தீண்டல் 10
நாட்கள் செல்ல அருணின் தொலைபேசி இலக்கத்தை நித்யா அதிதியிடம் இருந்து அவளுக்கு தெரியாமல் எடுத்து அவள் அவனுக்கு "ஹாய் "என்று மெசேஜ் செய்தாள்.
உடனே"ஹாய் நித்யா" என்று ரிப்ளை வர இங்கு நித்யாவுக்கோ தலை கால் புரியவில்லை.தன்னுடய செல் நம்பரை அருண் ஞாபகம் வைத்திருப்பதை நினைத்தவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.இவளோ மேலும் எப்படி தொடர்ந்து மெசேஜ் செய்வது என யோசிக்க அவனிடம் இருந்து அடுத்த மெசேஜ் வந்தது
"shall i call u" என்று..
அதற்கு உடனே இவள் சரி என்று பதிலளித்ததுதான் தாமதம் உடனே ப்ரைவேட் நம்பரில் இருந்து ஒரு கால் வந்தது.பயத்துடன் அந்த காலை பிக்கப் செய்தவள்
"ஹலோ"என்றால் பயத்துடன்.மறுபுறத்தில்
"ஹேய் நித்யா நாந்தான் அருண் "என்றதும் கொஞ்சம் பயம் நீங்கியவளாக
"ஹ்ம்ம் நான் ப்ரைவேட் நம்பர பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டேன்"என்றவளை
"ஏன்"என்று கேட்டான்.
"இல்ல அன்னைக்கு கௌசிக்கிட்ட இருந்து வந்த காலுக்கு அப்புறம் unknow நம்பர்ல இருந்து கால் வந்தா கொஞ்சம் பயமா இருக்கு.அதுவும் ப்ரைவேட் கால் எண்டதும் கொஞ்சம் ஓவராவே பயந்துட்டேன்"என்றவளை
"ஹேய் கூல் கூல்.உன்ன ஏதோ ஜான்சி ரானி ரேஞ்சுக்கு அதிதி பில்டப் பண்ணா.நீ என்னடான்னா தெனாலி படத்துல வர கமல் மாதிரி கால் வந்தா பயம்,அதுவும் unknown கால் என்றால் அதவிட பயம்னு சொல்லி காமடி பண்ற"என்று கலாய்த்தவனை
"ஏன் சொல்ல மாட்டீங்க ACP சார்"என்றால் காக்க காக்க ஜோதிகா ஸ்டைலில்.
இப்படியே இவர்களின் பேச்சு ஒரு 15 நிமிடங்களுக்கு தொடர்ந்தது.இப்படியே தினமும் இவர்கள் பேசிக்கொள்ள ஒரு நாள் அருண்
"ஆமா அன்னைக்கு அதிதி சொன்னாலே உன் ஆளுன்னு.யாருப்பா உன் ஆளு?"என்று கவலையுடன் கூடிய ஆவளுடன் கேட்க இவளோ கொஞ்சம் இவனுடன் விளையாடலாம் என எண்ணியவள்
"அப்படி யாருமில்ல.இப்போ ஒருத்தர் இருக்காங்க சார்"என்றவளை அருணோ பதறி
"நிஜமாவா யாரு ?யாரு?"எனறு கேட்க இவளோ இவனின் தவிப்பை உணர்ந்து உள்ளுக்குள் சிரித்தவள்
"ACP சார் ரொம்ப பதறாதீங்க.எல்லாம் என் ப்ரெண்டுக்கு தெரிஞ்ச ஆளுதான் .என்ன இன்னும் அவருகிட்ட சொல்லல.சொல்லனும் , ஆனா அவரு மனசுல இவ்வளவு நாளா என்ன இருக்குன்னு தெரியாம இருந்திச்சி.ஆனா இப்போ கொஞ்ச நாளா அவரு மனசுல இருக்குறதும் லேசா தெரிய ஆரம்பிச்சிடுச்சு..ஆனா"
"அப்போ நீயும் சொல்லல அவரும் சொல்லலயா"என்று மனதில் கவலையுடனும் வார்த்தையில் பதற்றத்தையும் காட்டியவனை இன்னும் கொஞ்சம் அவனை தவிக்கவைக்க எண்ணி
"இல்ல ரெண்டு பேருமே சொல்லிக்கல..ஆனா இன்னைக்கு தெளிவா தெரிஞ்சிடுச்சு.அவரும் என்ன விரும்புறாருன்னு"என்று கூறியவள்
"ACP சார்.அம்மா கூப்பிடுறாங்க நான் நாளைக்கு பேசுறேன்"என்று கூப்பிடாத அம்மா கூப்பிட்டதாக சொல்லிவிட்டு நிலைக்கண்ணாடியில் தன் முகம் பார்த்தவள்
'இதுக்கு மேல இந்த மாங்கா மடையனுக்கு நான் எப்படி சொல்ரது.எனக்கு ஆளு இருக்கான்னு கேட்குறான்.ஆமான்னதும் மனசு உடைஞ்சி போய் பேசுறான்.எப்படியோ கடைசில ஒரு பிட்ட போட்டம்.அதுசரி புரிஞ்சிதான்னு நாளைக்கு பார்க்கலாம்'என்று தனக்கு தானே பேசியவள் வாழ்க்கையில் முதல் முறையாக அவளது கன்னம் இரண்டும் பட்டு ரோஜா போல சிவந்திருப்பதை உணர்ந்தவள் மனதில் ஒரு குறுகுறுப்புடன் வெளியில் வர இப்போது நிஜமாகவே அவளது அம்மா அவளை இரவு உணவுக்காக அழைத்தார்.அப்போதுதான் நித்யாவுக்கு ஒரு விடயம் புரிந்தது.அவள் இதுவரை தாயிடம் தன் காதலை பற்றி கூறாதது.இருந்தாலும் அருணின் முடிவை அறிந்து எல்லோரிடம் கூறலாம் என மனதை தேற்றினாலும் அவளின் தாயிடம் கூறாமல் வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு காரியம் செய்வதை எண்ணிய போது அவள் மனதை ஏதோ செய்தது.
சாப்பாட்டு மேசையில் எல்லோரும் இருக்க நித்யாவோ அடிக்கடி தனியாக எதையோ யோசித்து சிரிப்பதை கண்ட வாசுகி
'இவ எதுக்கு இப்போ லூசு மாதிரி சப்பாத்திய பாத்துக்கிட்டே சிரிக்கிறா?அப்புறமா ஏதோ யோசிக்கிறா.ஏதும் காத்து கருப்பு அடிச்சிட்டா.நம்ம இருக்கும் போது காத்தாவது கருப்பாவது' என தன்னை தானே கலாய்த்தவள் வேண்டுமென்றே
"அக்கா அந்த பிரியானி சட்டிய கொஞ்சம் எடுத்து தாக்கா"என்று அவள் சப்பாத்தி வைத்திருந்த தட்டை காட்டி கேட்டதும் இவளும் லூசு போல ஏதோ ஒரு நினைவில் சப்பாத்தி வைத்திருந்த தட்டை
"இந்தாடா ப்ரியானி" என்று கூறிவிட்டு மீண்டும் சப்பாத்தியை சாப்பிட ஆரம்பித்தவளை வாசுகியும் அவளின் தாயும் வினோதமாக பார்த்தனர்.வழமையான நாட்களில் வாசுகி ஏதும் கேட்டால் 'ஏண்டி உனக்கு கை கால் எல்லாம் நல்லாதானே இருக்கு.தேவைன்னா நீயே எடுத்து போட்டுக்க.சோம்பேறி 'என்று தன் தங்கையை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் நித்யா இன்று அமைதியாக ,இல்லாத பிரியாணியை இருப்பதாக நினைத்து அதற்கு மறுவார்த்தை ஏதுமே பேசாமல் எடுத்துக்கொடுத்தவளை வாசுகியும் அமிர்தமும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய இருவரும் இவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்துவிட்டனர்.
தூங்க அறைக்குள் வந்த வாசுகி ,நித்யாவை பார்த்து நக்கலாக பாடத்தொடங்கினால்.
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான... தன்நன் நானான...
தன்நன் நானான...
இப்படி பாடிய வாசுகியை முறைத்தவள் மனதுக்குள் 'இருடி..நீயும் ஒரு நாளைக்கு என்கிட்ட மாட்டுவ.அப்போ நானும் பாடுறே.நம்மளவிட இவ செம பிகராத்தான் இருக்கா.எப்படியும் எவனாச்சும் லைன் போடுவான்.கடைசில என்கிட்ட தானே வரனும் .அப்போ பார்த்துக்கிறேன் உன்னை' என்று மனதுக்குள் கருவிகொண்டாள்.
அடுத்த நாள் அவள் அருணின் மொபைலுக்கு கால் செய்ய அது முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது.மீண்டும் மீண்டும் முயற்சித்த போதும் அவனை போனில் பிடிக்க முடியவில்லை.அதிதியிடமும் கேட்க முடியவில்லை.ஏனென்றால் இவள் அருணுடன் பேசியது அவளுக்கு தெரியாது.அதிதியிடமும் தன் தாயிடமும் முதன் முதலாக ஒரு விடயத்தை மறைப்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் காதல் வந்தால் இந்த கள்ளத்தனம் எங்கிருந்துதான் வந்து சேருகிறதோ என்று எண்ணியவள் வீட்டு வேலைகளில் மூழ்கிப்போனாள்.
இப்படியே நாட்கள் நகர அருனை 2 வாரமாக போனில் பிடிக்க முடியவில்லை.தன் அத்தை வீட்டிற்கு சென்றிருந்த அதிதி 20 நாள் கழித்து வீடு வந்தவள் அடுத்த நாளே நித்யாவுக்கு கால் செய்து
"ஹாய் நித்ஸ்.."என்றவளை
"யாருங்க வேனும்.இங்க நித்யானு யாருமே இல்லை"என்றால் கோவத்துடன்.
அதிதிதிக்கு அவளின் கோபம் புரிய "இல்லடா,அத்தை ஊர்ல கவரேஜ் கிடைக்கலமா.ஆரம்பத்துல இரண்டு வாட்டி லேண்ட்லைன்ல இருந்து கூப்பிட்டேன். ஆன உன் போன் பிசியா இருந்திச்சு.அதான் அப்புறமா உன்ன கூப்பிடல"என்றவளை போன் பிசியாக இருந்ததன் காரணம் புரிய வெட்கப்பட்டவள்
"சரி சரி,அத விடு ,மீட் பண்ணலாமா இன்னைக்கு"என்றாள்.
அதற்கு அதிதியும் சீரியசாக
"நானும் உன்ன மீட் பண்ணனும்டி"என்றாள்.
"ஓக்கே பிஸ்ஸா ஹட்ல மீட் பன்னலாம்.ஓக்கே ..சார்ப்பா 5 மணிக்கு "என்று கூறிவிட்டு காலை கட்செய்துவிட்டு அதிதியை காண செல்ல தயாராகினாள்.
இருவரும் பீட்சா சாப்பிட உட்கார்ந்த நேரம் இருவருக்குமே அதை சாப்பிடும் எண்ணமில்லை..ஆடர் செய்து விட்டு இருவரும் எதுவுமே பேசாமல் இருக்க அதிதியே ஆரம்பித்தாள்
"நித்ஸ் ஒரு விசயம் சொல்ரேன்.டென்சன் ஆகிடாத சரியா.லைப்ல நம்ம நினைக்குற எல்லாமே நடக்காதுடி.நம்ம தலைல என்ன எழுதி இருக்குன்னு நமக்கு தெரியாதுப்பா.ஆனா நடக்குற எல்லாமே நம்ம நல்லதுக்குத்தான்"என்றவளை இவள் ஏன் இன்று இப்படி பொடி வைத்தி பேசுகிறாள் என்று யோசித்த நித்யா
"ஹேய் லூசு..ஊருக்கு போயிட்டு வந்த உனக்கு என்னடி ஆயிடுச்சு"என்றவளை நித்யாவின் முன் அமர்ந்திருந்தவள் எழுந்து அவளின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் நித்யாவின் கையை பிடித்து கூறிய விடயம் நித்யாவுக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரம் அதிதி தன்னுடன் விளையாடுகிறாள் என்றும் எண்ண தோன்றியது.
----------------
--------
புது கதை அறிமுகம்
CynthiaEvanjalin
https://my.w.tt/UASvvXRg9K
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro