2. கட்டாயக்கல்யாணம்
என்றும் பதினாறாக விளங்கும் மார்கண்டயேருக்கு சிவபெருமான் அருளிய திருக்கடையூர் திருக்கோவில் உறவுகளால் நிரப்பப்பட்டிருக்க, மணமகள் வேதவல்லியின் வதனம் எலுமிச்சை வண்ணம் தாண்டி நாணத்தால் கோவைபழமாய் உருமாறியது. அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணத்தால் தேவதையாய் ஜொலித்து கொண்டிருந்தாள்.
இங்கோ மணமகள் விச்சு என்கிற விஸ்வநாதன் தனக்கு வேண்டாமென சொல்லியும் குடும்பத்தார்கள் கேட்காது செய்து வைக்கும் இந்த கட்டாயத்திருமணத்தில் பாதிமனதோடு தயாராகி கொண்டிருந்தார். தோளி்ல் பட்டுத்துண்டு அணிவிக்க அதை கீழே போட்டு ஒழுங்கு காட்ட, அருகிலிருநத பத்துவயது சிறுவன் ரெமோ(ரெ. மோகன்) அதை தோளில் போட்டு விச்சுவை அதட்ட அமைதியாய் அமர்ந்தான்.
ரேமோவின் கரம்பிடித்து விச்சு மணமேடையில் அமர, புரோகிதர்கள் அவர்கையில் காப்பு காட்ட, கிளிப்பிள்ளையாய் அவர் சொன்ன மந்திரங்களை திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் வேளை, நிலம்பதியாது மென்நடையிட்டு வந்த கமலமலராளை இமைக்காது பார்த்த விச்சு, ரேமோவின் தலைதட்டலில், சிணுங்கலுடன் தலைகுனிந்தார். அவரருகே அமர்ந்த வேது யாருமறியாவண்ணம் அவர் தொடையை கிள்ளி வைக்க, தன்னை கண்டு முறைக்கும் விச்சுவை கண்டு வேது கண்ணடிக்க, அதன்பிறகு விச்சுவின் தலை நிமிரவில்லை. பின் சடங்குகள் முடித்து, உறவுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட மாங்கல்யம் விச்சுவின் திருக்கரத்தால் வேதுவின் சங்கு கழுத்தில் ஏறியது.
புகைப்படகலைஞர் அழகாய் அந்த நொடியை படமியில் பதிவு செய்துக்கொண்டிருந்தவர் மாப்பிள்ளையை சிரிக்க சொல்ல, விச்சுவின் பொக்கை வாய் சிரிப்பில் அங்கிருந்த உறவுக்கூட்டமே உவகையில் சிரித்தனர்.
ஆமாங்க இன்று விஷ்வநாதன் ஐயாவின் சதாபிஷேகம். அதாவது ஒருவரது வாழ்நாளில் ஆயிரம் பிறைகள் கண்டு, அவரது 80ஆம் வயது பிற்பகுதியில் பேரக்குழந்தைகளால் நடத்தப்படும் கிடைக்கறியா நிகழ்வு அது. விஸ்வநாதன் தாத்தாவிற்கும் இந்த திருமணம் செய்வதில் இருந்த பிரச்சனை அவரது பொக்கைவாய். அவரும் செயற்கைபல் பொருந்தி கொள்கிறேன் என வீம்பு பிடிக்க அவரது பனிரெண்டு பேரக் குழந்தைகளும் இதே பொக்கைவாயுடன் மணமேடை ஏறவேண்டும் என செல்லக் கட்டளையிட அவரோ மறுக்க கட்டாயப்படுத்தி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
தனது துணைவரின் பொய்க்கோபம் முகத்தை கண்ட வேது, " ரேமோ... தாத்தா ஏன்டா மொகத்தே இப்படி முழம்கணக்கிலே தொங்க போட்டிருக்காரு... உறவுக்காரங்க பாத்தா என்ன சொல்லுவாங்க..." என அவன் காதை கடிக்க,
"அதுவா பாட்டி! தாத்தா என்னோட இருபது வயசிலேயும் இந்த வேதுக்கு தாலிகட்டினேன்... அறுபதாவது வயசிலேயும் இவதான் பொண்ணா நிக்க வைச்சிங்க... இந்த எண்பது வயசிலாவது வேற நல்ல கிழவி கழுத்துல தாலி கட்டுறேன்னுதான் அடம்பிடிச்சு மொகம் இந்த லட்சணத்துல இருக்கு..." என தாத்தாவை கோர்த்துவிட ஓட, அது தாத்தாவின் செவியை அடைய அதிர்ச்சியில் உறைந்து போனார். ஓமக்குண்டத்தின் அக்னியை விட, அனலாய் அமர்ந்திருந்த மனையானை சமாளிக்க தெரியாது பயத்துடன் பார்த்த தாத்தா தனது பொக்கைவாய் காட்டி சிரிக்க, பெண்ணவர் முகம் அனிச்சம்மலராய் மலர வேது தலைகுனிந்தார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro