13. கிரீடம் சூடா தேவதை
வாரத்தில் ஆறுநாட்கள் பரப்பரப்பான அலுவல வேலைகள், ஞாயிறு ஒருவாரத்தில் குவிந்த துணிமலைகளை துவைத்து, வீடு சுத்தம் செய்து மதியஉணவு உண்டு முடிக்க மாலை நெருங்கிவிடும் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் காதலும், காமமும்கூட காலஅட்டவணையில் சேர்ந்து கொண்டது நுகர்வு காலச்சாரத்தின் வெளிப்பாடு. வேலையாட்களிடம் பணி ஒப்படைக்க மனம் விரும்பான்மை, நம்பிக்கையின்மை அவர்களை சமாளிக்க திறமையின்மை என காரணங்கள் நீளும்...
ஏதோ பொக்கிஷமான கிடைத்த இரண்டுநாட்கள் விடுமுறையை முதல்நாள் நன்கு உறங்கி கழித்த மேகா இன்று உறக்கம் வராது தவித்தவள் மீன்சந்தைக்கு சென்றாள். மதிய உணவு எடுத்து சென்ற கணவன் வினோத்க்கு அழைப்பு விடுத்து, அதை நண்பனுக்கு கொடுத்துவிட்டு மதியஉணவுக்கு இல்லம் வருமாறு கட்டளையிட்டாள்.
தன்னவனுக்கு பிடித்த பட்டாணி கேரட் சேர்த்த தேங்காய்பால் சாதம், இறால் தொக்கு செய்தவள், மசால்தூளில் ஊறிக்கொண்டிருந்த வட்டமாய் வெட்டிவைத்த மீன்துண்டுகளை தவாவில் இட்டு பொறித்துக் கொண்டிருந்தாள். இன்னும் கால்மணி நேரத்தில் தன்னவன் வருவதற்குள் சமையலை முடித்து ஆனந்தமாய் குளியலிட்டு அவன்முன் புத்துணர்வுடன் நிற்க வேண்டும் என்ற பரப்பரப்புடன் பணி செய்துக் கொண்டிருந்தாள்.
"மேகி" என்றவாறு வினோத் சமையலறைக்குள் நுழைய அவளது அத்தனை திட்டமும் தோற்று போனது. பின்னிருந்து அவளை கட்டியணைத்து, "வாவ்! குக் பண்ற ஸ்மெல்லே சாப்பிட்ட பீலிங்..." என்றவாறு அவனதுமீசைமுடி கொண்டு குறும்புகளை தொடங்கினான்.
"வினு! என்ன டென் மினிட்ஸ் பீஃபோரே வந்துட்டே..." என்றதும் அவனது அணைப்பு இறுக, இவளோ அடுப்பை அணைத்தாள்.
"உனக்கு எத்தன தடவே சொல்லுறது ஸ்பீடா பைக் ஒட்டாதேன்னு... "
"உங்கூட ஒரு டென்மினிட்ஸ் எக்ஸ்ட்ராவா இருக்கலாம்லே... அதான்..." என்றவனின் இதழ்கள் ஊர்வலம் கழுத்து காது பகுதியை கடந்து அவள் நெற்றியை வந்தடைந்தது.
"குளிச்சிட்டு வந்திடுறேன்... ஒரே ஸ்வெட்டிங்கா இருக்கு..." என்றவளை திருப்பி அவளது இடுப்பை வளைத்து தூக்கி சமையல்மேடையில் அமரவைத்தான்.
களைந்த கார்முகில் கேசம் அள்ளி முடிந்திருக்க,
எந்த தடையுமின்றி உன் மேனியில் அத்துமீறும் வியர்வைஅரும்புகள்..
என்னை பொறமை படவைத்த அந்தவியர்வை வாசம் கலந்த உன் வாசம் கண்டால் நீ கிரீடம் சூடா பிரபஞ்சஅழகி.." என வினோத் வர்ணிக்க பெண்ணவள் மயங்கி நின்றாள்.
"ச்சீ அழுக்குமூட்டை... தள்ளி போடா... வீக்லீ ஓன்ஸ் குளிச்ச உனக்கு இந்த ஸ்வெட்டிங்ஸ்மெல் பிடிச்சியிருக்கலாம்.. எனக்கு கசகசன்னு இருக்கு.." என்றவாறு அவனை தள்ளிவிட்டு கீழே இறங்க முயல, அவனோ தடுக்க, இருவருக்கும் இடையே இனிய யுத்தம் அங்கு தொடங்க, இறுதியில் பெண்ணவள் ஆணவன் கரங்களில் மழலையானாள்.
"என் இல்லத்தின் தலைவியாய்...
எனக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சனாய்..
என் இன்பங்களின் அமுத சுரபியாய்...
என் இன்னல்களுக்கு களைக்கொல்லியாய்...
என்னை மொத்தமாய் மஞ்சத்தில் வீழ்த்தும் கிரீடம் சூடா பேரரசி நீயடி... என்றவனிடம் முற்றிலும் தன்னை தொலைக்க தயாரான அடுத்தநொடி அவளை பிரிந்து நிறுத்தியவனின் கண்கள் நிலமகளை நோக்கின. அதற்கான காரணம் அறிந்தவள்
"வினு! எனக்கு உன்னே மாதிரி கோர்வையா பேசத்தெரியாது.. ஆனா ஈரூயிர் ஈரூடல் ஒன்னா மாறுற தாம்பத்தியத்தோட கிரீடம் குழந்தைங்க தானே... நாமே பெத்துக்கலாமா..." என கேட்க, இதுவரை உற்சாகதுள்ளலுடன் இருந்த வினோத் அமைதியாய் கட்டிலில் அமர்ந்தான்.
"சாரி மேகி... சாரி உன் பீலிங்ஸோட விளையாடுனதுக்கு.... சாப்பாடு எடுத்து வை சாப்பிட்டு கௌம்புறேன்...." என்ற சொல்லுக்கு மேகி அமைதியாய் இருக்க,
"எனக்கும் கீல்டியாதான் இருக்கு மேகி... ஆனா... ஹவுசிங் லோனோட காரும் வாங்கிட்டோம்... இன்னும் ஒன் இயர்தான் இருக்கு டி... அது முடிஞ்சதும்தான் பேபி பத்தி திங்க் பண்ணணும் ஏற்கனவே பேசினதுதானே...." என வினோத் ஏமாற்றுத்துடன் வெளியேற, மேகா தடுத்து நிறுத்தினாள்.
"சாரி வினு! நான்தா உன் உணர்வுகள் புரிஞ்சிக்காம டே்டுட்டேன் .... நீ ஆசிரமத்துல வளந்ததால நமக்கு பேபி பொறக்கும்போது எல்லா வசதியோட இருக்கனும்ன்னு நீ லவ் பண்ணும் போதே சொன்னதே நான்தான் மறந்துட்டு லூசு மாதிரி கேட்டுட்டேன்... சாரி டா... அம்மா மார்னிங் கால் பண்ணும்போது பேபி பத்தி கேட்டதாலே நானும்.... சரி எல்லாத்தையும் விடு... ஸ்மைலி பேபியா ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடு..."
"எதுக்காம்..." என்றவன் கன்னத்தில் இடித்த மேகா,
"எதுக்குன்னு தெரியாது பாரு... இரு வந்து வைச்சுக்கிறேன்... என்றவள் சமையலறை வந்தாள். மேலே டப்பாவில் வைத்த கருத்தடை மாத்திரைகளில் ஒன்றை பிரித்து வாயில் போட்டவள், நீரை ஊற்றி முழுங்கி தனது புடவை தலைப்பில் துடைத்துக் கொண்டு படுக்கையறை புகுந்தாள்.
"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro