தீண்டல் 30
அமிர்தத்தால் வருண் கேட்டதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.அவர் எதுவும் மறுத்து பேசாமல் உள்ளே சென்றாலும் அவரால் தன் மகளின் வாழ்க்கை இப்படி அலைக்கழிக்கப்படுவதை விரும்பவில்லை.நிச்சயதார்த்த அன்று பர்வதத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது மட்டுமே தெரியும்.கரண் தன் மகளை நிராகரித்தது தெரியாது.ஆனால் அதே நேரம் நித்யாவுக்கு இப்படி திருமணங்கள் தடைபட்டுக்கொண்டே சென்றால் எதிர்காலத்தில் அவளை ராசி இல்லாதவல் என்று சமூகம் முத்திரை குத்திவிடும் என்று ரொம்பவே பயந்தார்.அந்த ஒரு காரணத்திற்காகவே இந்த திருமனத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.என்னதான் நித்யாவின் தாய் ஒரு முற்போக்கான சிந்தனை உடையவராக இருந்தாலும் தன் மகளின் வாழ்க்கை என் வரும் போது தானும் ஒரு சாதாரன தாய்தான் என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டார்.
ஒரு வாரத்தில் பர்வதம் வீட்டிற்கு வர முதலாவதாக அதிதி
"யாருகிட்ட கேட்டு நித்யாவ வருண் அண்ணாக்கு பேசி முடிச்சீங்க.அவ என்ன உங்களுக்கெல்லாம் விளையாட்டு பொம்மையா.நேத்தைக்கு அருண் அண்ணா,அப்பறமா கரண் அண்ணா,இப்போ வருண் அண்ணாவா.என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க எல்லோரும்"என்று தன் குடும்பத்தாரை பார்த்து எகிறிய அதிதியை பர்வதம்
"இங்க பாரு அதிதி.இந்த வீட்டுக்கு அவதான் மருமகள்.சரியா,உனக்கு இஷ்டமா இல்லயான்னுலாம் கேட்கல.கட்டிக்க போற ரெண்டு பேரும் சம்மதம் சொல்லியாச்சி,இதுல உனக்கென்ன பிரச்சினை"என்று தன் தாய் கேட்க அதிதி எதுவுமே பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டவள் நித்யாவுக்கு கால் செய்து
"ஏண்டி உனக்கு அறிவில்ல.உன் மனசதான் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க.நீயாச்சும் வாய திறந்து பேசலாமே.நீயும் கரண் அண்ணாவ விரும்பினே என்று"என்றவளை மறுமுனையில் நித்யா
"அதிதி யாருக்கு யாரு என்று கடவுள் என்னைக்கோ முடிச்சி போட்டுட்டாருப்பா.அப்பறம் இந்த கொஞ்ச நாள்ள உங்க கரண் அண்ணாமேல எனக்கு ஒரு அபிப்ராயம் வந்தது உண்மைதான்.அருண என் லைப்ல இருந்து ஈசியா தூக்கி போட முடிஞ்சது.ஏன்னா அதுக்கு அவரோட காதல் காரணமாக இருந்திச்சி.ஆனா கரண் என்ன வேணானு சொன்னப்போ நிராகரிப்பட்டுட்டமே என்ற கவலைய விட அடுத்தது என்ன செய்ய போறோம்ட பயம்தான் எனக்கு வந்திச்சி.சும்மா ஒரு கல்யாணம் தடைபட்டாலே ராசி இல்லாதவன்னு சொல்ர சமூகம் இதுல 2 வதும் நின்னு போச்சின்னா அவ்வளவுதான்.இதுக்கும் மேல வாசுகி வேற இருக்கா.நான் பண்ண முட்டாள்தனத்தால அவ வாழ்க்கை கெட்டு போயிடக்கூடாது. அப்பறம் உங்க ரெண்டாவது அண்ணன் ஒன்னும் தப்பான ஆளுகிடையாதே.அவரும் நல்லவருதானே"என்றவளை
"என்ன நித்யா நீயும் ஒரு சாதாரன பொண்ணு மாதிரி ராசி,சமூகம் என்ன நினைக்கும்னு பேசுற.உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல"என்றவளை
"அதிதி ஒன்னு சொல்ரேன் கேட்டுக்கோ.நமக்குனு மட்டும் வர்றப்போ நம்ம என்ன வேணா செய்யலாம்.எதிர்த்து போராடலாம்.ஆனா இப்போ உங்கம்மாவோட பெரிய கவலையே நாந்தான்.எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சி கொடுக்கனும்கிறதுதான் அவங்க மனசுல இப்போ ஓடிக்கிட்டு இருக்கும்.அப்பறம் எங்கம்மா என்னதான் போல்ட் ஆஹ் காட்டிக்கிட்டாலும் என் கல்யாண விசயம் தள்ளி போறது அவங்களுக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை கொடுக்கும்னு எனக்கு தெரியும்.எனக்கு அப்பறமா வாசுகி இருக்கா.அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கைய அமைக்கனும்.இதெல்லாம் யோசிக்கிறப்போதான் உங்கண்ணா என்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்டாரு.அதுவும் உங்கம்மா அவருகிட்ட கேட்டதால.சரி காதலிச்சவரையும் காதலிக்கலாமான்னு யோசிச்சவரையும் தான் கல்யாணம் பண்ணிக்க முடியல.அட்லீஸ்ட் வருண சரி கல்யாணம் பண்ணிக்கிட்டு காதலிக்கலாம்னு பார்க்கிறேன்.என்ன சொல்ரே நாத்தனாரே"என்றவளை
"சரி ஏதோ ஒன்ன பண்ணித்தொல.எப்படியோ என் உயிர வாங்க கடைசில எனக்கே எங்க வீட்டுக்கு அண்ணியா வர போற "என்றவளை
"ஒய்ய் என்ன, மரியாத மரியாத"என்று தொடங்கி இருவரும் நெடுநேரம் ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டனர்.
காலை கட் செய்து முடித்ததும் மனதுக்குள் 'சாரி அதிதி உங்கிட்ட எதயுமே மறைக்க கூடாதுன்னு நினைச்சேன்.ஆனா நானும் வருணும் கல்யாணம் செஞ்சி கணவன் மனைவியா இல்லாம நல்ல ப்ரெண்ட்சாதான் இருக்க போறோம்.ஏன்னா அவரு ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சிருக்காருடி.இத உங்கிட்ட என்னால சொல்ல முடியல.அவரு அன்னைக்கு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாருடி.சாரி"என்று மனதுக்குள் அதிதியிடம் மன்னிப்பு கேட்டாள்..
ஆனால அங்கு அதிதியோ 'சாரி நித்யா,உன் வாழ்க்கைய என்னோட குடும்பத்த சேர்ந்த எல்லோரும் ஒரு விளையாட்டு பொருள் மாதிரி ஆக்கிட்டாங்க.எங்கம்மாக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடாதுன்னு நீ உன் வாழ்க்கைய இப்படி பண்ணிட்டியேடி.உன் நல்ல மனசு யாருக்கும் வராதுடி.நித்யா யு ஆல்வேஸ் க்ரேட்"என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.
சில நாட்களின் பின் அதிதிக்கு கால் செய்த கரண்
"அதிதி ,எப்படி இருக்க"என்று கேட்க அவளோ என்னதான் இவன் நித்யாவிடம் அவனது உண்மை நிலையை எடுத்து கூறியிருந்தாலும் அவளால் அவன் நித்யாவை நிராகரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தவள் ஏதோ கால் செய்துவிட்டானே என்று நாகரீகம் கருதி
"இருக்கேண்ணா.நீங்க எப்படி இருக்கீங்க?"என்றால்.அவனோ
"மனசே சரி இல்லை அதிதி.அவசரப்பட்டு முடிவெடுத்துட்டேனோ என்று தோனுது"என்று கூறினான்.
அதற்கு அவள்
"இப்ப யோசிச்சி என்ன பண்றதுன்னா.அதான் அடுத்த வாரம் வருண் அண்ணாக்கும் நித்யாவுக்கும் கல்யாணாமாச்சே"என்று அதிதி கூற கரண்
"அதிதி,கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் மனசு விரும்பி கல்யாணாத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டாங்க.சித்தியோட உடல் நிலையும் நித்யாவோட கல்யாணம் இப்படி ரெண்டாவது தடைபட்டத காரணமா வெச்சுதான அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பாங்க.நீ மனசு வெச்சா நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் ஒன்னு சேரலாம்.ப்ளீஸ் ஹெல்ப் கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?"என்று கேட்க அதிதிக்கோ கோவம் பொத்துக்கொண்டு வந்தது.
"அண்ணா நீங்க என்ன லூசா.அவ இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவ மனச மாத்திகிட்டு இருக்கா,இதுல நீங்க வேற சும்மா குழப்பிவிட்றாதீங்க.தயவு செய்து இனி அவ வாழ்க்கைல வந்துடாதீங்க"என்றவளை
"இல்ல அதிதி இந்த 3 மாசத்துல அவ மனசுலயும் என் மேல ஒரு அபிப்ராயம் வந்திருக்கு.அவள இல்லன்னு சொல்ல சொல்லு பார்க்கலாம்"என்று கூற அதிதி
"இப்படி பேசுர நீங்க அன்னைக்கு ஏன் அப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசினீங்க.அவ மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் தெரியுமா.அண்ணா இதோட இந்த பேச்ச விட்றுங்க.இல்லன்னா நான் அம்மாகிட்ட சொல்ல வேண்டி இருக்கும்"என்று மிரட்டும் தொனியில் கூற கரணுக்கு கோவம் வந்து அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்
"சரி அதிதி நான் ஏதோ தெரியாம பேசிட்டேன்.இதோட இந்த மேட்டர மறந்துடலாம்"என்றவன் மனதுக்குள் 'என்னடி உங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்னு என்ன மிரட்டுறியா.இரு நான் யாருன்னு காட்டுறேன்'என்று மனதுக்குள் கருவிக்கொண்டான்.திருமணத்திற்கு எல்லா வேலைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்க நித்யாவும் வருணும் வழமையாக திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மணமக்களை போல் இல்லாமல் சாதாரனமாக இருந்தது எல்லோருக்கும் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், போக போக எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணி திருமண வேலையில் மும்முரமாகினர்.
திருமணத்தின் முதல் நாள் வசுந்ராவின் மாமா திடீரென்று மரணிக்க வசுந்ரா கட்டாயம் அவள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதாக போய்விட்டது.அவளை தனியாக அனுப்பவேண்டாம் என்று அருணையும் அவளுக்கு துனையாக பர்வதம் போக சொன்னார்.வசுந்ரா எவ்வளவு தடுத்தும் பர்வதமும் வருணும் அவளை தனியாக செல்ல அனுமதிக்கவில்லை.இன்று போய் திருமண நாள் காலையிலேயே வந்து விடலாம் என்று யோசித்து சென்றவர்களால் திருமண நாள் அன்று வந்து சேர முடியவில்லை.திருமணத்தை ஒரு நாள் தள்ளி வைக்கலாம் என அமிர்தம் உட்பட எல்லோரும் கூற பர்வதமோ அருண் இல்லை என்றால் பரவாயில்லை.எக்காரணம் கொண்டும் இந்த திருமணம் நின்றுவிடக்கூடாது என்று மும்முரமாக இருந்து நடத்தியும் காட்டினார்......திருமணம் ஒரு சிறிய கோவிலில் இனிதே நடைபெற்றது......
அம்மாடி ஒரு மாதிரியா 30 எபிசோட் ப்ளாஷ் பேக் எழுது முடிச்சிட்டேன்....இனி எல்லாமே லைவ் தான்...
--------
புது ரைட்டர்....
Sathyanila இப்போதான் ஆரம்பிச்சிருக்காங்க... சப்போர்ட் பண்ணுவோமா ப்ரெண்ட்ஸ்..
https://my.w.tt/NwZKR19dCM
----------
புதி எழுத்தாளர்களின் கதைகள் ஏதும் இருந்தால் மெசேஜ் செய்யுங்கள்.. படித்துவிட்டு ஒரு ப்ரொமோசன் பண்ணிடலாம்..😊😊😊😊
கடந்த அத்தியாயத்தில் எழுத்து தவறுகளை சுட்டிக்காட்டிய ejasahame ம்கு நன்றிகள்.
கதையில் பல சந்தேகங்களை ஒரு விவாதமாக மாற்றிய shaju821 barathbobby96 priyagothandasamy ற்கு நன்றிகள்.அந்த கலந்தாலோடனையை பார்த்தபின் பல மாற்றங்கள் கதையில் கொண்டு வந்தால் நல்லது என்று தோன்றுகின்றது. பொருத்திருந்து பார்க்கலாம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro