
சேர்ந்தே சொர்கம் வரை -21
கார்த்திக் கோபத்தில் இருக்க பல்லவி உள்ளே வந்தாள்.
பல்லவி :ஏங்க சாப்பிட வாங்க
கார்த்திக் :ஒண்ணும் வேண்டாம். உங்க கஷ்டத்துக்கு காரணம் நான்தானே
பல்லவி :இங்க பாருங்க அப்படியெல்லாம் இல்ல நீங்க திரும்ப திரும்ப நான் ஏன் கஷ்டத்துல இருக்கேன்னு கேள்வி கேட்டுட்டே இருந்தீங்க நான் விழையாட்டுக்கு சொன்னேன் நீங்காத என்னோட கஷ்டத்துக்கு காரணம்னு நீங்க அதை இவ்ளோ பெருசா எடுத்துப்பீங்கன்னு நான் எதிர்பாக்கல நான் வேணும்னா மன்னிப்பு கேக்குறேன் இப்போ சாப்பிட வாங்க.
கார்த்திக் :பொய் சொல்றிங்க நீங்க உங்க கஷ்டத்துக்கு காரணம் நான்தான்னு சொல்றப்போ உங்க கண்ணுல வலி இருந்திச்சி உண்மை இருந்திச்சி ஆனா இப்போ என்ன சமாதான படுத்த நீங்க சொல்றது எல்லாமே பொய் அதை உங்க கண்ணே காட்டிக்குடுக்குது
பல்லவி :இல்லங்க
கார்த்திக் :நான் அடிக்கடி சொல்றேன் பல்லவி உங்களுக்கு பொய் சொல்ல வராதுன்னு உங்களை கஷ்ட படுத்தின நான் உங்களை விட்டு தள்ளியே இருக்கேன் உங்க கஷ்டமாவது குறையும் என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம்.
பல்லவி :சரி எவ்ளோ வேணா தள்ளி இருங்க இப்போ வந்து சாப்பிடுங்க
கார்த்திக் :ஒண்ணும் வேண்டாம் எனக்கு ஸ்டேஷன்ல வேலை இருக்கு.
அவனுடைய கைகளை தன்னுடைய தைரியத்தை வரவழைத்துகொண்டு பிடித்தாள் பல்லவி. கார்த்திக் பல்லவியை பார்த்தான்.
பல்லவி :சரி வந்து சாப்பிடுங்க
கார்த்திக் :ஒரு வேளை சப்பிடலன்னா செத்து போய்ட மாட்டேன்.உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா இதுக்குத்தான் பாட்டி கிட்ட முதலே சொன்னேன் கல்யாணம் வேண்டாம்னு எங்க கேட்டாங்க. இப்போ தேவை இல்லாதவங்களுக்கு தேவை இல்லாம நான் பிரச்னையா இருக்கேனாம்
நீ ஒண்ணும் என்மேல அக்கறை காட்ட தேவை இல்ல புரிஞ்சுதா (அவளுடைய கைகளை உதறி விட்டு சென்றான்)
பல்லவி (m.v):நான் என்ன தப்பு பண்ணேன் இவர்தானே சொன்னார் நான் ஆமான்னு மட்டும்தானே சொன்னேன். இவ்ளோ கோபம் இவருக்கு ஆகாது நான் ஏன் அவர் பேசுனப்போ அமைதியா இருந்தேன் எதிர்த்து பேசி இருக்கலாம் இல்ல அப்போ எல்லாம் ஒண்ணும் பண்ணாம இப்போ அழுதுட்டு இருக்கேன் நான் ஒரு முட்டாள்.
இப்படி பலவாறாக யோசித்து கொண்டிருந்தவளின் யோசனை அவன் சொன்ன ஒரு வார்த்தையில் வந்து நின்றது தன்னை தேவையில்லாதவள் என்று கூறியதும் கட்டாயத்தினால்தான் தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறியதும் அவளை பாடாய் படுத்தியது.அவள் மனதின் வேதனையை அந்த கண்ணீர் துளிகள் மட்டுமே அறியும்.
பல்லவி (m.v):அவர் சொன்னது உண்மைதான் நான் தேவையில்லாதவள்தான் நான் பழகிக்கணும் எல்லாத்துக்கும் 😣😣😣😣😣😣😣😣😣😣
(me:கோபத்துல கண்டதையும் பேசுறதுக்கு முன்னாடி ஒருமுறையாவது யோசிக்கணும் இல்லனா நம்ம நேசிக்கிறவங்க மனசை நம்ம வார்த்தைகளே குத்தி கிழிச்சுடும் )
பாட்டி பலமுறை அழைத்தும் பல்லவி சாப்பிட வரவில்லை பல்லவி காலையில் சாப்பிட்டதோடு சரி மதியம் தன்னுடைய உணவை மாணவன் ஒருவனுக்கு அளித்து விட்டாள் இரவு உணவு உண்ணும் மனநிலையில் அவள் இல்லை
இரவு கார்த்திக்கிற்கு அழைத்தாள் ஆனால் அவன் அழைப்பை ஏற்கவில்லை.
பல்லவி காலையில் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள் கார்த்திக் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தான் பல்லவியின் முகத்தை பார்க்காமல் நேராக ரூமிற்குள் சென்று விட்டான்.
பல்லவிக்கு அசதி மனஉளைச்சல் சேர்த்து தலை சுற்ற ஆரம்பித்தது. அவள் தடுமாறி பற்றுதலுக்கு நாற்காலியை பிடித்தாள்
பாட்டி :அம்மாடி பல்லவி என்னமா ஆச்சு
பாட்டியின் குரல் கேட்டு வெளியே வந்தவன் அவளின் நிலையை கண்டு துடித்துப்போனான்.
கார்த்திக் :பல்லவி என்ன ஆச்சு
அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்தவன் அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.
பாட்டி :நேத்து ராத்திரி சாப்பிடல சாப்பிட கூப்டா இவன் வந்த பிறகு சாப்பிடறேனு சாப்பிடவே இல்ல இவன் வருவான்னு காலையில வரை முழிச்சிட்டே இருந்த அதான் இப்படி ஆகுது. இதை சாப்பிடுமா
என்று காலை உணவை கொடுத்தார்
பல்லவி :சரி பாட்டி
பாட்டியை யாரோ வெளியே அழைக்க பாட்டி வெளியே சென்று விட்டார். பாட்டி வெளியே சென்றதும் பல்லவி சாப்பாடு தட்டை ஓரமாக வைத்துவிட்டு படுத்து விட்டாள்
கார்த்திக் :பல்லவி சாப்பிடு
பல்லவி எதுவும் பேசவில்லை கார்த்திக் மீண்டும் மீண்டும் சாப்பிட சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தான்
பல்லவி :நீங்க சாப்பிட்டீங்களா முதலில் நீங்க சாப்பிடுங்க பிறகு நான் சாப்பிடுறேன்
கார்த்திக் இன்னொரு தட்டில் சாப்பாடு எடுத்து வந்தவன் பல்லவியிடம் கொடுத்தான்
பல்லவி :நீங்க சாப்பிடுங்க முதலில்
கார்த்திக் அமைதியாக சாப்பிட்டான் நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க.
பல்லவி :வேண்டாம் எனக்கு பசிக்கல
கார்த்திக் :வாட்
பல்லவி :எனக்கு பசிக்கல நான் ஸ்கூலுக்கு போறேன்
கார்த்திக் :சாப்பிட்டு போ
பல்லவி தடுமாறி எழ அவளின் கைகளை பிடித்தவன் கைகளை பார்த்தாள் பல்லவி
பல்லவி :எதுக்குங்க என்மேல அக்கறை காட்றிங்க நான் சாப்பிட்டா என்ன சாப்பிடலன்னா உங்களுக்கு என்ன.எனக்கும் என்மேல அக்கறை காட்டுவது பிடிக்காது அப்புறம் தேவை இல்லாதவங்களுக்காக நீங்க கவலை பட வேண்டாம்
அப்பொழுது பாட்டி வர பல்லவி சாப்பிட ஆரம்பித்தாள் பாட்டி சென்றதும் பல்லவி கார்த்திக்கிடம் பேச ஆரம்பித்தாள்
பல்லவி :எனக்கு உங்க மேல நிறைய அக்கறை இருக்கு அதனால நீங்க கோபத்துல சாப்பிடாம இருந்தால் நான் சாப்பிடாம இருப்பேன் ஏனெனில் எனக்கு உங்க மேல அக்கறை இருக்கு அதை நான் நிரூபிக்க வேண்டாம் பட் என்மேல அன்பில்லைனு நீங்க நிரூபிங்க மிஸ்டர் கார்த்திக்
இம்முறை பல்லவி கேட்ட கேள்விகள் அனைத்தும் கார்த்திகை அசைத்துபார்த்தது
கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை அவன் ஒன்று நினைத்தால் இங்கே இன்னொன்று நடக்கிறது.
பல்லவி (m.v): நேத்து வரைக்கும் நான் யாரு எதுகேட்டாலும் விட்டு கொடுத்துடுவேன் ஆனா இனி யாருக்காகவும் எதையும் யாரையும் விட்டு கொடுக்க மாட்டேன் (me:நீ சத்தமா பேசுறேன்னு மனசுக்குள்ள பேசுறம்மா )
பல்லவி ஸ்கூலிற்கு சென்றுவிட்டாள் கார்த்திக்தான் பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டது.
பல்லவி ஸ்கூலிற்கு சென்றாள் அங்கே அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்திருந்தது
me:என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔ஏதா இருந்தாலும் நல்லது நடந்தா சரி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro