Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சேர்ந்தே சொர்க்கம் வரை -6

Hello friends ellarum epdi irukeenga. story niyabagam iruka. Sari vanga storyku povom.

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

கார்த்திக் பல்லவி இருவரும் நடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
கார்த்திக் நேராக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். பல்லவி பாட்டி அறைக்கு சென்றாள் அவளைக்கண்டதும் பைரவா (அதாங்க நம்ம பல்லவி பார்த்து பயந்த நாய் ) ஒடி வந்தது பைரவனின் குரல் கேட்டதும் பாட்டி எழுந்துவிட்டார்.

பல்லவி :பாட்டி சாப்டீங்களா

பாட்டி :சாப்பிட்டேன் மா. இண்ணைக்கு எப்படி போச்சி.

பல்லவி :நல்லா போச்சு பாட்டி.

பாட்டி :சரிம்மா நீ போய் தூங்கு

பல்லவி :நீங்க மாத்திரை இன்னும் போடலை இல்ல பாட்டி.

பாட்டி :போட்டேன் மா

பல்லவி :பொய் சொல்றிங்க

பாட்டி :நான் ஏன் மா பொய் சொல்லப்போறேன்

பல்லவி :நீங்க ராத்திரி சாப்பிடுற மாத்திரை நேத்தே தீர்ந்துடிச்சு அப்போ எப்படி இண்ணைக்கு சாப்பிடறீங்க.

பாட்டி :போலீஸ்காரன் பொண்டாட்டி இல்ல இப்படித்தான் இருப்ப.

பல்லவி :பேச்சை மாத்தாதிங்க. இந்தாங்க சாப்பிடுங்க.

பாட்டியை மாத்திரையை சாப்பிட வைத்தவள் உறங்க சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
அறையில் கார்த்திக் இல்லாததை கண்டவள் மாடிக்கு சென்று இருப்பான் என்று நினைத்தாள்.கார்த்திக் எப்பொழுதும் இரவில் தனிமையில் மாடியில் இருப்பது வழக்கம். பல்லவி உடை மாற்றி கொண்டிருக்கும் பொது கார்த்திக் சரியாக உள்ளே வந்தான்.
பல்லவி அதிர்ச்சியில் கத்த போக அவளது வாயை கையால் கார்த்திக் மூடினான்.

இருவருக்கும் இடையே விரல் அளவு இடைவெளி மட்டுமே இருந்தது.பல்லவியால் எதுவும் பேச முடியவில்லை. கார்த்திகை பார்த்தாள் அவளது பார்வையில் தடுமாறியவன் சுதாரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

கார்த்திக்:சாரி தெரியாம வந்துட்டேன் நான் வெளிய போறேன் dress மாத்திட்டு கூப்பிடு

தவறி கூட கார்த்திக் பல்லவியின் கண்களை தவிற வேறு எங்கும் பார்க்கவில்லை. பல்லவிக்கு அந்த கண் ணியம் பிடித்தது.

கார்த்திக் வெளியே சென்றதும்.

பல்லவி (மனதிற்குள் ) ஏன் கத்துனோம் கார்த்திக் என்ன நினைச்சிருப்பாரு.

பல்லவி :நான் dress மாத்திட்டேன்

கார்த்திக் :சாரி

பல்லவி :நான்தாங்க சாரி சொல்லணும்.நான் உங்களை எதிர்பாக்கல அதான் கத்திட்டேன்.

கார்த்திக் :சரி அடுத்த முறை dress மாத்தும்போது கதவை சாத்திட்டு மாத்துங்க

பல்லவி :சரி ☺

அவளோட முகம் முழுவதும் சிவந்து இருந்தது. இருவரும் உறங்கி விட்டனர் .

மறுநாள் இருவரும் வேலைக்கு சென்று விட்டு வந்தனர்.

பாட்டி :கார்த்திக் பல்லவி நான் ஒரு மாசம் திருத்தல யாத்திரைக்கு போலாம்னு இருக்கேன்.

கார்த்திக் :தனியா எல்லாம் வேண்டாம் பாட்டி

பாட்டி :இல்லடா. நான் நம்ம பல்லவி தாத்தா. காயத்ரி அம்மா அப்பா எல்லாம் போறோம் . வேற எப்போ டா இனி போறது. காடு வாவாங்குது வீடு போபோங்குது.

கார்த்திக் :இப்படியெல்லாம் பேசாத பாட்டி நீ என்னோட குழந்தை என் குழந்தையோட குழந்தை பாத்துக்கணும் என்ன வளர்த்த மாதிரி அவங்களையும் வளக்கணும்.

நான் சொல்லறது சரிதானே என்று திரும்பியவன் பல்லவியின் முகத்தை பார்த்ததும் தான் கூறியதன் அர்த்தம் புரிந்தது.

பல்லவி :சரிதாங்க

கார்த்திக் :சரி பாட்டி எண்ணைக்கு போறீங்க

பாட்டி :நாளைக்கு

கார்த்திக் :சரி எல்லாம் முடிவு பண்ணியாச்சு போல. சீக்கிரம் வந்துடுங்க சரியா.

பாட்டி :சரிடா. இப்போ போய் தூங்குங்க

கார்த்திக் :சாரி பல்லவி. நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிட்டேன்.

பல்லவி :எனக்கு தெரியும் சும்மா சொல்லி இருப்பீங்கனு(குரலில் கவலை தெரிந்தது 😣).

பாட்டி கோவிலுக்கு போய்ட்டாங்க. பல்லவிக்கு வீட்டுல தனியா இருக்க பயமா இருந்திச்சு.

கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் ரூம்க்கு போய்ட்டான். எதுவும் பேசலை
.பல்லவி அவனுக்காக சாப்பாடு தயார் பண்ணிக்கிட்டு இருந்தாள் ஏதோ உடைபடும் சத்தம் கேட்க அறைக்கு வந்தவள் கார்த்திக் ஒவ்வொரு பொருளாக உடைத்து கொண்டிருந்தான்.

கார்த்திக்கை தடுக்க உள்ளே நுழைந்தவளின் காலை கண்ணாடி கிழித்தது.

பல்லவி :அம்மா

அவளின் குரல் கேட்டு திரும்பியவன் அவளின் காலில் இருந்து ரத்தம் கசிவதை பார்த்து திடுக்கிட்டான் அவளை அப்படியே தூக்கினான்.
இதை பல்லவி சற்றும் எதிர்பாக்கவில்லை. கட்டிலில் அமர்த்தியவன் அவளின் முதலுதவி பெட்டியை எடுத்து கட்டு போட்டு விட்டான்.

பல்லவி(M.V):அதிகப்பட்ச கோபமும் அதிக பட்ச அன்பும் உங்க கிட்ட இருக்கு . உங்க கோபமும் அன்பும் என்னோட வாழ்க்கை முழுக்க வேணும்

கார்த்திக் :எதாவது சொன்னியா

பல்லவி :இல்லை

கார்த்திக் :நீ ஏன் இங்க வந்த. சரி வா ஹாஸ்பிடல் போலாம்

பல்லவி :சின்ன காயம்தான் அதெல்லாம் வேண்டாம்.இதெல்லாம்நீங்க ஏன் உடைச்சீங்க .

கார்த்திக் :அதெல்லாம் ஒன்னும் இல்ல.

பல்லவி :அப்போ நானும் ஹாஸ்பிடல் வரல

கார்த்திக் :சின்ன குழந்தை மாதிரி பண்ணாத. நீ வரலன்னு சொன்னா நான் உன்ன தூக்கிட்டு போக வேண்டியது வரும். டீச்சர் புரிஞ்சிப்பீங்கன்னு நினைகிறேன்.

பல்லவி (M.V).தூக்கிட்டு போனா நல்லா தான் இருக்கும்.

கார்த்திக் :வர்றியா

பல்லவி :நான் வறேன். நீங்க எதை நினைச்சு கஷ்டப்படறீங்களோ அது சரி ஆகிடும்.

கார்த்திக் :சரிங்க டீச்சர். போலாமா

அவளது கைகளை ஆதரவாக பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

enna friends intha part ok va comment pannunga. next partla gayathi vishnuvum varuvanga. Enaku vote panna elarukum nantri.

nallaiku next partla meet panren bye.😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro