தீண்டல் 37
சரியாக ஒரு வருடம் கழித்து ,
"அம்மா நித்யாவுக்கு லேபர் பெய்ன் வந்துட்டுமா.நான் ஹாஸ்பிடல் கூட்டி போறேன்.நீங்க எல்லோரும் அங்க வந்துடுங்க"என்று அவசரமாக பேசிய வருண் காலை கட் செய்து நித்யா தூக்கி காரில் வைத்தவன் காரை ஸ்டார்ட் செய்ய நித்யாவோ
"டேய் வருண்,நம்ம அன்னைக்கு பேசிக்கிட்டதுல எந்த மாற்றமும் இல்லயே?"என்றவளை
"இல்லடி.நீ சொன்னா எனக்கு ஓக்கேதான்.சும்மா பேசாம இரு நித்யா.குயிக்கா ஹாஸ்பிடல் போயிடலாம்"என்றவனை
"அட லூசு இப்போ கொஞ்சமாத்தான் பெயின் வந்திருக்கு.இன்னும் அதிகமாகல்ல.எதுக்கு இப்போ நீ டென்சன் ஆகுற"என்று தனக்கு பிரசவ வலி அதிகமாகவில்லை என்ற தைரியத்தில் இருந்தால்.
இருவரும் ஹாஸ்பிடல் செல்ல இவர்களுக்கு முன்பாகவே அங்கு அமிர்தம்,பர்வதம்,அசோகன்,வசுந்ரா,அருண் என எல்லோரும் ஆஜர் ஆகி இருந்தனர்.அதிதியும் அவள் கணவனும் அதிதிக்கு குழந்தை கிடைத்த 2 வாரமே என்பதால் அவர்களால் வர முடியவில்லை.நித்யாவும் வருணும் சாவகாசமாக பேசிக்கொண்டு வருவதை பர்த்த பர்வதம்
"டேய் ,நாங்க என்னமோ ஏதோன்னு பதறி அடிச்சி வந்தா நீங்க ரெண்டு பேரும் ஏதோ பிக்னிக் போக வந்த மாதிரி சாவகாசமா வாரீங்க"என்று முறைத்தவரை
"மம்மி.பீ கூல்.வை டென்சன்.அதுதான் டாக்டர் உன்ன டென்சன் ஆகக்கூடாதுன்னு சொல்லிருக்காருல்ல"என்று கலாய்த்தவனை எரிச்சலாக பர்வதம் பார்க்க திடீரென்று நித்யா
"அம்மா"என்ற்ய் வயிற்றை பிடித்துக்கொண்டி அலறினால்.உடனே அவளை ஸ்ட்றெச்சரில் வைத்து லேபர் வார்ட்டிற்கு அழைத்து செல்ல வருணும் அவர்கள் கூட வருவதற்கு அனுமதி கேட்டு அவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இவர்கள் உள்ளே செல்ல சரியாக அந்த நேரம் பார்த்து
வாசுகியும் வினோதும் வந்து சேர்ந்தனர்..
(இதுங்க இரண்டும் எப்படி ஒன்னு சேர்ந்ததுங்கன்னு பார்க்கனுமா.அது ஒரு கேவலமான ஸ்டோரிப்பா.இதயம் பலமா உள்ளவங்க மட்டும் படிங்க)
நித்யாவும் வாசுகியும் ரெஸ்டாரண்டில் வினோத்துடன் பேசிவிட்டு வந்த அடுத்தடுத்த நாட்களிலல் நித்யாவும் வினோத்தும் ஏதேதோ பேசி சரியாக 4 மாதத்தில் அவர்களின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.திருமணம் முடிந்து முதலிரவன்று வினோத் வாசுகியிடம்
"வாசுகி நான் உங்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்.கல்யானம் ஆனதுக்கு அப்புறமா சொல்ரேன்னு கோவிக்காத வாசுகி.பொய்யா நடிச்சி உன் முகத்த என்னால பார்க்க முடியல"என்றவனை வாசுகி என்ன என்பது போல ஏறிட்டால்.
சிறிய ஒரு ப்ளாஷ்பேக்
-----------
நித்யாவும் வாசுகியும் ரெஸ்டாரண்டில் வினோத்துடன் பேசிவிட்டு வந்த அடுத்த நாள் வினோத் நித்யாவுக்கு கால் செய்து
"நித்யா ப்லீஸ்.உன் கால்ல வேணும்னாலும் விழுந்த மன்னிப்பு கேட்குறேன்.வாசுகிய மட்டும் எப்படியாச்சும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடு.என்னால அவ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சி கூட பார்க்க முடியல.ப்ளீஸ் "என்றவனை நித்யா
"ஓஹ் அப்படியே சரி.நீ பண்ண காரியத்துக்கு உன்மேல எனக்கு ஆத்திரம் வந்தது என்னமோ உண்மைதான்,ஆனா இப்போ நீ உன் ஈகோ எல்லாம் விட்டு என்கிட்ட பேசின பாரு ,அதுக்காகவே நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.ஏன்னா இந்த கொஞ்ச நாள்ள நீ எங்க பேமிலி கூட ரொம்ப க்லோஸ் ஆகிட்ட.அம்மாவுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்.அதுக்கும் மேல வாசுகிக்கும் உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னா"என்றவளை
"ஹேய் நிஜமாவா சொல்ர.அப்போ ஏன் அவ ரெஸ்ட்டாரண்ட்ல வெச்சி அப்படி பேசினா"என்றவனை
"ஆமா சார் பார்த்த வேலைக்கு வேற என்ன செய்வாங்கலாம்.சரி அத விடு.நான் சொல்ர மாதிரி பண்ணி அவள ஏமாத்தினாதான் உனக்கு அவ கிடைப்பா"என்றவளை வினோத்
"எது ஏமாத்துறாதா.ப்ளீஸ் நித்யா அவளுக்கு நான் உண்மையா இருக்கனும்னு நினைக்கிறேன்.அவள ஏமாத்தாம ஏதும் பண்ண முடியாதா"என்றவனை
"நீ பண்ணி கிழிச்ச வேலைக்கு இது ஒன்னுதான் வழி.அவள அப்படி இப்படி உசுப்பேத்தி உன் காலேஜ்லயே ஜாப் கண்டினியூ பண்ண வைக்கிறேன்.அதுக்கு மேல உன்னோட நடிப்பு சாமர்த்தியம்.நீயாச்சும் அவளாச்சும்.சரியா"என்றவளை அவன்
"சரி என்னான்னு சொல்லு"என்று கேட்க அவள் கூறிய ப்ளானை கேட்டு எரிச்சலுற்றவன்
"நீ நிஜமாவே லூசுதான்.பாவம் வருண் உன்ன கட்டிக்கிட்டு என்ன பாடு படுறானோ"என்றவனை
"டேய் போது நிறுத்து.இது மட்டும் வெர்க அவுட் ஆகல.என் பேரு நித்யா இல்ல"என்று கூற அவனோ
"அப்போ மாரியாத்தான்னு வெச்சிக்கோ"என்றான்.இவர்கள் இருவரும் பேச்சிலேயே வாரிக்கொள்வதில் விளங்கி இருக்கும் இதுங்க ரெண்டும் காலேஜ் படிக்கும் போது என்ன அலும்பு பண்ணியிருக்குங்க என்று.
அடுத்த நாள் நித்யா வாசுகையை பார்த்து
"சுகிம்மா,அந்த நாய் பண்ண தப்புக்கு நீ எதுக்குடா ஜாப விடனும்.நீ கண்டினியூ பண்ணுடா.அவன் உன்ன பார்த்து பார்த்து அவன் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கட்டும்"என்ற தன் அக்கவை
"ஹ்ம்ம்.நீ சொல்ரதும் கரக்ட்தான்க்கா.நான் எதுக்கு ஜாப் ரிசைன் பண்ணனும்.அவன்கிட்ட வேல செஞ்சிக்கிடே அவன் கொஞ்ம்ச கொஞ்சமா டார்ச்சர் பண்ண போறேன்"என்ற தன் தங்கையை நித்யா மனதுக்குள்
'சாரிடா.உன்ன அவன் ரொம்ப லவ் பண்றான்னு நல்லா தெரியுது.இல்லன்னா அவன் செஞ்ச அந்த தப்ப நம்ம யாருக்குமே தெரியாம மறைச்சிருக்க முடியும்.ஆனா அவன் அதை செய்யாம உனக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்சான் பாரு.உன் வாழ்க்கை அவன்கூட நல்லா இருக்கும்டி'என்று நினைத்தவள் தான் வந்த வேலை நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் வினோத்துக்கு கால் செய்து விசயத்தை கூறினால்.
சில நாட்களின் பின் ஒரு நாள் முக்கியமான பைல் ஒன்றை கொடுப்பதற்காக வாசுகி வினோதின் அறைக்குள் செல்ல அங்கு மேசையில் ஒரு மருந்து பாட்டிலும் சிரிஞ்சும் இருப்பதை பார்த்தவள் கையில் அதை எடுத்து என்னவென்று பார்க்க அது போதை மருந்து என்று தெரிய வந்தது.
(எல்லாம் நம்ம நித்யாவோட மொக்க ப்ளான் தாங்க.அவளுக்கு தெரிஞ்ச ஒரே ப்ளான் இது மட்டும்தான்.இதுலதானே அவ ப்ளாட் ஆனா).
திடீரென்று உள் வந்த வினோத் கையில் அதை வைத்துக்கொண்டு இருந்தவளை கண்டவன் தலை குனிய வாசுகி அவன் அருகில் சென்று
"என்ன இது"என்றால்.
அவன் எதுவுமே பேசாமல் இருக்க ஆத்திரம் வந்தவள் அவனை பளாரென்று அறைந்தவள்
"எத்தனை நாளா இந்த பழக்கம்"என்று கேட்க அவனோ
"ஒரு 2 மாசமாத்தான்"என்றவனை எரித்துவிடுபவள் போல பார்க்க அவளின் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாதவன் மீண்டும் தலையை கீழே தொங்கவிட அவளோ அவனுக்கு மீண்டும் பளார் பளார் என்று இரண்டு அறை விட்டு
"சார் பண்ண காரியத்துக்கு உடனே உங்கள ஓடி வந்து கட்டிப்பிடிச்சி ஐ லவ் யூ னு சொல்லுவாங்களோ.நீதான் வந்து என்ன சமாதானப்படுத்தி ,எங்கிட்ட கெஞ்சி என்ன கன்வின்ஸ் பண்ணனும்.அத விட்டுட்டு இப்படி கண்டதயும் பாவிச்சி உன்னையும் வருத்தி என்னையும் ஏண்டா வருத்துற"என்றவளை
"என்ன சொல்ர வாசுகி ,அப்போ நீயும் என்ன விரும்புறியா"என்றவனை
"ஆமா முன்னாடி விரும்பினேன்.அன்னைக்கு ரெஸ்ட்டாரண்ட்ல நீ வந்து உண்மைய சொன்ன பார்த்தியா,அதுக்கு அப்புறமா உன்ன இன்னும் அதிகமா லவ் பண்றேன்"என்றாள்.
"அப்போ அன்னைக்கு என்ன அப்படி திட்டின"என்றவனை
"ஆமா திட்டினேன்,நீ என்ன வந்து சமாதானம் பண்ணுவேன்னு"என்றவள்
"இப்போ என்ன ப்ரபோஸ் பண்ண போறியா இல்ல இந்த மருந்தையே கட்டிக்கிட்டு அழ போறியா "என்றாள் வாசுகி.. இதுக்கு பிறகு நடந்ததை நான் சொல்ல தேவையில்லையே எல்லாமே நித்யா ,வினோத் திட்டபடி திருமணம் இனிதே நடந்தது.
ப்ளாஷ்பேக் ஓவர்
---
"இதுதான் சுகிம்மா நடந்தது .உங்க அக்காதான் அந்த மருந்து பாட்டில என்கிட்ட கொடுத்து உன்ன் சும்மா உசுப்பேத்தி என்ன அப்படி பண்ண சொன்னா.ப்ளீஸ்டா என்ன மன்னிச்சிடு"என்றவனை
"ஓஹ் அவ சொன்னான்னு ஐயாவும் பண்ணீங்க அப்படித்தானே.அன்னைக்கு நான் அவ்வளவு சொன்னேனே உன் கிட்ட எனக்கு பிடிச்சது உன்னோட அந்த உண்மையா இருக்கனும்னு நினைக்கிற மனசுதான்னு.ஆனா நீ கடைசில என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட தானே"என்றவளை அவன் சமாதனாப்படுத்த அவள் அருகில் சென்றவனை ஓங்கி அறைந்தவள்
"இனி என் பக்கத்துல வந்த என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.அங்க இருக்குற சோபால நீ படுக்கிறியா இல்ல நான் படுக்கட்டுமா?"என்றவளை
அவன் தலையனையையும் போர்வையையும் எடுத்து சோபாவில் கஷ்டப்பட்டு உறங்கினான்.
இப்படியே 3 மாதங்கள் கடக்க ஒரு நாள் வாசுகி மனதுக்குள்
'எரும மாடு எப்படி தூங்குது பாரு.நாந்தான் அப்படி கோவத்துல பேசிட்டேன்.என்ன சமாதானம் பண்ணனும்னு தோனுதா.குரங்குப்பயலுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது போல.இருடா உனக்கு காலைல இருக்கு என்னோட டிரீட்மெண்ட்' என மனதுக்குள் நினைத்தவள் அப்படியே உறங்கினால்.காலையில் எழும்பியவள் இரவு அவள் யோசித்த ப்ளான் நினைவுக்கு வர இருடா தம்பிஇன்னைக்கு நீ செத்த.உன்ன இன்னைக்கு என்ன பண்றேன் பாருன்னு சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே பாத்ரூம் சென்றாள்.
அன்றாட வேலைகளை முடித்துவிட்டு தலையில் ஈர துண்டுடன் ரூமிற்கு வந்தவள் தாலிகொடியை வெளியே எடுத்து போட்டாள்.
பின் வினோத் படுத்திருந்த சோபா அருகில் சென்றவள் குனிந்து தாலி கொடியை எடுத்து வினோத்தின் முகத்தி மீது போட்டு விட்டு ஜன்னல் கதவின் லாக்கை சரி செய்வது போல நடித்தாள்.வேண்டுமென்றே அவனை உசுப்பேற்றியவள் வினோத்துக்கு திடீரென்று ஒரு நல்ல நறுமனம் தன் முகத்துக்கு அருகில் இருப்பதை உணர்ந்தவன் திடீரென்று கண் முழிக்க வாசுகியோ இதை அறியாதவள் போல இருப்பதை கண்டவன்
'முதல் இரவு அன்னைக்கு சும்மா பக்கதுல போனதுக்கே கன்னம் வீங்கிடிச்சி.இதுல இப்போ நம்ம ஏதும் பண்ணோம் நம்ம உயிருக்கு அப்புறமா உத்தரவாதமே இல்லாம போயிடும்'என்று நினைத்து சத்தமில்லாமல் அப்படியே உறங்குவது போல நடித்தான்.இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவள் அவளும் நடிக்க என்னி அவன் தூங்குவது போல் நடிப்பதை அவள் கண்டுபிடிக்காதவளை போல அவன் அருகில் சென்று
"டேய் பொண்டாட்டி கோவமா பேசினா நீ வந்து சமாதானம் பண்ண மாட்டியா.உனக்கு முதல்ல ஒரு தடவை சொன்னேன்.மறுபடியும் சொல்லனுமாடா"என்றவளை உடனே விழித்த வினோத் அவன் மீது இழுத்து போட்டுக்கொண்டான்.எத்தனை நாள் கட்டுப்படுத்தி வைத்திருந்த காதலோ தெரியவில்லை அன்றிலிருந்து அவன் அவளை ஒரு மகாராணி போலவே நடத்துகிறேன்.என்ன நம்ம வாசுகிதான் அவன்கிட்ட அடிக்கடி சண்ட போடுறாள்,சண்ட போட்டாலும் அவனுக்கு தெரியுமே அவள எப்படி சமாதானம் செய்யனும்னு.
கடைசியில இந்த ரெண்டு பேரும் நல்லபடியாக குடும்ப வாழ்வில் இனைந்துவிட்டனர்.
--------
இப்போது ஹாஸ்பிடலில் நித்யாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரட்டை குழந்தை கிடைக்க குழந்தைகளை சுத்தம் செய்துவிட்டு நித்யாவையும் குழந்தைகளையும் பார்க்க எல்லோரையும் உள்ளே அனுமதிக்க வசுந்ரா ஓடிச்சென்று ஒரு குழந்தையை கையில் எடுத்துக்கொண்டாள்.இதை கண்ட எல்லோருக்கும் வசுந்ராவால் அம்மா ஆக முடியவில்லை என்ற கவலை அவளை எவ்வளவு வருத்தும் என்று தெரிந்து மௌனமாக இருந்தனர்.குழந்தையை முத்தமிட்டு முடிந்த வசுந்ரா குழந்தையை நித்யாவிடம் கொடுக்க நித்யாவோ
"அக்கா அது உங்க குழந்தை .இதோ இங்க இருக்கானே அவந்தான் என் குழந்தை.உங்க கைல இருக்குற பொண்ணு உங்களுக்கு"என்றவளை அருண்
"என்ன சொல்ர நித்யா.அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல"என்றவனை
"என்ன அருண்.அன்னைக்கு நான் உங்க கிட்ட வசுந்ரா அக்காவ கண்டுபிடிச்சு தந்தா ஒன்னு கேட்பேன் நீங்க அத செய்யனும்னு சொன்னேந்தானே.நீங்களும் அதுக்கு சரின்னு தலைய தலைய ஆட்டினீங்க.இப்போ என்ன"என்று கூற வருணும்
"அண்ணா ,நாங்க முன்னாடியே இது பேசி வெச்சதுதான்.எங்களுக்கு ரெட்டைக்குழந்தைன்னதும் ஒன்ன உங்களுக்கு கொடுக்கலாம்னு.எந்த குழந்தைய அண்ணி முதல்ல தூக்குறாங்களோ அந்த குழந்தை அண்ணிக்கும் உங்களுக்கும்னு நாங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டோம்"என்றவனை வசுந்ரா
"இல்ல வருண்.நீங்க சொல்ரது சரி வராது.குழந்தை அம்மாகிட்டதான் இருக்கனும்.நீங்க எங்க மேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப தாங்கஸ்.அண்ட் நீங்கல்லாம் எங்கள பத்தி இவ்வளவு யோசிக்கிறதால நாங்க ரேனுவோட ஆர்பனேஜ்ல இருந்து (ரேனு யார் என்று தெரியாதவர்கள் என்னுடைய முதல் கதையில் கடைசி 3 அத்தியாயங்களை பார்க்கவும்) 2குழந்தைகளை தத்தெடுத்துக்கிறோம் சரியா.ஏன்னா அம்மா அப்பா இல்லாத குழந்தைகள தத்தெடுத்து அவங்களுக்கு பாசத்த கொட்டி வளர்த்தா ரொம்ப சந்தோசமா இருப்பாங்களே "என்று கூற பர்வதமோ
"ஹ்ம்ம்ம்.இப்பதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு.இவ்வளவு நாளா குழந்தைகளை அடப்ட் பண்ணிக்க மாட்டேன்னு இருந்த நீங்க இப்போ அக்சப்ட் பண்ணிக்கிட்டீங்களே அதுவே போதும்"என்றார்.
எல்லோரும் சந்தோசமாக இருக்க குழந்தைகளில் இருவரும் தங்கள் உணவுக்காக அழத்துவங்க எல்லோரையும் வெளியில் அனுப்பி விட்டு வருண் குழந்தைகளை அவளுக்கு பாலுட்ட வாகாக எடுத்துக்கொடுத்தான்.அன்று ஆரம்பித்த அவனது குழந்தைகளை வளர்க்கும் பணி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.தங்களின் Grocery Shop ஆல் கிடைத்த வருமாணமே போதுமாக இருக்க வருண் தன்னுடைய ஐடி வேலையை அதன் பின் தொடரவே இல்லை.ஏனென்றால் அந்த வேலைக்கு சென்றாள் தன் குடும்பத்துடன் எங்கே நேரத்தை செலவிட முடியாமல் போகுமோ என்ற என்னம்தான்....
இப்படி ஒரு கணவன் கிடைத்ததற்காகா நித்யாவும் .....
தன்னை முழுவதும் புரிந்து ,எப்பொழுதும் தன்னுடைய ஏற்ற இறக்கங்களில் கூடவே உறுதுனையாக இருக்க ஒரு காதல் மனைவி கிடைத்ததை என்னி வருணும்......
தங்களை கண்ணின் இரு மணிகளாக வைத்து பார்க்கின்ற ஒரு தாய்,தந்தை கிடைத்ததற்காக அவர்களின் பிள்ளைகளும் .......
தினமும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர்..
எல்லாப் புகழும் இறைவனுக்கே
(இது AR Rahman இன் கூற்று அல்ல.முஸ்லிம்கள் எந்த விடயம் நடந்தாலும் அது நல்லதோ கெட்டதோ ...அவர்கள் கூறுவது அல்ஹம்துலில்லாஹ்..எல்லா புகழும் இறைவனுக்கே)
---முற்றும்----
எஸ்கேப் ஆகிடு ஆஷிக்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro