நீ சும்மா எமோசனல் ஆகாத சரியா.இதெல்லாம் நம்ம டிபார்ட்மண்ட்ல சகஜம்தானே.எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்"என்று கூறிவிட்டு காலை கட்செய்தான்.

வீட்டில் அதிதி நித்யாவிடம் எதுவுமே பேசாமல் அவளுக்கு அண்ணன் கூறியதை போல டாப்லெட்டை கொடுத்து ப்ரிட்ஜில் இருந்த பாலை கொஞ்சம் சூடாக்கி அவளுக்கு அருந்த கொடுத்தாள்.அப்போது அவள் கையில் இருந்த பாலை வாங்கி குடித்துவிட்டு அர்த்தபுஷ்டியாக அதிதியை பார்த்து சிரித்தால்.

அப்போதுதான் அதிதிக்கு உறைத்தது தான் அவளிடம் தன்னுடைய சாலஞ்சில் தோற்றது.

"அடப்பக்கி.இந்த நிலமைலையும் என்கிட்ட சாலஞ்ச்ல ஜெயிச்சிட்டோம்னா சிரிக்கிற "என்று அவளை அடிக்க கையை ஓங்கியவள் நித்யா பழைய போர்முக்கு திரும்புவதை உணர்ந்து

"என்னடி நடந்திச்சி"என்று அதிதி கேட்க நித்யா நடந்த எல்லாவற்றையும் அவளிடம் கூறினால்.இதைக்கேட்ட அவள் அப்படியே சாக் ஆக

"ச்சே அவன போய் நல்லவன்னு நினைச்சோம் பாரு.நம்ம புத்திய செருப்பால அடிக்கனும்"என்றவளை

"விடுடி.அதான் உங்கண்ணன் ஹீரோ மாதிரி வந்து காப்பாத்திட்டாரே"என்றவளை

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஹீர்ரோஓஓஓஓஓ" என்று நக்கலாக கூறிவிட்டு

"நாயே முதல்ல நீ தூங்கி எழும்பு உனக்கு அப்புறமா இருக்கு"என்று அவளிடம் கூற நித்யா எதற்காக இப்படி கூறுகிறாள் என்று தெரியாமல்

"சரி டயர்ட்டா இருக்குடா.நான் தூங்குறேன்"என்று தூங்கினால்.

அவள் தூங்கியதும் அருனுக்கு கால் செய்த அதிதி இங்க நடந்தவற்றை கூற முகத்தில் புன்னகையை தவழவிட்டவன் நிலமை இவ்வளவு சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று நினைத்திருக்காதவன் சந்தோசம் அடைந்தான்.

"அதிதி கௌசிக் மேட்டர் ஓவர்.கௌசிக்கோட ஆபிஸ்ல உங்க ரெஸ்யூமி மட்டும்தானே இருக்கு.ஏன்னா சுமி அங்க ரெயிட் போய் இருக்குற எல்லா டாக்குமெண்ட்சயும் அள்ளிட்டு வந்துட்டா.அதுல உங்க ரெண்டு பேரோட ரெஸ்யூமி மட்டும்தான் இருக்கு"என்றவனை

"ஆமான்னா.ரெஸ்யூமி மட்டும்தான்.வேற ஏதுமில்ல"என்றாள்.

ஆனால அவனோ சந்தேகம் நீங்காமல் "ஏதும் விசிட்டர்ஸ் லெட்ஜர்ல சைன் பன்னீங்களா"என்று கேட்க அவள்

"இல்லைன்னா.அன்னைக்கு நாங்க உள்ளே போனதும் கௌசிக் வந்து எங்கள உள்ளே வரும்படி சொல்லிட்டான்"என்றவனை

"ஹ்ம்ம் .நல்லா யோசி வேற ஏதும் இருக்கானு.அப்புறம் அன்னைகக்கு அவன் ஆபிஸ்ல இருந்த எல்லா சிசிடிவி வீடியோவையும் மாத்தி வெச்சாச்சு.சோ நோ ப்ராப்ளம்"என்றவனை

"எங்கண்ணாவா கொக்கா..எல்லாம் சரி மவனே.வா வீட்டுக்கு.உன்கூட ஒரு டீலிங்க் இருக்கு "என்றாள்.

இவனும் எதுவாக இருக்கும் என்று யோசித்து காலை கட் செய்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro