சாரலாய் தீண்டினாய் அன்பே- முன்னோட்டம்
"ஹே பிரவுனி! ஓவரா பேசாத ஓகே! பண்ணுறது ஃபுல்லா பித்தலாட்டம். இதுல உனக்கு பெருமை வேற" என்றான் சூரியா அலட்சியமாக.
"ஹலோ யாருடா பிரவுனி? நானா? நீ இப்பிடி மார்ஸ்மாலோ மாதிரி வெள்ளை வெளேர்னு இருந்தா உன் பக்கத்துல தமன்னா வந்து நின்னா கூட பிரவுனா தான் தெரியும். அப்பிடியே இவங்க வீட்டுல புதைச்சு வச்சிருந்த புதையலை நான் திருடிட்டேன் பாரு, சார் என் மேல கோவப்படுறதுக்கு. நாலணா நெல்லிக்காய்க்கு இவ்ளோ பில்டப்பா?" என்று சந்தியாவும் சளைக்காமல் அவனுக்கு பதிலளித்தாள்.
அவளது "நாலணா' என்ற வார்த்தையில் குழம்பியவன் "ஏய் ஒன் செகண்ட்! வாட் இஸ் நாலணா?" என்று புரியாமல் விழிக்க அவனை இடுப்பில் கை இரு கைகளையும் ஊன்றியபடி முறைத்தாள் சந்தியா.
பின்னர் நக்கலாக உச்சுக் கொட்டியவள் "சாருக்கு நாலணானா என்னனு தெரியாது போல! என்ன பண்ணுறது சார்! உங்க டீலிங் எல்லாம் டாலர்ல இருக்கும். உங்களுக்குப் போய் நாலணா, எட்டணாலாம் தெரியுமா? நீ வா சுமிக்கா, இந்த மார்ஸ்மாலோ கிட்ட பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ணக் கூடாது" என்றுச் சொன்னபடி அவள் அருகில் நின்ற சுமித்ராவை அழைத்துக் கொண்டு வேகமாக படிக்கட்டிகளில் ஓடி மறைந்தாள்.
அவள் போகும் போதே "ஹேய் பிரவுனி! பிளீஸ் நாலணான்னா என்னனு சொல்லிட்டுப் போ! எனக்கு கியூரிசியாட்டி தாங்காது" என்று சூரியா கத்த அவளோ காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே சென்றுவிட்டாள்.
********
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
இங்க கதை போடாத பிள்ளை ஏன் டீசர் மட்டும் போடுதுனு உங்களுக்குத் தோணலாம்... என்ன பண்ணுறது மக்களே! நான் பிரதிலிபில போடுற கதைய சிலர் படிச்சிட்டு வாட்டில அதே கதைய பட்டி டிங்கரிங் பண்ணி தன்னோட கதைனு சொல்லி போஸ்ட் பண்ணுறதா எனக்கு ஒரு நியூஸ் வந்துச்சு... அதான் டீசர் மட்டும் போடுறேன்.. எப்பிடியும் காப்பியடிக்கிறவங்க அடிக்க தான் செய்வாங்க... அட்லீஸ்ட் என்னை பாத்து தான் அவங்க காப்பி அடிக்காங்கனு உங்களுக்குத் தெரியட்டுமேனு தான் டீசர் ஷேர் பண்ணுறேன்😜😉😎
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro