
நான் எங்கே இருக்கிறேன் 🤔
இக்கதை முற்றிலும் கற்பனையே !
ராம் தன் கண்களை மெல்லத் திறந்து பார்த்தான்..
சுற்றிலும் வெண்ணிற புகையால் அந்த அறை சூழப்பட்டு இருந்தது 🌫️
தான் எங்கு இருக்கிறோம் என்று அவனுக்கு புலப்படவில்லை...
"என்னடா இது ! நம்ம ரூம் நீல கலர்ல தான இருக்கும்.. இது என்ன வெள்ள கலர்ல இருக்கு 🤔இது சொர்க்கமா இருக்குமோ?? "
என்று சிந்தனை கடலில் நீந்திக் கொண்டிருந்தான் ராம்..
"ஒரு வேளை இது கனவா இருக்குமோ?? சரி திரும்ப தூங்கலாம் " என்று கண்களை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் ராம் 😴
திடீரென தன்னை நோக்கி யாரோ ஒருவர் நடந்து வருவதைப் போல அவனுக்கு தோன்றியது..
கண்களை திறந்து பார்த்தான்.. 🧖🏻♂️
அழகிய வெள்ளை நிற உடையில் தன்னை நோக்கி ஒரு அழகிய மங்கை நடந்து வருவதைப் பார்த்தான்!
"அட ! இது கனவா இல்லை நிஜமா?? ஒரு வேளை நான் சொர்க்கத்தில் தான் இருக்கின்றேனா?? " என எண்ணி தன் கண்களை கசக்கி மீண்டும் திறந்தான்!
என்ன ஒரு ஆச்சரியம்!!
அவன் கண் முன்னே தற்போது இரு அழகிய மங்கைகள் நின்றுக்கொண்டு இருந்தனர்..
ஆகா!! அந்த ரம்பையும் ஊர்வசியும் இவர்கள் தானோ என்னவோ 🧚🧚♀️
அழகிய சிறு கண்கள் ! அவற்றுள் ஜொலிக்கும் கருவிழிகள் 👀
பார்த்த மறு கணமே கிள்ளத் தோன்றும் இளஞ்சிவப்பு நிற ஆப்பிள் கன்னங்கள் 😍
முக்கோண வடிவில் இருக்கும் அந்த பொன்னிற சமோசா மூக்கு👃
சிரிப்பை மட்டுமே அறிந்த அச்சிறு வாய் 😊
மின்னலை போல மினுமினுக்கும் தேகம் ⚡
என ரவி வர்மாவின் நடமாடும் ஓவியங்களாக அவன் கண்முன்னே வந்து நின்றனர் அவ்விரு பெண்கள் ! இல்லை இல்லை.. அவர்கள் இருவரும் தேவதைகள்😇
"ச்சா ! பூலோகத்தில மொரட்டு சிங்கிளா திரிஞ்ச உனக்கு சொர்க்கத்தில ரெண்டு தேவதைங்க கிடைப்பாங்கனு கனவுல கூட நினைக்கவில்லயே டா!! மச்சக்காரன் டா நீ " என்று பெருமைப்பட்டு கொண்டிருந்தான் ராம்..
மனதுக்குள் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா 🤩🤩என்ற வசனம் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தது...
அப்போது அந்த வெள்ளை திரையை நீக்கி ஒருவர் அவனை நோக்கி வந்தார்!!
வெள்ளை நிற ஜிப்பா அணிந்து இருந்த அவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் 👳🏻♂️
சுருக்கமாக சொன்னால் அறை எண் 305 திரைப்படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போன்ற தோற்றம்!
"ஒரு வேளை இவர் தான் கடவுளோ??" என்று எண்ணினான்..
"இது சொர்க்கம் னா கண்டிப்பா இவரு கடவுள் தான்!!" என்று அவனே தன் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டான்
"தம்பி , உன் பேர் என்ன பா?" என்றார் அந்த சாந்த சுவரூபி !!
"ஐ ஆம் ராம்" என்று பதிலளித்தான் அவன் . .
தன் கண்களால் அக்கன்னிகைகளை நோட்டமிட்டபடி சொன்னான்..
"வயசு?" என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார் அவர்..
" அடுத்த மாசம் 27 கம்பிளிட் ஆகுது " என்று பெருமையாக கூறினான் 😌
" சரி சரி இவர் ஸ்டேட்ஸ் என்ன மா? "
"என்ன கடவுளே; என் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ஸ் பத்தி அவங்க கிட்ட கேக்ரீங்க?? நான் மொரட்டு சிங்கிள் கடவுளே!! " என்று முந்திக்கொண்டான் அவன் !
"தம்பி.. நான் உன்னோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ஸ் பத்தி கேட்கல.. கொரோனா ஸ்டேட்ஸ் பத்தி கேட்டேன் ! "
" என்னது கொரோனா ஸ்டேட்ஸ் ஆ??? அப்போ இது சொர்க்கம் இல்லையா??" என்று பதறிப்போய் கேட்டான் !
"இது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் கொரோனா வார்ட் பா ! நீ என்ன உளரிட்டு இருக்க?? உனக்கு நேத்து ராத்திரி தான் கொரோனானு கன்ஃர்ம் ஆச்சு "
"எனக்கு கொரோனா வா? 😲😲"
"ஆமா பா.. உன் வீட்டில இருக்கிறவங்க எல்லாருக்கும் டெஸ்ட் பண்ணிட்டு இருக்கோம்.. ரிசல்ட் ஈவ்னிங் வரும்
.நீ நேத்து உன் பிரென்ட் வீட்டுக்கு போய்ட்டு வந்து இருக்க.. அவங்க ஏரியா குவாரண்டைன் ல இருக்கு.. உன்னால இப்போ எல்லாரும் பயத்தில இருக்காங்க.." என்றார் மருத்துவர்
"எனக்கு எப்படி?? நான் ஹெல்த்தியா தான இருந்தேன்?"
"ஏம்பா! பார்த்தா படிச்ச பையன் மாரி இருக்க , இப்படி வேடிக்கையா பேசுர? அது ஒரு சின்ன வைரஸ்.. அது நம்ம உடம்புக்குள்ள எப்படி வேண்டுமானாலும் போயிடும்.. நாம தான் முன்னெச்சரிக்கையாக இருக்கனும்.. இந்த நோய்க்கு சில சிம்டம்ஸ் இருக்கு.. பட் அது தவிர சிம்டம்ஸ் இல்லாமலும் சில பேருக்கு இந்த நோய் பரவும்.. அப்படி தான் உங்க கேஸ் ல வந்திருக்கிறது.. தினமும் எத்தன பொதுமக்கள், டாக்டர்ஸ், நர்ஸ் , போலீஸ், ஹெல்த் வர்க்கரஸ் உங்கள மாதிரியே பாதிக்க படறாங்க.. அது தெரிஞ்சும் நீங்க வெளியே சுத்துரது நியாயமா? சரி நீங்க ஹெல்த்தியா இருக்கீங்க சோ உங்களால இந்த நோயிலிருந்து மீண்டு வர முடியும்.. இதுவே உங்க மூலமா உங்க அம்மா அப்பாவுக்கு பரவினால்?? அவங்களால இத எதிர்த்து போராட முடியுமா?உன்ன பாக்கனும்னு ஆசை பட்டாலும் 14 நாட்களுக்கு பார்க்க முடியாது!! இந்த இடத்தை பாத்துட்டு சொர்க்கமா னு கேட்டீங்களா! இதுதான் உண்மையான நரகம் ! "
மருத்துவரின் கேள்வி அவனை சாட்டையால் அடித்து போன்று இருந்தது...
"எங்க புள்ளைங்க எல்லாம் ரொம்ப பயங்கரம் " என்ற பாடலை கேட்டு பதறிப்போய் எழுந்தான் ராம்..
"ச்சா கனவா!! " என்றபடி தன் அலைபேசியை கையில் எடுத்தான்..
"மச்சான்! எங்க ஏரியால போலீஸ் நடமாட்டம் இல்லை டா.. நீ வாடா பசங்கலாம் சேர்ந்து கேரம் போர்டு விளையாடலாம்.." என்றான் அவன் நண்பன்..
"டேய்.. வேணாம் டா.. நீ வீட்லயே பத்ரமா இரு.. அப்பா அம்மாவ பாத்துக்கோ.. வெளியே சுத்தாத டா" என்று கூறி அனைப்பை துண்டித்தான் ராம்..
நம் நலனை மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருப்போம்.. கொரோனாவை வெல்வோம் 🙏
இக்கதை Jeyavj வின் ஒரு நாள் கூத்து கதையால் கவரப்பட்டு எழுதப்பட்டது 😇
நன்றி 🥰
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro