15. ஜில்லுன்னு ஒரு காதல்
கோவை டூ பெங்களூரு செல்லும் அந்த குளிர்சாதனவசதியுள்ள தனியார் பேருந்துவில், ஒரு புதுமணத்தம்பதியர் அவர்களின் பெற்றோர்கள் என ஆறுநபர்கள், சற்று அதிகப்படியான சுமைகளுடன் ஏறினர்.
முன்பதிவு செய்யப்பட்ட கீழத்தள படுக்கைகளில் பெற்றோர்களை அமர வைத்த விவேக், தன்னவனை கடைசியாய் இருந்த மேல்படுக்கையில் அமர வைத்தான். சிலநிமிடங்களில் வந்துவிடுவதாக கூறி கீழே இறங்கினான. ஏனோ புதுஇடம் செல்லும் அச்சமா பெற்றோரை பிரிய போகும் ஏககமோ அவனின் பாதியான பூங்குழலி வாடிய முகத்துடன் காணப்பட்டாள்.
பத்து நிமிடங்களில் பேருந்துவில் ஏறிய விவேக் பெரியவர்களுக்கு வாழைப்பழங்கள் கொடுத்தவன், தங்கள் இருவருக்கும் தேவையான சில நொறுக்குத்தீனிகளுடன் மேலே ஏறி குழலியருகே அமர்ந்து திரைச்சீலையை மூடினான்.
பேருந்து புறப்பட, மொபைலில் பாடல் கேட்க வசதியாக தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்தவன் முதலில் குழலிக்கு பிடித்த டெய்ரிமில்க் பெரிய சாக்லேட்டை கொடுக்க அவளோ வேண்டாமென மறுத்தாள். பின் ஒவ்வொரு திண்பண்டங்களாக கொடுக்க அதை மறுத்தவள் விழிகள், மழை எப்பொழுது வேணாலும் பொழிய காத்துக் கொண்டிருக்கும் செவ்வானம்போல நீர்திரண்டு காணப்பட்டது.
"பாவிமகளே! இந்த ஏழுநாளா நேரம்தவறாம தலைநிறைய மல்லிப்பூ வைக்க தெரியுது... ஆனா மனுசன் நிலைமை கொஞ்சமாவது புரியுதா..." என புலம்பியவனின் ஒருமனம் , "டேய்! பேரண்ட்ஸ் சொன்னாங்கன்னு கட்டிக்கிட்டே... இவே அப்பன் அந்த பெரியமீசை அய்யனாரப்பன் பழக்கம் அது இதுன்னு சொல்லி போன்லேகூட பேசவிடலே... ஒருவேளே இவளுக்கு மேரேஜ்லே இஷ்டமில்லையா... இல்லே வேறே யாரையாவது லவ் பண்ணியிருப்பாளா..." என இந்த ஒருவாரங்களாக மனது அரித்தாலும், தான் கேட்க போய் இவள் ஏதாவது கத்திவைத்தால், அவனது மாமானாரின் பெரிய மீசையும் பயமுறுத்தும் கோலிக்குண்டு கண்களும் நினைத்து அமைதியாய் இருந்துவிட்டான். இன்று பேருந்துவில் அனைவரின் முன்னிலையிலும் கத்த மாட்டாள் என தைரியத்தில் எப்பிடியும் கேட்டுவிடுவது என முடிவுடன், "குழலி.." என அழைத்தான்.
"ம்ம்.." என ஓசை வர,
"இல்லே அம்மா அப்பாவா பிரிய கஷ்டமாயிருக்குா..." என்றதற்கு இல்லையென தலையாட்டினாள்.
"அப்போ ப்ரெண்ட்ஸ்.." என்றதற்கும் இல்லையென பதில்வர,
" ஹையர் ஸ்டேடி போக முடியலைன்னு..." என்றதற்கு பலமான தலையாட்டலில் அவளின் படிப்பு திறனை அறிந்த விவேக்,
"வே... ற... வேற.. வேற யாரையாவது லவ் பண்றியா..." என்றதற்கு ஆம் என பதில் கிடைக்க அவன் சிறுஇதயம் கோடிஅணுக்களாய் நொறுங்கியது.
"எனக்கு என் ஜில்லு வேணும்... அவன் இல்லாம இருக்கமாட்டேன்..." என அவனது மடியில் தலைவைத்து அழ ஆரம்பிக்க, அவனால் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.
"சாரிங்க... உங்களுக்கு கஷடமாதான் இருக்கும்... இருந்தாலும் ஐலவ் ஜில்லு... இப் யூ டோண்ட் மைண்ட் ஜில்லுக்கூட ஒருதடவை வீடியோ கால் பேசிக்கிட்டா.... ப்ளீஸ்..." என அவள் கெஞ்ச, தலையாட்டி மொம்மையாய் சரியென்றான்.
அவனது மொபைல்டார்ச் லைட் வெளிச்சத்தில் கால்செய்ய , அவளது தமக்கையிடம் விவரம் சொல்ல, அலைப்பேசி ஜில்லுவிடம் காட்டப்பட, ஜில்லு குரலில் குழலி மகிழ்ந்தாள். விவேக் அதை கண்டு அதிர்ந்து நிற்க அவன்புறம் கேமரா திரும்ப கொழு கொழுவென, பட்டுப் போன்ற கேசத்தில் ஜெர்மன் செப்பையரடு டாக் ஜில்லு அவனை கண்டு வெறித்தனமாக குரைத்தது. விவேக் பயந்து போர்வை எடுத்து மூடிக்கொள்ள. அதைக்கண்டு சிரித்த தன்னவளின் சிரிப்பொலியை முதல்முறை கேட்ட விவேக் போர்வை.விலக்கி பார்க்க மெய்மறந்து நின்றவன் மீண்டும் ஜில்லு குரைப்பில் மெய் குலுங்கி போனான.
அதனிடம் சிறிது நேரம் கொஞ்சிய பூங்குழலி அழைப்பை தூண்டித்து விவேக்கிற்கு நன்றியுரைத்தாள்.
" உன்வீட்லே தானேபைவ் டேஸ் இருந்தேன் நான் பாக்கவே இல்லே..."
"அதுக்கு நான் உங்களே மேரேஜ் பண்ணிக்கிறது பிடிக்கல்லே... பர்ஸ்ட்டைம் உங்க போட்டோ பாத்தப்பவே அது கோபத்திலே கடிச்சு கொதறிடிச்சு.. அம்மாவும் மூணுடைம் ஏதோ ரீசன்சொல்லி உங்க வீட்டிலேயிருந்து போட்டோஸ் வாங்கியும் அது..." என்றவளிடம் போதும் நிறுத்து என சைகை செய்தான்.
"ஓஓ.. நேர்ல பாத்தா ஏதாவது பண்ணிடும்ன்னு மறைச்சு வச்சிட்டிங்க சரியா..." என்றதும் அவள் ஆமாமென தலையாட்டினாள்.
"இதுக்காக தான் இத்தன நாள் டல்லா எங்கிட்டே பேசாமக்கூட இருந்தியா... பர்ஸ்ட் சொல்லி தொலைக்க வேண்டியது தானே..." என விவேக்குரல் உயர , பூங்குழலியின் ஓரவிழிப் பார்வையில் சுத்தமாக அடங்கியது.
"உங்களுக்கு டாக்ன்னா அலர்ஜின்னு அத்தே சொன்னாங்க... அதான்... பாவம் என் ஜில்லு இனி எப்பிடி இருப்பானோ... நான் இருந்தான்தான் சாப்பிடுவான் தூங்குவான்..." என அவனுக்காக கவலைப்பட, அவளவனோ தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான். இருப்பினும் அவளின் கவலைப்புரிய,
"குழலி! டோண்ட் வொர்ரி.. நாளைக்கு உன்அத்தான் அந்த சின்ன அய்யனார்க்கு கால்பண்ணி கார்வைச்சு உன் ஜில்லுவே கூட்டிட்டு வர சொல்றேன்.... நம்மக்கூடவே அது இருக்கட்டும்... நான் மேனேஜ்பண்ணிக்கிறேன்... உன் ஹாப்பிதான்டி என் ஹாப்பி..." என்றதும் பெண்நிலவு வதனம் பிரகாசமடைய, அவனது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள். அடுத்தநொடி அவனின் இறுகிய அணைப்பில் தன்னிலை உணர்ந்து நாணம்கொண்டு விலகி, அவனுக்கு முதுகுக்காட்டி குழலி படுத்துக் கொண்டாள்.
அவளருகே படுத்த விவேக் அவளை அழைக்க திரும்பி படுத்தவள் அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.
தன்னவள் முதல்முத்தம், முதல் நெருக்கம் பலமுறை பயணம்செய்த பேருந்துவை இன்று ஏனோ ஆகாயவிமானமாய் மாற்ற, பறப்பது போல உணர்ந்தான். நாளை அவனது வில்லன் தனிக்காரில் ஓய்யாரமாய் வருகிறான் என மறந்து..
மழலையாய் தாய்மடி அமர்ந்து தந்தை பாதுகாப்பில் சென்ற ஜன்னலோர பேருந்து பயணம்...
மாணக்கராய் நட்பு உடன் அரட்டையடித்து, தீனி தின்று படிக்கட்டில் பந்தாவாய் கல்விப்பயணம்...
மணாளன்உடன் முதல்முறை அவன் வாசத்துடன் மஞ்சள்வாசமும் சேர்ந்த காதல்பயணம்...
மனையின் பொருளாதார தேவைக்கு நிற்க இடமில்லா பேருந்துவில் நசுங்கினாலும் அவசியமாய் ஒருபயணம்....
எந்தநிலையானாலும் நம் வாழ்வில் உடன் வரும் பேருந்துப்பயணம் என்றும் அலாதி சுகமே...
"
"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro