Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 20


வசுந்த்ராவின் கணவன் கோவத்துடன் சென்றதும் கீழே தரையில் ஆற்றாமை மற்றும் அவமானத்துடன் அமர்ந்திருந்தவளை அருண் எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் இருக்க அவன்

"என்னங்க என்னாச்சு? ஏன் அவரு அப்படி பேசிட்டு போறாரு?"என்றவனை அவள்

"அருண் ,ஸ்டே இன் யுவர் லிமிட்.என் பெர்சனல் விசயங்கள்ள தலையிட வேணாம்"என்றதும் அவனுக்கு எங்கிருந்துதான் கோவம் வந்ததோ தெரியவில்லை கோவத்தில் அவன் முன் இருந்த கண்ணாடி மேசையில் தன் கையால் அடிக்க அது உடைந்து அவன் கரத்தை கிழித்து இரத்தம் ஓடியது.இதை கண்ட வசுந்த்ரா

"போதும் அருண்,இந்த சீன் எல்லாம் இங்க வேணாம்.என் பெர்சனல் பத்தி நான் எதுவுமே பேசுரதா இல்ல.போய் டாக்டர்கிட்ட கைய காட்டுங்க"என்றவளை அருண் தன் கையில் காயம் பட்டதால் வந்த வலியை விட அவளின் அலட்சியம் அவனை உயிரோடு கொல்ல செய்தது.கோவத்துடன் வீட்டை விட்டு வெளியேற கதவை திறந்தவன் மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை படாறென்று கதவை சாத்திவிட்டு அவள் அருகில் வந்தவனை அவள் என்னவென்பது போல பார்க்க,அவனோ அவள் அணிந்திருந்த சுடிதாரின் வலது கைப்பாக்கத்தை பிய்த்து எடுத்தான்.ஆடையின்றி இருந்த அவளின் கையை பார்த்தவனுக்கு கண்களை விட்டு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.அவளோ அவளின் ஆடையை கிழித்த கோவத்துடனும் அவளின் ரகசியங்கள் வெளிப்பட்டு விட்டதே என்ற அவமானத்துடனும் அருணை

"என்ன பண்றீங்க அருண்"என்றவளை அருண் ஓங்கி அறைந்தான்.

"என்னடி இது.இத மறைக்கத்தானா எப்ப பார்த்தாலும் முழுக்கை போட்டுக்கிட்டு திரிஞ்ச.படிச்ச பொண்ணுதானே நீ.அந்த நாய் உன் கையில ஒரு இடம் இல்லாம சூடு வெச்சிருக்கான்.நீ என்ன பண்ணிகிட்டு இருந்தே.போலீஸ்கிட்ட போகவேண்டியதுதானே"என்றவனை

"போலீஸ்கிட்ட போய்....சொல்லு அருண்..போலீஸ்கிட்ட போய் என்ன செய்ய?என்ன கொடுமைபடுத்தினாலும் எனக்கு இருந்த ஒரே உறவு அவரு மட்டும்தான்.ஆசிரமத்துல வளர்ந்த அனாதைக்கு கிடைச்ச ஒரே உறவு அவருதான்.அதுவும் கடைசில என்னால செய்ய முடியாம போன ஒரு விசயத்தாலதான் அவர விட்டு ...சாரி அவன விட்டு விலகவேண்டியதா போச்சு" என்றவளை அருண்

"ப்ளீஸ் வசுந்த்ரா என்னதான் நடந்துச்சு சொல்லுங்க"என்றவனை

"சொல்ரேன்..எனக்கு அம்மா அப்பா கிடையாது.எங்க தூரத்து உறவு முறை மாமா ஒருத்தங்கதான் என்ன ஆசிரமத்துல சேர்த்து வளர்த்தாங்க.அவங்களையும் தப்பு சொல்ல முடியாது.எங்க மாமிக்கு அனாதையான என்ன வளர்க்க இஷ்டமில்ல.ஆனா அப்பப்போ வந்து பார்த்துட்டு படிப்புக்கு காசு கொடுத்துட்டு போவாங்க.ஒரு வழியா ஸ்காலர்சிப் கிடைக்க நல்லா படிச்சு எனக்கு ஐடி ல வேல கிடைச்சது.அங்க எனக்கு ஜூனியரா சிஸ்டம் ஆக்கிடெக்சரா வந்தவந்தான் கல்யான்.ஆரம்பத்துல அன்பா,பாசமா பேச ..என்னோட வாழ்க்கைல அதையெல்லாம் கொஞ்சமும் பார்க்காத எனக்கு அவரு மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.ஒரு நாள் திடீரென்று என்ன கல்யாணம் பண்ண கேட்டப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது.காதலிக்க கேட்காம நேரடியா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டப்போ அவரு மேல மரியாதை வந்துச்சு.மாமா கிட்ட கேட்டப்போ அவருக்கும் விருப்பம்னு சொல்லிட்டாரு. கடைசியா கல்யாணமும் முடிஞ்சது.ஆனா கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது அவரு என்ன கல்யாணம் பண்ணது என்கூட அன்பா சந்தோசமா வாழறதுக்கு இல்ல. அதுக்கு மாற்றமா அவரு ஜாப் ஏதும் செய்யாம சொகுசான வாழ்க்கை வாழ்றதுக்காகத்தான் என்ன கல்யாணாம் பண்ணிக்கிட்டாருன்னு புரிஞ்சது.நானும் ஆரம்பத்துல பரவாயில்லைனு விட்டுட்டேன்.ஆனா நாள் போக போக கொஞ்சம் கொஞ்சமா அவரு சுயரூபம் தெரிய அரம்பிச்சது,நான் மத்த ஆமபளைங்க கூட பேசினா என்ன டார்ச்சர் செய்வான்.அப்படி வாங்கின விருதுகள்தான் இதெல்லாம்.இதெல்லாம் காட்டக்கூடிய இடத்தில இருக்கு அருண்.இன்னும் சில சில தழும்புகள் எங்கல்லாம் இருக்குன்னு என்னால சொல்லகூட முடியல.சரி நம்ம தலை எழுத்து இதுதான்னு இருந்துட்டேன்.இப்படி இருக்கும் போது ஒரு நாள் கம்பனியில அவருக்கும் இன்னொரு ஸ்டாபுக்கும் பிரச்சினை ஆக இவரு அந்த ஸ்டாப அடிச்சிட்டாரு.அதனால இவர Black List பண்ணிட்டாங்க.ஐடி பீல்ட்ல ப்ளாக்லிஸ்ட் பண்ணா வேற எங்கயும் ஜாப் எடுக்க முடியாது.இவரு எப்படியோ அவரோட பாஸ்கிட்ட பேசி சமாதானம் ஆகி இருக்காரு.அந்த நேரத்துல நான் வேற கம்பனிக்கு மாறி இருந்தேன்.அப்போ ஒரு நாள் என்கிட்ட வந்து ....."என்று விசும்பிய வசுந்த்ராவின் தோலை தொட்டு சமாதானம் செய்ய அவளோ

"நான் முழுசா சொல்லிடுறேன் அருண்.அந்த பொறுக்கி பாஸ் இவன் பேர ப்ளக்லிஸ்ட்ல இருந்து எடுக்கனும்னா என்ன அவனோட கெஸ்ட்ஹவுசுக்கு ஒரு நாள் வரனும்னு சொல்லிருக்கான்.இவனும் அவன் பேச்ச கேட்டு என்கிட்ட வந்து கேட்குறான்.எனக்கு வந்த கோவத்துக்கு நான் அப்பவே இவன் வீட்டை விட்டு வெளில வந்து ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிட்டேன்.அப்பறமா இவன் கூட வாழ முடியாதுன்னு தெரிஞ்சதும் டைவோர்ஸ் அப்ளை பண்ணிட்டேன்.இவனுக்கும் வேலையும் இல்லாம தன்னோட சொகுசு வாழ்க்கைய வாழமுடியல.அப்போலாம் என்னோட ஹாஸ்டலுக்கு டெய்லி வந்து கேவலமா பேசுவான்.எனக்கு ரொம்ப அவமானமா இருக்கும்.இந்த அவமானங்கள தாங்க முடியாமதான் நான் பெங்களூர்ல இருந்து சென்னைக்கே வந்தேன்.அவன் எப்படியோ நான் இங்க இருக்குறத தெரிஞ்சி இங்கயும் வந்துட்டான்.நான் அவன விட்டு வரும் போது 4 வருசத்துக்கு அப்புறம் நான் தாயாகுற பாக்கியம் கிடைத்தது.ஆனா அவன் அதையும் நான் ஏதோ கண்டவன்கிட்ட போய் எடுத்துக்கிட்ட மாதிரி பேசிட்டான்.அவன் அப்படி பேசினது அந்த கடவுளுக்கே பொறுக்கல்ல போல.அதான் எனக்கு அம்மா ஆகுற பாக்கியம் இல்லாம போயிட்டு"என்றவளை அருண் இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.அவளும் எதுவும் பேசாமல் அவனின் அணைப்புக்குள் கட்டுண்டவள் கொஞ்சம் நேரம் அப்படியே அசையாமல் இருந்தாள்.அவமானத்தில் வெட்கி நின்ற ஒரு இதயமும் கோவத்தில் கட்டுப்பாடு இன்றி இருந்த மறு இதயமும் தங்களை ஆறுதல் படுத்திக்கொண்டிருக்க அவ்விதயங்களை தாங்கி இருந்த உடலோ தங்கள் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தது.திடீரென்று அருண் சுதாகரித்து வசுந்த்ராவை விட்டு விலக அவளோ என்னவென்பது போல ஒரு நொடி பார்த்தவள் தான் செய்துகொண்டிருந்த காரியம் புரிய தலை குணிந்து சட்டென அவனை விட்டு விலகினால்.இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருக்க அருண் தன் கையில் வடிந்திருந்த இரத்தைத்தை எடுத்து வசுந்த்ராவுன் நெற்றியில் திலகமாக இட்டவன்

"வசுந்த்ரா,இன்னைல இருந்து நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்..இந்த வயச காரணங்காட்டுறது,அப்புறம் நீ ஏற்கன்வே கல்யாணம் ஆனவ இல்லன்னா வேற எதும் காரணம் சொல்ல வந்த..என்ன ரொம்ப கெட்டவனா பார்க்க வேண்டி வரும்"என்றவனை வசுந்த்ரா ஓங்கி அறைந்தவள் அவன் இட்ட திலகத்தை தன் கைகளால் துடைத்துவிட்டு

"என்ன என் மேல பரிதாப்பட்டு காதல் வந்திடுச்சோ.கடைசில நீங்களும் ஒரு சாதாரன ஆம்பளன்னு நிரூபிச்சிட்டீங்க .ரொம்ப தாங்கஸ்.உங்கள அணைச்சப்போ ஒரு நிமிசம் என் மனசு தடுமாறினது உண்மைதான் அதுக்காக இப்படி பண்ணுவீங்களா அருண்.உங்கம்மா அப்பாகிட்ட என்னோட பாஸ்ட் லைப் பத்தி சொல்லி உங்க வீட்டுக்கு மருமகளாக கூட்டி போக முடியுமா?"என்றவளை அருண் கொஞ்சம் கவலையாக பார்த்தான்.ஏனென்றால் அம்மாவை அவனால் சம்மதிக்க வைக்க முடியும்.ஆனால் அதற்கு நாட்கள் செல்லும் என்பதை உணர்ந்தவன் தலையை குணிந்தான்.அவன் தலை குணிவை தவறாக எண்ணியவள்

"முடியாதுள்ள அப்போ எதுக்கு இப்போ வெட்டி சீன்.இதுல ரத்ததுல பொட்டு வேற"என்று நக்கலாக பேசியவளுக்கு பதில் ஏதும் கூறாமல் தலை கவிழ்ந்திருந்தவனை கண்டவள் மனதுக்குள்

'அருண் உங்க கூட ரெண்டு வாரம்தான் பழகி இருந்தாலும் நீங்க காட்டின அன்பும் ஆதரவும் என்னோட ஆயுசுக்கும் போதும்.நான் இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தப்போ யாரையும் மனசால நினைச்சது இல்ல.ஆனா எப்போ அவன் என் கற்ப விலை பேசினானோ அன்னைக்கே என் மனச விட்டு போயிட்டான். பழகின கொஞ்ச நாள்ளயே வெறுமையா இருந்த என் மனசுல சிம்மாசனம் போட்டு அமர்ந்துட்டீங்க.ஆனா உங்களுக்கு ஏற்றவளா நான் இல்ல.என் உடம்பு ஒரு கெட்டவன்கிட்ட சிக்கி கெட்டுப்போய் இருக்கு.என்னால உங்களுக்கு தர முடிஞ்சது ஒன்னே ஒன்னுதான்.என் மனசு.என் மனசு பூரா இப்போ நீங்கதான் இருக்கீங்க.ஆனா அதை என்னால இப்போ வெளில சொல்ல முடியல.நான் இப்போ செய்ய போற காரியத்த பார்த்து என்ன வெறுத்து ஒதுக்கிடுங்க அருண்.அதுதான் உங்க வாழ்க்கைக்கு நல்லது' என்று நினைத்த

வசுந்த்ரா தானாகவே சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அருண்

"வசுந்த்ரா என்ன பண்ற"என்று குழறலாக கேட்க அவள் மேலும் அவனை இருக்கி அவள் அணைப்பை வித்தியாசமானதாக மாற்ற முயன்றதை அறிந்தவன் அவளை விட்டு தள்ளி நின்றான்.

"வசுந்த்ரா ,இப்போ எதுவுமே பேச வேணாம்.நாளைக்கு நம்ம பேசலாம்.நம்ம மனசு இப்போ அமைதியா இல்ல.நாம இப்போ எது செய்தாலும் அது தவறாத்தான் முடியும்.சோ இன்னைக்கு ஒரு நாள் கழிச்சி நாளைக்கு பார்க்கலாம்.நானும் உங்கிட்ட நிறைய விசயம் பேசனும்.அப்புறமா நீ என்ன முடிவெடுத்தாலும் நான் அத அக்சப்ட் பண்ணிக்கிறேன்"என்றவனை கண்களில் கண்ணீருடன்

"சரி "என்றால்.

ஆனால் அருண் அறிந்திருக்கவில்லை. அவளை அவன் கடைசியாக பார்க்க போகும் நாள் இன்றுதான் என்று.இதன் பின் அவளை காண்பானா இல்லையா..வாசகர்கள் கையில் ...

=================

ப்ரெண்ட்ஸ் இப்போ சொல்லுங்க....அருணுக்கு ஜோடி நித்யாவா? இல்ல வசுந்த்ராவா?

நீங்க சொல்ரத நான் அப்படியே செஞ்சிடலாம்.ஆனா எனக்கு யாராச்சும் ஒருத்தர் ஜஸ்ட்டிபை பண்ணனும் ஒக்கே.
------
நம்ம க்ரேட் ரிவ்யூவர் priyagothandasamy  யோட கை வண்ணங்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு சந்தர்ப்பம் அமைத்துதந்த ப்ரியாவுக்கு நன்றிகள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro