பேனா
மதியம் 3மணி அளவில் கோகிலா தன் வழக்கமான வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால்!இவள் வயது பதின்மூன்று (13)இருக்கும்! அந்த வயதுக்கு ஏற்ற உயரம் தான் அவள்!
கோகிலா கையில் சிறிய தட்டு மட்டும் இருந்தது!
மற்றபடி கிழிந்து போன ஆடையே அணிந்திருந்தாள்!
ஆம்.!இவள் பிச்சை எடுக்கிறாள் என்று கூட சொல்லலாம் மனிதர் பார்வையில்!
கேட்காத ஆள்ளில்லை ஒருநாளில் இவள் சம்பாதிப்பது அவளின் பார்வைக்கு பெரும் தொகையான 40ரூபாய்!
சாயங்காலம் 7மணி அளவில் இவள் தன் வழக்கமாக உறங்கும் முருகப்பா சாலையின்
ஓரம் வந்துவிடுவாள்!அங்கே அவளின் அம்மா அருகில் உள்ள 2 சாலையில் பிச்சை முடிந்ததும்
வந்துவிடுவாள்! கோகிலா அப்பா மாண்டு ஒரு வருடம் இருக்கும்! ஒரே நாளில் எத்தனை சிக்ரெட் பெட்டிகள் காலியாகும் என்று தெரியுமா? அதுதான் மரணம் சீக்கரமே இழுத்தது அவரை!
அந்த சாலையில் இவர்களோடு தூங்குவது கல்யாணி என்பவள் .பாவம் கைகுழந்தை வேற அவளுக்கு! அக் கைகுழந்தை எப்போதும் கையை மையாக்கியே தீரும் கோகிலா கொடுத்த பேனாவில்! புடிங்கினாள் அழுவதை பார்த்து நீங்களே கொடுத்து விடுவீர்கள்!!கல்யாணி கணவன் எந்த ரோட்டில் இருக்கிறானோ குடி போதையில் மயங்கி!
நள்ளிரவு இருக்கும் தெரு நாய் ஒன்று ஓநாய் போல் ஓலமிட்டது! சிணுங்கிய அருகில் உறங்கிய மக்கள் தங்கள் போர்வைகளை இழுத்து மூடினார்கள்! கோகிலா சற்று பயத்தோடு நிமிர்ந்து பார்த்தால்! ஒரு நாய் மட்டும் ஓரே திசை நோக்கி கத்தியது!
மெல்ல எழுந்தால் மற்ற இருவரின் தூக்கம் கலையாதபடி! மெல்ல நடந்தால் ஓசை காதில் இருவருக்கு விழாதபடி! நாய் கத்தியே ஒரு திசை நோக்கி நடந்தது!
இவளும் பின் தொடர, நாய் ஒரு இடத்தில் நின்றது , கீழே குனிந்து அதை பார்த்து கத்தியது!
கீழே இருந்தது என்னவோ பேனா மட்டும் தான்!
அதை எடுக்கும் வேளையில் சற்று பதறினாள் பேனாவின் அதிர்வால்! சற்றென்று பேனாவின் மூடியில் ஒரு கண்ணும் , அதன் கீழே பேனாவின் கண்ணாடியில் வாயும், பேனாவின் அடிபுறம் ஒரு காலுமாக அது மாறியது!.
ஓட்டம் பிடித்தாள் பயந்து ,அவளோடு நாயும் கதறியே ஓடியது! ஓடிக்கொண்டே இருக்க திரும்பினாள் தொரத்துதா என்று பார்க்க!
இல்லை,நின்ற படி நின்றது பேனா! மீண்டும் திரும்பினாள் பயத்தோடு அருகில் போய் "நீ யாரு" என்றாள்!
பேனா பேசத்தொடங்கியது,"நா சின்னதா தப்பு செஞ்சுட்டேன்!அதுதான் என் தப்புக்கு தண்டனையா இங்க அனுப்பிடாங்க எங்க மக்கள்!
ஓஓ!! என்று சொல்லி முடிக்கும் முன்னே கோகிலா வை நிறுத்தியது அதன் பேச்சு!
"நா யார முதல பாக்குரேனோ ,அவங்க கிட்ட மட்டுந் தான் இப்படி மாறுவேன்!பேசுவேன்!
ஓ!!அப்படியா!! என்று சொல்லி தூக்கினாள் பேனாவை!
"உனக்கு என்ன வேணுமோ கேளு, அதை தரமாட்டேன்!ஆனா அதக்கு வழி காட்டுறேன்"என்று சொல்லியது பேனா!
அங்குமிங்குமாய் திரும்பி பார்த்தாள் !
பேனாவின் காதருகே "இப்பதைக்கு அமைதியாய் இரு! நம்மோ காலைல பேசலாம்"என்று சொல்லி பேனாவை பின்பக்கமாய் மறைப்பது போல் மறைத்து அவள் உறங்கும் இடம் அடைந்தாள்!
காலையில் 8மணியில் வாகனம் விரையும் சத்தத்தில் உறக்கம் கலைந்தார்கள் மூவரும்!
மீண்டும் தன் வழக்கமான தெரு நோக்கி பிரிந்தார்கள்,நடந்தார்கள் மூவரும்!
கோகிலா தன் பேனாவை தொட்டு தொட்டு பார்ப்பாள் கிழிந்த ஆடையில் நழுவிலுமோ என்று!
யாரும் பார்க்காத படி தன் வேலையை மறந்து பேனாவில் கவனம் செலுத்தினாள்! ஆளில்லா ஒரு தெருக்குள் நுழைந்து பேனாவிடம் தன் ஆசையில் ஒன்றாக இருந்ததை கேட்டாள்!
"பேனா!பேனா! எ டிரஸ் கிழிஞ்சு போயிருக்கு!
இங்க இருக்க கடைல கேட்டா ரொம்ப அதிகமா காசு சொல்லுராங்க! நீ கிட்ட இருக்க கடைல எது துட்டு கம்மினு சொல்லு! நா சேத்து வச்ச துட்டுல வாங்குரேன்"என்று சொல்லி மனித குணங்களில் உயர்ந்து விட்டாள்!
பொதுவாக இப்படி ஒரு பேனா கிடைத்தால் எல்லோரும் பணத்திற்கு தான் வழி கேட்பார்கள்! ஆனால் இவளோ வேறு!
தன் ஆசையை சொல்லி காதருகே வைத்தாள் பேனாவை ,யாருக்கும் கேட்காத ஒலியில்,அவளுக்கு மட்டும் கேட்கும் ஒலியில் வழி சொன்னது பேனா!
அன்று,தன் வேலைக்கு விடுமுறை கொடுத்து விரைந்தாள் கடையை நோக்கி! இங்கிருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது கடை!
ஒவ்வொரு தெருவிலும் பிச்சை எடுத்தபடியே சென்றிருந்தாள்! மூன்றாவது தெருவை நோக்கி அடைந்தாள்!
எது கடை என்று தேடிக்கொண்டே இருந்த வேளையில் ,தன் கிழிந்த ஆடையில் சொருகி இருந்த பேனா அதிர்ந்தது!
புரிந்து கொண்டாள் இவள் நிற்கும் சாலையின் எதிரே இருந்தது கடை!
தன் கனவே நிறைவேறியது போல துள்ளி குதித்து ஓடி விரைந்தாள்!சாலையை கடந்து நின்ற போது, பேனா மீண்டும் அதிர்ந்தது !
ஆச்சரியத்தோடு எடுத்து பார்த்தாள்!
பேனாவின் ஒற்றை காலில் சிவபபு நிற வெளிச்சம் மின்னியது!
யாருக்கும் தெரியாதபடி நெஞ்சோடு அணைத்து என்ன ஒலி என்று கேட்டாள்!
சோகமாய் இருந்தது பேனா!சோகத்தோடு சொன்னது "எங்க லோகத்துல கூப்பிடுறாங்க !என்னோட தண்டன முடிஞ்சிருச்சு போல"!என்றது பேனா!
ஜொலித்த முகம் சுருங்கியது கோகிலாவுக்கு!
"அப்போ என்ன விட்டு போய்டுவியா?" என்று ஏக்கத்தோடும்,பாசத்தோடும் கேட்டாள்!
ஆமா!என்று சுருங்கிய முகத்தோடு கூறியது பேனா! " என்ன மன்னிச்சுரு! என்றது!
கோகிலாவின் புருவம் உயர்ந்தது!'ஏன்' என்று
கேட்டது!
"உங்கிட்ட ஒன்ன மறச்சுடேன்! நா யார முதல சந்திக்கிறேனோ அவங்க இறந்து அவங்க சாம்பலோடு தான் எங்க லோகத்திற்கு போகனும்!அந்த மாறி பழகுனவங்க சாம்பல பார்த்தா யாருக்கும் இனி தப்பு செய்ய மனசுவராதுங்குரது எங்க லோக வழக்கம்!
இத மாத்தவே முடியாது" என்று சோகத்தோடு கூறியது பேனா!
என்ன???? என்ற ஆச்சரியத்தோடு, தன் கனவின் முன் நின்ற நேரத்தோடு கீழே விழுந்தாள் கோகிலா! பேனா உருண்டு போனது ஒரு ஓரம்!
அருகில் உள்ளவர்கள் பதறியடித்து ஓடிபோய் பார்த்தார்கள்! கூட்டத்தில் இருந்த ஒருவர் நாடி பிடித்த பார்த்தார்!
ஆச்சரியப்பட்டார்! இறந்து விட்டாள் என்றார்!
விஷயம் கோகிலாவின் அம்மாவின் காதில் விழுந்தது! எடுத்த பிச்சை தட்டை தூக்கி விசிறி ஓடி வந்து பதறினாள்! கதறினாள்! நொந்தாள்!
அருகில் உள்ள எல்லோரும் அவளோடு அவள் அம்மாவை சேர்த்து வந்த ஆம்புலனஸ்ஸில் ஏற்றி விட்டனர்!
பேனா ஓதுங்கி நின்று பார்த்திருந்தது! காலில் அதே சிவப்பு நிற வெளிச்சம்! அழுது கொண்டே இருந்தது! ஒவ்வொரு சொட்டிலும் தன் உடம்பில் உள்ள உயிர் என்ற மை குறைந்து கொண்டே வந்தது! அழுது கொண்டே அவள் தங்கிய இடத்தில் சென்று அமர்ந்தது! இன்னும் கொஞ்ச உயிர்தான் மீதமுள்ளது அதற்கு!
வந்த கல்யாணி குழந்தையை கீழ்வைத்து உட்காந்தாள்! குழந்தை அருகில் இருந்த பேனாவை எடுத்து கையில் கிறுக்க தொடங்கியது! வந்த ஒருவர் விஷயம் சொல்ல விரைந்தாள் குழந்தையோடு! பாவம் குழந்தைக்கு தெரிவதில்லை இனி கோகிலா வரபோவதில்லையென்று! அது இன்னும் கையில் பேனாவால் கிறுக்கியது!
மருத்துவமனைக்கு சென்றதில், தெரிந்தவர்கள் மூலம் கோகிலா அம்மா கோகிலாவை தூக்கி சுடுகாடு சென்றனர் !என்று கேள்வி பட்டாள்!
விரைந்தாள் சுடுகாடுக்கு, அங்கே எரியத் தொடங்கியது கோகிலாவின் சடலம்!
கதறிக்கொண்டு ஓடிய கல்யாணி கோகிலா அம்மாவை கட்டிபிடித்து கத்தினாள்!
காரியம் முடிந்ததும் கலைய ஆரம்பித்தது கூட்டம்!கடைசியாக கோகிலா அம்மாவும், கல்யாணியும் அவளோடு கையில் கிறுக்கிக் கொண்டே இருக்கும் குழந்தையும் நின்றார்கள்!
கிறுக்கிக் கொண்டே இருந்ததில் ,தன் லோகம் செல்லும் முன்னையே உயிர் பிரிந்தது பேனாவிற்கு!
இதற்க்கு மேலே எழுதமாட்டிற்கே என்று தூக்கி வீசியது குழந்தை!
இவர்களும் கலைய ஆரம்பித்தார்கள்!
எறியப்பட்ட பேனா கோகிலாவோடு நிம்மதியாக எரிந்தது அந்த தீயில்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro