4. ஆண்மலர்
பல விருதுகளை வாங்கி குவித்த திரைப்படம் போல் மௌனமொழியில் சோககீதத்தில் மெதுவாய் அவளது கடந்தகாலம் மனத்திரையில் ஒட, தலையில் வைத்த மல்லிகைசரத்தின் ஸ்பரிசத்தில் நினைவுக்கு வந்தாள் பூமிகா.
"அண்ணி! இன்னும் ஒன்பதே மாசத்திலே நீங்க கட்டிக்கியிருக்கிற கூரைப்புடவை தொட்டிலா நம்ம வீட்டில தொங்கனும்..." என நாத்தனாராய் அவளவனின் தங்கை அறிவுரை வழங்கி பால்சொம்பை கையில் திணித்தாள்.
அதை பெற்றுக்கொண்ட அவளோ "என்னை பற்றிய உண்மை தெரிந்திருந்தால் இவ்வாறு பேசுவார்களா...." என மனதில் தன்னை தாழ்த்தி கொண்டவள், இந்த பால்சொம்பை தூரப்போட்டு, தலையில் சூடிய மலரை வீசியெறிந்து, இதோ இந்த புடவையில் உத்திரத்தில் தொங்கி உயிரைவிட வேண்டுமென அறிவிலியாய் நினைத்தாள்.
நாத்தனாரின் வெட்க சிரிப்பொலியில் உள்ள தள்ளப்பட, அறைக்கதவை தாழிட்டு திரும்பிய பூமிகா, அலங்கரிக்கப்பட்ட மலர்மஞ்சத்தில் அவளது மலரவன் ராகவ் அமர்ந்திருப்பதை கண்டாள். அவனது பெயர்கூட தந்தை எப்பொழுதோ யாருடனோ பேசும்போது செவியில் விழ தெரிந்து கொண்டது.
அவனின் முகம், ஏன் தனது திருமணஅழைப்பிதழை கூட அவள் இதுவரை பார்க்கவில்லை. திருமணமே வேண்டாம் என வீராப்பாய் இருந்த பூமிகா பெற்றவர்கள் காலில் விழந்து கெஞ்ச இந்ததாலியை மனதின்றி ஏற்றாள்.
தன்னை பற்றிய நினைவில் இருந்தவள் ராகவின் கரம்மலர் ஸ்பரீசத்தில் உணர்வு பெற, அவளது உடல் வியர்வையில் குளித்திருந்தது.
"இப்படி உட்காரு..." என அவளை இழுத்து தனதருகே அமர வைத்தவன் பால்சொம்பை வாங்கி மேசையில் வைக்க, அவளுக்கோ இதயமே வெடித்து சிதறிவிடும் போல் இருகக தனதாடையில் கையை இறுக பற்றிக்கொண்டு தன்னை சமன்படுத்தினாள்.
"பூமா..." என்ற அவன் அழைப்பில் பனிகூழின் குளுமை தெரிந்தாலும் அவளுக்கு அமிலத்தை காதில் ஊற்றியது போலிருந்தது. மீண்டுமொரு முறை "பூமா" என்றழைக்க, கடினப்பட்டு இதழ்துடிக்க பேசத் தொடங்கினாள்.
"அப்பா! உங்ககிட்டே என்னைபத்தி சொன்னாரா இல்லையா எனக்கு தெரியாது... ஆனா நான் உங்களுக்கு இதே மேரேஜ் முன்னாடியே சொல்லியிருக்கனும்.. ஆனா சொல்லமுடியாத சூழ்நிலை.., சாரிங்க.. பாதிக்கப்பட்ட நான் சொன்னப்பிறகு உங்க முடிவு எதுவானாலும் எனக்கு ஓகே., நாலு வருசத்துக்கு முன்னாடி காதல்ன்ற பேரிலே தொல்லை கொடுத்த ஒரு பொறுக்கியே செருப்பாலே அடிச்சேன்..., தான்பட்ட அவமானத்துக்கு பழிக்கு பழி வாங்குறேன்னு என் பெண்மையே அழிச்சு...." அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழுதவளின விழிநீரை துடைத்தான் ராகவ்.
"எனக்கு தெரியும் பூமா... இப்போ இல்லே உன் பதினெட்டு வயசிலே... உனக்கு நடந்த கொடுமைக்கு அவன்மேலே போலீஸ்லே கம்ப்ளைண்ட் பண்ணதுக்கு நீ சம்மதிச்சுதான் அவன்கூட இருந்தேன்னு அவன் ஜோடிச்ச சாட்சிகளே வைச்சு உன் பெண்மையே கேவலப்படுத்தினப்போ... கொஞ்சமும் கலங்காது அவன்மேலே எதாவது லீகலா ஆக்சன் எடுக்க முடியுமான்னு உன்ப்பாகூட என் சீனியர்கிட்டே வந்தியே... அப்போதான் உன்னே பர்ஸ்ட் மீட் பண்ணேன் பூமா..., என ராகவ் சொல்ல ஆச்சரியத்துடன் தன்னவனை பார்த்தாள்.
"ஆமா.., நான் வக்கீல்தான் பூமா... என் சீனியர்கிட்டே பேசிட்டிருந்தப்போ ஒரு நிலையிலே பேசமுடியாம திணற, நான்தான் தண்ணி எடுத்து கொடுத்தேன்... அப்போ ஏதேச்சையா என்விரல் உன்மேலே பட்டதுக்கு ஒரு எரிமலை பார்வை பாத்தியே... அந்த நெருப்பு கக்கும் பார்வை ஏதோ பண்ணிச்சு..., கேஸ் விசயமா உன்வீட்டுக்கு பலமுறை வந்திருக்கேன்... ஆனா நீ அங்கே ஒரு உயிரினம் வந்திருக்குன்னு கூட தெரியாம உட்கார்ந்திருப்பே... இல்லே ரூம்லே படுத்திருப்பே...,."
"கோர்ட்லே ஆஃப்னட் லாயர் உன்னே கேவலமா பேசினப்போ ஒடைச்சி போய் அழதப்போ கூட ஒரு சராசரி மனுசனா உன்மேலே பரிதாபம் மட்டும்தான் வந்தது... கடைசியிலே மீதியிருக்கிற மானமாது மிச்சமிட்டும்ன்னு அவுட் ஆப் கோர்ட் பேச உன்வீட்டுக்கு வந்தப்போ.... வெளியே அவனோட லாயர் உனக்கு நடந்த துரோகத்துக்கு விலைபேசிட்டிருந்தான்... உன் ரூம்லே இருந்து ஒரு சவுண்ட்..., மனசிலே ஒரு கூரியாசிட்டி.. அதான் தள்ளி வந்து ஒட்டு கேட்டேன்.... அத்தை உங்கிட்டே வெளியே உன்கற்புக்கு வெலை பேசுறாங்க... நீ சிறுவர்மலர் புக்லே பஸ்சில்ஸ் கலர் பண்ணிட்டிருக்கே.... படுபாவி இந்த பழக்கத்தே விட மாட்டியான்னு திட்டுனாங்க... அப்போதான் உன் குழந்தைமனசு என்னே உன்பக்கம் ஈர்த்தது.... நீ அந்த சம்பவத்துக்கு அப்புறம் காலேஜ் போகலன்னு தெரிஞ்சது... நீ திரும்பவும் காலேஜ் போகனும்.. அந்த குழந்தைதனமிக்க பூமா திரும்ப வரனும்ன்னு நினைச்சேன்..., என்ன பண்ணலாம் யோச்சிப்ப அந்த சிறுவர்மலர் புக் நியாபகம் வந்தது... உன்தெருவிலே பேப்பர் போடுற ஆளே புடிச்சு அந்த சிறுவர்மலர் புக்லே உனக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய வாசகங்கள் அடங்கிய பிட்நோட்டீஸ் வைச்சேன்... டவுட் வரக்கூடாதுன்னு உங்க ஏரியாவிலே போடுற எல்லா பேப்பர்லயும் வைச்சேன்.... நீயும் அதே படிச்சு மனசுமாறி காலேஜ் போக தொடங்குனே.... என்பூமாவுக்காக போன வாரம்வரைக்கும் அதே பண்ணேன்...," என்று ராகவ் சொல்ல அவளோ தனக்கே தெரியாமல் தன்னிலை மாற எண்ணியவனை நன்றியுடன் கண்டாள்.
"கொஞ்சநாள் கழிச்சுதான்டி என்மனசில இருக்கிறது காதல்ன்னு உணர்ந்தேன்... ஆனா ஒன்னு மட்டும் முடிவு பண்ணேன்... உன்மனசில வேற ஆணுக்கு இடம்கொடுத்தா பேசாம விலகிடனும் என்ற எண்ணத்திலேதான் பிட்நோட்டீடஸ் தொடர்ந்தது... ஆனா என்லக் எவனும் வரலே... நீ பிஜி முடிச்சதும் உன்னே தேடி வந்திருப்பேன்... உன்னோட கணவனா என்கடமையை முடிச்சப்பிறகு தான் மேரேஜ் பண்ணனும் ஒரு வைராக்கியத்தோட இருந்தேன்..." என சொன்னதும் அவனது மடியில் தலைவைத்து அழ தொடங்கினாள்.
"அப்போ! அவனுக்கு வேற கேஸ்லே ஆயுள்தண்டனே வாங்கி கொடுத்த வக்கீல் ராகவ்கண்ணா நீங்களா..." என விசும்பலுடன் உடல் குலுங்கியவாறு கேட்க, அவனோ ஆமாம் என பதிலளித்தான்.
" என்னே சொல்றதுன்னு தெரியலே... என்னே பெத்தவங்ககூட கற்பே பறிகொடுத்தவேன்னு பல தடவே தூத்தியிருக்காங்க... ஆனா நீங்க எனக்கு நடந்த கொடுமைன்னு சொல்லி, கற்பு உடல்ல இல்லே மனசுலன்னு சொல்லாம சொல்லிட்டிங்க.... எனக்காக... எல்லாம் எனக்காகவா செஞ்சிங்க..." என ஒருவித பரிதவிப்போடு கேட்க,
"ம்ம்..." என அவளை தூக்கி அமர வைத்த ராகவ், "பூமா... ஐலவ் யூ டி..." என அவளது பதிலுக்கு காத்திருக்க,
"ராணா! " என்ற அழைப்பில் அவளது மனம் அறிந்த ராகவ்கண்ணா காதலுடன் அவளை காண அவளோ சூர்யகாந்தி மலராய் தலைகுனிய, தாடைதூக்கி தன்னை பார்க்கவைத்தான். அழுது கண்மை களைந்திருப்பளை கண்டு மென்நகை புரிந்தான்.
"என் வொய்ப்க்கு அறிவு வேணா சிறுவர்மலர் படிக்கிற அளவு சின்னப்பொண்ணா இருக்கலாம்.. ஆனா மேக்கப் போடுறதுல..." என பரிகாசம் செய்ய,
" நானில்லே... உங்க தங்கச்சிதான்..." என சிணுங்கியவளிடம்,
"உனக்கு பிடிக்கலன்னா போய் வாஷ் பண்ணிட்டு வா...சேரியும் சேஞ்ச் பண்ணிக்கோ..." என அவளது ராணா சொல்ல, அவளோ குளியலறை புகுந்தாள். பத்து நிமிடத்தில் வெளியே வந்த அவனது பூமா, அறையின் அலங்காரம் கலைக்கப்பட்டு சாதாரணமாய் இருப்பதை கண்டு தன்னவனை நினைத்து பெருமிதம் கொண்டாள்.
"தேங்க்ஸ்...." என்றவாறு மெத்தையிலிருந்த தலையணை போர்வையை எடுத்த பூமாவின் கரம்பிடித்து தடுத்தான்.
"நீ எனக்கு உரிமையானவே.. உன்னே கீழே படுக்க விடமாட்டேன்..." என்க,
"இல்லே.... உங்க மனசு தெரிஞ்சாலும்... என்னாலே சடனா மத்ததுக்கு.." என அவள் தயங்க,
"நான் என் உரிமையை கட்டாயப்படுத்தி பெறமாட்டேன் பூமா... அதுக்காக என் உரிமையை விட்டு கொடுக்கவும் மாட்டேன்..." என்றவன் புரியாமல் முழித்த அவளை தன்னருகே படுக்க சொன்னான். அவளோ தயக்கத்துடன் படுக்க, அடுத்தநொடி அவளின் இடையில் கைப்போட்டு தன்னுடன் இணைத்து கொண்டான். ஏனோ அந்த ஸ்பரிசத்தில் மலரிதழைவிட மென்மையை உணர்ந்தவள், நீண்ட வருடங்களுக்கு நிம்மதி கலந்த பாதுகாப்புடன் விழிமூட, அவனோ தன்காதல் தன்கையில் கிடைத்த திருப்தியில் விழிமூட, நித்திரதேவியின் அருள் விரைவில் கிடைத்தது. மறுநாள் விடியலில் பத்துமணிக்கு பூமிகாவின் அத்தையம்மா கதவுதட்டும் வரை உறக்கமும் அணைப்பும் களையாது மயக்கத்தில் இருந்தனர்.
உன் காதலால் புதுப்பிறவியெடுத்து மனஅழக்கு களைய, மருத்துவ செவிலியரின் ஆவாரம்பூ ஸ்பரிசம் உணர்ந்தேன்...
உன்மீசை தீண்டலில் தந்தையில் கரங்களில் முதலில் தவிழ்ந்து அவரது கறுப்புவாடாமல்லி மலர் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்..
உன்அணைப்பில், முதல்முறை தாயின் உடல்சூட்டில் உறங்கும் மழழையாய் ரோஜாமலர் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்..
உன்காதலில் திளைத்து மண்ணடி செல்லும் வேளையிலும் உன்கரமலர் ஸ்பரிசம் உணர்ந்தே உயிர்விட வேண்டும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro