கண்ணுக்கு கண்ணீர்,நெஞ்சுக்கு பாரம்!
பாவம்! இவள் எந்த ஊர்க்காரியோ? ஆனால்
இவள் கிராமத்தாள் என்று அவளை சுற்றி இருந்த
கிழிந்த போன சாக்கு! வானத்தில் அங்கங்கே தெரியும் விண்மீன் போல் அந்த ஓட்டைப்போட்ட கூடை! அது பசிக்கு கூவுதா? இல்லை விளையாட அழைக்குதா? பாவம் மனிதர்களெல்லாம் செவிடர்கள் என்று தன் விழியால் பார்க்கும் கோழிகள்,அதன் குஞ்சுகள்! காத்து போன சைக்கிளை தள்ளிக்காண்டே போகும் அவள் அப்பா! இது எல்லாமே அவளை பற்றி சொன்னாலும், சொல்ல வேண்டிய விஷயத்தை மறந்து விட்டது நேரம்!
♦
மனிதர்கள் செவியிரண்டு கொண்டவர்கள்!
ஆனால், அது நல்லதை கேட்கவா? தீயதை கேட்கவா?
என்பதை மட்டும் மறந்துவிடுவார்கள் சில சமயம்!
மனிதர்கள் கையிரண்டு கொண்டவர்கள்!
இரு கையாலும் உதவி செய்யவா? அல்லது
ஒரு கையால் உதவி செய்வது போல் நடித்து மறுகையால் பிடிங்கிடவா?
இதுவும் அப்படிதான் சில சமயம் மறந்திடுவோம்!
ஆனால், அவள் அப்படி இல்லை ! அவள் தான் அதே கிராமத்தாள்! அவள் பெயர் ராஜேஸ்வரி! பேரு மட்டும் தான் கம்பீரம்! மனதும், உருவமும் இலகியது!
செவியிரண்டு கொண்டவள்!நல்லது வந்தால் கேட்பாள்! தீயது வந்தால் மூடுவாள்!
கையிரண்டு கொண்டவள்! ஆனால் ஒரு கைதான் வேலை செய்யும்! பிறவியில் இருந்தே மறு கை இருந்த இடத்திலே இருந்தது! ஊனம்! பாவம்!
♦
ஊனம் என்பது குறையா? நிறையா?
ஒரு கை இல்லையே என்று நினைப்பவர்களுக்கு
இந்த ஊனம் குறை போல தெரியும்!
ஆனால், அவள் என்ன சொன்னால் தெரியுமா??
கடவுள் இரு கை கொடுத்தார்! நல்லதுக்கும் தீயதுக்கும் நீங்கள் அதை உபயோகித்தீர்கள்!
ஆனால் அவர் புரிந்து கொண்டார்! கனவிலும் கூட இவள் தீங்கு நினைக்காதவள் என்று!
அதுதான் இரு கை கொடுத்து கெடுப்பதை விட,
நல்லதுக்கு மட்டும் பயன்தரும் ஒரு கை கொடுத்தார்!
எப்போதும் ஊனம் நிறை தான் அவளுக்கு!!
♦
இருந்தாலும் அவ்வப்போது மனம் ஓரம் சென்று அழுதுவிடும்! சுலபமாய் செய்யும் வேலைகள் அவளுக்கு கடினமாக தெரியும் போது!
பக்கத்து வீட்டில் தன் அம்மா சண்டை இட்டால்
இவள் தான் பாவம்! பேச்சுவாக்கில் பக்கத்துவீட்டுக்காரி என்ன சொல்லுவாள் என்று நினைக்கிறீர்கள்??
"ஊனக்காரிய பெத்தவ ஊரெல்ல சண்ட இழுக்குறா"!
அவள் மனம் இறுகும் என்றா நினைக்கிறீர்கள்??
அதோ உருகியதே!! கண்ணீராக!! துளி துளியாய் அந்த ஜீவன் கரைகிறதே! அதை யார் அறிந்தார்??
♦
அன்பு காட்டுவதில் அம்மாவை மிஞ்ச முடியுமா!
"செல்லத்தாயி அன்பு செல்லா காசா போகாது"
தன் மனைவியை பெருமைப் படுத்திச் சொல்வார் சுப்பையா அவ்வப்போது!!
என்று பிறந்தாளோ ராஜேஸ்வரி,அன்று வந்த நோய்தான்!அந்த நோய்க்கு மருந்தாக கடவுள் உயிரை தான் எடுத்தார் அவள் அம்மாவுக்கு!
♦
முடிந்த வரை தன் மகளை படிக்க வைத்த சுப்பையா!
ஒருநாள் சோந்து போனார்! பாவம் அவள் ஒன்பதாம் வகுப்பின் பாதியோடு தன் பள்ளிகூட கனவை மூடினாள்! இளமையிலே நமக்கு கிடைத்த ஒரே சுகம் பள்ளிக்கூடம் தான்! இருந்த ஒரே சுகமும் பறிபோனது
ராஜேஸ்வரிக்கு!
மனைவி இறந்த வீட்டில் காற்று கூட சிரிக்காது என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டே நகர்ந்தார் சுப்பையா!
♦
செல்லத்தாயி!! சுப்பையா ஒரே சுகம்!! அவர் அடிக்கடி
தன் மனைவியை செல்லத் தாயி ! என்று தான் அழைப்பார்! செல்லத்தாயிக்கு இருந்த ஒரே ஒரு புன்னகை சுப்பையா! இருவரும் ஒரு காலத்தில் பழைய காதல் ஜோடிகள்! என்றுமே அவரவர் மனதுக்குள் எப்பொழுதும் அவர்கள் புதிய
காதலர்கள்! தன் ஊரை விட்டு, தன் நண்பர்களை விட்டு , தன் உறவை விட்டு ,இன்னொரு
ஜென்மத்தில் கண்டிப்பாக சந்திக்கலாம் என்று ஆடுகளுக்கும்,மாடுகளுக்கும்,கோழிகளுக்கும் நன்றி தெரிவித்து கண்ணீரோடு ஓடி வரும் பாதையிலே, நின்று தங்கள் காதலுக்கு பாய்விரித்த புளிமரத்திற்க்கு முத்தமிட்டு ஊரு தாண்டினார்கள் ஒரு மனதோடு!!
♦
காதல் மட்டும் சில சமயம் கடவுள் தராத நம்பிக்கையை கொடுத்து விடும்! அப்படி வந்த நம்பிக்கை தான், இவர்கள் ஓடி வந்தது! என்ன செய்வது என்று யோசி்த்தே வேறுஒரு கிராமத்திற்க்கு வந்து சேர்ந்தார்கள்! அங்கு தங்கிய 65 வயது இருக்கும் அந்த கிழவிக்கு!அவள் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டு போனவர்கள் தான் ,அந்த கிழவியும், கணவனை இழந்து ,இருக்கும் நிலத்திலும் உழுது வர சக்தியில்லாமும் இருக்கும் கதையினை சொல்ல,இவர்களும் ஊரு விட்டு ஓடி வந்த முதல் புளிய மரத்திற்க்கு முத்தமிட்டது வரை சொல்லி முடிக்க , தன் கண்ணீரோடு கிழவி
" ஐயா,மகராசா! இன்னைக்கோ நாளைக்கோ எம்பொழப்பு! ரெண்டு பேரு லெச்சணமா வேற இருக்கிங்க! ஒத்தையில கஷ்டபடுறே! நீங்க இங்கே தங்கிடுங்க " என்று சொல்லி முடித்தாள் கிழவி!
ஊர்காரர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள்!
♦
இன்னும் தொடரும்!!♪
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro