நரகம்-சொர்க்கம்
கோபம் என்னும் நரகத்தில் நின்றேன்...
அன்பு என்னும் சொர்க்கம் தந்தாய்...
தனிமை என்னும் நரகத்தில் உழன்றேன்...
காதல் என்னும் சொர்க்கம் காட்டினாய்...
தான் தான் என்ற திமிர் நரகத்தில் இருந்தேன்...
நாம் என்பது தான் சொர்க்கம் என்றுரைத்தாய்...
போதை என்னும் நரகத்தில் வீழ்ந்து கிடந்தேன்...
நற்பாதை என்னும் சொர்க்கம் அழைத்து சென்றாய்....
மடிந்து செல்வது நரகம் என்றாலும் உன்கரம் ..
கோர்ந்து சென்றால் அதுவும் சொர்க்கம் தானடி பெண்ணே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro