Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7. மெல்லிசையே

   இடதுகாலில் கட்டுப் போடப்பட்டு மொட்டைதலையில் அறுவைசிகிச்சை செய்த தையல் தடத்துடன்,  ஒன்றரை மாத மருத்துவமனை வாசத்திற்கு பிறகு ஆலம் கரைந்து திலகம் சூட்டப்பட்டு இல்லத்திற்குள் அழைத்து வரப்பட்டான் ஆனந்த். நண்பர்களின் உதவியுடன் கட்டிலில் படுக்கவைக்கப்பட அவனது பாதியானவள் காவ்யா வரும்போது கடையில் வாங்கி வந்த பழச்சாற்றை கண்ணாடிடம்ளர்களில் ஊற்றி அனைவருக்கும் பரிமாறினாள்.

  பின்நண்பர்கள் சிறிது நேரம் பொழுதை கழித்துவிட்டு செல்ல, ஆனந்த், "காயு" என அழைக்க தனது அத்தையம்மாவிடம் சமையலை கவனிக்க சொல்லிவிட்டு, தங்களறைக்கு வந்தாள்.

"இப்போவாது சொல்லு.. ஆப்ரேஷன் அண்ட் மெடிக்கல் எக்ஸ்பென்சஸ்க்கு என்ன பண்ணே... ஹாஸ்பிட்டலே கேட்டதுக்கு எதுவும் நெனைக்காம ரெஸ்ட் எடுங்க வீட்டுக்கு போய் பேசலாம்னு சொல்லிட்டே... இப்போவாது சொல்லு டி.." என கேட்க,

"உங்க கம்பெனியிலே கொஞ்சம் அமௌவுண்ட் தந்தாங்க..., மெடிக்கல் இன்சூரன்ஸ், அப்புறம் என் ஜூவல்ஸ்ன்னு சமாளிச்சுட்டேன்...  பேமிலியே ரன் பண்ண மாமா அக்கவுண்ட்ல சேவிங்ஸ் இருக்குங்க... டூ மன்த்ஸ் சமாளிச்சுடலாம்..." என அவனின் மனம் புண்படாதவாறு குடும்பநிலையை சமாளித்தாள்.

"டூ மன்த்ஸ்க்கப்புறம்..." என வினவியவனிடம் என்ன பதில் சொல்வது எனத்தெரியாது தவித்தவள், "அதான் டூமன்த்ஸ் டைமிருக்கே... ஏதாவது வழி பிறக்கும்..." என சமாளிக்க, அவனோ  தன்னிலையை நினைத்து வெறுமையாய் புன்னகைத்தான்.

   மாலையில் பள்ளிவிட்டு வந்த ஒன்றாம்வகுப்பு படிக்கும் மகன்நவிலன்  மகள் நவிதா என இரட்டை குழந்தைகள் தந்தையின் இருபுறமும் அமர்ந்து  இத்துணை நாள் பிரிவை அவன் உடற்சூடு மற்றும் மூச்சுக்காற்றின் வெம்பையில் தணித்து கொண்டிருந்தனர். மூவருக்கும் பிடித்தமான பால்கொழுக்கட்டையுடன் வந்த காவ்யா அவர்கள் கூட்டணியில்  ஐக்கியமாகிட அவர்கள் சிரி்ப்பொலி வெளியே கூடத்தில் அமர்ந்திருந்த பெரியவர்களை அடைய, நீண்டநாட்களுக்கு பிறகு அவர்களும் உண்மையாய் சிரித்து மகிழ்ந்தனர்.

  ..இரவு உணவு முடித்து குழந்தைகள் தாத்தாபாட்டியுடன் உறங்க, பால் டம்ளருடன் தனதறைக்கு வந்த காவ்யா, தன்னவனிடம் நீட்டினாள். அவளை தன்னுருகே அமர வைத்தான்.

"காயு! நான் இந்த ப்ளாட்டே சேல் பண்ணலாம்ன்னு இருக்கேன்..," என்றதும் பதறிய மனைவியை அமைதிப்படுத்திய ஆனந்த்,

"இப்ப இருக்கிற சூழ்நிலையிலே இதுதான் சரியா வரும்..., குடும்ப செலவுக்கு மட்டுமே பத்தாயிரம் மேலே தேவைப்படும்.. அப்புறம் மெடிசன்... கார் லோன்... எல்லாம் சேர்த்து டோட்டலா டூவென்டிபைவ் டவுசண்ட் வேணும் காயு....  எங்கே போவோம்.. நான் திரும்ப ஜாப் போக எப்பிடியும் இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் மேலே ஆகலாம்..., அதான் இந்த வீட்டே வித்து வர பணத்துல..." என்ற ஆனந்த் வாயை பொத்திவள்,

"இந்த ப்ளாட் வாங்க பட்டபாடு எனக்கு தெரியும்ங்க...   ஒன்றரை மன்த்ஸ் முன்னாடி நான் இதே விக்க நினைச்சவ தான்... ஆனா இப்போ.." என தன்னவனை பார்த்தவள்,  

"வேற பார்ககலாம்.. எதுவும் அமையலன்னா மத்ததே பேசலாம்.....," என தன்னவனை அமைதியாக்கி உறங்க வைக்க. அவனும்  மருந்தின் வீரியத்தால் விரைவினிலே உறங்கி போனான்.

ஆனால் காவ்யா உறக்கம் வராமல் திண்டாடினாள். இருமாதங்கள் கடகடனெ ஓடி வந்துவிடும் அதன்பிறகு குடும்பத்தின் நிலை.. தான் ஏதாவது வேலைக்கு செல்லாம் என்றால் நோய்வாய்ப்ட்ட தந்தையின் ஆசைக்காக தான் ஆசையாய் படித்த பிஏ இசைப்படிப்பை இரண்டாம் ஆண்டோடு நிறுத்தி கல்லூரிமாணவி என்ற பதவியிலிருந்து மனைவி.என்ற பதவிக்கு மாறிவிட்டேன். இந்த படிப்பை வைத்து சிறுப்பள்ளியில்  இசைஆசிரியர் பணிக்கு சென்றாலும் ஏழு முதல் எட்டு ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும் அது தன் குடும்பத்துக்கு ஒரு பத்துநாட்கள் கூட வராது. மாமானாரும் ஓய்வூதியம் வருமளவு அரசுப்பணியில் இருந்தவரல்ல. எவ்வாறு குடும்பத்தை சமாளிப்பேன் என யோசித்தவள் நினைவில் தன்கல்லூரித்தோழி மஹிமாவின் நினைவு வந்தது.

   மறுநாள் விடியலில் குழந்தைகளை பள்ளிவாகனத்தில்ஏ ற்றிவிட்டு, பக்கத்துவீட்டு மாமி.வத்சலாவிடம் வெஸ்பா கடன்வாங்கி மஹிமாவை சந்திக்க சென்றாள். அவள் இசைப்பிரிவில் எம்ஏ பட்டம் முடித்து இப்பாேது   ஓர் பிரபல திரைப்பட இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருக்கிறாள்.  தன்னிலை கூறி உதவிக்கேட்க, அவளோ முதலில் கோரஸ் பாட   வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியவள் பின் உன்குரல் பிடித்தால் பிண்ணனி பாடகியாகவும் வாய்ப்பு உள்ளது.  தன் இசைப்பள்ளியில் பகுதி நேரமாகவும் பணியாற்று...  சரியென்றால் நாளை காலை *** ஸ்டியோவுக்கு வா எனக்கூறி  அனுப்பினாள்.

    காவ்யா சொன்னதும் ஒட்டுமொத்த குடும்பமும் இதை மறுக்க  பின் அவளின் பேச்சு மற்றும் குடும்பநிலை ஒத்து கொள்ள வைத்தது. ஆனால் ஆனந்த் அரைகுறை மனதுடன் சம்மதித்தவன் அதன்பிறகு தனது காயுவுடன் மனம்விட்டு பேசுவதை தவிர்த்தான். முதலில் காவ்யா தடுமாறினாலும் பின் தைரியமுடன் தன்பணியை தொடர்ந்தாள்.

    .நான்கு மாதங்களுக்கு பிறகு.. ஒரளவு நடக்க முடிந்த ஆனந்த் பால்கனியில் நடைகோலின் உதவியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்க அவனது அலைப்பேசி ஒலிக்க அதில் வந்த பாடல்வரிகளை கேட்டு சமையல் செய்துக் கொண்டிருந்த காவ்யா ஓடிவந்தாள். அவளின் ஆர்வத்தை கண்ட ஆனந்த் தன்னருகே வருமாறு அழைத்தான்.

   அலைப்பேசி அழைப்பு ஏதோ வங்கியின் கடன் வாங்க கோரிக்கை விடுக்க எரிச்சலுடன் அழைப்பை துண்டித்தவன்,

"காயு!  ஏன் அப்பிடி பாக்குறே... நீ பாடுறத விரும்பாதவன் இப்போ நீ தனியா டிரக் பாடுன இந்த ரெண்டு.வரியா ரீங்டோனா வச்சியிருக்கானே அதுக்காகவா..." என்றதும் விழிநீருடன் அவள் ஆமாமென தலையாட்டினாள்.

"இப்போதான் என் காயு முகத்துல உண்மையான மகிழ்ச்சியே பாக்குறேன்...  அது நீ சுயமா சம்பாதிக்கிறதாலே இல்லேன்னு ஒரு புருஷனா எனக்கு புரிுது காயு...," என்றான். எங்கே தான் சம்பாதிப்பதால் தன்னவளுக்கு தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டதோ என பயந்தவளுக்கு  அவனது இந்த பேச்சு காவ்யா சற்று நிம்மதியடைந்தாள்.

"நீ வாங்குற சம்பளத்தே பாக்கிறப்போ உன்முகத்திலே தெரியுற அந்த ஆத்மதிருப்தி...   செவன்டி டவுண்ட்ஸ் சேலரி வாங்கின எனக்கு கூட கிடைச்சதில்லே காயு... ஏன் யோசிச்சப்போ எனக்கு கிடைச்ச பதில்  நம்ம வாங்குற சம்பளத்திலே கிடைக்கிற திருப்தி இலக்கத்திலே இல்லே.. நம்ம இலக்கு நிறைவேறதுல இருக்கு..." 

"சாரி காயு.... மேரேஜான புதுசுலே உன்படிப்பே வைச்சு யூஸ்லெஸ் இடியட்ன்னு நான் நிறைய கிண்டல் பண்ணியிருக்கேன்... நீ படிக்க போக விரும்புறேன் சொன்னப்போ கூட பிஏ பாட்டு படிச்சு என்னடி பண்ணப்போறே.. பாத்ரூம்லே பாட போறியா.. நான் நல்லா காஸ்ட்லியான லாக்தான் போட்டிருக்கேன்னு.... மியூசிக் சிஸ்டம் தண்டமா வாங்கி போட்டிருக்கேன்னு  உன்னே  ரொம்ப பேசிட்டேன் காவ்யா... ஆனா இன்னைக்கி இந்த ரெண்டவரி சிங்கிள் ட்ராக் கேட்கும்பொழுது தான் உன்திறமையே உணருறேன்.. மொத்த ப்ளாட்டும் உன்னே பத்தி பேசும் போது.... சாரி காவ்யா..  உன் திறமையே வீணாக்குனதுக்கு...," என கவலைப்பட்டவனிடம்,

"அது உங்க தப்பில்லேங்க.., படிஞ்சா பின்னாடி பெரிய உத்தியோகம், கைநிறைய சம்பளம்,  வீடு கார்ன்னு வசதியா வாழலாம்...  அந்தமாதிரி படிப்பு தான் பெரிசு என்ற மனநிலையிலே தான் நாமே வளர்க்கப்படுறோம்.. அதுலே யாராவது தப்பிதவறி அவங்க  மனசுக்கு பிடிச்ச படிப்பே படிச்சா  இந்த சமூகம் ஏதோ குற்றவாளி மாதிரிதான்ங்க பாக்குது... படிப்புங்கிறது அறிவு, ஆத்மதிருப்தி பெருக்கதான்  என நினைக்கிற மனோபாவம் எல்லாருக்கும் வரனும்... என் ஆனு என்னே புரிஞ்சிக்கிட்டதே போதும்..." என மார்பில் சாயந்தாள்.

"ஆமா டி.. நாளைக்கி நம்ம கொழந்தைங்க விரும்புற படிப்பே படிக்க வைக்கனும்..., இன்னொன்னும் நீ செய்யனும். பாதியிலே விட்ட உன்படிப்பே தொடரு காயு... என்ஆசையே இல்லே உன்ஆசையே... இல்லே இல்லே நம்ம ஆசையே நிறைவேத்து..." என அன்பு கட்டளையிட்ட தன்னவன் மார்பில் இதழ் பதித்தாள் காவ்யா.

தாயின் கருவறை இருட்டில்   உதைத்த என்அசைவில்..
வருடிய தாயின்  வளையோசை ஒலி
தந்தையின் இதழ் முத்தமொலி இரண்டும் நான் கேட்ட முதல்இசை...

நான் சிணுங்க தூங்கி விளையாடிய தந்தை  எழுப்பும் பலவித ஒலியும்,
நான் அழ தொட்டில் இட்டு அனனை பாடிய தாலாட்டு... இரண்டும் நான் உணர்ந்த முதல்இசை...

மாணவியாய் வகுப்பு மேசை நகர்த்திஎழுப்பிய ஒலி.
சாக்பீஸ் கரும்புகையில் முத்திமிட கேட்கும் ஒலி..
கேண்டின் சமோசா கடித்து தின்னும் ஒலி.
இவைகல்விசாலையில் நான் கற்ற கல்வியிசை..

மேளதாளங்கள் முழங்க. மந்திரங்கள் ஒலிக்க...
மங்கலநாண் பூட்டியவன் முன் நாணமுற்று  ம்க்கும் என அவனை அழைத்த ஒலியும்...
மெய் இணைந்து இதழ்சுவைத்து சிணுங்கல், கட்டிலின் ஓசையும் தாம்பத்யத்தின் இசை..

உயிர்வலியில் கத்தி அழுது ஈன்ற என்பிள்ளை அழுத முதல் அழுகை ஒலி...
அவனின் பசியமர்த்த மடியிலெந்தி,  என் உதிரஅமுது சப்பி பருகிய ஒலி.. என்பிள்ளை என்று போய் இவன்தாய் என சான்றோர் சொல்ல கேட்கும் ஒலி.. யாவும் பின்ளையிசை...

மரணப்படுக்கையில் என்னருகே அமர்ந்து அவனழைக்கும் அம்மா என்றஒலி என் இறுதிஇசை...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro