Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 24


நித்யாவுடன் கோபமாக பேசிவிட்டு அறைக்குள் வந்த பர்வதத்தின் மொபைல் அலற எடுத்தவர் தன் கணவர் என்பதை அறிந்து

"ஹலோ சொல்லுங்க"என்று சுரத்தே இல்லாமல் கூறினார்.தன் மனைவியின் ஒவ்வொரு சிறு அசைவையும் உண்ணிப்பாக கவனிப்பவர் அவரின் குரலை வைத்தே

"என்ன பர்வதம் வீட்ல ஏதும் பிரச்சினையா?"என்று கேட்டார்.உடனே பர்வதம் மனதில் இருந்த பாரம் அனைத்தையும் அவர் மீது இறக்கி வைக்க அசோகனோ மிகவும் நிதானமாக

"ஏண்டா உனக்கு நம்ம பையன் வசுந்ராவ விரும்புறது பிடிக்கல?அவ முன்னாடி கல்யாணமானவ எண்டதாலயா?இல்ல நித்யாவ உனக்கு மருமகளாக்கிக்க முடியல எண்ட வருத்தமா?இது இரண்டும் இல்லை என்றால் எப்பவுமே உன் சொல் பேச்சு கேட்கும் அருண் அவனோட கல்யாண பேச்சுல கேட்கல்லயே எண்ட கோவமா?எதுடா உன்ன இப்படி மாத்திச்சு?"என்று தன் கணவன் இப்படி கேட்ட போதுதான் அவருக்கு தான் செய்த தவறு தெரிந்தது.உடனே தன் கணவனிடம்

"ச்சே நான் தப்பு பண்ணிட்டேங்க.சின்ன பிள்ள மாதிரி நடந்துட்டேன்.அந்த நேரத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரில.நம்ம பையனோட நிலமை தெரிஞ்சும் அந்த நித்யா பொண்ணு அவனதான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்னப்போவே அவதான் என் மருமகள்னு முடிவு பண்ணிட்டேன்.அத என் மனசுல இருந்து மாத்திக்க முடியாம என்ன பேசுறோம்னு கூட தெரியாம ரொம்ப மோசமா பேசிட்டேங்க"என்று ஆதங்கப்பட்ட பர்வதத்தை அசோகன்

"அடி லூசு பொண்டாட்டி,உனக்கு அவதான் மருமகளா வரனும்னா நமக்குதான் இன்னொரு பையன் இருக்கானே.அவனுக்கு கேளு அவள"என்றதும்

"என்னங்க பேசுரீங்க.அவ அருண லவ் பண்ணிட்டு எப்படி வருண...அதுவும் இப்பதான் இந்த குழப்பமெல்லாம் நடந்திருக்கு" என்று கூற

"இங்க பாரு பர்வு,அந்த பொண்ணு அப்படி சும்மா டென்சன் ஆகுற ஆளு கிடையாது.அப்புறம் நான் உடனே வருணுக்கு கேட்க சொல்லல.அதுக்கு நான் வேற ப்ளான் ஒன்னு சொல்ரேன்.ஆனா அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருந்தா மட்டும்தான் நம்ம இத பண்ணலாம்"என்றவரை

"ஏங்க நீங்க சும்மா இருங்க,அவ பெரிய இவளாட்டம் என்கிட்டயே சவால் விட்டுட்டு போய் இருக்கா.நானா அவளான்னு பார்க்குறேன்முதல்ல.உங்களுக்கே தெரியும்ல.நான் என் வாழ்க்கைலயே எதுலயுமே தோற்றதில்ல.ஏன் நம்ம முதல் சந்திப்பு கூட எப்படி.அப்பவும் நாந்தானே ஜெயிச்சேன்"என்று அவர்களின் முதல் சந்திப்பை நினைவுபடுத்த அசோகன்

"சரி பர்வு,எனக்கு மீட்டிங்க் ஒன்னு இருக்கு.நான் முடிச்சிட்டு வரேன்.அப்புறமா பேசலாம்"என்று கூறி காலை கட் செய்தவர் மனதுக்குள்

'அடி லூசு பர்வு,ஆம்பளைங்களுக்கு தான் காதலிக்குற பொண்ணுகிட்ட தோற்கிறதே ஒரு சுகம்டி.அது உன் மரமண்டைக்கு எங்க புரிய போகுது,அப்புறம் இவ்வளவு நாளா நம்ம ரெண்டு பேரும் சந்திச்ச அந்த முதல் கேஸ்ல நீதான் ஜெயிச்சேன்னு நினைச்சுகிட்டு இருக்க.ஆனா என்னோட க்ளையண்ட் மேலதான் முழுத்தவறும் என்று தெரிஞ்ச பிறகு அவனுக்கு சார்பா என்னால வாதாட முடியல்ல.அதனாலதான் நான் ஏனோ தானோன்னு அந்த கேஸ்ல கலந்துகிட்டேன்.அதுல படிச்ச பாடம்தான் அதுக்கு பிறகு எந்த கேஸ் வந்தாலும் அத அக்சப்ட் பண்ணிக்க முன்னாடி நான் டிடக்டிவ் வெச்சு அந்த கேசோட முழுடீடைலும் எடுத்துட்டுதான் ஒத்துக்குவேன்.ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட தன் காதலுக்காக தோத்து போகலாம்.ஆனா ரெண்டு பொண்ணுங்க சவால் விடும் போது அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.பார்கலாம் நீயா இல்ல அந்த பொண்ணான்னு' என்று மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டார்.

இந்த குழப்பமெல்லாம் நடந்து முடிய அதிதி வருணுக்கு கால் செய்து இங்கு நடந்ததை கூற முயற்சித்த வேலை அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.ஒரு தரம் கால் செய்த போது அவன் மிகவும் நிதானம் இல்லாமல் பேசிய போல அதிதிக்கு தோன்றி 'அண்ணா என்ன குடிச்சிருக்கியா'என்று கேட்டதற்கு அதன் பின் அவனிடம் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை.வருண் இப்போதெல்லாம் ஒரு புரியாத புதிராகிப்போனான்.ஆனால் இது எதுவும் பர்வதத்திற்கு தெரியாது.

இந்த குழப்பமெல்லாம் நடந்து மூன்று மாதம் கடந்திருக்க ஒரு நாள் நித்யா அருணுக்கு கால் செய்து

"ப்ரோ ,இப்போ என்னதான் பண்ண போறோம்?எப்படி உங்க ஆள மடக்குறது?ஏதும் ப்ளான் இருக்கா?"என்று கேள்விமேல் கேள்வியாக அடிக்கொண்டு செல்ல அவனோ

"என்னது ப்ரோவா..சரி சரி அதுவும் நல்லதுதான்.ஆமா எங்கம்மா உன்ன அன்னைக்கு அப்படி பேசினதுல நீ கவலையா இருப்பேன்னு நினைச்சுதான் நான் ஒன்னுமே பேசாம இருந்தேன் .இப்போ நீயே இப்படி கேட்கும் போது நான் சொல்லாம இருப்பேனா,என்கிட்ட ஒரு பக்கா ப்ளான் இருக்கு.ஆனா கொஞ்சம் சொதப்பினாலும் நீதான் மாட்டிக்குவ.அதான் யோசிக்குறேன்" என்றவனை

"அடப்போங்கைய்யா..முதல்ல உங்கம்மா பேசினது எல்லாம் எனக்கு வருத்தமே இல்ல.எப்படியும் எங்க சாலஞ்ச்ல நாந்தான் ஜெயிக்க போறேன்.ரெண்டாவது நீங்க இனிமே ப்ரோதான்.ஏன்னா எப்போ உங்க மனசுல ஆஹ்ஹ்ஹ் சாரி ....மனசுல மட்டுமா .ஹிஹி அதான் எல்லாம் முடிஞ்சுதே.ஹ்ம் சரி அத விடுங்க ,ஆமா உங்க மனசுல இப்படி ஒரு காவிய காதல் இருக்கும் போது உங்கள ப்ரோன்னுதான் சொல்லலாம்.வேற என்ன சொல்ல.அப்புறம் நாளைக்கு ஒருத்தன் என்ன கல்யாணாம் பண்ண வரும் போது நான் உங்களையே நினைச்சிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?"என்றளை

"அம்மா தாயே போதும் உன் லெக்சர்.சரி நான் சொல்ரத அப்படியே செய்"என்று அவனது திட்டத்தை கூறினான்.அதை கேட்ட அவளோ

"ஹஹா இதானா உங்க மொக்க ப்ளான்"என்று கேட்க

"லூசு இதுதான் பெஸ்ட் ப்ளான்.ஏன்னா வசுந்ரா கண்டிப்பா சென்னைலதான் இருக்கா.சோ உங்க சித்தி கம்பனில உள்ள router பிசிக்கல்லி டெமேஜ் ஆச்சுன்னா கண்டிப்பா அவ வந்துதான் ஆகனும்.ஏன்னா அவங்க கம்பனில நெட்வேர்க் அட்மின் யாருமே இல்ல.அப்புறமா அவ என்ன விட பெரிய தில்லாலங்கடியா இருக்கா.ஏன்னா அவளுக்கு தெரிஞ்சிருக்கு நான் அவங்க கம்பனி கால்லாம் ஒட்டுக்கேட்பேன்னு.அதான் அவ ஒவ்வொரு வாட்டி கால் பண்ணும் போதும் நான் அவள டிரேஸ் பண்ண முடியாம ஏதாச்சும் பண்ணிடுறா.ஆனா என்னோட அறிவுப் பொண்டாட்டி ஒரு விசயத்த மறந்துட்டா.கவர்மண்ட்கு மட்டுமே உள்ள ஒரு அக்சஸ் மூலமா அவ சென்னைலதான் இருக்கான்னு கண்டுபிடிச்சிட்டேன்.ஆனா எங்க இருக்கான்னுதான் கண்டுபிடிக்க முடியல.நான் சொல்ர மாதிரி நீ பண்ணேன்னா கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்.ஆனா எனக்கு ஒரு பயம் இருக்கு"என்றவனை

"என்ன பயம் ப்ரோ"என்று கேட்க

"இல்ல நான் அவள தேடுறேன்னு தெரிஞ்சு அவ ஏதும் தப்பான முடிவெடுத்துட்டான்னா.அதான் கொஞ்சம் பக்குன்னு இருக்கு"என்று கூற நித்யாவோ

"அப்படிலாம் ஏதும் ஆகாது .சரியா. அப்புறம் என்ன லூசுன்னு சொல்ர வேலயெல்லாம் வேனாம். அது என் வருங்கால புருசன் மட்டும்தான் அப்படி சொல்லனும்" என்றவளை

"சாரி அப்படி சொன்னதுக்கு.அப்புறம் அவ வாழ்க்கைல இனிமே இழக்குறதுக்கு அவளுக்கு எதுவுமே இல்லை.அதான் என் வாழ்க்கை நல்லயிருக்கனும்னு நினைச்சி ஏதும் லூசுத்தனமா முடிவெடுத்துட்டான்னா"என்றவனை

"அருண் அதெல்லாம் சந்தேகம் வராத மாதிரி பக்காவா பண்ணிடலாம்.என்ன அந்த router கு வர்ர குட்டி வயர்ல ஒன்ன கட் பண்ணிட்டு அப்புறமா நீங்க கொடுக்குற டிவைஸ அந்த இடத்துல பிக்ஸ் பண்ணனும் அதானே.நான் பக்காவா பண்ணிடுறேன் சரியா.ஆனா உங்கம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா.ஏன்னா நீங்க வசுந்ராவ பார்த்து ,அவங்க பேசி, அவங்கள சம்மதிக்க வெச்ச பிறகு உங்கம்மா அவங்கள ஏதும் கோவத்துல மோசமா திட்டிட்டாங்க என்ன செய்றது "என்று உண்மையான கவலையுடன் கேட்க அவனோ

"இப்போ அதெல்லாம் யோசிக்க டைம் இல்ல நித்யா.அவ சென்னைல இருக்குறப்போவே கண்டுபிடிச்சாத்தான்.ஆனா அவ சென்னைய விட்டு வேற எங்கயும் போய்ட்டான்னா அப்புறம் எல்லாமே கைமீறி போயிடும்"என்றான்.

நித்யாவும் அவன் கூறுவதில் உள்ள அர்த்தத்தை புரிந்தவள்

"ஓக்கே அருண்.கண்டிப்பா நம்ம இத பண்ணலாம் சரியா.உங்கம்மா எப்படியும் கண்டிப்பா ஒத்துக்குவாங்க சரியா.நீங்க அத மனசுல வெச்சி குழப்பிக்காதீங்க "என்று கூறி காலை கட்செய்தாள்.

-----------

ZaRo_NaSe ஒரு அழகான காதல் கதை ஒன்று எழுதுறாங்கப்பா.ரொம்ப நல்லா இருக்கு (அடேய் நீ படிச்சியா என்று கேட்குறது விளங்கிது.சத்தியமா இன்னும் படிக்கல) அப்படின்னு பலர் கூறியதால் இங்கு ஒரு அறிமுகம்..

"நீதான் என் காதலா" சூப்பரா இருக்குன்னு பலர் சொன்னாங்க.அதுலயும் குறிப்பா Mushanu0221

..தொடர்ந்து எழுதுங்க..நானும் படிச்சிட்டு கருத்துக்களை சொல்ரேன்.

கவிதை பிரியர்களுக்கு

im_dhanuu துளி துளியா கவிதை எழுதுறாங்க.படிங்க..கவிதைக்குள்ள மூழ்கிப்போங்க.

ஒருத்தங்க கேட்டாங்க , நீங்க மற்றவர்களுடைய கதைகள அறிமுகம் செய்து இலவசமா உங்க கதைக்கு விளம்பரம் பண்றீங்களான்னு. நானும் ஆமாப்பா என் ஸ்டோரிய யாரும் விளம்பரம் பண்ணல. சோ , நானே எனக்கு பண்ணிக்குறேன்னு..

நான் செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை... ஆனால்,
முதலில் நானும் கதை எழுத ஆரம்பித்த போது கொமண்ட்ஸ் வரும் போதுதான் ஒரு உற்சாகம் வந்து தொடர்ச்சியாக எழுதுவதற்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது. அதையேதான் நான் புது கதைகளிற்கு செய்கிறேன்... இனிமேலும் செய்து கொண்டிருப்பேன்
சகோதரரே அல்லது சகோதரியே( அந்த் நபரிற்கு பெயர்கள் இல்லை)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro