6. என்னை அறிந்தவன்
வழக்கம்போல் கல்லூரி, பின் ஜவுளி்க்கடையில் பகுதிநேர விற்பனையாளராக பணிமுடிந்து வெண்பா இல்லம் நுழைய "நில்லுடி எவன்கூட ஊர்சுத்திட்டு வரே.." என்ற சொல்லில் சிலையென நின்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் தந்தையென சொல்லி கொள்பவர்.
" பொறுப்பான பொண்ணுன்னு நினைச்சா... பொய் சொல்லி.ஊரே சுத்துறே... போனவாரம் ஒரு பையனோட ஹாஸ்பிட்டல் வந்ததே நான் பாத்தேன்.... முகம் வாடி போய் அவன் தோளுல சாஞ்சு உட்கார்ந்திட்டிருந்தே... சொல்லு எத்தனநாள் கருவே, எத்தன தடவே இதுமாதிரி கலைச்சியிருக்கே..." என்றார்.
தன் கன்னத்தில் விழுந்த அடியின் வலியை விட தன் தந்தை விளாசிய வார்த்தை சாட்டையில் வெண்பா நெஞ்சம் வெடித்து சிதறியது. தந்தை கௌரவமான உயர்பணியில் இருந்தும், அவரது எண்ணம் கீழ்த்தரமானது. சந்தேகப்புத்தி அதிகம். 42 வயதான் தன் அன்னை மற்ற ஆண்களிடம் பேசினாலே அவனுடன் இணைத்து ஒருவாரம், ஒருமகளாய் அந்த இடத்தில் நின்று கேட்கமுடியாத ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடுவார். ஆரம்பித்தில் எதிர்த்து நின்றவள் பெற்றோர் உடன்பிறப்பு என எந்த பின்புலமும் இல்லாத அன்னையின் பாசக்கெஞ்சல் அவளையும் அடிபணிய வைத்தது.
"சும்மா மனசுக்கு பட்டதே பேசாதே.... வொர்க் பண்ற இடத்தில திடீர்ன்னு புட்பாய்சன் ஆனதாலே கொலிக் கூட்டிட்டு போனான்...."
"நீ இப்படிதான் சொல்வேன் தெரிஞ்சுதான் உன்னேபத்தி விசாரிக்க பிரைவேட்டிடெக்டிவே அப்பாயிண்ட்மெண்ட் பண்ணே.... அவன்தான் நீ சரியா வேலைக்கு போகாம கண்ட பையன்கூட சுத்துறதா சொன்னான்.... உன் திருட்டுதனத்தே கண்டுபிடிக்க பத்தாயிரம் செலவு பண்ணி எவிடென்ஸ் கலெக்ட் பண்ணியிருக்கேன்..." என சில போட்டோக்களை தூக்கியெறிய அதில் யாரோ ஒருவனுடன் நெருக்கத்தில் அவள் இருப்பது போல பலபுகைப்படங்கள் இருந்தது.
தாயும் அவளை சந்தேகக்கண் கொண்டு காண, அவளோ உயிர்பிரியும் அளவு கெஞ்சி கத்தி மன்றாடியும் நம்ப மறுத்தனர் பெற்றவர்கள். இனி.ஞெ்சி பயனில்லை என உணர்ந்த வெண்பா,
"நீ வா... எந்த பொறுக்கி ரகசியமா கண்காணிச்சு இந்த எவிடன்ஸ் கொடுத்தான்னு சொல்லு... அவன் பல்லே ஒடைச்சி உண்மையே வரவைக்..." என்றவள் பேச்சு, "நான்தான்..." உள்ளே வந்த ஆண்மகனை கண்டு நின்றது.
"ஹாய்! ஐயம் அசிரன்... தேர்ட் ஐன்னு ஒரு பிரைவேட் டிடெக்டிவ்ஆபிஸ் வைச்சியிருக்..." என்றவன் பேச்சு இப்போது வெண்பா அறைந்த அறையில் நின்றது.
"இருக்கிற ரெண்டு கண்ணும் ஒழுங்கா தெரியலே... இதுலே தேர்ட் ஐய்யா.. பொறுக்கி... ஏன்டா பொய் சொன்னே..." என கோபம் தாளாமல் மீண்டும் அறைய செல்ல, அவனோ அவளின் கைப்பிடித்து தடுத்து முதுகுக்கு பின் வைத்து முறுக்க, அவளோ வலியில் துடிக்க, ஆணவன் பிடியை தளர்த்தாது பேசத் தொடங்கினான்.
"சார்! என்ன சார் சும்மா நிக்குறிங்க... உங்க பொண்ணுகிட்டே ஒருத்தன் மிஸ்பிகேவ் பண்றான்.. சும்மா நிக்குறிங்க... என்னே அடிக்கவாவது கை ஓங்க வேணாம்..." என அவனின் பரிகாச பேச்சில் என்ன செய்வதென அறியாது தன்தந்தை நின்றிருக்க, வெண்பா தன் முழங்கையால் அவன் வயிற்றில் ஓங்கி குத்தியவள் அவனை கீழே தள்ளிவிட்டு தந்தையின் பின் நின்றாள்.
"பாத்திங்களா சார்... உங்கப்பாெண்ணுக்கு என்னே சமாளிக்கிறஅளவு சக்திஇருக்கு.... ஆனா தன்னை காப்பாத்தின பிறகும் உங்க பின்னாடி உங்க கையை பிடிச்ச பிறகுதான் பாதுகாப்பே உணருறாங்க... அதான் தான் பொண்ணுங்க..." என்க அப்போதுதான் வெண்பா, தன்தந்தையின் கையை பிடித்திருப்பதை உணர்ந்து கரம்விடுத்தாள்.
"ஆனா நீங்க அவங்க மேலே டவுட் பட்டு ரகசியமா கண்காணிக்க ஆள் ஏற்பாடு பண்ணுனிங்க... சப்போஸ் நீங்க ஏற்பாடு பண்ண ஆளாலே இவங்களுககு ஆபத்து வந்தா என்ன பண்ண முடியும் உங்களாலே...," என்றதும் தந்தையவர் தலைகுனிய,
"சார்... நீங்க எங்கிட்டே வந்தோப்பவே உங்க மேலே ஏதோ தப்பிருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்... ஒருநாள்தான் உங்கபொண்ணுக்கு தெரியாம கண்காணிச்சேன்.... அப்போவே அவங்க கேரக்டரை தெரிஞ்சிக்கிட்டேன்... அடுத்த ரெண்டுநாள் ரகசியமா உங்களே ஃபாலோவ் பண்ணேன்... நீங்க வொர்க் ப்ளேஸ்லே பொண்ணுங்ககிட்டே வழிஞ்ச பேசுறே பாத்தேன்... உங்க அழுக்கு மனசு உஙகளே மாதிரியே மத்த ஆம்பளைங்களே பாத்தது... அதான் உங்க வைப் பொண்ணுன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சது.. உங்க ஏரியா நியூஸ்பேப்பர் போடுறவன், இஸ்திரிமேன், சிலிண்டர் டெலிவரி பாய் எல்லாரும் உங்க வீட்டு அட்ரஸ் சொன்னா பயந்தாங்க.. உங்களே கன்னாபின்னான்னு திட்டுனாங்க... அதிலேயும் உங்களே மாதிரி ஒருத்தன், நெருப்பு புகைன்னு இவங்களே தப்பா பேசினான்...,"
"வெளியே போடா... எதே விசாரிக்க சொன்னா எதே சொல்லுறே... வொர்க் பண்ற இடத்திலே பொண்ணுங்ககூட பேசுனா தப்பாடா..., நியூஸ்பேப்பர் பாரு எத்தன பொண்ணுங்க வழிதவறி போறாங்கன்னு... அதே பாத்து சந்தேகப்பட்டா என்ன தப்பு..." என தன்னை நிரூபிக்க வாதாட.,
"அதே நியூஸ்பேப்பர்லேதான் பெத்த பொண்ணு கூடபொறந்த தங்கச்சி இவங்கிட்டே தப்பா நடந்த ஆண்கள் பத்தியும் போடுறாங்க... அதே பாத்து உங்க பொண்ணு உங்க மேலே சந்தேகப்பட்டு விலகி போனா எப்பிடியிருக்கும் உங்களுக்கு..." என அசிரன் சொன்னதை கேட்க கூட முடியாத தந்தை செவிகளை பொத்தினார்.
"கேட்கக்கூட முடியலே... ஆனா நீங்க பேசுற தகாத வார்த்தையே கேட்கமுடியாமதான் உங்க பொண்ணு வேலைக்கு போறாங்க... அது தெரியுமா...." என்றதும் பெற்றோர் இருவரும் தன்மகளை பார்க்க விழிநீர் அவளையும் அறியாது வெளியேறின.
"சார்! குடும்பம் காட்டுற நம்பிக்கையிலேதான் பொண்ணுங்க தன்னம்பிக்கையா வெளியே நடமாடமுடியும்... ஆனா நீங்க அவங்களே அசிங்கப்படுத்தி உங்களே நீங்களே அசிங்கப்படுத்திகிறிங்க..., யாரோ ஒரு மூணாவது மனுசன் நான் சொன்னே நம்புன நீங்க உங்க பொண்ணு பேச்சே நம்பலயே.. இதுலே இருந்தாவது நீங்க எந்நளவு முட்டாளா இருந்திருக்கிஙகன்னு பாரு..."
"நான் உங்ககிட்டே பொய்தான் சொன்னேன் சார்... இந்த போட்டோஸ் எல்லாம் கிராபிக்ஸ்தான்.. உங்கப்பொண்ணு தங்கம்சார்... அனாவசியமா யாருக்கூடவும் பேசறதில்லே.... அளவான அலைப்பேசி பேச்சு.. கண்ணியமான ஆடையலங்காரம்... இந்த காலத்திலே சான்ஸ்சே இல்லே..., அவங்களே ஆண்களே வெறுக்கிற ஒரு பெண்ணா மாத்திடாதிங்க.. " என்ற அசிரனை வெண்பா இமைதழுவலின்றி நோக்கினாள்.
"தம்பி! நான் திருந்திட்டேன்... இனி சந்தேகப்படமாட்டேன்...." என்க அவனோ ஏளனசிரிப்பை உதித்தான்.
"நீங்க சொல்லுறதே நம்புன நான் டிடே்டிவ் ஆபிஸ் வைச்சியிருக்க முடியாது... அதேசமயம் ஓரளவு மாறுவிங்கன்னு நம்புறேன்... அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்... இனி வெண்பா, அத்தையை பத்தி தப்பா பேசுனா கவனிப்பு வேற மாதிரிஇருக்கும்..,என்றவன் பேச்சு புரியாது வெண்பாவின் தந்தை முழித்தார் வெண்பா அருகே சென்று ,
"ஐலவ்யூ வெண்பா... சாரி நான் போட்டோமார்பிங் பண்ணதுக்கு... உன்ப்பாவுக்கு உண்மையே புரியவைக்கதான் அப்பிடி பண்ணேன்... உன் முடிவே இப்போ சொல்லனுமில்லே... ஒரு ஓன் ஆர் டூ ஹவர்ஸ் வேணா கழிச்சு சொல்லு... உன்ப்பா புத்தி தெரிஞ்சுதான் நான் ரகசியமா காதலே சொல்லாம அவரு முன்னாடி சொல்லுறேன்.." என்ற அசிரன் அவனை பற்றிய விவரங்களை சொல்ல, தாயானவர் முதல்முறை தன்னவரை கைப்பிடித்து இழுத்து வெளியேஅழைத்து சென்றார் தன்மகளுககு நல்லவாழ்வு கிடைத்துள்ளது என மகழிந்து.
"இன்னும் பதிலே காணோம்..." என அசிரன் கேட்க வெண்பா, "ஒரு ஒன் இயர் வெயிட் பண்ணமுடியுமா... லவ் இப்போ பண்ணலாம்.. ஆனா மேரேஜ் டிகிரி முடிச்சப்பிறகுதான்..." என வெட்கச்சிரிப்புடன் சொல்ல, அடுத்தநொடி இருகாதல்பறவைகள் கண்டம்விட்டுகண்டு பறந்து சென்று டூயட் பாடியது.
எனை நோக்கும் நேர்க்கொண்ட பார்வையில் பெண்மை மதிக்கும் உன் கண்ணியம் கண்டேன்...
எனை உணர்ந்து நீ மொழிந்த இதழ்மொழியில் என்மேல் கொண்ட நம்பிக்கையை உணர்ந்தேன்...
எனை காதலியாய் காண, என் விருப்பத்தை கேட்க உன் செவிகள் காத்திருக்க, நான் மௌனியாய் உரைத்தேன்...
எனை விட்டு நீ தூரம் நிற்க, உன்சுவாசம் காற்றின் வெப்பம் உணர நான் நெருங்க உந்தன் இதயத்துடிப்பை கேட்டேன்..
எனை தந்து உனை பெறும் காதலில ஓர் உயிராய் கலக்கும் நாளைஎண்ணி இனி நாட்களை கடத்துவேன்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro