Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 6



காலையில் எழுந்ததும் தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு எதுவுவே பேசாமல் வெளியில் சென்ற நித்யாவை சங்கீதா கொஞ்சம் வித்தியாசமாகவே பார்த்தால்.நித்யாவின் மனநிலையோ எப்படியாச்சும் இந்த பிரச்சினையில் இருந்தி அதிதியை காப்பாற்ற வேண்டும்.இதற்கு அவனின் சகோதரனின் உதவியை நாடலாம்.ஆனால் தான் மற்றவரின் உதவியை நாடச்சென்று அதனால் அந்த கயவன் வீடியோவை வெளியில் லீக் செய்தால் அதிதியின் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்தவள் இந்த பிரச்சினைனயை எப்படி சரி தானே சமாளிக்கவேண்டும் என நினைத்தால்.ஒரு வேலை அவனிடம் சென்று அதிதியின் சகோதரன் ஒரு போலீஸ் ஆபீசர் என்று கூறினால் பயந்து இவர்களை எதுவும் செய்யாமல் கப்சிப் ஆகிவிடுவான் என்ற ஒரு சிறிய நம்பிக்கையும் இருந்தது.

தனது கெஸ்ட்ஹவுசில் கௌசிக்கோ இன்று தனக்கு நல்ல விருந்து ஒன்று உள்ளது என நினைத்தவன் மது மயக்கத்துடன் அழகிய மாதுவை சீரழிக்க காத்துக்கொண்டிருந்தான்.

ஆட்டோவை விட்டு இறங்கிய நித்யா அந்த சிறிய கெஸ்ட் ஹவுஸ் முன் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.கதவு திறந்திருக்க அந்த வீட்டில் யாருமே இல்லை.வாட்ச்மேன்.தோட்டக்காரன் ,வேலைக்காரர்கள் என யாருமே இல்லாமல் அந்த வீடு வெறிச்சென்று இருந்தது.ஒரே ஒரு கார் மட்டும் வாசலில் நின்றது.இவள் தயங்கி தயங்கி உள்ளே வருவதை கண்ட கௌசிக்

'அட நம்ம விலாங்கு மீனுக்கு தூண்டில் போட்டா திமிங்கிளம் தானா வந்து மாட்டுது'என்று என்னியவன்

"ஹாய் நித்யா.என்ன உங்க ப்ரெண்ட் உங்கள தூதுக்கு அனுப்பினாளா.எனக்கு யாரு எண்டாலும் ஓக்கேதாம்பா.உண்மைலயே ஸ்கெட்ச் போட்டது என்னமோ உனக்குதான் .மாட்டினது என்னமோ அதிதி.கடைசியில நீயே வந்துட்ட" என்றவனை

"இங்க பாருங்க கௌசிக்.நீங்க ஏன் இப்படி பன்றீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியல.உங்கள எவ்வளவு நல்லவருன்னு நினைச்சோம் தெரியுமா.இப்படி கேவலமா நடந்துக்கிறீங்களே" என்ற நித்யாவை

"சட் அப்..இங்க பாரு .இது என் மொபைல்.அங்க பாரு ,அதுதான் ஒரிஜினல் வீடியோ உள்ள கெமரா.நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னி போனேன்னா யாருக்குமே சேதாரமில்லாம பிரச்சினை முடிஞ்சிடும் .இல்லன்னா........"என்று தன் மொபைலில் வாட்சப்பை ஆன் செய்ய போனவனை

"அதிதியோட அண்ணன் ஒரு போலீஸ் ஆபீசர்.அவருக்கு மட்டும் இது தெரிஞ்சது நீங்க காலி "என்றவளை அவன் நக்கலாக

"அடியே லூசுக்கூமுட்ட.அவன் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் என்ன ஒன்னும் பன்ன முடியாது.ஏன்னா என் ப்ரெண்டோட அப்பா மினிஸ்டர்.இந்த மேட்டர் பிரச்சினை ஆனா அதுல இருந்து எப்படி வெளில வரனும்னு தெரியும்டி.நீ சும்மா சீன போடாத.ஓக்கே.அப்புறம் எப்போ உன் பயோடேட்டால உன்னோட போட்டோவ பார்த்தேனோ அப்பவே உன்ன அடையனும்னு ப்ளான் போட்டேன்.ஆனா இவ்வளவு சீக்கிரத்துல உன்ன நான் அடைவேன்னு நினைக்கல.இப்ப என்ன சொல்ர, அவளோட போலீஸ் கொண்ணன்கிட்ட போய் சொல்லி என்னை அரஸ்ட் செய்ய போறியா.செஞ்சிக்க.என்கிட்ட அந்த வீடியோ இருக்குன்னு ப்ரூப் பன்ன எந்த ஆதாரமும் உன்கிட்ட இல்ல.அப்புறம் நான் உனக்கு வாட்சப் பன்ன நம்பர் கூட பேக் நம்பர்தான்.லாஸ்ட்டா சொல்ரேன்.இப்பந நீ ஒத்துக்கள எந்த போலீஸ் நாயும் என்னை ஒன்னும் பன்ன முடியாது.நான் வீடியோவ லீக் பன்னிட்டு போய்கிட்டே இருப்பேன்"என்றவனை கண்களில் கண்ணீர் முட்ட

"ஏன் சேர் இப்படி பன்றீங்க.எங்கள விட்டிடுங்க.உங்க பக்கமே இனி நாங்க தலை வெச்சு பார்க்கமாட்டோம்" என்ற நித்யாவை

"ஹேய் ஸ்டாப் திஸ் டிராமா.இப்போ என்ன சொல்ரே.யெஸ் or நோ.மூணாவது ஆப்சன் இல்ல.உன் முடிவ சொல்லிட்டு நீ போய்கிட்டே இருக்கலாம்"என்றவனை அவள் என்ன செய்வது என்று யோசிக்க அவன் அதை அவளது சம்மதமாக எடுத்து அவளிடம் நெருங்க இதை எதிர்பார்க்காத நித்யா அவனை தள்ளிவிட்டால்.

மதுவின் பிடியில் இருந்தவன் அவள் தள்ளிவிட்டதும் தடுமாறி பக்கத்தில் இருந்த மாடிப்படியில் விழுந்தான்.அவன் விழுந்ததும் அவனின் பின் மண்டையில் அடிபட அவன் சிறிது நேரத்திலேயே சுய நினைவை இழந்தான்.இதை எல்லாம் வெளியில் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஜீவன் உடனே தன் மொபைலை எடுத்து

"மச்சி நான் சொல்ர அட்றசுக்கு உடனே உன் வைபயும் கூட்டிட்டு வா.நீ மட்டும் போலீஸ் டிறஸ்ல வா.உன் வைப் மப்டிலயே வரட்டும்.என்ன ஏதுன்னு கேட்காத.எனக்கே என்னான்னு தெரில.நீ உடனே வாடா"என்று கூறிவிட்டு உள்ளே கௌசிக் கீழே விழுந்து சுய நினைவில்லாமல் இருப்பதை வெறிக்க பார்த்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தவளை இவன்

"நித்யா..."என்று அழைக்க

அவள் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டவள் தன் வாய்க்கு வந்ததை பிதற்ற தொடங்கினால்.

"நான் வேனும்னே பன்னல சார்.அவந்தான் இண்டர்வியூ...மொபைல்..வீடி..வாட்சப்" என புலபியவலை

ஆசுவாசப்படுத்தி என்ன நடந்தது என கேட்க அவ்விடத்துக்கு ACP ஜீவாவும் அவனது மனைவி சுமித்றாவும் அவ்விடம் வர அவள் நடந்த எல்லாவற்றையும் அவர்கள் மூவரிடமும் கூறி முடித்தாள்.

உடனே ஆத்திரம் கொண்ட ஜீவா"அந்த நாய் செத்துட்டா இல்ல உயிரோட இருக்கா"என்றவனை அவனது நண்பன்

"இல்ல மச்சி மயக்கமாகிட்டான்.ஆனா உயிர் இருக்கு"என்றான்

உடனே ஜீவா சுமியிடம்"சுமி நீ இந்த பொண்ண கூட்டி போய் அவங்க வீட்டுல விட்டுடு.அப்புறம் உனக்கு தெரிஞ்ச யாருகிட்ட சரி சொல்லி இவன் மேல பாலியல் பலாத்கார கேஸ் ஒன்னு பைல் பன்ன சொல்லு.இல்ல வேணாம் ..நீயே பொய்யா ஒரு கேஸ் பைல் பன்னிடு உன் ஸ்டேசண்ல.அது ஒரு 2 நாளைக்கு முன்னாடி பன்ன FIR மாதிரி போட்டுடு.இவனோட மேட்டர நான் பார்த்துக்கிறேன்.இப்படியான நாய் எல்லாம் உயிரோட இருக்கவே கூடாது"என்று கூறிவிட்டு

"மச்சி டைம்இப் போ 10.20ம்.நீ எனக்கு ஒரு ஹெல்ப் பன்னு .இந்த ஏரியா சிசிடிவி,அப்புறம் இவன் வீட்டு சிசிடிவி,நித்யாவோடா மொபைலுக்கு வந்த அந்த வீடியோ அண்ட் கால் ரெக்கோர்டிங் டீடைல்ஸ் எல்லாத்தையும் அழிச்சிடு.சிசிடிவி புட்டேஜ் அழிச்சின்னா சும்மா டவுட் வரும்.சோ நீ ஒரு பழைய புட்டேஜ 9.50 ல இருந்து 11 மணி வரை மாத்தி வெச்சிடு.நான் இவன் மேட்டர முடிச்சிட்டு கால் பன்றேன்.ஓக்கே "என்றவனை

நம் நாயகன் ACP அருன் "ஜீவா.சரிடா.நித்யா வீட்ல அவ அம்மா தங்கச்சி இல்லடா.அவ சித்தி வீட்லதான் இருக்கா.இப்ப இவ அங்க போனா ஏதும் ப்ராப்ளம் ஆகிடும்.சோ க்ரூப் ஸ்டடினு இவள அவ சித்திக்கிட்ட சொல்ல வெச்சிட்டு இவள எங்க வீட்ல நானே விட்டுர்றேன்.ஏன்னா என் தங்கச்சியும் இவளும் க்லோஸ் ப்ரெண்ட்ஸ்.சோ ப்ராப்ளம் எதுவும் வராது" என்ற அருனை

"ஓக்கே மாம்ஸ் ,நீ அப்படியே பன்னு"என்ற போது கௌசிக் மெதுவாக எழுந்தான்.எழுந்தவனை ஜீவா தன் பூட்ஸ் காலேயே உதைக்க "அம்மாஆஆஆஅ"என்று அலறியவனின் குரல் வலையை பிடித்து

"சொல்லுடா,இந்த வீடியோ வேற யாருக்கெல்லாம் அனுப்பியிருக்க என்றவனை" அவன் பயந்து போய்

"இல்லை சார்.நான் வேற யாருக்கும் அனுப்பல.அதோ அந்த கெமராலதான் ஒரிஜினல் வீடியோ இருக்கு.ஒரு காப்பி போட்டு இவங்க மொபைல்கு சும்மா மிரட்டதான் அனுப்பினேன் "என்றவனை ஓங்கி மீண்டும் இரண்டு உதை உதைத்து கௌசிக்கின் ஈமெயில்,பேஸ்புக்,வாட்சப் ,கூகுள் டிரைவ்.ட்றொப்பொக்ஸ்..என எல்லா யூசர் நேம் அண்ட் பாஸ்வேர்டையும் எடுத்து அருனிடம் கொடுத்த ஜீவா

"மச்சி இதுல எது கரக்டா இருக்கும்னு தெரில..அவனோட ஈமெயில் இருக்கு.சோ என்ன சரி பன்னி அவன் அக்கவுண்ட்ல இருக்குற எல்லா வீடியோஸ் அண்ட் போட்டோசையும் அழிச்சிடு.ஏன்னா இவன் வேற காப்பி ஏதும் போடலன்னு சொல்ரான்.ஆனா இவன மாதிரி ஆளுங்கள நம்ப முடியாது.சோ நான் சொன்னதை செய்"என்ற ஜீவாவை

"மச்சி இவன் பேஸ்புக் ஐடி ஒன்னே போதும்டா.இவனோட எல்லா ஆன்லைன் டீடைல்சையும் அழிக்க.சோ சைபர் வேலை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.க்றைம் வேலய மட்டும் நீ பாரு "என்று புன்னகைத்த அருனுடன் புன்னகைத்து அருனை வீட்டிற்க்கு நித்யாவை கூட்டி செல்லும் படி கூறினான்.

கௌசிக்கை அரஸ்ட் செய்து விசாரனைக்கு என்று கூட்டி வரும் வழியில் டீ குடிக்க என்று கூறி கௌசிக்கை இறங்க செய்து ஒரு லாரியை செட் பன்னி கௌசிக்கின் கதையை முடித்துவிட்டான் ஜீவா.

-----------------
கவிதை பிரியர்கள் இதை கொஞ்சம் பார்க்கலாமே
prathesha https://my.w.tt/8riMC3uOTK

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro