Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 29

அடுத்த நாள் காலையில் நித்யா கரணுக்கு கால் செய்ய அவன் கேட்ட முதல் கேள்வி,

"நித்யா நீ ஏன் அருண விரும்பினத என்கிட்ட சொல்லல.நான் உங்கிட்ட ஒரு நல்ல ப்ரெண்டாதானே பழகினேன்.இந்த மூனு மாசமும நம்ம டெய்லி போன்ல பேசிக்கிட்டோமே.ஒரு நாள் சரி நீ சொல்லிருக்கலாமே?ஏன் சொல்லல நித்யா? I feel like ,u cheated me"என்றவனை நித்யா உடனே

"கரண் என்ன சொல்ரீங்க.நிஜமா உங்களுக்கு அது தெரியாதா.ஐயோ நான் உங்களுக்கு தெரியும்னு இல்ல இருந்தேன்.சத்தியமா சொல்ரேன் கரண் நான் உங்ககிட்ட மறைக்கனும்னு நினைக்கல.ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க"என்றவளை

"ஹ்ம்ம் இதுல உன் தப்பு ஒன்னும் இல்லடா.எல்லாம் எங்கம்மா பண்ண தப்பு.என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாங்க.அதனால இப்ப பர்வதம் சித்திக்கு இப்படி ஆகிட்டு.நான் இப்போ எல்லோருக்கும் வில்லன் ஆகிட்டேன்"என்றவனை அவள்

"கரண் நான் அருண விரும்பினது உண்மைதான்.ஆனா எப்போ அவரு மனசுல வசுந்ரா இருக்காங்கன்னு தெரிஞ்சுதோ அன்னைக்கே அவங்கள ஏன் மனசுல காதலன் என்ற அந்தஸ்துல இருந்து இறக்கிட்டு நல்ல நண்பன் என்றா ஸ்தானத்துல வெச்சிட்டேன்.இந்த மூனு மாசத்துல உங்க மேல எனக்கு காதல் வந்திச்சான்னு தெரில.ஆனா உங்க கூட லைப் லாங்க் வாழ்ந்தா நல்லா இருக்கும்னு தோனிச்சு. Now ball in your court.நீங்கதான் டிசைட் பண்ணனும்" என்றவளை

"இல்ல நித்யா.என்னால உன்ன என் மனைவியா ஏத்துக்க முடியாது.நீ ஒரு பையன லவ் பண்ணே என்றது இல்ல ரீசன்.அது அருண் எண்டதுதான் எனக்கு இப்போ பிரச்சினை.என்னோட நேர்ச்சரே திடீரென்று எனக்கு கோபம் வரும்.கோபத்துல என்ன பேசுரேன்னு தெரியாம முன்னாடி இருக்குறங்கள ரொம்ப கேவலமா திட்டிடுவேன்.அதனாலேயே எனக்கு ப்ரெண்ட்ஸ் யாருமே இல்ல.நீ வேற யாரும் பையன லவ் பண்ணி இப்படி ஆகி இருந்தா நம்ம அவன இனி ப்யூச்சர்ல சந்திப்போமா என்கிறது சந்தேகம்தான்.ஆனா இப்போ அது அருண் என்கிறதால நம்ம டெய்லி அவன சந்திக்க வேண்டி வரும்.அந்த நேரங்கள்ல நான் உன்னையோ இல்ல அவனையோ கோபமா பேசிட்டேன்னா நம்ம குடும்பம் சின்னாபின்னமாகிடும்.என்னோட மெண்டாலிட்டி தெரிஞ்சே நான் உன் வாழ்க்கைய ஒரு கேள்விக்குறிக்குள்ள கொண்டு வர நினைக்கல.என்ன தப்பா நினைச்சுக்காத.நம்ம என்னைக்குமே நல்ல ப்ரெண்ட்ஸா இருக்கலாம்"என்றவனை

"என்ன கரண் இதுக்கு போய் நீங்க மன்னிப்பு கேட்குறீங்க.நாங்க பண்ண தப்புக்கு நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கனும்.கல்யானத்துக்கு முன்னாடியே நீங்க இதெல்லாம் சொன்னது ரொம்ப நல்லதா போச்சு.இல்லன்னா நம்ம எல்லோரோட லைபும் டோடல்லா டெமேஜ் ஆகியிருக்கும்.நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்பா.லீவ் இட்.இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லப்பா.முதல்ல போய் பர்வதம் அம்மாவ பாருங்க.பாவம் அவங்க.எங்க வீட்ல நான் பேசிக்கிறேன்"என்றவளை

"ரொம்ப தாங்க்ஸ் நித்யா.நிலமைய சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு"என்றவனை

"இட்ஸ் ஓக்கே கரன்.டேக் கெயார் .பாய்"என்று காலை கட் செய்தவள் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்தவள் ஒரு கணம் 'நமக்கு எதற்காக இப்போ கண்ணீர் வந்தது.அருண் வீட்டின் நெருங்கிய உறவான கரணே நம்மை புரிந்து கொள்ளாத போது மற்ற யாரும் தன்னை புரிந்து கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணமா?இல்லை கரண் தன்னை நிராகரித்ததால் ஏற்பட்ட வேதனையா' என்று புரியாமல் நின்றால்.

US இல் இருந்து வந்த வருண் நேரடியாக அவன் அம்மாவை பார்க்க சென்ற போது அப்போதுதான் பர்வதத்தை ICU வில் இருந்து சாதாரன வார்ட் இற்கு மாற்றியிருந்தனர்.பர்வதத்தை சுற்றி எல்லோரும் நிற்க வருண் வந்ததும் அவனுக்கு வழிவிட்டு எல்லோரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றனர்.பர்வதம் மெதுவாக வருணின் கைகளை பிடித்து அவன் அருகில் உட்காருமாறு கூறியவர் கொஞ்ச நேரம் எல்லோரையும் வெளியில் இருக்கும்படி கூறினார்.எல்லோரும் வெளியில் செல்ல பர்வதம்

"வருண்,அம்மாக்கு இது ரெண்டாவது அட்டாக்டா.இன்னொருதடவ இப்படி ஆச்சின்னா நான் இருக்க மாட்டேன்பா.நீ எல்லாமே கேள்வி பட்டிருப்ப.நம்ம குடும்பத்தால அந்த பொண்ணோட வாழ்க்கை இப்போ கேள்விக்குறி ஆகிடுச்சி.வருண் சின்ன வயசில இருந்து நீ உன் இஷ்டப்படிதான் இருந்திருக்க.உன் விருப்பத்துக்கு நான் எந்த தடையும் சொன்னதில்ல.ஆனா இப்போ இந்த அம்மா ஒன்னு கேட்குறேண்டா.முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத"என்றவரை அணைத்து

"அம்மா இனிமே நீ என்ன சொன்னாலும் கேட்பேன்.உனக்கு என்ன வேணுமோ கேளு.நான் US போக வேணாமா?போகல்லமா.என் ஜாப் ரிசைன் பண்ணிட்டுதான் வந்திருக்கேன்"என்றவனை

"அதில்ல வருண்.நீ நித்யாவ கல்யாணம் பண்ணிக்கனும்.அவள ஆயுசுக்கும் கண் கலங்காம பார்த்துக்கனும்.பண்ணுவியாப்பா?"என்று கேள்வியாக கேட்டவரை

அவன் எந்த ஒரு தயக்கமும் இன்றி

"கண்டிப்பா.இனிமே நீங்க சொல்ர எதையுமே நான் தட்ட போறதில்லமா"என்றவனின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டார் பர்வதம்.வெளியில் இருப்பவர்களை உள்ளே அழைத்து விடயத்தை கூற எல்லோருக்கும் பூரண சம்மதம்.அதே நேரம் அமிர்தம்,நித்யா,வாசுகி என மூவரும் ஹாஸ்பிடல் வர எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என எல்லோருக்கும் ஒரு சங்கடமாக இருந்தது.அதே நேரத்தில் அதிதியின் அத்தையும் அவளின் மகள் ஸ்வப்னாவும் பர்வதத்தின் உடல் நிலை அறிந்து பதறி அடித்துகொண்டு வர எல்லோரும் வருண் ,நித்யாவின் திருமன பேச்சை பேசாமல் இருந்தனர்.ஆனால் வருண் கண் ஜாடையால் நித்யாவை வெளியில் வர சொல்லி செல்ல அதை இரண்டு கண்கள் கண்டு கொண்டது.

வருணின் இந்த சைகையில் கொஞ்சம் திகைப்புற்ற நித்யா ஏதோ ஒரு முக்கியமான விடயம் என்பதை மட்டும் உணர்ந்து பூனை போல அவளும் மெதுவாக வெளியில் சென்றால்.வெளியில் வந்த நித்யாவிடம் வருண் தன் அம்மா கூறிய விடயங்களை கூறி அவளது சம்மதத்தை கேட்டு நின்றான்.நித்யாவோ எதுவாக இருந்தாலும் தன் தாயிடம் பேசிக்கொள்ளும்படி கூறிய அதே நேரம் அமிர்தம் வெளியில் வர அவரிடம் நேரடியாகவே விடயத்தை கேட்டவன்

"ஆண்டி ,கண்டிப்பா நான் நித்யாவ நல்லா பார்த்துப்பேன்.ப்ளீஸ் ஆண்டி.நித்யாவோட கல்யாணம் 2 தடவை தடைப்பட்டதுல அம்மாக்கு இப்படி ஆகிடிச்சி.நீங்க சொல்ல போர பதில்லதால எங்கம்மாவோட உயிர் இருக்கு"என்று கூற அமிர்தத்தால் எதுவும் எதிர்த்து பேசமுடியவில்லை.இருந்தாலும் 2 தடவை தன் மகளின் திருமன பேச்சு தள்ளி போனதால் இந்த சமூகம் இனி தன் மகளை ஒரு ராசி கெட்டவள் என்று கூறி விடுமோ என்ற பயந்தவர் வருணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

"ஆண்டி நீங்களே அம்மாகிட்ட சொல்லிட்டீங்கன்னா அவங்க சந்தோசப்படுவாங்க.உங்க கிட்ட எப்படி கேட்குறது என்று தெரியாம இருக்காங்க.ப்ளீஸ் உங்க சம்மதத்த சொல்ரீங்களா?"என்று கேட்க அமிர்தம்

"சரி தம்பி,நான் சொல்ரேன்"என்று உள்ளே செல்ல இங்கு வருண்

"நித்யா ,என்னடா நம்ம கல்யாணம் ஒரு புட்பால் மாதிரி ஆளாளுக்கு போட்டு விளையாடுறாங்க எண்டு நினைக்காத.எனக்கு தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இருக்காதுன்னு.2 நாள் முன்னாடி வரைக்கும் கரண் தான் உன் வருங்கால கணவன் என்று இருந்துட்டு இப்போ திடீரென்று கேட்டா உன் மனசு எவ்வளவு வேதனைப்படும் எண்டு தெரியுது.வேற வழி இல்லை நித்யா" என்றவனை

"கொஞ்சம் வருத்தம் தான் இருந்தாலும் பர்வதம் அம்மாக்காக இது கூட பண்ணமாட்டேனா "என்றவளை

"நித்யா என்னப்பதி ஒரு சின்ன விசயம் சொல்லிடுறேன்.நான் ஒரு பொண்ண 8 வருசமா லவ் பண்ணேன்.ஆனா அது அவளுக்கு தெரியாது.அவகிட்ட சொல்லலாம்னு இருந்தப்போ அவளுக்கு திடீரென மெரேஜ் பிக்ஸ் ஆச்சு.அதுக்கு அப்புறமா என்ன ஆச்சுனு தெரியல.சோ,என்னால அவள மறக்க முடியல.இந்த கல்யாணம் ஒரு சம்பிரதாயத்துக்காக பண்ணிக்கலாம்.உனக்கு இந்த கல்யாணம் தேவை இல்லைன்னு தோனிச்சுனா ,ஐ மீன் நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்னு நினைக்கிறேன்.நீ எது வேணும்னு சொல்ரியோ அதை செய்யலாம்டா.நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ப்ரெண்ட்லியாவே இருக்கனும்னா இருக்கலாம் இல்ல உனக்கு டைவோர்ஸ்தான் வேணும்னா கூட தாராலமா பண்ணலாம்"என்றவனை

"வருண் சோ தாங்க்ஸ்.என் மனசுல இருக்குற கஷ்டத்த புரிஞ்சி பேசினிங்க பாருங்க.யூ ஆர் சோ க்ரேட்.எனக்கு எந்த boy உம் இதுவரைக்கும் ப்ரெண்டா இருந்ததில்ல.நீங்க சொன்ன மாதிரி நம்ம ப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்.உங்களுக்கு அப்படி டைவோர்ஸ் பண்ணனும்னு தோனிச்சினா அப்புறமா அத பத்தி யோசிக்கலாம்"என்றவளை

"ரொம்ப நன்றி நித்யா.நீ இத இவ்வளாவு ஈசியா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்ல.நீ சொல்ரதும் கரக்ட்தான்.நம்ம நல்ல ப்ரெண்ட்ஸா இருக்கலாம்.ரெண்டு பேருக்குமே மனசுல பல வலிகள் இருக்கு.எல்லாத்தையும் நம்ம ப்ரெண்ட்சிப் மூலம் இல்லாம செய்திடலாம்"என்றவனை நித்யா புன்னகைத்து

"வருண் சத்தியமா நீங்க இவ்வளவு பொறுப்பா பேசுவீங்க எண்டு நான் நினைக்கவே இல்லப்பா.அதுவும் என் மனசுல இருக்குறா கஷ்டத்த உணர்ந்து பேசினீங்க பாருங்க.ப்யூச்சர்ல உங்கள கட்டிக்க போற கொடுத்த வெச்சவ"என்றவளை வருண்

"அப்போ உன்ன நீயே கொடுத்து வெச்சவென்னு சொல்லிக்குற"என்று கலாய்க்க அவளோ

"என்ன ?"என்று கேள்வியாக கேட்டால்.

"இல்லப்பா என்ன கட்டிக்க போற முதல் பொண்ணு நீதானே" என்று கூறி "ப்ரெண்ட்ஸ்"என்று  கையை கொடுக்க அவளும் அதை பற்றிக்கொண்டால்.இவர்கள் பேசிக்கொண்டதை ஒரு ஜோடி கண்கள் குரோதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro