தீண்டல் 35
தான் கணித்திருந்தது சரிதானா என உறுதிப்படுத்த அங்கிதாவுக்கு கால் செய்தவள் அங்கிதா கூறியதை கேட்டு அப்படி ஸ்தம்பித்து போனால்.ஏனெறால் அங்கிதாவுக்கு இப்போதுதான் திருமணம் நிச்சயாகி இருப்பதாகவும் ,ப்ரியாவுக்கு இன்னும் திருமண பேச்சை வீட்டில் எடுக்கவில்லை என்று கூறியதும் நித்யாவுக்கு இப்போது எல்லாமே தெளிவாக புரியத் தொடங்கியது.அந்த சையனா,சமந்தா கேரக்டர், நீதானே என் பொன்வசந்தம் நித்யா என்பதும் 100% கன்பார்ம் ஆகியது.நேரத்தை கொஞ்சமும் யோசிக்காமல் உடனே கிட்சனில் இருந்த் வருணிடல் சென்றவள்
"வருண்...."என்று சத்தமாக அழைத்தாள்.அழைதாள் என்பதை விட சத்தமிட்டு கத்தினால் என்றே கூற வேண்டும்.அவள் அழைத்ததில் கொஞ்சம் தடுமாறிய வருண்
"என்ன நித்யா"என்று கேட்க
"எனக்கு நீங்க ஒரு உண்மைய சொல்வீங்களா?"என்று கேட்க அவன்
"நீ கேளு.நான் உண்மைய மட்டும்தான் சொல்வேன்"என்றவனை
"சையனா யாரு?"என்றவளை கொஞ்சம் தடுமாற்றத்துடன் ஏறிட்டவன்
"அது என்னோட X லவ்வரோட பெயரு"என்றதற்கு
"அவளோட உண்மையான பெயர் என்ன?"என்று கேட்டவளை அவன்
"அது அது....."என்று தடுமாற
"நான் சொல்லட்டா.அவ பெயரு நித்யா.அவ உங்கண்ணன லவ் பண்ணா.அதனால நீங்க வீட்ட விட்டு போனீங்க.அவள மறக்க முடியாம இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டீங்க.கரக்டா"என்றவளை அவன் ஏதோ சொல்ல வரும் முன் அவளது மனது
'ப்ளீஸ் வருண் அது நான் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க.ப்ளீஸ் ப்ளீஸ்'என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டால்.வருணோ அவளது வேண்டுதலை பொய்ப்பிக்காமல்
"ஆமா அது நீதான் "என்று சத்தமிட்டு அவள் முகம் பார்க திரானியற்று தன் தலையை கீழே குணிந்தவனை ஒரு நொடி கூட தாமதிக்காமல் நித்யா ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.வருணுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.நித்யா அவனை அணைத்துக்கொண்டே விசும்பிக்கொண்டிருந்தால்.வருணுக்கு இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை. சந்தோசம் ,குழப்பம் என இரண்டும் மாறி மாறி அவனது மனதை அலைக்கழித்தது. கொஞ்சம் நிதானத்திற்கு வந்த நித்யா
"என்ன எவ்வளவு லவ் பண்ணீங்க வருண்.ப்ளீஸ் சொல்லுங்க.எனக்கு உங்க வாயால கேட்கனும்"என்றதும்
"நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சப்போ நான் செத்துடலாமான்னு யோசிச்சேன்.ஆனா எங்க குடும்பம் அதோட சின்னாபின்னமாகிடும்னுதான் அப்படி பண்ணல.உங்க யாரு கண்லயும் படக்கூடாதுன்னுதான் US போனேன்.உன்ன மறக்க முடியல.அதனாலதான் என்ன நானே மறக்குறதுக்கு இந்த போதைக்கு அடிமை ஆனேன், ஆனா நான் அவ்வளவு நேசிச்சேன் நித்யா.உன் அழக பார்த்துதான் காதலிச்சேன்.ஏன் இன்னைக்கு வர உன்ன பத்தி பெருசா எதுவுமே எனக்கு தெரியாது.மனச பார்த்து மட்டும்தான் காதல் வரனுமா?அழக பார்த்து காதல் வரக்கூடாதா?ஏன் சில பேரு சொல்லலாம் அழக பார்த்து வந்தா அது காதல் இல்ல காமம்னு.என் காதல யாரு எப்படி வேணா சொல்லிட்டு போகட்டும்.எனக்கு தெரிஞ்சது நிலவு போன்ற முகத்தை உடைய சையனா..அதுதான் நீ நித்யா" என்ற போது நித்யாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
ஒருத்தங்கள காதலிக்கிறது ஒரு சுகம் என்றால் மத்தவங்களால காதலிக்கப்படுறது இன்னொரு சுகம்.எதைவிட எது பெரியது என்று இங்கு கேட்டால் நித்யாவும் வருணும் மற்றவர் தன்னை காதலிப்பது என்றே கூறுவர்.ஏனென்றால் அந்த சுகம் மட்டுமே இருவருக்கும் இன்னும் கிடைக்கவில்லை.உடனே சுய நினைவுக்கு வந்த நித்யா
"ஆனா வருண்,நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீங்க இந்த மருந்தை பாவிச்சி நான் கண்டதில்லயே.அன்னைக்கு என் சேலைய நீங்க இழுத்ததுக்கு அப்புறமாதானே மறுபடி ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்க" என்றவளை
"ஹ்ம்ம் கரக்ட்தான் நித்யா.நான் ஒன்னும் சாமியார்லாம் கிடையாதுப்ப்பா.நீ தூரத்துல இருந்தாலே உன்ன அடையனும்னு இருப்பேன்.இப்போ என் பக்கத்துல இருந்து உன் அழகால என்ன இம்சை பண்ண தொடங்கிட்ட.அதனால நான் விட்டிருந்த அந்த பழக்கத்த மறுபடி எடுக்க வேண்டியாத போச்சி.ஏன்னா உன்கிட்ட என்னால நெருங்கி வரவும் முடியல.தூரமா போகவும் முடியல.என் நிலமைய கொஞ்சம் யோசிச்சி பாரேன்.நைட்ல நீ தூங்கும் போது உன் டிரஸ் அப்டி இப்டி கொஞ்சம் விலகும்.இதை எல்லாம் பார்த்துக்கிட்டு எப்படி நான் சும்மா இருக்குறது.அதனாலதான் நான் நைட்ல தூங்குறதுக்கு இந்த மருந்த மறுபடி கொஞ்சமா பாவிக்க ஆரம்பிச்சேன்"என்றவனை
"அப்போ ஏன இப்போலாம் அதிகாம பாவிக்கிறீங்க"என்று கேட்டவளை
"அன்னைக்கு நீ உங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போனியா.ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப வந்து நிட்குற.நான் நினைச்சேன் அது என்னோட மன பிரம்மைனு,ஏன்னா போதை மருந்து பாவிக்கும் போது இப்படி பிரம்மை தோன்றுவது வழக்கம்தான்.அப்படி எனக்கு உன் பிரம்மை தோன்றப்போலாம் உன்ன கிஸ் பண்ணுவேன்.இல்லன்னா ஏதும் குறும்பு பண்ணுவேன்.நீ உடனே கானாம போயிடுவே.அப்படித்தான் அன்னைக்கு உன்னை கட்டிப்பிடிக்க நினைச்சப்போ நீ என்னை தள்ளிவிடவும் எதிர்பாராமா சேலைய பிடிச்சி இழுக்க ,நீ என்ன அடிச்சதும் பிரமை இல்ல நிஜம் என்று ஆகிடிச்சி.அதுக்கப்புறம் எப்படி உன் முகத்தை பார்க்குறதுன்னுதான் 2 நாளா நான் லேட் நைட் வீட்டுக்கு வந்தேன்.நான் செஞ்சத நினைச்சி உன் மனசு என்ன பாடுபடுமோ என்றத நினைக்கும் போது மனசு ரொம்ப டிப்ரசன் ஆகிடுது,அதனாலதான் நான் மறுபடி அதிகமா போதை மருந்த போட்டுக்கு நினைச்சேன்"என்றவனை நித்யா
"ஏண்டா நீ இதை எல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்கலாமேடா?இந்த குழப்பம் வந்திருக்காதுல்ல.நான் வேற பாரு ஜேம்ஸ்பாண்ட் வேலை எல்லாம் பார்த்திருக்க தேவை இல்ல"என்று சந்துருவும் அனுவும் வந்ததில் இருந்து அவனது நோட்புக்கை படித்தது வரை எல்லாவற்றையும் ஒப்பித்தால்.
இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர் லயித்திருக்க நித்யா
"வருண்...என் மேல வெச்சிருக்குற காதல் என்னைக்குமே இருக்குமா?இல்ல பிறகு எப்போவாச்சும் நான் உங்கண்ணன காதலிச்சேன்னு உங்களுக்கு ஏதும் வருத்தமா இருக்குமா?"என்றவளை
"லூசு என்னடி பேசுற.நீ என்னோட தேவதைடி.உன்ன போய் நான் அப்படி எல்லாம் நினைப்பேனா.நீ எனக்கு கிடைச்சதே பெரிய வரம்டா"என்றவனை
"ஹலோ என்ன மரியாதை எல்லாம் ரொம்ப குறையிது" என்றவளை வருண் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.பின் அவளின் ரோஜா இதழ்களுக்கு தாவப்பார்க்க அவளோ அவனின் உதட்டில் கை வைத்து
"தம்பி, முதல்ல Rehabilation Centre கு போய் முழுசா குனமாகிட்டு வாங்க"என்றவளை அவன்
"அப்போ வேற ஏதுமில்லயா சையனா"என்று கேட்க
"only hug and kisses in Cheeck.அவ்லோதான்.அப்புறம் என்ன இனிமே நீங்க சையனா என்றுதான் சொல்லனும் சரியா"என்றவளை
"சரிங்க மேடம்"என்றான்.அன்றைய நாள் இவர்களுக்கு மிகவும் அழகாக கழிந்தது.இரவு ஆனதும் தூங்குவதற்கு தயாரான வேலை மீண்டும் வருணுக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது .இதை கண்ட நித்யா அவனை கட்டிலில் படுக்கவைத்து அவளும் அவன் அருகில் சென்று அவனை இருக்கி அணைத்துக்கொண்டாள்.ஆனால் வருணால் தன் போதை தேவையை கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரு கட்டத்துக்கு மேல அவனால் தாங்க முடியாமல் பற்கலால் தன் நாக்கை கடித்து கொள்ள இதை கண்டு பதறிய நித்யா அவளாகவே அவனுக்கு அந்த மருந்தை எடுத்துக்கொடுத்தால்.ஏனென்றால அவளால் வேறு எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலை.கொஞ்சம் கொஞ்சமாகதான் அவனின் போதைப்பழக்கத்தை மாற்ற முடியும் என நினைத்தவல் இன்று ஒரு நாள் இவன் இதை பயன்படுத்தட்டும் என் விட்டிருந்தாள்.
அடுத்த நாள் விடிந்ததும் சந்துருவுக்கு கால் செய்து விடயத்தை கூற மிகவும் சந்தோசப்பட்ட அவன் அவனுக்கு தெரிந்த ஒரு RC டாக்டருடைய காண்டாக்ட் டீடைல் கொடுக்க இவர்கள் இருவரும் அன்றே டாக்டரை காண சென்றனர்.
இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் நித்யாவின் லாப்டாப்பில் வருணும் நித்யாவும் AASHIQUI2 மூவி பார்த்து கொண்டிருந்தனர்.ஒரு ஹெட்செட்டை ஆளுக்கு ஒரு பக்கம் வைத்து பார்த்துக்கொண்டிருக்க இவன் Shradda Kapoor ஐ வைத்த கண் வாங்காமல் பார்த்து ஜொல்லு விட்டுக்கொண்டிருந்தான்.நித்யா வருணின் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைக்க உடனே வருண்
"ஆவ் ஏண்டி கிள்ளின.பாரு எனக்கு ரொம்ப வலிக்குது"என்றவனை
"ஆமா பொண்டாட்டிய பக்கதுல வெச்சிக்கிட்டு நீ கண்டவள சைட் அடிப்ப.அத பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்கனுமா?"என்றவளை
"ஏண்டி நீதானே இந்த மூவி பார்க்கலாம்னு சொன்னே?"என்றவனை
"சொன்னேன்,அதுக்குனு இப்படியா வெறிச்சிப்பார்ப்ப.நல்ல பிள்ளை மாதிரி மூவி பாரு ஒக்கே.அந்த ஹீரோயின் உனக்கு தங்கச்சி மாதிரி"என்றவளை வருண் முறைத்தவன்,மீண்டும் இருவரும் படத்தில் மூழ்க ,வருண் நித்யாவின் கழுத்தில் தன்னுடைய முகத்தை வைத்து உரசினான்.நித்யாவோ படத்தில் இருந்த ஆர்வத்தில் இவன் செய்யும் குறும்புகளை கவனிக்க மறந்தவள் திடீரென்று தன் இடையில் ஏதோ ஊர்வதை போல இருக்க பார்த்தவள் வருண் தன் வேலையை ஆரம்பித்து இருந்தான்.நித்யா எதுவும் பேசாமல் இருக்க படம் முடிந்ததும் வருணை அடிக்க ஆரம்பித்தால்.ஏன் அவள் அடிக்கின்றால் என்று புரியாத வருண்
"ஏண்டி கடங்காரி,எதுக்கு இப்போ அடிக்கிற?"என்று கேட்க
"மவனே இதுல வர்ற ஹீரோ மாதிரி மட்டும் என்ன தனியா விட்டுட்டு போகலாம்னு நினைச்சே.அப்புறமா நடக்குறதே வேற "என்றவளை
(அந்த படத்தில் ஹீரோ குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அவனால் அதில் இருந்து வெளி வர முடியாமல் தற்கொலை செய்துகொள்வான்)
வருண் உடனே நித்யா அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து அவளின் கண்களை கட்டியவனை
"டேய் என்னடா பண்றே"என்று நித்யா கேட்க அவனோ
"கொஞ்சம் பொறுமையா இருடி"என்று கூறி அவள் கையில் எதைதோ கொடுத்து அவள் கண் கட்டை அவிழ்த்தான்.அவள் கையில் இருந்ததை படித்தவள் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் அவனை இழுத்து அவன் இதழ்களை சிறை செய்தால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro