ஷ்ஷ்ஷ் 2
வீட்டை விட்டு வெளியே வந்த சபீருக்கு படபடப்பு குறைய கொஞ்ச நேரம் ஆயிற்று. தான் கேட்டது உண்மையா பிரமையா என்று புரியாமல் குழம்பினான். திரும்பி சென்று என்னவென்று பார்க்கலாமா என்று யோசித்தான்.
"வேணாம் வெளிய ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம், மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்" என்று முடிவெடுத்தவன் பொடிநடையாக நடக்க தொடங்கினான். (அடேய் பிரியாணிய மறந்துட்டு போற... பிரியாணி போச்சா)
அருகில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்தவன் அங்கு குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கலானான். மர நிழலில் காற்று நன்றாக வீச பசியில் அப்படியே படுத்து உறங்கி போனான் சபீர். யாரோ அவனை தட்டி எழுப்ப, தான் எங்கிருக்கிறோம் என்று புரிய சிறிது நொடிகள் ஆனது அவனுக்கு.
" ஏ இங்க பாருப்பா.. தம்பி.. பார்க் மூட்ர டைம் ஆச்சு. கிளம்பு கிளம்பு " பூங்காவின் செக்யூரிட்டி அவனை விரட்டினான்.
தூக்க கலக்கத்தில் சோம்பல் முறித்து கண்ணை கசக்கிக்கொண்டே வீட்டை நோக்கி சென்றான் சபீர். சுற்றிலும் இருள் அப்ப தொடங்கியது. மொபைலில் நேரம் 6.30 என காட்டியது பின் வாட்சப்பில் மெஸேஜ் ஏதாவது வந்துள்ளதா என்று பார்த்தபடி வீட்டின் கேட்டை திறந்தவன் சட்டென ஷாக் அடித்தது போல் நின்றான்.
அன்றைய நாளின் நிகழ்வுகள் அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. வயிற்றின் உள்ளே பயப்பந்தும் பசியும் சேர்ந்து கிரிக்கெட் ஆடியது சபீருக்கு. உள்ளே செல்லாமல் அப்படியே நின்றான்.
" இதெல்லாம் உன் மனப்பிராந்தி தான்டா சபீரு. பேயும் இல்லை பிசாசும் இல்லை, தைரியமா உள்ள போ " அவனின் மூலை அவனுக்கு கூறியது.
துரோகி இதயமோ நெஞ்சுகூட்டுக்குள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடியது. எதுவானாலும் பார்த்துவிடலாம் என்ற முடிவுடன் உள்ளே மெதுவாக எட்டிப்பார்த்தான் சபீர். எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே தான் இருந்தது. இவன் விட்டுச்சென்ற பிரியாணி உட்பட.
'அடச்சே! பிரியாணி போச்சே' என நினைத்தவன் ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்த்தான். ஒன்றும் விசித்திரமாக தென்படவில்லை.
'அப்பாடா... ஒன்னுமில்ல. நான் தான் தேவையில்லாம பயந்துடேன்'
பசி வயிற்றில் அமில மழை பொழிந்தது. சமையல் அறையில் என்ன இருக்கிறது என்று தேடியதில் சில நொறுக்குத்தீனி நூடுல்ஸ் மற்றும் பிரட் ஜாம் இருந்தது. எலக்ட்ரிக் கெட்டிலில் தண்ணீரை சூடு செய்து நூடுல்ஸை அதில் போட்டவன் கூகுளில் 'வீட்டில் பேய் இருப்பதை அறிவது எப்படி' என்று டைப் செய்தான்.
நிறைய யூ ட்யூப் வீடியோக்களும் பக்கங்களும் இருந்தது. அதில் ஒரு பக்கத்தில்
*பேய் மிரட்டி என்ற என்ற மூலிகை உள்ளது. இதனை தீபம் எரியும் போது கொளுத்தினால், பேய் இருக்கும் வீட்டில் எரியும்.
* பூத வேதா உப்பு என்ற மூலிகை உள்ளது. இதனை வீட்டில் வைத்தால் பிண வாடை வீசும். பேய் இல்லாத வீட்டில் அந்த நாற்றம் வராது.
* இந்த மூலிகைகள் உங்களுக்கு கிடைக்காவிட்டல், பசு சானத்தில் பிள்ளையார் பிடித்து, அறுகம்புல்லை அதில் சொருகினால் பேய் இருக்கும் வீடாக இருந்தால் அந்த பிள்ளையாரை வண்டு மொய்த்து சிதைத்துவிடும். பேய் இல்லாத வீட்டில், பிள்ளையார் கெடாமல் அதிக நாட்கள் இருக்கும்.
இதுவே உங்கள் வீட்டில் பேய் இருப்பதை கண்டுப்பிடிப்பதற்கான அறிகுறி
என்று இருந்தது. அதைப்படிக்க இவனுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.
'மூலிகையாம் பேயாம்... என்னமா ரீல் விட்ரானுங்க'
அடுத்த பக்கமொன்றை திறந்தான் அதில்
வீட்டில் வீடியோ கேமரா இல்லையெனின் ஸ்மார்ட்போன் செயலிகளை கொண்டும் பேய்களை கண்டறிய முடியும்
என்று கீழே அந்த செயலியின் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.
'ஆஆ அடங்கொங்கா' என வாய்பிளந்த சபீர். 'இதுகெல்லாம் ஆப் இருக்கா!!?' என்று அதிசயித்தான்.
'அதை அப்புறம் பாப்போம்' என முடிவு செய்து நூடுல்ஸை தயார் செய்தவன் மற்ற திண்பண்டங்களையும் எடுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சபீர் சூடாக நூடுல்ஸை உள்ளே தள்ள எத்தனிக்கும் சமயம்... மெல்லிய பாடலொலி ஒன்று வீட்டுக்குள் கேட்டது. நூடுல்ஸை வாய்குள் உறிஞ்சியவன் அப்படியே நிறுத்தி கூர்ந்து கவனித்தான், தெளிவில்லாமல் ஏதோ பாட்டு தான் கேட்டது. சத்தம் கேட்ட திசையை நோக்கி சென்றான் சபீர். அருகில் செல்ல செல்ல பாடல் தெளிவாக கேட்டது.
"மூச்சு பட்டா நோகுமின்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்... நிழலுப்பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்..." ஒரு பெண் குரல் தாலாட்டு பாடலை மெல்ல முணுமுணுத்தது.
படுக்கை அறையில் இருந்து தான் பாடல் ஒலித்தது. உதறலுடன் கதவை மெல்ல திறந்தான் சபீர். பேய் இருக்கா இல்லையா என இவன் தெரிந்து கொள்ள சிரமம் இன்றி அங்கே
சுவற்றில் ஒரு நிழலுருவம் குழந்தை ஒன்றை மடியில் போட்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இவனை திரும்பி பார்த்து 'ஷ்ஷ்ஷ்ஷ்' என விரலை காட்டியது.
_________---_____----------____-------______
இந்த கதையை ஆராரோ ஆரிராரோ என்ற தலைப்பில் தனி தொடர் கதையாக பதிவிட்டுள்ளேன். இதன் தொடர்ச்சியை அங்கு படிக்கலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro