சவால்.. 2
" ஹே அவனுக்கு ஒன்னும் ஆகாதுல.. எனக்கு பயமாவே இருக்கு டா.. "
" லூசு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. சுடுகாட்டுலயே வச்சு சரக்கு போட்டு இருக்கோம்.. இதெல்லாம் மேட்டரே இல்லை.. "
" ஹ்ம்.. என்னமோ சொல்லற.. சரி காலைல பாப்போம்.. பை.. "
காலையில் அவனை பார்ப்போம் என்று அவர் அவர் வீட்டிற்கு சென்றனர் வினோத்தும் ரேகாவும்..
படுத்திருந்த அன்பிற்கு அந்த பிணவறை வாடை ஏதோ செய்தது..அந்த நாற்றத்தை பொருத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் அவனுக்கு போர் அடிக்க ஆரம்பித்தது..
மனதிலேயே குத்து பாடல்களை பாட ஆரம்பித்தான்.. அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. அமைதியாக மூச்சை உள்ளே இழுத்து கொண்டான். பேச்சு குரல்கள் கேட்டது..
" ஏம்பா என்ன கேஸ். "
" தற்கொலைன்ணா .. 45 வயசு...இன்னிக்கு காலைல தான் இறந்தாரு " என்று கண்ணீருடன் சொன்னான்..
" ஓஓஓ..அந்த ஆளா.. இன்னும் போஸ் மார்ட்டம் பண்ணல தம்பி.. நாளைக்கு தான் நீங்க பிணத்த வாங்க முடியும்.. "
" அண்ணா... நான் பாக்கனும்"
" அட சொன்னா கேக்க மாட்டியா.. போபா பேசாமா.. நாளைக்கு வா"
" ப்லீஸ் அண்ணா.. "
" சரி வா.. "
குளிர் அதிகமாக பரவியது போல் இருந்தது.. ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது.. த்ட்.. என்ற ஒலி கேட்டது..
" கெரகம் பிடிச்சவனுங்க .. நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு.. பிணத்த பார்த்து மயக்கம் போடறவன்லா என்னதுக்கு இங்க வரனும்.. "
ஒலி மங்கி கொண்டே போனது.. பின் எந்த சத்தமும் இல்லை.. அன்பு மெல்ல துணியை விலக்கி பார்த்தான்.. அறை காலியாக இருந்தது.
பக்கவாட்டில் குளிரூட்டப்பட்ட பிண டிரே ஒன்று பாதி திறந்து இருந்தது.. "போய் பாக்கலாமா.." என்று யோசித்தான்..
" ம்ம்.. போய் தான் பாப்போமே.. " என்று எழுந்து அதனருகில் சென்றான்..
கால்கள் மட்டும் முதலில் தெரிந்தன.. வெளிரி போய் இருந்தன.. வலது கால் பெருவிரலில் பெரிய மச்சம் இருந்தது.. இன்னும் அருகில் சென்று பார்கலாம் என்று அவன் எத்தனிக்க.. திரும்பவும் சத்தம் கேட்டது..
அவசரமாக ஓடி சென்று மீண்டும் படுத்துக்கொண்டான்.. " ச்சய்.. மனுசன நிம்மதியா தூங்க கூட விடமாட்ரானுங்க.. "
ட்ரே மூடும் சத்தம் கேட்டது.. பின் காலடி ஓசை மறைந்து நிசப்தமானது.. " இப்ப என்ன பண்ணலாம்.. திரும்பவும் போய் பாக்கலாமா.. ஆனா பூட்டி இருந்தா..? "
அவன் யோசிக்கையில் ஏதோ சத்தம் கேட்டது.. மெல்ல எட்டிப்பார்த்தான்.. அந்த ட்ரே மெதுவாக திறக்க ஆரம்பித்தது... அவன் கண்கள் விரிய விழித்துப்பார்த்தான்..
குளிர் காற்று அறை முழுவதும் பரவ.. பயமும் குளிரும் சேர்ந்து அவனை நடுங்க செய்தது.. குளிரிலும் வேர்ப்பது போல் இருந்தது.. முழுதாக அந்த ட்ரே திறக்க, இவன் கண்களை மொத்தமாக இறுக்கி மூடிக்கொண்டான்...
இன்னும் நிசப்பதமாகவே இருக்க இதயம் படப்படக்க மெல்ல கண்களை திறந்து பார்த்தான்..
எதிரில் அந்த ட்ரே இன்னும் திறந்த நிலையில் இருந்தது.. எந்த வித அசைவும் இல்லை.. பின் மெல்ல எழுந்து அமர்ந்தான்.. அறையை சுற்றி அலசினான்..
இவனை போல் சில துணி மூடிய உடல்கள் இருக்க.. அதையும் தாண்டி துணி மூடாமல் சில பிணங்களும் இருந்தது.. அதை காண விரும்பாதவனாய் சட்டென கண்ணை அங்கிருந்து திருப்பினான்..
அந்த ட்ரே மட்டும் இன்னும் திறந்தே இருந்தது. தொண்டை வறண்டு போய் இருக்க எச்சிலை விழுங்கியபடியே அதனருகில் மெல்ல நடக்கலானான்.. இதயம் தாறுமாறாய் எகிற தொடங்கி இருந்தது..
அதனிடம் வந்தவன் கண்ட காட்சி ஒரு நிமிடம் இதய துடிப்பை நிறுத்தி பின் வெளியே வந்துவிடும் அளவுக்கு துடிக்க ஆரம்பித்தது..
அங்கே...
பிணம் இல்லை..
உடல் வெடவெடுக்க திரும்பினான்.. அங்கே உள்ள மொத்த பிணமும் அவன் முன்னே நின்று கொண்டு இவனை வெறித்தன..
காலையில்..
" டேய் எரும.. அவனுக்கு அங்க என்னாச்சு தெரில... நீ என்ன இப்டி தூங்கிட்டு இருக்க... கிளம்பி வரியா இல்ல நானே போகவா.. 😣😣"
போனில் வினோத்தை அர்சித்து கொண்டு இருந்தாள் ரேகா..
" ஏய்.. கத்தாத காது வலிக்குது.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது அவனுக்கு. தோ வந்துடறேன்.. இரு ஒன்னா போலாம்... "
இருவரும் அங்கு சென்ற பொழுது பிணவறை பூட்டி இருந்தது.. மனதில் பயம் துளிர்க்க ஒருவரை ஒருவர் பார்த்தனர்... வேகமாக அடென்டரை தேடி ஓடினர்..
" அண்ணா அந்த மார்சுவரி அடென்டர் எங்க இருப்பாரு? "
" நான் தான் அந்த அடென்டர்.." என்றவரை பீதியுடன் பார்த்தனர் இருவரும்.
" நேத்து வேரொருத்தர் இருந்தாரே..அவர் எங்கண்ணா?"
" அவரு திடீருன்னு ஏதோ சொந்த ஊர் போறேன்னு லீவ்ல போய்டாரு.. ஆமா நீங்க ஏன் அவர தேடரீங்க.. ? "
" ஒன்னும் இல்லன்ணா.. மார்ச்சுவரில.. " என்று பேச போன ரேகாவின் கையை பிடித்து அழுத்தினான் வினோத்..
" அங்க தெரிஞ்ச ஒருத்தர் இறந்துட்டார்.. அவரோட உடலை பாக்கனும்... அதான்.. " என்று இடைவெட்டினான் வினோத்..
" ஓஓ.. சரி வாங்க.. "
அவர் முன்னே செல்ல, வினோத்தை ரேகா விழியால் எரிக்க.. அவனும் பார்வையாலயே அமைதியாக வரும்படி சைகை செய்தான்..
அங்கே... !!!!!!!!
பிணத்தோடு பிணமாக வாய் பிளந்து கிடந்தான் அன்பு
___________******______******________
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro