தீண்டல் 15
தனது மொபைலுக்கு கால் வர அதை எடுத்து பார்த்தவள்
"ஹாய் சந்துரு.எப்படி இருக்கீங்க.அனுசியா எப்படி இருக்கா.அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க.அப்புறம் நம்ம சாதனாக்கு கல்யாணம் ஆகிடுச்சா.நிச்சயதார்த்தம்தான் அவசரமா வெச்சிட்டீங்க.கல்யாணத்துக்காச்சும் சொல்வீங்களாப்பா"என்றவளை
"யம்மா வாயாடி.போதும் ஒரு ஹாய் கு அப்புறமா இவ்வளவு கேள்வியா.நீ கேட்ட கேள்விகள் எல்லாத்துக்கும் பதில் சொல்லவே 2 நாள் வேணுமே"என்று கலாய்த்தவனை
"போதும் டாக்டர் சார்.கேட்ட கேள்விக்கு இப்போ ஒன்னொன்னா பதில் சொல்லுங்க"என்றளை
"எல்லோரும் சுகம் .சோ 75 வீதமான கேள்விக்கு பதில் சொல்லிட்டேன்.சாதனா,ப்ரசாத் வெடிங்க்கு கண்டிப்பா நீ வர்ர.நிச்சயதார்த்தம் நடந்தது பெரிய ஸ்டோரி.அது இன்னொரு நாளைக்கு கால் பண்ணி சொல்ரேன்பா.நான் இப்போ எதுக்கு கால் பண்ணேன்னா எங்க வேலை செய்ற ஹாஸ்பிடல்ல இன்னைக்கு ஒரு இரத்த தானம் ஒண்ணு ஏற்பாடு செஞ்சிருக்கு.நீயும் உன் ப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிர்ரியா"என்றவனை
"கண்டிப்பாடா.அப்புறம் அனு கூடவா இருக்கா?"என்று நித்யா கேட்க
"ஆமா அந்த குரங்கு இங்கதான் அதோட ப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேரோட ஊர்ல இருந்து வந்திருக்கு "என்று கலாய்த்த சந்துருவை
"மவனே இரு வந்து அவகிட்ட உன்ன போட்டு குடுக்குறேன்"என்று பயமுறுத்த
"அம்மா தாயே ..நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்திடாதம்மா.இப்பதான் கொஞ்சம் எல்லாமே க்ளியர் ஆகி இருக்கு.இதுல நீ வேறயா"என்றான்.
கடைசியில் இருவரும் பேசிவிட்டு காலை கட்செய்ய நித்யா வாட்சப்பில் உள்ள தன் கல்லூரி தோழிகள் எல்லோரும் இருக்கின்ற க்ரூப்பிற்கு மெசேஜ் செய்து விட்டு அவளும் அந்த ஹாஸ்பிடல் செல்ல தயாரானாள்.
அனுவும் ,நித்யாவும் ஒரே காலேஜில் படித்தனர்.ஆனால் வேறு வேறு சப்ஜக்ட்ஸ்.அனுவின் அறிமுகம் மூலம் நித்யாவுக்கு சந்துரு ஒரு நல்ல நண்பனாக அவ்வப்போது பேசுவான்.
நித்யா ஹாஸ்பிடல் சென்ற போதுதான் சந்துருவிடம் அருண் பேசிக்கொண்டிருப்பதை கண்டாள்.அவர்களிடம் இவள் செல்லாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க அவள் தோளில் ஒரு அடி விழ திரும்பியவள் அங்கு புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தால்.
"ஓய் நித்ஸ்.எப்படி இருக்கே? ஒரு கால் கூட இல்லை.காலேஜ் முடிஞ்சதும் அவ்வளவுதானா?"என்றவளை
"ச்சீச்சீ அப்படிலாம் இல்லைடி.இண்டர்ன்சிப் சம்பந்தமா கொஞ்ச நாளா அலைச்சல்டி.அதுதான்.ஆமா இன்னைக்கு ப்ளட் டொனேசன் ஆர்கனைசிங் யாருடி?"என்று கேட்டதற்கு
"அதோ அங்க நிற்காரே ACP அருண் அவரோட கோர்டினேசன்ல போலீஸ் டிபார்ட்மண்தான் அர்ரேஞ் பண்ணியிருக்காங்க"என்றாள்.
அருண் அவ்விடம் விட்டு நகரும் வரை காத்திருந்த்தவள் சந்துருவிடம் சென்று
"ஹாய் சந்துரு.என்ன அர்ரேஞ்மண்ட் பண்ண ACP சார் ப்ளெட் கொடுக்கல்லயா? இல்லை ப்ளெட் கொடுக்க பயமாமா ?"என்ற நித்யாவை
"அத ஏன் நித்யா கேட்குற.பாவம் அவரு.இதெல்லாம் அர்ரேஞ் பண்ண அவரால ப்ளெட் டொனேட் பண்ண ஏலாதுப்பா"என்று கவலையாக கூறியவனை நித்யா கலக்கத்துடன்
"ஏன் என்னாச்சு அவருக்கு"என்று கேட்க, நித்யாவுக்கும் அருணுக்கும் உள்ள உறவு என்ன என்பது தெரியாமல் சந்துரு ப்ரெண்ட்லியாக
"அவருக்கும் அவரோட பேமிலி ஆளுங்களுக்கும் மட்டும் தெரிஞ்ச ஒரு உண்மைய சொல்ரேன்.நீ யார்கிட்டயும் இத டிஸ்கஸ் பண்ணாத சரியா"என்று கூறிவிட்ட
அவளிடம் அருண் பற்றிய விடயத்தை கூற நித்யாவுக்கு ஆரம்பத்தில் இடி விழுந்தது போல இருந்தாலும் பின்னர் முகத்தில் ஒரு பொலிவுடன்
"சந்துரு ..சாரிப்பா.நான் இப்போ அவசரமா வீட்டுக்கு போகனும்.நான் இன்னொரு நாள் வந்து டொனேட் பண்றேன்.ப்ளீஸ் தப்பா எடுத்துக்க வேணாம்"என்றவளை அனுவும் சந்துருவும் ஒரு மாதிரி பார்க்க
"ரொம்பல்லாம் யோசிக்க வேணாம்.அப்புறமா டீடைல்லா சொல்ரேன்.கிவ் மீ 2 டேய்ஸ் டைம்.பாய்"என்று கூறிவிட்டு அவள் ஸ்கூட்டியில் சிட்டாக பறந்துவிட்டால்.
இரண்டு நாட்களின் பின்,
அருண் வேலைக்கு ஒரு வாரம் லீவ் போட்டிருக்க அண்ணனும் தம்பியும் செஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் செஸ் ஆட ஆரம்பித்தாள் எப்படியும் குறைந்தது 5 மணித்தியாலம் சரி போய் விடும்.அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.இன்றும் அது போலவே ஆரம்பிக்க பர்வதமும் அதிதியும் இவர்கள் ஆட்டத்தை காண அவர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.ஆரம்பத்தில் அருணால் வருணின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.எப்போது அருண்தான் ஆரம்பத்தில் அதிரடியாக ஆரம்பிப்பான்,ஆனால் கடைசியில் வருண் செக்மேட் சொல்லி ஜெயித்து விடுவான்.ஆனால் இன்று ஆட்டம் வழமைக்கு மாறாக இருக்க
ஆட்டம் சூடு பிடித்துக்கொண்டிருக்கும் போது இவர்களின் வீட்டிற்கு திடீரென நித்யா வர எல்லோருக்கும் ஆச்சரியம்.உடனே பர்வதம்
"வாம்மா.எப்படி இருக்க. ?திடீர்னு வந்திருக்க?"என்றவளை
"அம்மா.எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு.நீங்க எல்லோரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்.அடுத்த வாரம் கல்யாணம்"என்று கூற எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.ஆனால் அவள் சாதரணமாக இருப்பதை கண்ட அதிதிக்கு மட்டும் ஒன்று புரிந்தது இவள் ஏதோ ஒரு திட்டத்துடந்தான் வந்திருக்கின்றாள் என்று.உடனே அதிதி
"நித்ஸ் என்ன சொல்ர.."என்றவளை
"மிஸ் அதிதி.எனக்கு உங்க கூட எந்த பேச்சும் இல்ல.அப்புறம்மா கண்டிப்பா குடும்பத்தோட வந்துடுங்க"என்றவளை அதிதி கவலையாக ஏறிட பர்வதம்
"நீ என்ன அம்மான்னு சொல்லிட்டேல்ல, நான் ஒரு அம்மாவா செய்ய வேண்டிய எல்லாத்தையும் வந்து செய்வேண்டா"என்றவரை
"நான் உங்கள அம்மான்னு சொன்னது நீங்க என்ன அன்னைக்கு உங்கள ஆண்ட்டினு கூப்பிட வேணாம்னு சொன்னதால.ஆனா என்னோட கல்யாணத்தை நடத்தி வைக்க எங்க அம்மா இருக்காங்க நீங்க வரவேண்டியது அத்தையா"என்றவளை எல்லோரும் அதிர்ச்சியாக பர்வதமோ
"என்னம்மா சொல்ர ?அத்தையா?"என்றார்.
"ஆமா எனக்கு கல்யானம்னு சொன்னேன் மாப்பிள்ளை யாருன்னு கேட்டகலயேம்மா.மாப்பிள்ளை சாட்சாத் உங்க மூத்த பையன் அருண் தான் "என்றவளை இப்போது அருண் கோவமாக
"என்ன விட்டா ஓவரா பேசிக்கிட்டே போற.உனக்கு என்ன பைத்தியமா?"என்றவளை நித்யா ஒரு பேப்பரை தூக்கி அங்கிருந்த மேசையில் போட்டாள்.நித்யாவுக்கு உண்மை அனைத்தும் தெரிந்து விட்டது என்பதை நினைக்கும் போது யாருக்குமே பேச்சு வரவில்லை.அதிதி உடனே
"நித்ஸ் ப்ளீஸ்டி .நான் வேணும்னே இதை மறைக்கலடி..."என்றவளை நித்யா வாயை மூடுமாறு சைகை செய்து
"இங்க பாருங்கம்மா ..இந்த ஜென்மத்துல எனக்கு அருண்தான் புருசனா வரனும்.அது ஒரு நாளாக இருந்தாலும் சரி 30 வருசமா இருந்தாலும் சரி.நான் அவருகூடத்தான் வாழுவேன்.உங்களுக்கு மருமகள்னு ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்தா அது நான் மட்டும்தான்"என்றவளின் பேச்சும் செயற்பாடும் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்த பர்வதமோ
"நித்யா கொஞ்சம் உள்ள வா"என்று அறைக்குள் அழைத்து சென்று கதவை சாத்தினார்.30 நிமிடம் கழித்து வெளியில் வர நித்யா குணிந்த தலையுடன் வெட்கப்பட்டுக்கொண்டு வர பர்வதம்
"அருண் உனக்கும் நித்யாவுக்கும் இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணாம்.அவ்வளவுதான்"என்றவரை
"ஆனா அம்மா.."என்று அருன் இழுக்க
"வேற ஒண்ணும் இல்ல.இதுதான் முடிவு என்றார்".
அப்படி என்னதான் உள்ளே சென்று இருவரும் பேசி இருப்பார்கள் என்று பிள்ளைகள் மூவரும் குழம்பத்துடன் அவர்கள் இருவரையும் ஏறிட்டனர்.
அங்கிருந்த ஐவரில் இருவரின் மனங்கள் வெளியில் சொல்ல முடியாத கவலையில் வாடத்துவங்கியது.
தன் அம்மா ஏதும் கூறினால் அருணால் அதை தட்ட முடியாது என்று வருணுக்கும் அதிதிக்கும் தெரிந்ததே.ஏனென்றால் அருண் பொதுவாகவே அவனின் தாய் சொல்லை தட்டமாட்டேன்.ஆனால் வருண் அப்படி கிடையாது.தனக்கு எது சரி என்று தோன்றுமோ அதையே செய்வான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro