
சேர்ந்தே சொர்கம் வரை-18
விஷ்ணுவிற்கு காயத்ரியிடம் இருந்து அழைப்பு வர அவளுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பல்லவி நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவளை நோக்கி பல்லவியை அங்கேயே நிற்குமாறு சொல்லிவிட்டு கார்த்திக் அருகில் சென்றான்.
கார்த்திக் :நீ எதுக்கு வந்த பல்லவி உன்ன உள்ள தானே இருக்க சொன்ன
பல்லவி :நீங்க சண்டை போடுறதை பார்த்தேன் அதான் என்னால அங்க இருக்க முடியல அதான் இங்க வந்தேன்
கார்த்திக் :ஏன் நீ எல்லாரையும் அடிச்சிருப்பியா
பல்லவி :நான் ஸ்டுடென்ட்ச கூட அடிக்க மாட்டேன் நா எப்படி இவங்கள அடிப்பேன். உங்களுக்கு அடி எதாவது பட்டிச்சா
கார்த்திக் :இல்லை சரி வா உள்ள போலாம்
பல்லவி :ஹ்ம்ம்
அப்பொழுது இன்னொரு குரல் கேட்டது
மாலதி :ஹலோ சார் நான் உங்க கூட ஒரு 5 நிமிஷம்
அப்போது விஷ்ணு வந்தான்.
கார்த்திக் :டேய் மச்சான் பல்லவியை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ நான் இப்போ வறேன். நீங்க போங்க பல்லவி.
பல்லவி :ம்ம்ம் சரி
கார்த்திக் :என்ன பேசணும்
மாலதி :சார் இப்போ நீங்க தான் சார் ட்ரெண்டிங்கில்ல இருக்கீங்க பெரிய ரவுடி யை தைரியமா எதிர்த்து ஜெயிச்சிருக்கீங்க இப்போ கூட ஒரு கும்பலையே வெளுத்து வாங்கிருக்கீங்க சோ நீங்க எங்க சேனல்கு ஒரு இன்டெர்வியூ தரீங்களா
கார்த்திக் :நான் அவ்ளோ பெரிய ஆள் இல்ல நான் கிளம்புறேன்
மாலதி :சார் நீங்க தான் சார் ரியல் ஹீரோ
கார்த்திக் :அப்டியா உண்மைதான் இண்ணைக்கு சோசியல் மீடியா என்னை கொண்டாடும். ஏன்னா நான் என்னோட உயிரை பணயம் வச்சி ஒரு பெரிய ரவுடியை அழிச்சிருக்கேன். இன்னும் ரெண்டு நாள் எல்லார் ஸ்டேடஸ்லயும் நான் இருப்பேன். ஒருவேளை நான் இற
ந்திருந்தா மறத்தமிழன்னு சொல்வாங்க ரெண்டு நாள் கழிச்சு மறக்க பட்ட தமிழன் ஆகிடுவேன். என்னோட குடும்பத்துக்கு நான் ட்ரெண்டிங்கில்ல இருக்குறது முக்கியம் இல்ல உயிரோட இருக்குறது முக்கியம். எனக்கு என்னோட வேலைக்கு உண்மையா இருக்குறது முக்கியம்.
மாலதி :ஆனா இந்த இன்டெர்வியூ பல ய ங்ஸ்ட்டர்க்கு முன் உதாரணமாக இருக்கும்
கார்த்திக் :இது நீங்க யங்ஸ்ட்டர்ஸ்கு பயன்படணும்னு கேக்கல உங்க trp காக கேக்குறீங்க. உங்களுக்கு நாங்க ஹீரோ ஆகணும்னா நாங்க பஞ்சு பஞ்சா போகணும் இல்ல. அதுவரைக்கும் பஞ்சு மூட்ட தூக்குறவங்கள கொண்டாடுவீங்க அப்படிதானே
மாலதி :சார்
கார்த்திக் :இங்க பாருங்க எனக்கு இன்டெர்வியூ கொடுக்க விருப்பம் இல்ல. இப்போ என்னோட மனைவிகூட இருக்கணும் நான் கிளம்புறேன்.
கார்த்திக் சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டான்.
விஷ்ணு :சரி டா மச்சான் நான் கிளம்புறேன் உடம்ப பத்துக்கோமா
பல்லவி :சரி அண்ணா
கார்த்திக் :சரி
பல்லவி :அந்த பொண்ணு என்ன சொன்னா
கார்த்திக் :ஒரு இன்டெர்வியூ கேட்டா நான் இன்டெரெஸ்ட் இல்லனு சொல்லிட்டேன்
பல்லவி :ஹ்ம்ம்
பல்லவி கார்த்திக் இருவரும் மருத்துவரை பார்த்த பிறகு வெளியே வந்தனர் கார்த்திக்கின் சீனியர் ஆஃபீஸர்
வந்துகொண்டிருந்தார். பல்லவி நீங்க அந்த பக்கம் போங்க. அதோ அந்த ஆட்டோல உக்காருங்க நான் அவர்கிட்ட பேசிட்டு வரேன்.
பல்லவி சாலையை பார்த்தாள் பெரிதாக இருந்தது சாலையை கடக்க பல்லவிக்கு பயமாக இருந்தது அதை கார்த்திக்கிடம் சொல்லவும் அவளால் முடியவில்லை (கெத்து போய்டுமாம் )
கார்த்திக் :என்ன பல்லவி
பல்லவி :ஒண்ணும் இல்ல
கார்த்திக் அந்த ஆஃபீசரை பார்த்து நடக்க ஆரம்பித்தான். பல்லவி சாலையை கடக்க பயந்து கொண்டே கடக்க தயாரானாள்.
பல்லவி (m.v):இப்போ தா அந்த சீனியர் வரணுமா நான் வேற பெரிய இவ மாதிரி வந்துட்டேன் இந்த ரோடு வேற ரொம்ப பெருசா இருக்கு ஐயா பயமா இருக்கே சரி முருகா நீதான் என்கூட இருக்கணும் சரி இப்போ யாரும் இல்ல கிராஸ் பண்ணலாம்.
பல்லவி சாலையை கடக்க முற்படும்போது அவளின் கைகளை யாரோ பிடிப்பது போல் இருந்தது யாரென்று பார்த்தாள் கார்த்திக்தான். அவளால் நம்பவே முடியவில்லை. அவனது கைகளை பிடித்துக்கொண்டே சாலையை கடந்தாள் தன்னுடைய கைகள் அவனுடைய கைகளுக்குள் இருந்தது மட்டுமே அவள் பார்வையில் இருந்தது அவ்வளவு பெரிய சாலை வண்டிகள் அதன் வேகம் எதுவும் தெரியவில்லை. இருவரும் ஆட்டோவில் அமர்ந்தார்கள்.
பல்லவி :நீங்க உங்க சீனியர் கிட்ட பேசலியா
கார்த்திக் ;இல்ல
பல்லவி :ஏன்
கார்த்திக் :உன்ன தனியா விட மனசு வரலை அதான்
பல்லவிக்கு உலகத்தையே கையில் கொடுத்தது போல் இருந்தது.
பல்லவி அசதியில் உறங்கிவிட்டாள் சிறிது நேரத்தில் கார்த்திக்கின் தோழின் மீது சாய்ந்து கொண்டாள் உறக்கத்தில்
கார்த்திக் அவளை கீழே விழாமல் ஆதரவாக பிடித்துக்கொண்டான். (நம்ம ரோடு அந்த அளவுக்கு அழகு)
வீடு வந்ததும் எழுப்பி விட்டான் எழுந்தவள் அவனின் மீதே சாய்ந்து உறங்கியதை உணர்ந்தாள் அவளுக்கு என்ன செய்ய வேண்டும் எனபதே மறந்து உறைந்து போனாள்.
கார்த்திக் :ஹோய் வீட்டுக்கு வரலியா
பல்லவி :இ இ இதோ வரேன்
கார்த்திக் :அண்ணா தேங்க்ஸ் அண்ணா இந்தாங்க பணம்
ஆட்டோ டிரைவர் :எதுக்கு தம்பி நன்றி எல்லாம் ரவுடியா இருந்த நான் இண்னைக்கு கௌரமா இருக்கேன்னா அதுக்கு காரணமே நீங்க தான் தம்பி. அம்மாடி இவரு மாதிரி புருஷன் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும். சரி தம்பி நான் கிளம்புறேன்
பல்லவி (m.v):எனக்கே தெரியுமே வெளியே விறைப்பா இருந்தாலும் உள்ள ரொம்ப ஈரம் இருக்கு ஒரு குழந்தை மனசு இருக்கு.
கார்த்திக் பல்லவி இருவரும் வீட்டுக்குள் சென்றனர் பாட்டியும் கார்த்திக்கும் பல்லவியை நன்றாக பார்த்துக்கொண்டான். மழையால் 3 நாள் தொடர் விடுமுறை பள்ளிகளுக்கு விடப்பட்டு இதுதான் கடைசி நாள் . கார்த்திக் மறுபடியும் வேலையில் சேர சில போர்மாலிடீஸ் காக வெளியே சென்றிருந்தான்.
பல்லவிக்கும் உடம்புசரியானது.
பாட்டி உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்
பாட்டி :கேளுமா
பல்லவி :பாட்டி கார்த்திக் ரொம்ப நல்லவர் அன்பானவர் ஆனா சில நேரத்துல ரொம்ப கோவப்படறார் அவரை ஏதோ கஷ்டப்படுத்துது அது என்னனு தெரியுமா
பாட்டி :நீ எப்பவோ கேப்பன்னு நினைச்சேன் நீ இப்போ கேக்குறேன்.
அது வந்துமா
me:athukulla naan solla maten karthik flashback next update la solren ok😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
karthikin flash back viraivil
😁😁😁😁😁😁🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro