Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 16

அறைக்குள் அழைத்து சென்ற பர்வதம்,

"நித்யா இது சின்ன பசங்க விளையாட்டு இல்ல.உனக்கு அருணோட ஹெல்த் கண்டிசன் தெரிஞ்சிருந்தும் நீ இப்படி நடக்குறது எனக்கு பிடிக்கல"என்றவரை

"ஏம்மா.ஒரு வேல எனக்கு அந்த நோய் இருந்து அருண் என்ன கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்த கால்ல நின்னா நீங்க என்னம்மா செய்வீங்க?"என்றவளை பர்வதம் வாயடைத்துப்போய் பார்த்தார்.

"இல்ல உங்க அம்மா...."என்று அவர் பேச தொடங்க

"எங்கம்மாக்கு எல்லாமே தெரியும்.அவங்க சம்மததோடதான் நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கே வந்தேன் "என்றால் நித்யா.

"உங்கம்மா எப்படி இதுக்கு ஒத்துகிட்ட்டாங்க "என்றவரை

"அது ஒரு சின்ன டிராமா போட்டேன் மம்மி அவுட்"எனறு சிரித்தவள்
சந்துருவுடன் ஹாஸ்பிடலில் பேசி விட்டு வீடு வந்த அன்று நடந்தவற்றை பர்வதத்திடம் கூற தொடங்கினால்.

வீடு வந்த நித்யா அம்மாவும் வாசுகியும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருக்க நேராக அம்மாவிடம் சென்றவள்

"அம்மா ஒரு ஹெல்ப் பண்ணனும்மா"என்றாள்.அதற்கு அமிர்தமோ

"சொல்லுடி என்ன"என்றவளை

"அம்மா உனக்கு தெரியும்ல என் காலேஜ் மேட் மேனகா.அவ ஒரு பையன லவ் பண்ணாமா.அவனும் லவ் பண்ணான்.ஆனா திடீரென அவன் இவள வேணாம்னு சொல்லிட்டான்.இவ ரொம்ப அப்சட் ஆகி ஒரு தடவை சூசைட்டும் பண்ணிக்க பார்த்தா.கடைசில என்னான்னு பார்த்தா அந்த பையனுக்கு hairy cell leukemia.அதான் அவன் இவள அவாய்ட் பண்ணிருக்கான்.கடைசில இது அவளுக்கு தெரிய வந்திருக்கு.ஆனா அந்த நோய் வந்தவங்க மத்த நோய் மாதிரி இல்லாம அதிகாம உயிர்வாழ்வாங்களாம்.இவ என்னடான்னா அந்த அவ்வளவு காலத்தையும் எனக்கு கொடுத்துடுனு அவன் வீட்டுக்கே போய் அவ அம்மா அப்பா இருக்கும் போதே அந்த பையன் கிட்ட பேசியிருக்கா.அதுக்கு அவங்க ஒத்துக்கள.ஆனா இவ என்ன பண்ணான்னா அப்படி ஒத்துக்கலைன்னா அவ சாக போறதா சொல்லி மிரட்டவும் அவங்க வீட்ல ஓக்கே சொல்லிருக்காங்க.உனக்குத்தான் தெரியுமே அவ ஆசிரமத்துல வளர்ந்தவ .அவளுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே .அதான் உன்ன அவளுக்கு அம்மா ஸ்தானத்துல இருந்து இந்த கல்யாணத்த பண்ணி வைக்க கேட்குறாம்மா"என்றவளை

"ஹேய் மேனகா, அந்த வாலு இவ்வளவு நல்ல பொண்ணா.கண்டிப்பா அவ மனசுக்கு நல்லா இருப்பா.ஆனா அந்த பையன் இறந்துட்டான்னா..இவ வாழ்க்கை"என்றதற்கு நித்யா

"அட போம்மா.யாருக்கு சாவு எப்போ வரும்ணே தெரியாது.அப்புறம் இது அவ்லோ பெரிய வியாதிலாம் இல்ல. கொஞ்சம் டிரீட்மண்ட் பண்ணனும் அவ்லோதான்.எங்க அந்த பையனுக்கு முன்னடி இவ போய் சேர்ந்துடுவாளோ . சாவு யாருக்கு எப்போ வரும்னு தெரியாதே"என்றவளை

"அதுவும் சரிதாண்டா.நம்ம சங்கீதா சித்தியோட கொலீக் அர்விந்தோட முதல் மனைவி ...அவரு மனைவி எண்டு சொல்ரத விட அந்த பையனோட ப்ரெண்டு ..அவளுக்கு கேன்சர்னு தெரிஞ்சும் அந்த பையன் அவள கல்யாணம் செஞ்சது சூப்பர்ல.அது போலவே நம்ம மேனகாவும் நல்லா இருப்பா.எப்போ கல்யாணம் ? கண்டிப்பா அவளுக்கு பண்ண வேண்டிய எல்லாத்தையும் அம்மா ஸ்தானத்துல இருந்து பண்றேன்" என்றவரை நித்யா குணிந்த தலையுடன்

"அம்மா ,அந்த கல்யாணம் மேனகாக்கு இல்லைமா.அந்த பொண்ணு நாந்தான்.அந்த பையன் அதிதியோட அண்ணா அருண்"என்றவளை அதிர்ச்சியாக பார்த்து முறைத்தவர் கேட்டது ஒரே ஒரு கேள்வி மட்டுமே

"அப்போ அந்த சூசைட் பண்ணிக்க டிரை பண்ணது..."என்றவரை

"இல்லம்மா.அப்படிலாம் ஏதுமே இல்ல.சும்மா அந்த பொண்ணோட ஸ்டோரிய கொஞ்சம் சுவாரசியாம சொல்லலாம்னுதான் அத சேர்த்தான்.நான் உன் பொண்ணுமா.அப்படிலாம் கோழைத்தனமா முடிவெடுக்க மாட்டேன்"என்றவளை முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்

"அவங்க வீட்டுல என்ன சொல்ராங்க"என்றவரை

"அவங்க எல்லோரும் நான் அவர விரும்புரேன்னு தெரிஞ்சு என்னன்னமோ டிராமாலாம் போடுறாங்க.பார்க்க சகிக்கல"என்று சலித்துக்கொண்டவளை

"சரி அவங்க வீட்ல எல்லோருக்கும் சம்மதம்னா.எனக்கும் சம்மதம்.நீ என்கிட்ட மேனகா கதைய சொல்லாம கேட்டிருந்தா நிச்சயமா ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன்.ஆனா நீ அந்த கதைய சொல்லி என்ன பேசாம பண்ணிட்ட.இப்ப நான் தடுத்தா நீ கேட்ப மேனகாக்கு ஒரு நியாயம் உங்க பொண்ணுக்கு ஒரு நியாயமான்னு.அப்படித்தானே?"என்ற போது நித்யா தலையை குனிந்து கொண்டாள்.

"சரி நீ தலை குனியிர அளவுக்கு எந்த தப்பும் செய்யல.ஆனா உன் எதிர்கால வாழ்க்கைய நினைச்சா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு"என்றவரை

"அம்மா அதெல்லாம் பயப்பட வேணாம்.hairy cell leukemia பேசண்ட்ஸ் குறைந்தது 20-25 வருசம் உயிரோட இருப்பாங்கம்மா.சில நேரங்கள்ள 25 வருசத்துக்கு அதிகமாவும் இருப்பாங்க.சோ..."என்றவளை அமிர்தம்

"போதும்.சின்ன வயசுல இருந்து நீ கேட்ட எதையுமே நான் இல்லைன்னு சொன்னதில்ல.அப்படியே இதையும் உன் இஷ்டத்துக்கே விடுறேன்.சரி அவங்க வீட்டுல நான் வந்து பேசனுமா"என்றவரை

"இல்லம்மா.முதல்ல நான் போய் அவங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.அப்புறமா உங்க கிட்ட சொல்ரேன்"என்றவளை

"நீ காதலிச்சேன்னதுக்காக நான் இதுக்கு ஒத்துக்கல .15 வருசம் முன்னாடி உங்க அப்பா நம்மள எல்லாரையும் விட்டு போனப்போ நான் அவர எவ்வளவு காதலிச்சேன்னு காட்ட நான் தனியாவே வாழ்ந்து நிரூபிச்சிட்டேன்.ஆனா எனக்கு தெரியல நித்யா.உன் வாழ்க்கையும் என்னோட வாழ்க்கை மாதிரி போயிடுமோன்னு பயமா இருக்கு.ஆனா இதுல அருணோட அம்மா அப்பா என்ன சொன்னாலும் நீ அதை தட்டாம கேட்பேன்னா நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்"என்றவரை இறுக்கி அணைத்து

"தாங்க்யூ சோ மச் மா"என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

------
"இப்போ உங்களுக்கு ஹாப்பியா ஆண்ட்ட்ட்.....இல்லல்ல இப்ப உங்களுக்கு சந்தோசமா அத்தை"என்றவளை அணைத்தவர்

"நித்யாம்மா அருணுக்கும் உன்ன பிடிக்கும்னு அன்னைக்கு எங்க வீட்டுல நீ சமைச்சப்போவே தெரியும்.என்ன கல்லுளிமங்கன் வெளில சொல்லமாட்டான்..."என்றவரை

"அவர ஒன்னும் சொல்லாதீங்கம்மா.பாவம் அவரு"என்றவளை

"என்ன இப்பவே அவனுக்கு சப்போர்ட்டா.ஆனா நித்யா நான் ஒரு விசயம் கேட்பேன் நீ அதுக்கு சம்மதிச்சாதான் இந்த கல்யாணம் நடக்கும்"என்று சீரியசாக சொன்னவரை

"என்னம்மா ,எதுன்னாலும் சொல்லுங்க .நான் செய்றேன்"என்றாள் நித்யா.

"சரி அது இப்போ வேணாம் .நான் அப்புறமா இன்னொரு நாளைக்கு சொல்ரேன்.அதான் நீ எதுன்னாலும் சரின்னு சொல்லிட்டியே.அப்புறம் எனக்கு கோர்ட்ல சத்தியம் வாங்கி வாங்கி சத்தியத்தின் மேலேயே நம்பிக்கை இல்லாம போயிடிச்சி .நீ சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்னு நினைக்குறேன்"என்றவரை

"கண்டிப்பாமா.நீங்க சொல்லுங்க ,நான் கண்ண மூடிகிட்டு செய்வேன்"என்றாள்.

அதன் பிறகு நடந்ததுதான் நமக்கு தெரியுமே.....

நித்யாவை சோபாவில் உட்கார செய்த பர்வதம்
"ஹா இது என்ன செஸ் போர்ட்? யாரு விளையாடினா?" எனா நித்யாவை

"அண்ணனும் தம்பியும் செஸ் விளையாட ஆரம்பிச்சாங்கன்னா உலகமே தெரியாது.நாங்களும் அதுல அப்படியே மிங்கில் ஆகிடுவோம்.இன்னைக்கு விளையாட ஆரம்பிச்சானுங்க.அதுக்குள்ளதான் நீ வந்துட்டே.சரி அதிதி நித்யாக்கு ஏதும் குடிக்க கொண்டு வா"என்றவரை

"இன்னைக்கும் நான் தானா?ஏன் நீங்க கொடுத்தா என்னவாம்"என்றவளை

நித்யாவோ
"நாத்தனாரே எங்க அத்தைய நீங்க அப்படி எல்லாம் சொல்ல கூடாது"என்றாள் புன்னகையுடன்.இதைகேட்ட அதிதிக்கோ தன் தோழி தன்னுடன் இருந்த கோவத்தை மறந்து பேசிவிட்டால் என்பது புரிய அவளை கட்டிப்பிடித்துகொண்டவள்

"எல்லாம் இந்த பக்கி அண்ணாவால வந்தது.இல்லன்னா என் நித்யா என்கூடா பேசாம இருந்திருப்பால "என்றவளை விலக்கி நித்யா அருணை பக்கி என்று கூறியதற்கு முறைத்தவள்
அருணையும் வருணையும் நோக்கி

"சரி சரி,,இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் செஸ் ஆடுங்க.ஜெயிக்கிறவங்க முடியுமா இருந்தா என்கூடா ஆடி ஜெயிங்க.இண்டர் காலேஜ் சம்பியன் நானாக்கும்"என்று இல்லாத காலரை உயர்த்தி விட்டுக்கொண்டால்.

அருண் இறுகிய முகத்துடன் வருணை நோக்கி

"வருண் வா இப்போ கேம பினிஷ் பண்ணலாம் "என்று செஸ் விளையாட ஆரம்பிக்க இந்த தடவை அருண் தெளிவாக ஆட வருணோ மனக்குழப்பத்துடன் ஆடினான். 5 மூவில் அருண் செக் மேட் வைத்தான்.அருண் செக் மேட் வைத்ததும் அதை பார்த்துகொண்டிருந்த நித்யா

"என்ன வருண் இப்படி பண்ணிட்டீங்க.நீங்க உங்க ராணிய மூவ் பண்ணி செக் வெச்சிருந்தா அவரு உங்க ராணிய கட் பண்ணி இருப்பாரு.நீங்க உங்க பிசொப் ஆள அவருக்கு செக் மேட் வெச்சிருக்கலாமே"என்று அங்கலாய்த்தவளை

"நான் என்னைக்குமே என் ராணிய பறிகொடுத்து கேம் ஆடமாட்டேன்.அது செஸ் ஆஹ் இருக்கட்டும் இல்ல என் வாழ்க்கையா இருந்தாலும் சரி"என்று கூறிவிட்டு கோவத்துடன் உள்ளே சென்று விட்டான்.

--
கொசுறு தகவல்- நானும் யுனிவர்சிட்டில படிக்கும் போது Inter Faculty Chess champion.( நம்புங்கமா.. உண்மை)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro