
சேர்ந்தே சொர்கம் வரை -19
பாட்டி : அவன் பிறந்த உடனே அவனோட அப்பா இராணுவத்தில் இறந்துட்டார். அவனுக்கு 10 வயசாகும்போது என்னோட பொண்ணும் நோய் வந்து இறந்துட்டா. இவன் பிறந்ததுனாலதான் இவனோட அப்பா இறந்திட்டாருனும் இவனோட ராசி சரி இல்லனும் சொல்லிட்டாங்க சுத்தி இருந்தவங்க.
இதெல்லாம் சின்ன வயசிலேயே அவன் மனசை பாதிச்சிடுச்சி நிறைய அழுவான் அப்போ எல்லாம் அவன் அம்மா சமாதானப்படுத்துவா ஆனா அவளும் போன பிறகு சமாதானப்படுத்த யாரும் என்னோட பையனுக்கு அவனோட தங்கச்சினா உசுரு அவ விதவை ஆனதுக்கு காரணம் கார்த்திக்கோட ராசிதானு அவன் மேல எப்போவும் எரிஞ்சி விழுவான் தன்னோட தங்கச்சி சாவுக்கும் இவனையே காரணம் சொல்லி சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்து அழுது கூட முடிக்காத பிள்ளை முதுகுல சூடு போட்டுட்டான் மா அவன் அழுத அழுகை இருக்கே அதை பார்த்த பிறகும் மனசு கேக்கல அதான் அந்த வீட்டை விட்டு வந்துட்டோம் அப்புறம் கஷ்ட பட்டு பல வீட்ல வேலை பாத்து படிக்க வச்சேன் அவனும் ஹாஸ்டல்ல சேர்ந்தான்.அப்புறம் விஷ்ணு ரெண்டு மூணு பிள்ளைங்க நண்பர்கள் ஆனாங்க லீவுக்கு வருவான் சந்தோசமாதான் போச்சி அப்புறம் அப்புறம்.
பல்லவி :சொல்லுங்க பாட்டி எதையும் மறைக்காதீங்க
பாட்டி :அது அவன் கல்லூரி படிக்கிறப்போ ஏதோ கேம்ப் போறப்போ ஏதோ ஒரு பொண்ணை விரும்பி இருக்கான் ஆனா அதை அந்த பொண்ணுகிட்ட சொல்ல போகும்போது அவளுக்கு அவ குடும்பம் அச்சிடேன்ட் ஆகி இறந்து இந்த பொண்ணும் சுயநினைவில்லாம இருந்திருக்கா இவன் ஹாஸ்பிடல் சேர்த்துட்டு அவ சரியான உடனே சொந்தக்காரங்க வந்த பின்னாடி அவ நல்லா இருக்கானு தெரிஞ்ச பிறகு வந்துட்டான் தான் அளவுக்கு அதிகமா யார் மேலயாவது அன்பு வச்சா அது அவங்களையோ பாதிக்குதுனு இவனே நினைச்சு தள்ளி இருக்கான். எல்லார்கிட்டயும் பேசுறான் எப்பயாவது சிரிக்கிறான் எல்லாத்துக்குமேல ஒதுங்கியே இருக்கான் உன்ன கூட கல்யாணம் பண்ணலைன்னா செத்துப்போய்டுவேன் சொன்ன பிறகுதான் ஒத்து கிட்டான் நீதான்மா அவனை தொலைந்து போன சிரிப்பை திரும்பி கொண்டுவரனும்.
பல்லவி :கண்டிப்பா பாட்டி
பாட்டி :நீ சந்தோசமா இருக்கியாமா
பல்லவி :ரொம்ப சந்தோசமா இருக்கேன்
பாட்டி . எனக்கு ரொம்ப டயர்ட் ஆ இருக்கு நான் தூங்குறேன்
பல்லவி ரூமிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள் நன்றாக அழுதாள் பாட்டிக்காக கல்யாணம் பண்ணிங்களா நானும் தாத்தா சொன்னதுக்காகத்தான் உங்களை கல்யாணம் பண்ணேன் ஆனா அப்போ வேற இப்போ நிலைமை வேற பிகாஸ் i love you karthik.
எனக்கே தெரியலியே நான் எப்போ உங்களை காதலிக்க ஆரம்பிச்சேனு காதலை உணரவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள காதலை விட்டுக்கொடுக்க போறேன். பிறவாயில்ல கார்த்திக் பாதியில வந்தேன் உங்க பாதையை சரி பண்ணிட்டு போறேன். ஒரு வேளை நீங்க காதலிச்ச பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தா உங்க கூட சொர்கம் வர வருவேன். ஆனா என்னோட விதி என்ன எழுத காத்திருக்கோ (me:நான் இன்னும் முடிவு பண்ணல )
கார்த்திக் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தான் ரூமின் கதவை தட்டினான் பல்லவி கதவை திறந்து விட்டு கட்டிலில் படுத்துகொண்டாள் முடிந்தவரை அவன் முகம் பார்க்காமல் இருந்தாள்.
கார்த்திக் :பல்லவி ஆர் யூ ஓகே
பல்லவி :ஹ்ம்ம் (பேசுனாலே அழுதிடுவோமோ அப்டினு ஒரு பயம்)
இரவும் வந்தது பல்லவி கார்த்திகையும் அர்ச்சனாவையும் சேர்த்து வைக்க முடிவு செய்தாள் அதற்கு அர்ச்சனாவுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்றும் காதலன் இருக்கிறானா குடும்பம் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். அவளுடைய எண்ண ஓட்டத்தை பாட்டியின் குரல் கலைத்தது
அம்மாடி பக்கத்து வீட்டு பொண்ணு குழந்தை பெத்து வீட்டுக்கு வந்திருக்கா நீயும் வரியா ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம்
பல்லவி :சரி பாட்டி
பாட்டியும் பல்லவியும் குழந்தையை பார்த்துவிட்டு வரும்போது கிரிஸ்உம் உடன் வந்தான்.
பல்லவிக்கு ரோஜா போல் சிவந்திருந்த குழந்தையும் க்ரிஷின் பேச்சும் மனதை லேசாகியது.
கார்த்திக் அப்போது ஹாலிற்குள் வந்தான்
கிரிஷ் :போலஸ் போலஸ் அநத அகவை அன்னைக்கு மாரி சுத்துங்க
கார்த்திக் :இல்லடா அவங்களுக்கு உடம்பு சரி இல்ல அவங்களை சுத்தினா கஷ்டமா இருக்கும் இல்ல அதான்
கிரிஷ் ;ஓ இங்க கிட்டயும் பேபி இருக்கா
கார்த்திக் :என்ன
கிரிஷ் :எஙக அம்மாக்கும் உடம்பு சரி யிலலைனனு சொன்னாங்க இபபோ பாப்பா ங்க வீட்ல இக்கு அப்ப அக்காக்கும பாப்பா வர போதா
கார்த்திக்கின் பார்வையும் பல்லவியின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து பின் திரும்பி கொண்டது.
கிரிஷ் :சொலங்க
கார்த்திக் :அது அது (அவன் என்ன சொல்லுவான்) வா நம்ம ஷின்சான் பாக்கலாம்
கிரிஷ் :பாக்கலாம்.
பிறகு சிறிது நேரம் அவர்களுடன் விளையாடி விட்டு கிரிஷ் வீட்டிற்கு சென்று விட்டான்.
இரவு உணவு முடித்த பின்னர் இருவரும் உறங்க சென்றனர்.
பல்லவி கிரிஷின் பேச்சை நினைத்து சிரித்து கொண்டிருந்தாள்
கார்த்திக் :என்ன ஆச்சு
பல்லவி :இல்ல கிரிஷ் பேசுனதை நினைச்சு சிரிச்சேன்
கார்த்திக் :குழந்தைங்க அப்டித்தான் மனசில நினைச்சதை அப்டியே சொல்லிடுவாங்க எதையும் யோசிக்க மாட்டாங்க அது குழந்தைகளுக்கே உண்டான அழகு.
பல்லவி(m.v) :என்னாலயும் நான் மனசுல நினைச்சதை சொல்ல முடிஞ்சா நல்லா இருக்கும்
கார்த்திக் :என்ன யோசனை
பல்லவி :ஒண்ணும் இல்ல. குட் நைட் (அவன் அடுத்த கேள்வி கேட்பதற்குள் திரும்பி படுத்துகொண்டாள் )
கார்த்திக்கும் அவளது நடவடிக்கை கவனித்தான் விட்டு பிடிக்கலாம் என்று விட்டுவிட்டான்.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
என்னடா இதெல்லாம் ஒரு ப்ளாஷ் பாக்கானு நீங்க கேக்கலாம். பட் சின்ன வயசுல படற காயம் வாழ்க்கை முழுக்க வலி தரும் அதே நிலைமை தான் கார்த்திக்கும். எனவே குழந்தைங்க கிட்ட விளையாட்டா கூட காயப்படுத்துற மாதிரி பேசாதீங்க. எனக்கும் கதைகளில் பெரிய பிளஷ்பாக் படிக்க பிடிக்காது அதனால நானும் பெருசா எழுதல.
apram intha part epdi irukunu sollunga. Ethavathu question iruntha kelunga. kastama kekathinga.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro