ஞாபகம் வருதே - 2
மனக்குழப்பம் தெளிந்து தீபிகா பிரகாஷிடம் நார்மலாக பேச ஆரம்பித்தாள்.
அவ்வப்பொழுது ஆன் டியுட்டி, அஃபிஷியல் ஒர்க் என்று மாதம் இருமுறை இடைப்பட்ட மூன்று மாதத்தில் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியபடி தீபிகாவை வந்து நேரில் பார்த்துச் சென்றான் பிரகாஷ்.
சூழ இருந்தோர் கேலியில் தீபிகாவிற்கு தான் வெட்கமாக போயிற்று. வருபவனும் அமைதியாக இல்லாமல் தன் இயல்பான பழக்கத்தால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டான்.
நாட்கள் வேகமாக பறந்து, திருமணம் முடிந்து இதோ ஹனிமூனுக்கு ஊட்டி வரை வந்து விட்டார்கள்.
முதல் நாள் முழுவதும் ஒருவர் கரத்தோடு மற்றவர் கோர்த்துக் கொண்டு ஊட்டியை சந்தோசமாக சுற்றி வந்தனர்.
மறுநாள் ரோஸ் கார்டனில் அமர்ந்து பேசி கொண்டிருந்த பொழுது... திடீரென்று பிரகாஷ், "ஹேய் தீபு.. உன்னிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேனே..." என்றான் வேகமாக.
அவன் வேகம் கண்டு சிரித்தபடி, "என்ன?" என்று கேட்டாள் .
"ம்... நான் யு.ஜி படித்துக் கொண்டிருந்த பொழுது வனிதா என்று ஒரு பெண்ணை காதலித்தேன்!" என்றான் கூலாக.
அதுவரை இருந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்தது போல் இருந்தது தீபிகாவிற்கு.
அவள் மனம் வாடியது, அவனுக்கு தெரியாமல் வெளியில் அமைதி காத்தாள்.
அவனோ உற்சாகமாக தன் வழக்கமான சுயவரலாற்றை!!! சொல்வது போல் இதையும் சொல்லிக் கொண்டிருந்தான்.
"அவள் எங்கள் குவார்டர்ஸில் தான் இருந்தாள். என் பிரெண்டு அவள் பிரெண்டை காதலித்தான். அதனால் நாங்கள் இருவரும் அவர்கள் இருவரோடு துணைக்கு ஒன்றாக சுத்துவோம். அப்படிதான் எங்களுக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு ஆறு மாத காலம் நான்கு பேரும் ஒன்றாக சுற்றி திரிந்தோம். அதன் பிறகு அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்து நாங்கள் வேறு ஊருக்கு சென்று விட்டோம். நான் அந்த ஊரிலேயே பி.ஜி. ஜாயின் பண்ணிட்டேன். முதல் இரண்டு மாதம் வனிதாவிடம் மொபைலில் வாரம் இருமுறை பேசி கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று அவளுடைய நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை... நாட் இன் யூஸ் என்று வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... ஒரு மாதம் கழித்து என் நண்பனிடம் அவளைப் பற்றி விசாரித்தேன். அதற்கு அவன், அவள் உனக்கு வேண்டாம் மச்சான்! அவள் கேரக்டர் சரியில்லை... வேறு ஒருவனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்றான். சரியென்று நானும் விட்டு விட்டேன். அப்பொழுது முடிவு செய்தேன்... இனி என் வாழ்வில் திருமணம் என்றால் அது அப்பா அம்மா பார்க்கும் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று!" என்றான் நீண்ட விளக்கமாக.
'நல்ல முடிவுடா... படுபாவி... படுபாவி... பரவாயில்லை எல்லாவற்றையும் ஓப்பனாக ஷேர் பண்ணுகிறானே என்று பார்த்தால், இப்படி செய்து விட்டானே!' என்று மானசீகமாக தலையிலடித்து கொண்டாள் தீபிகா.
'அதுவும் ஒரு நேரம் காலம் இல்லை... புதிதாக திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் ஹனிமூனில் பேசுகின்ற விஷயத்தை பார்!' என்று லேசாக எரிச்சல் வந்த பொழுதும் அவன் மேல் அவளுக்கு சற்றும் கோபம் வரவில்லை.
எந்த ஒரு உணர்வுமின்றி அவன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை கூறுவது போல் அவன் சொன்ன விதத்திலேயே அந்த பெண் அவன் மனதில் ஆழமாக இல்லை என்பது அவளுக்கு புரிந்து விட்டது.
யோசிக்க யோசிக்க அவனுக்குள் இருக்கும் குழந்தைதனத்தை அவள் ரசித்தாள்.
மேலும் எந்த நம்பிக்கையில் தன்னிடம் இதை அவன் கூறினான்... இவள் எதுவும் சண்டை போடுவாளோ என்று சற்றும் யோசித்ததாய் தெரியவில்லையே... தன் மீது அவ்வளவு நம்பிக்கையா? என்று ஆச்சரியமாக இருந்தது.
"என்ன யோசனை... சரி கிளம்பலாமா?" என்று கேட்டான் பிரகாஷ்.
தீபிகா அவன் முகத்தையே பார்த்தவாறு மெல்ல தலையசைத்தாள்.
அவன் அவளை கைப்பற்றி எழுப்பி, அவள் தோளில் கைப்போட்டு அரவணைத்தபடி நடக்க ஆரம்பித்தான்.
தீபிகா, திருமணத்திற்கு பின் வரப்போகும் தன் கணவனை தான் காதலிக்க வேண்டும் என்று தனக்கு தானே விதித்துக் கொண்டு அவனுக்காக தன் மனதில் யாருக்கும் இடம் கொடுக்காமல் காத்திருந்தவள்.
கல்லூரியில் படித்த காலத்தில் தனக்கு வந்த இரண்டு ப்ரோபசலையும் தவிர்த்தவள்.
அவள் தான் யாரையும் காதலிக்கவில்லையே தவிர, தனக்கு வரப்போகும் கணவனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
அவள் மிகவும் பிராக்டிக்கல் டைப், இன்றைக்கு இருக்கும் நிலையில் மற்றவர் கேலியினாலோ... தூண்டுதலினாலோ... இல்லை ஈர்ப்பினாலோ ஏதோ ஒன்றால் நிறைய பாய்ஸ் யாரையாவது காதலித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த காதல் அனைவருக்கும் வெற்றியடைந்து விடுகிறதா என்ன? ஏன் அவளை கூட ஒருவன் விடாமல் ஐந்து வருடமாக காதலித்து கொண்டு தான் இருக்கின்றான். ஆனால் அவள் தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்காக அவன் யாரையுமே திருமணம் செய்யாமல் இருக்க வேண்டுமா என்ன? அப்படியில்லை. அதுபோல் தான் தனக்கு வருகின்ற கணவன் ஏற்கனவே காதலில் விழுந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை, திருமணத்திற்கு பின் தனக்கு சின்சியராக இருந்தால் போதும் என்று முடிவு செய்திருந்தாள்.
அதை இப்பொழுது நினைக்கும் பொழுது அவள் இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.
என்ன தான் மனதளவில் எதுவென்றாலும் சரி என்று எதிர்பார்த்திருந்தவள் தான் என்றாலும், தன் ஆசைக் கணவனாகிய காதலன் இப்படி பட்டென்று தேன்நிலவில் விஷயத்தை போட்டு உடைப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.
பிரகாஷ் வேலைப் பார்ப்பது வெளியூர் என்பதால் இருவரும் தனியாக தான் இருந்தனர்.
அவ்வப்பொழுது நண்பர்கள் பொது இடத்தில் குடும்பம் குடும்பமாக சந்தித்து ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொள்வர்.
அவ்வாறு பிரகாஷின் நண்பர்கள் மூன்று பேர் நெருக்கமாக இருந்தார்கள். அதில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள், ஒருவர் மட்டும் தான் பேச்சிலர்.
அதில் தினகர் என்பவன் ரொம்ப ஜாலி டைப், அனைவரையும் ஏதோ ஒன்றில் கலாய்த்து கொண்டே இருப்பான்.
தீபிகாவும் ஒரே மாதத்தில் அவர்களோடு நன்றாக ஐக்கியமாகி விட்டாள். அவள் எப்படி பழகுவாளோ என்று தயங்கி கொண்டிருந்த மற்றவருக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
அப்படித்தான் ஒரு வார இறுதியில், தினகர் வீட்டின் மொட்டை மாடியில் அனைவரும் ஒன்றாக குழுமியிருந்தனர்.
அன்று பௌர்ணமி ஆதலால், நிலாச் சோறு சாப்பிட்டபடி அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென்று தினகர், "ஏம்மா தீபிகா, இந்த திருட்டு பையன் உன்னிடம் எல்லா விஷயங்களையும் ஷேர் செய்திருக்கின்றானா... என்னிடம் இவனைப் பற்றிய ரகசியம் ஒன்றிருக்கிறது. இவன் ஏதாவது உன்னிடம் வாலாட்டினால் சொல்லு... வைத்து செய்திடலாம்!" என்றான் கேலியோடு.
"அது என்ன விஷயம் அண்ணா? அவர் என்னிடம் இதுவரை எதையுமே மறைத்ததே இல்லையே..." என்று வினவினாள் தீபிகா.
"அப்படியா? ஆனால் கண்டிப்பாக இதை சொல்லியிருக்க மாட்டான்!" என்றான் அவன் நம்பிக்கையோடு.
ஒரு நொடி தயங்கியவள், "எது வனிதா விஷயமா?" என்று போட்டு உடைத்தாள்.
சாப்பிட்டு கொண்டிருந்த தினகருக்கு புரை ஏறியது சற்று இருமி சமாளித்தவன், "ஓட்டைவாய்டா நீ... இதையும் சொல்லி விட்டாயா?" என்று பிரகாஷை பார்த்து கேட்டான்.
"ஹேஹேய்... உன்னை மாதிரி ஆட்களுக்கு மிரட்ட சான்ஸ் கொடுப்பேன் என்று நினைத்தாயா?" என்று சிரித்தபடி அருகிலிருந்த மற்றொரு நண்பனிடம் ஹாய்ஃபை அடித்தான் பிரகாஷ்.
"அடப்பாவி... அவள் செமி என்பது முதற்கொண்டு அனைத்தையும் சொல்லி விட்டாயா?" என்று அவன் கண்களை விரிக்க, தீபிகா திகைத்தாள்.
"என்ன... யார் செமி... வனிதாவா? அதை இவர் சொல்லவில்லையே..." என்று அவள் வினவ, ஹேய்... என்று குதூகலத்தில் கத்தினான் தினகர்.
"உனக்கு தெரியுமா தீபிகா? அந்த வனிதா எப்பொழுது பார்த்தாலும் ஈயென்று சிரித்தபடி தான் சுற்றிக் கொண்டிருப்பாள். அருகில் உள்ளவர்கள் அவள் சற்று மறை கழண்ட கேஸ் என்றெல்லாம் கூட பேசிக் கொள்வர்!" என்று ஹஹாவென்று சிரித்தவனை பிரகாஷ் தர்மஅடி வெளுத்தான்.
"இப்பொழுது திருப்தியாடா..." என்று கேட்டபடி.
அதுவரை மனதின் ஓரம் இருந்த ஏதோ ஒரு பளு நீங்கி மனம் லேசாவதை உணர்ந்தாள் தீபிகா, இதழ்களில் சின்ன முறுவல் பூத்தது.
வீட்டிற்குச் செல்லும் வழியெல்லாம் தினகர் கூறியதே மாற்றி மாற்றி நினைவுக்கு வந்து அவளுக்கு சிரிப்பை மூட்டியது.
தீபிகாவையே ஓர விழியில் நோக்கியபடி கதவைத் திறந்த பிரகாஷ், கதவைச் சாத்திய வேகத்தில் அவளை இழுத்து கதவில் சாய்த்து நிறுத்தினான்.
"ஏய்... என்ன சிரிப்பெல்லாம் பலமாக இருக்கிறது?" என்று புருவம் உயர்த்தினான்.
"ம்... ஒன்றுமில்லையே..." என்று பீறிட்ட சிரிப்பை இதழ் கடித்து அடக்கினாள்.
"உதட்டை கடிப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே..." என்று அவள் இதழை வெளியில் இழுத்து விட்டான்.
"ம்... எப்படிப்பட்ட தியாக குணம் கொண்ட பெண்ணுக்கும் தன் கணவன் மனதில் வேற ஒரு பெண் இருந்தாள் என்பது சற்று வருத்தத்தை அளிக்கின்ற விஷயம் தான். எனக்கும் அப்படித்தான் என்னவன் மனம் முழுக்க எனக்கு மட்டும் தான் சொந்தமாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் மனதில் ஏற்கனவே வனிதா இருந்தாள் எனவும் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். நீங்கள் என்னை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் அவள் நினைவால் ஒரு சின்ன நெருடல் இருந்தது. ஆனால் தினகர் அண்ணா அவளைப் பற்றிக் கூறியதும் என் மனதில் ஒரு உவகைத் தோன்றியது பாருங்கள்... என்னை விட தகுதியில் குறைந்தவளை தான் என் கணவன் ஒரு காலத்தில் காதலித்திருத்திருக்கிறார்..." என்று கொல்லென்று சிரித்தவள், "ம்... அவள் செமி என்பதை மறைத்து விட்டு வெறும் பீலாவா விட்டு கொண்டு இருந்திருக்கிறீர்கள்!" என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள் அவள்.
"ஏய்..." என்று கத்தியபடி அவளைத் தனக்குள் சிறை செய்தான் பிரகாஷ்.
திருமணத்திற்கு பிறகு ஏற்படும் காதலுக்கு தான் வலிமை அதிகமோ!!!
**END**
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro