9. அன்புள்ள அப்பா
கல்லூரியின் மதிய உணவுஇடைவேளையில் மரத்தடியில் அமர்ந்து சிந்தனை எங்கோ இருக்க, பருக்கை பருக்கையாய் உண்டு கொண்டிருந்த பவித்ராவை அவளது தோழி வைஷ்ணவி உலுக்க நினைவுக்கு திரும்பினாள்.
"என்னடி லவ் பண்றியா.. இப்படி டிரீம் வேர்ட்லே மிதக்கிற..." என்றவளை நோக்கி வெறுமையாய் சிரித்த பவித்ரா மீண்டும் உண்ண தொடங்க வைஷூ முறைத்து பார்த்தாள்.
அதன் பொருள் உணராது பவி என்ன என கேட்க, "எப்பவும் புலாவ் கொண்டு வந்தா மொத்தமா புடுங்கி சாப்பிடுவே.. இன்னைக்கி என்னாச்சு.. எதே மறைக்கிறே... சொல்லு பவி.. நம்ம ப்ரெண்ட்ஷிப் அந்தளவு தானா..." என அடுக்கிய வைஷூவை அமைதிப்படுத்திய பவி உணவுடப்பாவை மூடி வைத்தாள்.
"உனக்குதான் தெரியுமே... ஓன் ஹியர் முன்னாடி அம்மா ஹார்ட் ஆப்ரேசனுக்கு அப்பா கடையை அடமானம் வைச்சு அந்த வீரச்சாமிக்கிட்டே கடன் வாங்கியிருந்தாரே..." என்றதும் அவளும் ஆமாம் என தலையாட்டினாள்.
"அம்மாவே கவனிக்கிறதுலே அப்பா சரியா பிசினஸ் பாக்க முடியலே... கொஞ்சம்
ஹெவி லாஸ்தான்... ஆறுமாசமா வட்டியும் கட்ட முடியலே... வட்டி குட்டி அதுபோட்ட குட்டின்னு இப்போ டூவெல் லேக்ஸ் வந்து நிக்குது...." என்றதும் வைஷூ வாய்பிளந்து நின்றாள்.
"எத்தன காலம் மாறினாலும் மிடில்கிளாஸ்க்கு கடன்தொல்லை இருந்திட்டுதான் இருக்கும்... இப்போ அப்பா அப்பத்தா நினைவா வச்சியிருக்கிற கடையே எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டுறான்... எங்ககிட்டே இதே சொல்லாமா அப்பா நாங்க தூங்குனதும் அழுதுக்கிறாரு வைஷூ... டென் டேஸ் பீஃபோர் நைட் தண்ணி குடிக்க எழுந்தப்போதான் அப்பா அழுதது தெரிஞ்சது... ஏன் கேட்டா கால்வலினு சமாளிச்சுட்டாரு..., ஆனா என்மனசு உறுத்திட்டே இருந்தது.."
"லாஸ்ட் சன்டே அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க கடைக்கு போயிருந்தேன்.. அப்பா உள்ளே சாப்பிட்டிட்டு இருந்தாரு.. நான் கல்லாவிலே உட்காந்திட்டு இருந்தேன்... அந்த வீரச்சாமி வந்தவன் என்னையே வெறிச்சு பாத்திட்டு இருந்தான்... நானும் உள்ளுக்குள்ளே திட்டிட்டே உள்ளே போயிட்டேன்.. அப்பாகூட வரேன் என்முன்னாடியே ஒன்னு கடையே எழுதிக் கொடு... இல்லே உன்பொண்ணே எனக்கு கட்டிவை... கடனே திரும்பி கொடுக்க வேண்டும்... பத்திரத்தே கொடுத்திடுறேன்னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்.. அப்பாவாலே அதிர்ச்சியிலே பேசமுடியலே..." என்றதும் வைஷூ அவனை திட்டத் தொடங்கினாள்.
"நானும் ஓன்வீக்கா திங்க்பண்ணி நேத்து ஈவினிங் அந்த வீராசாமிகிட்டே போயி மேரேஜ் பண்ண சம்மதம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. நாளைக்கு மார்னிங் கோயிலே மேரேஜ்..." என சொன்ன பவித்ராவின் கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்தாள் வைஷ்ணவி. அருகிலிருந்த மாணவிகள் அவர்களை பார்க்க வைஷ்ணவியின் திட்டலில் அனைவரும் திரும்பியும் அமைதியாய் தங்கள் பணியினை தொடர்ந்தனர்.
"லூசா டி நீ... உனக்கு ஜஸ்ட் டிவென்டிதான்...அவனுக்கு நாற்பது வயசு டி... அதுமட்டுமில்லாம அவனுக்கு பதினைஞ்சு வயசிலே ஒரு பையன் இருக்கான்..."
"சோவாட்... இருந்திட்டு போறான்... ஆனா என்ப்பா... எங்க வாழ்க்கையோட மூலாதாரமே அந்த துணிக்கடைதான்.. அது பத்துக்கு எட்டு அளவிலே சின்னதா இருக்கலாம்.. ஆனா என்ப்பாவுக்கு அந்த கடையோட இருக்கிற நினைவுகள் அளவிட முடியாது வைஷூ.... என்ப்பாவுக்கு பொண்ணா அவரோட அம்மாகடையே நான் மீட்டு கொடுக்கனும்.... நாளைக்கு அவன்தாலியே வாங்கி டிபிக்கள் வைப்பா வாழ பழகனும் வைஷூ... இன்னைக்கிதான் என்னோட காலேஜ் லாஸ்ட்டே... ஐ ரியலி மிஸ் யூ டி..." என நட்பை அணைத்தவள், பின் விலகி யாருக்கும் இந்த திருமண விசயத்தை சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிய பவித்ரா, மணியோசை கேட்க, சாப்பிடாமல் வகுப்பிற்கு செல்ல முயல, வைஷூ பவியை அமர வைத்து ஊட்டிவிட, மற்றவர்கள் அவர்கள் நட்பை பற்றி புறம் பேசிக் கொண்டு சென்றனர்.
மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்தவள் பெற்றோரின் பாதங்களை வணங்கி குளித்து புடவை கட்டிக்கொண்டு, வாசற்கதவை திறக்க, "உன் மேரேஜ்க்கு என்னே கூப்பிட மாட்டியா பவி.." என தந்தையின் குரல் கேட்க, ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டாள்.
" அப்பா! கடையே எழுதி கொடுத்திடு.. எப்பிடியாவது நாமே வாழ்ந்துக்கலாம்ன்னு என் பொண்ணு சொல்லியிருந்தா நான் சந்தோசப்பட்டிருப்பேன்... ஆனா நீ எடுத்த முடிவு... ஏன்டா உன் வாழ்க்கையை அடமானம் வைச்சு அப்பா சந்தோசமா இருப்பேனா.... சொல்லு டா."
"அது அப்பத்தா நியாபகமா....." என அழுத மகளை தன்னிடமிருந்து விலகிய சகாதேவன் அவன் விழிநீரை துடைத்தார். "அதான் என்ம்மா எதிர்லே நிக்குறியே.. அதேவிட நினைவு பெரிசா டா..."
"கடையே வித்திட்டு எப்படி வாழுறதுப்பா.. உனக்கு வேற வேலையும் தெரியாது..."
"அடிக்கழுதே... சாக நினைச்சாதான் நாலஞ்சு வழி டா.. உழைச்சு வாழ நினைச்சா கோடி வழிகள் இருக்கு பவிமா..., இங்கே சிட்டியிலே வாழதான் அடிப்படைசெலவு அதிகமாக தேவை.. ஆனா கிராமத்திலே வாழ கம்மிதான் பவி... கடையை வித்துட்டு நம்ம சொந்த ஊருக்கு போயிடலாம்...,கடையிலே இருக்கிற சரக்கே வித்தா இரு ஒன்றரை லட்சம் தேறும்... அதுலே உன்படிப்புக்கு போக மீதி பண்த்துலே ஊர்லே இருக்கிற வீடு பக்கத்திலேயே உன்ம்மாவுக்கு ஒருபெட்டிக்கடை வைச்சு தரேன்.. நான் ஏதாவது அரிசி மில்லுல மூட்டை தூங்கியாவது பொழைச்சிப்பேன் பவி.. உன்னே நல்லா படிக்க வைச்சு ஒரு நல்ல இடத்திலே கட்டிக்கொடுத்தான் இந்த சகாதேவனுக்கு பெருமை டா..." என்றதும் அப்பாவை மீண்டும் கட்டிக்கொண்டாள்.
"போடா.. போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா... உன்ம்மா இதுலே பாத்தா பதில் சொல்ல முடியாது..., நல்லா தூங்கு புதுமாப்பி்ள்ளை வருவான்... நாமே மொய் செய்ய வேணாம்..." என தந்தையின் நக்கலில் விலகியவள் அவரின் கன்னத்தில் முத்தமிட்டு ஆடைமாற்ற அறைக்குள் சென்றாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro