கவிதை
அந்தநாள் இவனுக்கு இனிய நாள் என்றும் சொல்லலாம்,கெடுநாள் என்றும் சொல்லலாம்!!
அந்த நாள் தான் உலகம் இவனை
ஒரு பாடலாசியராக கருதியது!
அதேநாள் தான் இவன் தன்னை
துர்திஷ்சாலி என்றும் கருதினான்!
நொந்துபோன காலங்கள் மீண்டும் ஒன்றாக
சேர்ந்து வந்திருந்த நாள் அது!!!
ஒரு காலம்
ஏப்ரல் 12,2008.ல் இவன் (மதன்),அவள்(மீனா)
இருவரும் call center ரில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்!!
அவனுக்கோ வயது 24!இவளுக்கோ 22!
இருவருக்கும் இருந்த நட்பை அந்த நட்பு என்ற
வார்த்தையில் அடக்கி விட முடியாது!
இவன் தன் வீட்டில் தண்ணீர் வரவில்லையென்றாலும் அவளிடம் சொல்லியே தீருவான்!
அவள் தன் எடை கூடினாலும் இவனிடம்
சொல்லியே தீருவாள்!
அதனால் தான் " இருவருக்கும் இருந்த நட்பை அந்த நட்பு என்ற
வார்த்தையில் அடக்கி விட முடியாது!"
என்று சொன்னது!
ஒருநாள் ஞாயிறு அன்று
அவளுக்கு இவனிடம் இருந்துஅழைப்பு
"ஹெ,வாயேன் ஒரு இடத்துக்கு போலாம்"
என்று இவன் சொல்ல
"எங்க டா"என்று அவள் கேட்க!
இவன் அதற்கு பதில் சொல்ல மறுத்து
"நீ வா சொல்றேன்"!
சற்றுநேரத்தில் இருவரும் பைக் கில்(bike) சென்றார்கள்!!
பைக் "அழகுசுந்தர் நடத்தும் கவிதை போட்டி"
என்ற இடத்தில் நின்றது!
"டேய்!! என்னடா இங்க கூட்டுவந்திருக்க!"
என்று மீனா ஆச்சியப்பட்டாள்!
"இல்லடி,ரொம்ப நாளா சினிமால பாட்டெழுதனும்னு ஆச,ஆனால் வாய்ப்புதான
கிடைக்கல.அதான் இதுலே எதாச்சு டிரை பண்ணா அப்படியே சினிமா போலாம்ல"
என்று மதன் தான் மூடிவைத்த ஆசையை சொன்னான்"
"இவ்லோ நாளா கூட தான்டா இருந்த ,எங்கிட்ட
ஒரு வார்த்தையு சொல்லல" மீனா கேட்டாள்!
"வாய்ப்பு வரல அதான் சொல்லல"மதன்
சொன்னான்
"டேய்!சொன்னா கேலு வேண்டாம் வா போய்யிலாம்.எப்படியும் நீ மொக்கையா தான்
கவிதை எழுதுவ அசிங்க பட வேண்டாம்
சொன்ன கேலு! வா போலாம்" என்று மீனா அவனை கேலியாக கேட்டுக்கொண்டாள்!!
"இரன்டி !வந்துடோம் கேட்டு போயிடலாம்"
மதன் சொல்ல இருவரும் உள்ளே நடந்தார்கள்!
அங்கே ஒருவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டான் !இதில் எப்படி பங்கேற்பது என்று!
அவன் "இதில் பங்கேற்க முன்னமே எழுதி போடனும், குறைந்தபட்சம் ஒரு போன் பண்ணியாவது சொல்லனும்" என்று அவன்
சொன்னான்!!
"நான்தான் சொன்னேனேன்,போய்யிலாம்னு!
கேட்டியா எ பேச்ச!"என்று மீனா மீண்டும் கேலியாக சொன்னாள்!
மதனுக்கோ கிடைத்த வாய்ப்பும் நழுவியதே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்தது!
இனிதான், மீனாவுக்கு தொல்லை ஆரம்பித்தது!
வேலை நடுவே வெட்டியாய் இருக்கும்
நேரமெல்லாம் கவிதை சொல்லியே வெறுப்பேறுவான் மதன்!
ஒன்றா!|இரண்டா!! கிட்டதக்க ஒரு வாரத்தில்
குறைந்தபட்சம் 65 கவிதையாவது சொல்லிருப்பான் மீனாவிடம்!!
ஒன்று என்றால் சகித்திருப்பாள்!
65என்றால் யாருக்குத்தான் முடியும்!!!
இருந்தும் அவள் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒவ்வொரு பதில் யோசித்து வைத்திருப்பாள் அதை சொல்லி வாய்யடக்க!!
உதராணம்"இந்த கவிதை மொக்கையா இருக்கு",
"இந்த இதுக்கு அதுவே பரவாயில்ல"!
என்று சொல்லியே வாய் அடைப்பாள்!
இருவரும் ஒருநாள் முழுவதும் வெளியில்
சுற்ற முடிவெடுத்தார்கள்!!
விடுவான மதன்!!ஆரம்பித்தான்!
"முட்களும் தன்னை கொன்றுவிட வழிபார்க்கும்
நீ அதை தொடாமல் தாண்டி போய்விட்டாள்"!!
என்றவன் தான்!!
அய்யோ!ஆரம்பிச்சுடியா!!அப்போ நான் முல்லுல குத்துனா பரவாயில்லியா? என்று மீனா கேட்டாள்!
அதக்கு!நா முல்லு ட்ட தான் பதில் கேக்கனும்!
என்று இவன் கேலியாக சொல்ல!
அந்த நாள் மாலை நேரம் ,
இருவரும் கடைசியாக பீச்சிக்கு சென்று அப்படியே வீடு திரும்பிடலாம் என்று முடிவெடுத்தார்கள்!!
கடல் அலையில் ஏதோ காதலர்கள் போல்
இருவரும் கால் நனைத்து நின்று பேசிக்
கொண்டே இருந்தார்கள்!!
ஒரு பெரிய அலை வந்து அடித்த கால்களில்
நிறைய கால்கள் கீழே விழுந்தன!
அதில் மீனாவும் ஒன்று!
அலையில் விழுந்த மீனாவை மதன்
எழுப்பி விடும்போது ,அவனின் கை
தெரியாமல் மீனா வின் மார்பில் பட்டது!
இவனோ கூச்சம் கொண்டு "மன்னிச்சுரு!தெரியாம தான் பட்டுது"என்றான்!
அவளோ தயக்கம் கொண்டு
"வீட்டுக்கு போலாமா!" என்றாள்
வீடு செல்லும் நடுவே மீனாவின் ஆடை காய்ந்தது காற்றில்!
இருவரும் ஏதோ மூன்றாவது மனிதர்போல்
விடை கொண்டார்கள்!!
ஆபீஸ்ஸில் வழக்கத்துக்கு மாறாக இவன் பேச்சில் அச்சமும்,அவள் பேச்சில் தயக்கமும்
தெரிந்தது!அந்த நாள் முழுதும் இவன் கவிதை
சொல்லவே இல்லை அவளிடம்!
இது நீடித்துக் கொண்டே இருந்தது நீண்ட நாளாய்!!
அந்த பீச்சில் நடந்தது நல்லதோ,கெட்டதோ
தெரியவில்லை!
ஆனால் மதனுக்கும்,மீனாவுக்கும் நல்லதாகவே
பட்டது!!
இருவரின் பார்வையின் மாற்றங்கள் தெரிந்தது!
ஓஓ!!!அதே தான்! என்று மதன் முடிவெடுத்தான்!
ஓஓ!!அதுவா?இல்லை நட்பா? என்ற கேள்வி
மீனாவுக்கு ஓடியது!!
மறுநாள் ஆபீஸிஸ் வேலை நடுவே
இருவரும் உரையாட தொடங்கினார்கள்!
இவன் தீடீரென "நான் ஒரு கவிதை சொல்லட்ட"
என்றான்!
அவளோ"அய்யோ!!சரி சொல்லு" என்றாள்.
"தெரியாத பாகங்கள் என்ன
தவம் செய்ததோ??
எனக்குள் வாராத காதலை
வரவழைத்து சென்றதே!!!"என்றான் மதன்.
என்ன?எதய்யோ indirecta சொல்ர மாறி இருக்கு" என்றாள் மீனா!
"அய்யோ!செம நடிப்பு!இதவிட directa யாராலையும் சொல்லிமுடியாது" என்றான் மதன்!!
"ஓய்!லவ்வா??அடிவாங்குவா!!"என்றாள் மீனா!
அப்போ உனக்கு எதும் தோணல! என்று கேட்டான் மதன்!
எதுமே தோணலபா! என்றாள் மீனா!
"அப்போ,ஏன் இவ்லோ நாளா ஏதோ ஒருமாறி பேசுன??ஏதோ தயக்கமா?? என்றான் மதன்!
அது??ஹெ ஆமா!ஒரு பொண்ண அங்க தொட்டா மறுபடியும் எப்படி அதக்குள்ளே
ஜாலியா பேசி முடியும்?? என்றாள் மீனா!!
நான் நம்பிட்டேன்!என்றான் மதன்!
ஓய்!!போ நான் வேல பண்ணனும்! என்றுஏதோ தன் வாயில் இருந்து உண்மை கசிந்து விடுமோ என்று அஞ்சி அவனை விரட்டினாள்!!
சரி !!லவ்வர்ஸ் ஆயிட்டோம்! நாளைக்கு எங்க
போலாம்! என்று கேலியாக கேட்டான் மதன்!
அய்யோ!!ராமா!!!அடிவாங்க போற நீ!
ஒலுங்க போடா!என்றாள் மீனா தயக்கமான சிரிப்புடன்!!
மீண்டும் ஞாயிறு அன்று தன் பாடலாசியருக்கான
வாய்ப்பு கிடைக்குமா என்று அலைந்தான் மீனாவுடன்!
கிடைத்த பாடில்லை!ஆனால் இருவருக்குள் இருந்த காதல் பட்டென்று வளர்ந்தது!!
பயணத்தின் நடுவே மீனா மதனை"உன் அம்மா,அப்பா லாம் எங்க டா"என்றாள்!
ஊர்ல இருக்காங்க. ஏன்?கல்யாண தேதிக்கா என்று கேலிசெய்தான் மதன்!
நீ திருந்தவே மாட்ட போடா!என்றாள் மீனா.
அடுத்த நாள் ,முகத்தில் புது சந்தோஷத்துடன்
பறந்து வந்தான் மதன் ஆபீஸ்சுக்கு!
ஆனால் அதை பார்க்க அங்கே
மீனா தான் வரவில்லை!
என்னாவாயிற்று,ஏன் வரவில்லை என்ற கேள்வியை அங்கிருந்த எல்லோரிடமும் கேட்டான் மதன்!
பதில் தான் கிடைக்கவில்லை!!
வீடு சென்று பார்ப்போமென விரைந்தான்!
வீடு சற்று பூட்டியே இருந்தது!
பக்கத்து வீட்டிடம் விசாரித்தான்!
மீண்டும் பதில் தான் கிடைக்கவில்லை!!
பிடித்தவர்கள் பிரிந்துபோன வலியை விட
பிடித்தவர்கள் சொல்லாமல் போகும்போது
தான் வலி எல்லை மிகும்!!
அவள் எங்கு போனாளோ,அன்றிருந்து இன்றுவரை காலம் மற்றும் நிற்கவேயில்லை!!
கடந்து ஒரு மாதத்தில் நின்றது!
இவன் தன் மீனாவையும்,தன் பாடலாசியருக்குகான தேடலையும் தேடியே
நொந்து போனான்!
தீடிரென எதிரே வந்த கார் இவன் பைக் கில் மோதவந்திருக்கும்!
சட்டென்று கார் தன் steering ஐ மோதாமல் இருக்க திருப்பிய போது கவிழ்ந்ததுதான்,
சுற்றி சுற்றி எங்கோ போய் விழுந்தது!
மதன் காரில் அடிபடாமல் இருக்கு பைக்கை திருப்பிய போது இவன் தடுமாற்றம் அடைந்து
கீழே உரசிக்கொண்டே எங்கோ போய் விழுந்தான்!
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலரிஅடித்து
ஓடி வந்தார்கள்!
மதன் கண்விழித்து பார்த்தபோது மருத்துவமனையில் தன் அம்மா அருகில் இருப்பதை கண்டுகொண்டான்!
சரியாகி இவன் மீண்டும் பழைய நிலை அடைய
ஒரு மாதம் ஆனது!!
தன் அம்மா,அப்பா வை மீண்டும் ஊருக்கு அனுப்பி வைத்து,தன் வேலை,தன் மீனா,தன் தேடலை தொடந்து கொண்டே போனான்!
யார் செய்த புன்னியமோ?
ஒரு வேலை இவன் விஷயத்தில் கடவுள் கண்
திறந்தாரோ? தெரியவில்லை எனக்கு!
ஆனால்,இவன் தேடல் வீண்போகவில்லை!
ஒரு தயாரிப்பாளர் இவனுக்கு வாய்ப்பு கொடுத்தார்!
பாடலும் ஒரு வழி முடிந்துவிட்டது!
உலகம் இவனை ஒரு பாடலாசியராக கருதியது!
இவன் எழுதிய பாடல் தான் ஊரெங்கும்
ஒலிபரபப்பு!!
ஒருநாள் சாலையோரம் காலை6:00 மணி அளவில் ஜாக்கிங் செய்து ஒரு டீகடை அருகே சற்றென்று எதையோ பார்த்து நின்றான்!
பார்த்து நின்றது மட்டும் இல்லாமல் கண்ணீரும் கூடவே வடிந்ததன!
டீகடை எதிரே இருந்த இடிந்த சுவரில் கடந்த இருமாதமாக ஒட்டி இருக்கும் போல போஸ்டர்!
இன்று மாடு கண்ணுக்கு தெரிந்ததுபோல்!
மேய்ந்துகொண்டுஇருந்தன!
நின்றுகொண்டே இருந்த இடத்தில் தன் வேலையில் நண்பனாகி கொண்ட ஒருவன்
போன் அடித்தான்!
எடுத்தவன் சோகத்தோடு"ம்ம்"என்றான்!
"மதனு,என்ன மன்னிச்சிர்டா!இப்ப தான் எனக்கே விஷயம் தெரிஞ்ச்சு!
மீனாக்கு கல்யாணமாகி 3மாசமாயிருச்சான்!
யாருக்குந் தெரியாம அவள ஊருக்கு கூட்டி போய் கல்யாணம் பண்ணி வச்சாங்கலாம்!
கல்யாணம் முடிஞ்சு இங்க வந்து மாப்பிள வீட்டுல இருந்தாலாம்!
ஆனால் ,2 மாசத்துக்கு முன்னாடி மீனாவு,அவ ஹஸ்பண்டும்(husband) வெளிய கார்ல போம்போது ஏதோ ஒரு பைக் காரன் வந்து மோத வந்து இவள வந்த கார் கவுந்துருச்சாம்!
ஹாஸ்பட்டுல(hospital) ரொம்ப சீரீயஸ்யா இருந்தாலாம் மீனா!ஆனால் காப்பாத்த முடியலியாம்!
அவ ஹஸ்பண் மட்டும் 1மாசம் பெட்ரேஸ்ட்(bed rest)ல இருந்து இப்ப பழைய படி இருக்காராம் டா!அதான் உங்கிட்ட சொல்லாம்னு போன் பண்ணேன்டா!
கேட்டுக் கொண்டே இருந்த மதன் எதுவும் பதில்
சொல்லாமல் போனை சட்டையில் வைத்தான்!
கண்ணீர் வடிய வடிய நின்ற இடத்தில் புலம்பிக் கொண்டே இருந்தான்!
"நான் தான் அவள கொன்னுட்டேன்" என்ற சொல்லிக்கொண்டே இருந்தான்!
டீகடை எதிரே இருந்த மீனாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்துக்கொண்டே இருக்க,
மாடு மீனா என்ற எழுத்தை தின்று விழுங்கி மீனா படத்திற்க்கு வந்தது!
அந்த டீகடை முன் இவன் நொந்துபோய் நிற்க
அந்த டீகடையில் இவன் எழுதிய ஒரு சோகபாடல் ஒலிபரப்பானது,
"
கண்ணுக்குத் தெரிந்த காற்றே
நீ காணாமல் போன சேதி என்ன?
காதல் சொன்ன காற்றே
நீ கதவோரம் வந்து அழைத்தால் என்ன?
இதயம் மட்டும் இங்கே
காற்றின்றி வாழ்வதா?
குயில்கள் கூவும் பாடல்
செவிகளில்லா காட்டுக்கா?
என் மூச்சுக்காற்றில் முகவரியை
சேர்த்து வைத்து அனுப்புகிறேன்!
தொலைந்து போன பொன்காற்றே
நீ படித்துவிட்டால் பதிலனுப்பு!!
என் முகவரிக்குள் என்தவிப்புகளை
நீ பார்க்கவேண்டி அனுப்புகிறேன்!
நீதவித்திருந்தால் உன் தவிப்புகளை
எனக்காய் காற்றில் பதிலனுப்பு!
(கண்ணுக்குத் தெரிந்த)
அடிக்கடி மனமும் கருகுதடி,
நீ விலகிப்போராய் என்றுஅர்த்தமா?
அடிக்கடி விழியும் உருகுதடி
நீ வரமாட்டாய் என்று அர்த்தமா?
இதயம் எரியும் வாசனைதான்
அங்கே உனக்கு வரவில்லையா?
இருக்கும் உயிரும் வேகுவதை
அணுக்கள் உனக்கு சொல்லலையா?
(கண்ணுக்குத் தெரிந்த)!"
மாடு மீனாவின் போஸ்டரை தின்று விழுங்கி
வேறு போஸ்டரை பார்த்தது!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro