Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 12

நித்யா கடல் அலைகளை வெறித்துக்கொண்டு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்க அதிதியோ அருண் வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தால்.இருபது நிமிடங்களும் இருபது யுகங்களாக கடக்க இருவருமே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அதிதி மட்டும் தன் மொபைலை நோண்டிக்கொண்டே இருந்தவளை திரும்பி நித்யா ஜீவனே இல்லாமல் ஒரு பார்வை பார்த்ததை அதிதி கவனிக்கவில்லை.

அருண் அவர்கள் இடத்திற்கு வந்து சேர்தது கூட அறியாமல் நித்யா குழந்தைகளின் விளையாட்டை பார்த்தவாறு யோசனையில் மூழ்கி இருந்தாள்.அதிதி நித்யா அருகில் வந்து அவளின் தோலை தொட்டு

"நித்ஸ்..அண்ணா வந்திருக்காண்டி"என்றவளை கண்கள் மின்ன அருணை பார்த்தவள்

"என்ன ACP சார் ரொம்ப பிசியோ ..இப்பல்லாம் என் காலை கூட அட்டண்ட் பண்ண டைம் இல்ல போல"என்றவளை நித்யாவின் பின்னாள் இருந்த அதிதி அவள் அண்ணனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள்.

"நித்யா..தேவை இல்லாத விசயங்கள பேச எனக்கு இப்போ டைம் இல்ல.ஆமா நீ எதுக்கு என்ன பார்க்கனும்னு சொன்ன"என்றவனை

"ACP சார் ,அன்னைக்கு ஒரு நாள் என்கூட பேசும் போது எனக்கு ஆளு இருக்கான்னு கேட்டீங்களே.நான் கூட சொன்னேன்,என் ப்ரெண்டுக்கு தெரிஞ்சவங்கதான்னு.நீங்க கூட நான் அப்படி சொன்னதும் கவலை பட்டீங்களே.அது யாருன்னு சொல்லத்தான் உங்கள வர சொன்னே.அந்த ப்ரெண்ட் வேற யாருமில்ல.இதோ என் பின்னாடி நிட்கிறாலே அதிதிதான்.அந்த பையன் நீங்கதான் அருண்"என்று தன்னை முதன் முதலாக நித்யா பெயர் சொல்லி அழைப்பதை அருணும் அதிதியும் ஆச்சரியமாக பார்க்க அருணோ

"ஹேய் நித்யா ,நான் ஏதோ சும்மா கேட்டேன்.நீ வேற ஏதும் கற்பனை பன்னிக்காத"என்றவனை

"அப்போ நீங்க 2 வாரமா என்கூட போன்ல கடலையா போட்டீங்க.ஐ மீன் உங்க தங்கச்சி ப்ரெண்ட்கூட flirt பண்ணீங்களான்னு கேட்கிறேன்"என்று நக்கலாக கேட்க இதைக்கேட்டுக்கொண்டிருந்த அதிதிக்கு தலை சுற்றியது.உடனே அவள்

"என்ன நித்ஸ் சொல்ரே.அண்ணா என்ன இதெல்லாம்?நீ எங்கிட்ட இதெல்லாம் சொல்லவே இல்லயே?"என்றவளை அமைதியாக இருக்கும் படி சைகை செய்துவிட்டு

"ஆமா நான் உங்கூட flrit தான் பண்ணேன்.அழகா இருக்கியேன்னு பண்ணேன்.இப்போ அதுக்கு என்ன"என்றவனை

"அப்போ flirt பண்ணீங்கதானே.சோ என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க"என்றவளை அருணும் அதிதியும அதிர்ச்சியாக பார்த்தனர்.அருண் வந்து பேசுவதால் நித்யா கவலைப்படுவாள் என நினைத்த அதிதிக்கோ எல்லாம் தலைகீழாக நடப்பதை எண்ணி என்ன செயதென்றே புரியவில்லை.நிலமையை இவ்வளவு இலகுவாக நித்யா சமாளிப்பால் என்று அதிதி நினைக்கவேயில்லை.இவள் இப்படி சர்வசாதாரனமாக அருணை தன் பேச்சால் மடக்கியதை எண்ணி கோபம் கொண்ட அருண்

"ஸ்டாப் நான்சென்ஸ்..நான் ஒரு பொண்ணுகூட லிவ் இன் ரிலேசன்சிப்ல இருக்கேன்"என்றவனை

"யாரு அந்த பெங்களூர் தக்காளியா.சரி உங்களால முடிஞ்சா அவ போட்டோ காட்ட முடியுமா.இல்ல அவளுக்கு இப்போ இந்த நிமிசமே போன் போட்டு தர ஏலுமா"என்றவளை அருண் பொறியில் மாட்டிய எலியை போல் நெளிய அதிதியோ

"நித்யா.."என்று ஏதோ பேச வந்தவளை

"நீ வாய மூடு .உங்கண்ணனுக்குதான் நான் உங்க வீட்டுக்கு மருமகளா வர்ரது பிடிக்கல.உனக்கு ஏண்டி.இனிமே நீ என் முகத்திலயே முழிக்காத.நீ எல்லாம்...நீ அந்த ரெஸ்ட்டாரண்ட்ல என்ன அடிச்சப்போவே எனக்கு சந்தேகம் வந்திச்சு.அப்புறமா பீச்சுக்கு வந்து உங்கண்ணனுக்கு கால் பன்னதுல இருந்து நீ இந்த மொபைல நோண்டிக்கிட்டு இருந்தியே "என்று அவளின் மொபைலை பறித்தவள் வாட்சப்பில் அவள் கடைசியாக அருணுக்கு அனுப்பிய மெசேஜ் அவனுக்கு டெலிவேர்ட் ஆகாமல் தவறுதலாக நித்யாவுக்கு டெலிவேர்ட் ஆகியிருப்பதை காட்டியவள்

"இதனாலதாண்டி நீயும் உங்க அண்ணனும் மாட்டினீங்க"என்றபோதுதான் அதிதிக்கு உறைத்தது நித்யா எதுவும் பேசாமல் ஏதோ யோசனையில் இருப்பது போல தன்னை அவதானித்துக்கொண்டிருந்திருக்கின்றாள் என்பது.ஏனென்றால் தவறுதலாக அனுப்பிய மெசேஜ் அப்படி...உடனே அதிதி

"நித்ஸ் அப்படி இல்லடி நீ தப்பா..."என்று பேசி முடிக்கும் முன்பே

"ச்ச்சீ நீ வாய மூடு.உனக்கும் எனக்கும் இனி எந்த பேச்சுமே இல்லை.நீங்க சொல்லுங்க அருண்.இப்போ என்ன பண்ணுறதா உத்தேசம்"என்றவளை எல்லா பக்கத்தாலும் மாட்டிக்கொண்ட கோவத்தால் அருண்

"ஹேய் இப்போ எண்ணங்குற.ஆமா உங்கூட கடலை போட்டேந்தான்.இல்லை எண்டு சொல்லல.அதுக்காக எதுக்கு நான் உன்ன கல்யாணம் பண்ணனும்.அப்படி பார்த்தா போனா வாரம் சந்தரப்ப சூழ்நிலையால விபச்சாரத்துல சிக்கின சில பொண்ணுங்களுக்கு மறு வாழ்வு கொடுக்குறதுக்காக எங்க சைபர் க்றைம் டிபார்ட்மண்டால அந்த பொண்ணுங்களுக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிப்பிச்சோம்.அதுல சில பொண்னுங்க இப்பவும் என்கூட பேசுவாளுங்க.அதுக்கு அவளுங்களை எல்லாம் நான் கல்யாணம் கட்டிக்க முடியுமா"என்றவனை அதிதி

"அண்ணா என்ன பேசுற.அந்த பொண்ணுங்களும் நித்யாவும் ஒன்னாண்ணா?"என்றவளை

"ஏன் இல்லாம.அன்னைக்கு நான் அந்த இடத்துக்கு போகாம இருந்திருந்தா இவளும் சோரம் போனவதான்"என்றவனை

"அண்ணா வாய மூடு"என்று கத்திய அதிதியை கண்கள் கலங்க நித்யா முறைத்து

"அதிதி இது நானும் உன் அண்ணனும் சம்பந்த பட்ட விசயம்.நீ உன் லிமிட்ல நின்னுக்கோ.உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல.அப்புறம் அருண் சார் கடைசில நீங்க வந்து என்ன காப்பாத்தலைன்னா நானும் ஒரு வேசி ஆகியிருப்பேன்னு சொல்ரீங்களா"என்று வேண்டுமென்றே அந்த வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து கண்களில் கண்ணீருடன் கேட்க இதைக்கேட்ட அருணுக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.

மூவரும் அமைதியாக இருக்க மனது பொறுக்க முடியாமல் அதிதி

"அண்ணா நீ இப்போ சொன்னதுக்கு நித்யா கிட்ட சாரி கேளு.இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"என்றவளை

"உங்க அண்ணன் பேசினது கூட பெருசா வலிக்கல்ல அதிதி.ஆனா நீ உங்க அண்ணனுக்கு அனுப்பினியே மெசேஜ் ,அதுதான் அந்த பெங்களூர் பொண்ணு மாதிரி பேசுரதுக்கு யாராச்சும் ஒரு பொண்ண அர்ரேஞ் பண்ணிட்டு வர சொல்லி ..அதுதாண்டி வலிக்குது.எனக்கு இருக்குற ...சாரி இருந்த ஒரே ப்ரெண்ட் நீதான் ,இனிமே அதுகூட இல்லை.அப்புறம் அருண் சார் நீங்க என்ன வேசின்னு நினைச்சா கூட பரவாயில்லை சார்,என்ன பத்தி நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க.உங்க பார்வைக்கு நான் அப்படியே இருந்திட்டு போறேன்.இன்னைக்கு நாள் எனக்கு ரொம்ப நல்லா வந்திருக்கு.நம்ப வெச்சி ஏமாத்தின உயிர்த்தோழி..அப்புறமா நான் மனசால காதலிச்சவன் வாயாலேயே வேசிப்பட்டம் வாங்கியிருக்கேன்.தாங்க்ஸ்"என்று கூறிவிட்டு இருவரையும் திரும்பி கூட பாராமல் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிச்சென்றாள்.

அவள் சென்றதும் அதிதி "லூசாடா நீ. ஏன் டா இப்படி எல்லாம் அவகிட்ட பேசின.பாரு அவ எப்படி மனசு உடைஞ்சி போய் போறா.எனக்கு தெரிஞ்சி அவ எப்போமே இந்த அளவுக்கு கவலைப்பட்டதில்ல தெரியுமா"என்றவளை

"போடி.எல்லாம் உன்னால வந்தது .நீ ஒழுங்கா மெசேஜ எனக்கு அனுப்பியிருந்தேனா இன்னேத்தைக்கு எல்லாமே சுமூகமா முடிஞ்சிருக்கும்"என்றவனை

"அதுக்குனு நீ அவளை ப்ராஸ்ட்டிட்யூட் கூட கம்பேர் பண்ணியா பேசுவ.இப்படி நீ பேசினத எப்படிண்ணா அவ தாங்குவா?என் நித்யா பாவம்டா "என்றவளை

"அவ என்ன முழுசா மறக்கனும்டா இத தவிர வேற வழி தெரியல அதிதி.நீயும் அவளும் ரெஸ்ட்டாரண்ட்ல பேசினத நீ எனக்கு கால் போட்டு கேட்க செஞ்சியே.அப்போ அவ சொன்னா கேட்டியாம், என்ன எப்போல இருந்து விரும்ப ஆரம்பிச்சான்னு..இந்த கொஞ்ச நாளாதான் என்ன விரும்புறான்னா ஈசியா வெட்டி விட்டிருக்கலாம்.ஆனா அவ என்ன 7 வருசமா மனசுல நினைச்சுட்டு இருந்திருக்கா.அதான் கொஞ்சம் கடுமையா பேச வேண்டியதா போச்சுடா"என்றவனை

"நீ சொலர்தும் சரிதான்னா.சரி நடக்குற எல்லாமே நல்லதுக்குன்னே நினைப்போம்.இனி அவ என்கூட எப்போ பேசுவாலோ"என்று கவலைப்பட்ட தன் தங்கையை

"சீக்கிரத்துலேயே பேசுவாடா நீ கவலைப்படாத" என்றான்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro