18. முட்டு தாத்தா
"வேதா...! கெட் அப்... ஊரு வந்துடுச்சி..." என ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சக்தி என்கிற சக்திவேல் அவள் நெற்றியில் இதழ்பதித்து எழுப்ப,, அவனது காதல்மனைவி ஸ்வேதா கடினப்பட்டு இமைபிரித்தவள் இறக்கை விரிக்கும் பறவையாய் சோம்பல் முறித்த அழகில் அவள் மதிமறந்து போனான்.
காரிலிருந்து இறங்கியவள் அந்தபழைய வீட்டை கண்டு மதிகலங்கிப் போனாள். இவர்கள் வருகை முன்கூட்டியே தகவல் சொல்லப்பட்டதால் வெளியே பசுஞ்சாணம் மெழுகி, பச்சரிசி மாவால் பெரிய கம்பிக்கோலம் அழகாய் போடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே போனால் அவளின் படுக்கையறையே விட மிகச் சிறிதான சிமெண்ட் தளம் வீடு.. பத்துக்கு இருபது என்ற வகையில் ஒரு ஹால், பத்துக்கு எட்டு என சமையலறை, அந்த ஹாலிருந்து மேலே மாடிக்கு செல்ல மரத்தாலான அகலம்குறைந்த படிக்கட்டுகள், அதற்கு செல்லும் வழியை மூட அழகான கதவு, அதை திறந்து மேலே சென்றால் கீழே உள்ள அளவிற்கு தடுப்புகள் இல்லாத பரந்த அறை என இருந்தது.
ஏமாற்றம் சலிப்பு கலந்த உற்சாகமில்லாத வதனத்துடன் அங்கிருந்த பழங்கால பெரிய தேக்கு கட்டிலில் அப்படியே பின்பக்கம் சரிந்தாள்.
"இடியட்! ஹனிமூன்னுக்கு டேட் இத்தாலிக்கு டிக்கெட் புக் பண்றேன்னு சொன்னாரு... அழகான ரோம் வெனீஸ்.. ச்சே... அதெல்லாம் விட்டுட்டு இந்த வரபட்டிக்காட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே.... உன் டேஸ்ட் ஏன்டா இவ்ளோ மட்டமா இருக்கு..." என காலையிலே வறுத்தெடுக்க, அந்த குளிருக்கு அதை இதமாய் உணர்ந்தான். அவளருகே படுத்து அவள் கூந்தலில் விரல்கோதி விளையாடியவாறு,
"வேது! உன்னே செலக்ட் பண்ணே போதே புரிஞ்சிக்க வேணாம்..." என்றதும் சிலபல அடி, கடிகளை வாங்கிக் கொண்டான்.
"டெப்ணட்லி ரிட்டன் போகும்போது உன் ஓப்பினியன் ரிவர்ஸாகும்..."
"என்னமோ உளர்ற பாக்கலாம்..., நான் ப்ரஷ் பண்ணனும்... இங்கே பாத்ரூம் எங்கே சக்தி..."
"கீழே பின்பக்கம் பாத்ரூம் அண்ட் வாஷ்ரூம் செப்ரெட்டா இருக்கும்... இது பழையகாலத்து வீடு டா.. தென் இந்தியன் ஸ்டைல் டாய்லெட்தான்... அட்ஜஸ்ட் பண்ணிக்க.." என்ற கெஞ்சியவனை முறைத்து விட்டு தனது துணிகளை எடுத்துக் கொண்டு வெளியேறினாள். இவள் குளித்து அலங்காரம் செய்வதற்குள் அவனும் குளித்துவிட்டு வர, அவனது ஒன்றுவிட்ட சித்தப்பா வீட்டிலிருந்து விருந்துண்ண அழைக்க வந்தனர்.
அவனும் அவனது குடும்பக்கதைகளை பேசியவாறு அழைத்து சென்று உணவுண்டு, திரும்பி.வரும்போது அவனுக்கு உறவு என பலகதைகள் கூறி ஆங்காங்கே நின்று பேசி பல தீநீர், தேநீர், குளிர்பானங்கள் என வயிற்றை நிரப்பிக்காெண்டு இல்லம் திரும்ப மதியம் மூன்றுமணிகள் ஆகிவிட்டன. களைப்பில் வீட்டிற்குள் செல்லாது இருவரும் திண்னையில் அமர்ந்தனர்.
"இந்த திண்னையிலேதான் என்மூட்டுதாத்தா..." என்றதும் பெண்ணவள் முழிக்க,
"மிட்டாய்தாத்தா டி... மிட்டாய்தாத்தானு கூப்பிடவராம சின்னவயசுலே முட்டுதாத்தான்னு கூப்பிட்டது அப்பிடியே பழகிட்டேன்... என் கொள்ளுதாத்தா அவரு சின்னதா மிட்டாய்கடை போட்டிருந்தாரு... மூணுபசங்க அதாவது என் தாத்தா அவங்க ப்ரதர்ஸ் முட்டுதாத்தா சொத்தே எழுதிவாங்கிட்டு வீட்டே விட்ட தொறந்திட்டாங்க... ஆனா அவரு மனசு சோர்ந்து போகாம இதுலே மிட்டாய்கடை போட்டு பொழைச்சாரு... என்ப்பா கல்யாணத்துக்குகூட வராம வைராக்கியமா இருந்தவரு.. ஆனா சார் பொறந்து சின்ன ஹெல்த் இஸ்யூல செத்து போயிடுவேன்னு டாக்டர் சொன்னதும் பயத்தடிச்சு ஓடிவர அவர பாத்து சிரிச்சதாகவும் தாத்தா குலதெய்வம் விபூதி பூசிவிட்ட அஞ்சுநிமிசத்துல டெஞ்சர்ஜோன்லே இருந்து வெளியே வந்ததா மம்மி சொல்வாங்க.. அப்புறமென்ன நடக்க ஆரம்பிச்சதும் நானே தாத்தா கடைக்கு பப்பி ஷம் போஸ்லே நடந்து வந்து பாதி தேன்மிட்டாய், கம்மரக்கட்டு, விரல்அப்பளம், சூடமிட்டாய்.. பொறிஉருண்டைன்னு வயித்தே நிரம்பி சோட்டா பீம் மாதிரி நடந்து போவேன்... அப்பாவுக்கு ட்ரான்ஸ்பராகி பத்துவயசுலே சென்னை வந்த ஒன்மன்த்லே தாத்தா இறந்துட்டாரு... தாத்தாவாலே உயிர் பொழச்சி வந்த நானே பிரிவுவலியே கொடுத்து அவர் சாவுக்கு காரணமாயிட்டேன்னு ஊர்சனமெல்லாம் சொன்னாங்க... எவ்வளவு வலி தெரியுமா... அதான் என்வைப்பே முட்டுதாத்தா ஆன்மா சுத்திவர இந்தவீட்டுக்கு பர்ஸ்ட்கூட்டிட்டு வந்து ஆசிர்வாதம் வாங்க நெனைச்சேன் வேது.... உன்னையே ரொம்ப கஷ்டப்படுத்துறேனா..." என்றவன் விழிகளில் துளிர்ந்த நீரை துடைத்தவள்,
"இல்லே டா.... ஐ யம் சோ லக்கி..." என்ற வேதா அவனை உள்ளே அழைத்து சோபாவில் அமர்ந்து, அவனை தன்மடியில் தலைவைத்து உறங்குமாறு உத்தரவிட்டாள்.
பின் ஸ்வேதா அவனது முட்டுதாத்தாவுடன் கழித்த பொழுதுகளை நினைவூட்டும் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்ல வேண்டினாள். பெருமாள் கோயில் சிறிதாய் இருந்த ஆஞ்சிநேயர் சன்னதி, அதில் ஸ்ரீராம ஜெயம் எழுதி மடித்து கட்டிய காகித மாலைகள், அங்கு வைக்கப்படும் செஞ்சாந்து பொட்டு, நீச்சலடித்து பழகிய அழகிய தாமரைக்குளம், உளுந்து தோட்டத்தில் அதிகாலை உளுந்துகாய் பறிக்க தாத்தாவுடன் சென்று கம்மங்கூழ் குடித்த அனுபவம், பனைமரத்தில் அப்போது பறித்த நூங்கை கைவிட்டு வழித்து கையொழுக எடுத்துண்ட அனுபவம், தாத்தா இவனை சாப்பிட சொல்லிவிட்டு மறைவாக சென்று கள் குடித்தது.., மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொடுத்த போது இவன்விழ செல்ல, அவனை தாங்கிக்காெண்டு தாத்தா வாங்கிய காயம், கோவில் சுவற்றில் வகுப்பு பிரிவு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது, என அடுக்கிக் கொண்டே போனான்.
தன் பால்யவயதிற்கு அழைத்து சென்ற அவனுக்கு சோர்வு நெருஙகினாலும் . அவள் சிறிது சோர்ந்து போகவில்லை மனதளவில். இல்லத்திற்கு செல்லும் வழியில் கார் பஞ்சராகி முழித்துக்கொண்டிருக்க, அவ்வழியே வந்த யாரோ ஒருத்தர் அவனை அடையாளம்கண்டு மிட்டாய்தாத்தா பேரனா எனக்கேட்டு அவர் வந்த டிவிஎஸ் 50யை அவர்களுக்கு கொடுத்துடன் கையில் கொண்டு கிழங்கு போன்ற ஒன்றை அவன் மறுக்க கையில்திணித்தார். தன் சோர்ந்தமுகம் கண்டு தங்களுக்கு உதவிசெய்து அவர் தோட்டம் பக்கமென நடந்து சென்ற அப்பழுக்கற்ற மனிதம் கண்ட ஸ்வேதா பிரமித்து நின்றாள்.
களைப்புடன் வந்தவளை அந்ததெரு சிறுமிகள் கிணற்றில் குளிக்க அழைத்து செல்ல, சக்தி மதிய சமையலை கவனித்தான். குளித்து டிசர்ட், 3/4 அணிந்து வந்தவள் வாயிற்படிக்கட்டில் கால்வைத்த போதே புதுவிதமான சமையல்வாசம் அவளை சமையலறைக்கு கூட்டிசென்றது.
"என்ன சக்தி குக் பண்றே..." என வட்ட வடிவ பூப்போல் அசப்பில் அச்சுமுறுக்கு போலிருந்ததை காட்டி கேட்க,
"இது தாமரைத்தண்டு வேது... பச்சையாவே சாப்பிடு... செம்ம டேஸ்ட்டா இருக்கும்... நான் வெஞ்சனம் சாரி சாரி பொரியல் பண்ணிட்டிருக்கேன்... இதுவும் டேஸ்ட்டா இருக்கும்... தாத்தா சமையலே தனி தெரியுமா...." என்றவனின் நளப்பாகத்தில் கைக்குத்தல் அரிசியில், சுண்டைக்காய் போட்டு செய்த வத்தல்குழம்பு, தக்காளிரசம், தாமரைத்தண்டு பொறியல், அப்பளம்மென வயிறு நிறைய உண்டாள். பின் நன்கு ஒரு தூக்கம் போட்டு மாலை எழுந்து வர முட்டுதாத்தாவிற்கு பிடித்த மகறுப்புஉளுந்துபயிறு இனிப்பு சண்டல் வைத்து கொடுக்க, உண்மையிலே அவளுக்கு ஒரு புதுவித உலகத்திற்கு அழைத்து வந்த உணர்வு தோன்றியது.
புதுவித ரசனையுடன் தன்னவனை வளர்த்த முட்டுதாத்தாவிற்கு மானசீகமாக நன்றி கூறியவள், இனி ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என காதலுடன் தன்னவன் கன்னத்தில் இதழ்பதித்து தன் விருப்பத்தை உரைக்க, அவனும் அவளை தன்னுடன் அணைத்து கொண்டு சரியெ செயலில் காட்டினான்.
ஆனால் அந்த விருப்பம் தொடர்ந்து நிறைவேறுமா.. அடுத்து வருவதற்குள் பாதிவிளைநிலங்கள் கட்டிடநிலங்களாக மாறாமல் இருந்தாலே உலக அதிசயம்தான். அடுத்த சந்ததிகளுக்கு எடுத்து சொல்வதற்காவாது சில பொக்கிஷங்களை பாதுகாப்போம்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro