8. வாழும் தெய்வங்கள்
அந்த மிகப்பெரிய ஐவுளிக்கடலில் தங்கள் திருமணநாளுக்கான ஆடைகள் வாங்கிய இளம்தம்பதியினர் தொகை செலுத்தி, அதனை பெற்றுக் கொள்ள கீழத்தளம் செல்ல மின்தூக்கிக்காக காத்திருந்தனர். அங்கே எழுதியிருந்த பெண்கள் உள்ளாடைக்கான பிரிவு இரண்டாம்தளம் என போட்டிருப்பதை கண்ட மனைவி தன் கணவனிடம் அங்கே செல்லலாம் என கூற, வந்த மின்தூக்கியில் இரண்டாம் தளத்திற்கான பொத்தானை அழுத்தினான்
வெண்ணிலா பத்தொன்பது வயதுப்பெண் இதுவரை புடவைகள் பிரிவில் வேலை செய்தவள், அந்தபிரிவில் வேலைசெய்த .பெண் பணியிலிருந்து விலகியதால் இவள் மாற்றப்பட்டிருந்தாள். அந்தபிரிவுக்கான மேற்பார்வையாளர் அவளுக்கு தேவையான குறிப்புகள் சொல்லிவிட்டு செல்ல, இந்த தம்பதியினர் உள்ளே நுழைந்தனர்.
அங்கே உள்ளாடை அணிவித்து விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட மொம்மையை மனைவிக்கு தெரியாமல் ஓரவிழியில் ரசித்தவாறு வெண்ணிலா எதிரே நின்றவன் அவளை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். மனைவி தனக்கான உள்ளாடை அளவை சொல்ல, அவளோ பலவிதங்களில் எடுத்து காண்பித்தாள்.
"சிஸ்! இவ்ளோ வோக்கலா இருக்கு... இந்த டூடவுசண்ட் ரூபிஸ்ல இருக்கும்லே... அந்த மாதிரி எடுத்து காண்பி..." என்றதும் மனைவி முறைக்க, வெண்ணிலா அவன் சொன்னதன் பொருள் உணராது
"சார்! நான் புதுசு... தேடி பார்க்குறேன்..." என ஒரு ஸ்டூல் எடுதது போட்டு மேலே இருந்த அட்டைப்பெட்டிகளை எடுத்து அதன் விலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இல்லே பேபி... கொஞ்சம் காஸ்ட்லியா வாங்கித் தரலாம்ன்னு.." என தன்னவள் காதை கடித்து பல்லிளித்து சமாளித்தான்.
"டவுசண்ட் ரூபிஸ்லதான் இருக்கு மேம்....... " என அட்டைபெட்டைகளை அவள் முன் குவித்த வெண்ணிலாவை கண்டு கள்ளத்தனமாய் சிரித்தான். மனைவி தனக்கானதை தேர்ந்தெடுத்து கொண்டிருக்க அவனோ வெண்ணிலாவை அளந்து கொண்டிருந்தான்.
வேண்டுமென்றே தன்மனைவி தேர்ந்தெடுத்ததை கையிலெடுத்து, "இது உனக்கு பிட்டாகாது போல..." என வெண்ணிலாவை கண்டு சொல்ல, அப்போதுதான் பெண்ணவள் அந்த கயவன் சொல்லும் பொருளறிந்து, தனது துப்பட்டாவை சரிசெய்தாள். சட்டென தனக்குள் வந்த கண்ணீரை வெளியே விடாது உள்ளே இழுத்தவளுக்கு உடலில் ஒரு பதட்டம் தோன்ற குரல் உள்ளே சென்றது. விற்பனை பொருட்களை பார்க்காது தன்னை ஒரு போகப்பொருளாக பார்க்கும் இவன் என்ன மாதிரி பிறவி. என மனதில் திட்ட தொடங்கினாள்.
"இது போர் டவுசண்ட் ரூபிஸ் மேம்... அட்ஜஸ்ட்டம்பிள்..." என மேற்பார்வையாளர் விமல், அந்த கயவனை லேசாய் முறைத்தப்படி சில பெட்டிகளை வைக்க, கணவனது முகம் மாறியது. மனைவி அவளுக்கானதை தேர்ந்தெடுத்து பில் போட செல்ல, அவனை விமல் தனியே அழைத்து சென்றான்.
"சார்! உங்க ஏஜ்.."
"டூவெண்டிசெவன்..."
"இந்த வயசிலே நீங்க சந்திக்காத ஒரு சூழ்நிலையைஅந்தப் பொண்ணு பத்தொன்பது வயசில சந்திச்சு நிக்குறா..., நீங்க அந்த வயசிலே அப்பன்காசுலே காஸ்ட்லி பைக் வாங்கி ஊர்சுத்திட்டு இருந்திருப்பீங்க.. அம்மா இல்லாத இந்த பொண்ணு படுக்கையிலே இருக்கிற அப்பாவையும் பாத்திட்டு, காலேஜ் போய்ட்டு இங்க வேல பாக்கிறா.... அவ முன்னாடி நீங்க வெரிபீக் ஜீரோ சார்..., இளமையிலே வறுமை கொடுமைன்னு சொல்வாங்க... ஆனா இந்தப்பொண்ணு அதே கடந்து தைரியமா வாழ்ந்திட்டிருக்கா... அந்த தைரியத்தே அழிச்சுடாதிங்க... இந்தப்பொண்ணு மட்டுமில்லே குடும்பத்துக்காக தன்னாசை சுகம் எல்லாம் தியாகம் பண்ணிட்டு எப்பிடியாவது நாமே லைப்லே முன்னேறுவோம் என்ற நம்பிக்கையிலே உழைக்க வெளியுலகம் வர எல்லா பதின்பருவ பொண்ணுகளும் கன்னிதெய்வம்தான் சார்... அவங்களே நீங்க தெய்வமா பாக்க வேணாம்..., ஒரு சக மனுசியா... இல்லே சார் ஒரு மனுசிய பாருங்க...,." என்ற விமல் அவன்மனைவி வர கைகுலுக்கி, மீண்டும் வருக என கூறி விடைப்பெற்று சென்றான்.
மேம் மேம் என அழைப்பது போல கேட்க, வெண்ணிலா மூச்சு வாங்க, ஓட்டநடையில் வருவது தெரிய மூட சென்ற லிப்ட் கதவை தடுத்து நிறுத்தினான்.,
"உங்க ஹாண்ட்பர்ஸ் மேடம்..." என கொடுத்துவிட்டு கண்ணில் சிறுதுளிநீரோடு இதழில் புன்னகையோடு செல்ல ஏனோ அந்த சிரிப்பின் முன் கீழ் நோக்கி செல்லும் மின்தூக்கி போல தனதரமும் தாழ்ந்துவிட்டதை அறிந்தான்.
"நிலா! இங்கப்பாரு இது நீ முன்ன வொர்க் பண்ண இடம் மாதிரியில்லே... இந்த மாதிரி சில ஆளுங்க கமெண்ட்ஸே கேர் பண்ணிக்காதே... உன் வேலை மட்டும்தான் மைண்ட்ல ஏத்திக்கனும்.. ஒரளவு சிரிச்ச முகமா சேல்ஸ் பாரு..ரொம்ப ஓவரா போனா தைரியமா, நோஸ்கட் குடுடா... இன்னைக்கி ஒருநாள் இங்கே வொர்க் பண்ணு.. நாளைக்கு வேறே செக்ஷ்ன் சேன்ஞ் பண்ணிடுறேன்.." என்றவரிடம்
"இல்லேசார்... இதிலயே வொர்க் பண்றேன்... பர்ஸட் டைம்னாலே போல்டா பேஸ் பண்ண முடியலே... இனி கத்துக்கிறேன்.., நார்மலான சேரி செக்சன விட இங்கே எனக்கு இந்த உலகத்தே பேஸ் பண்ண தேவையான கான்பிடன்ஸ் கெடைக்கும்..." என இந்த ஒரு வாடிக்கையாளரை வைத்தே தன்பணியில் இனி சொற்பமாய் வரும் ஒருசில அற்பங்களை எவ்வாறு சமாளிக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் மேசையில் பரப்பிவைத்த அட்டைப் பெட்டிகளை பழையப்படி அலமாரியில் அடுக்க தொடங்கினாள்.
உயிர் தந்து உணவளித்து, அறிவு புகட்டிய நம்மை சுமந்த தாயும் தெய்வமே...
உயிர் வளர்க்க உணவுக்காக குடும்பம் சுமக்கும் இவளும் தெய்வமே..
அத் தாயை காணும் கண்ணோட்டத்துடன் இவளைப்போன்ற பெண்களை பாருங்கள் தாயின்வழி வந்தவர்களே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro