12. குறி சொல்லி
அதிகாலை மூன்று மணி, திருட்டுபூனையாய் மென்பாதங்கள் பூமியில் பதியாதவாறு மெல்ல அடி எடுத்து வந்த வித்யா, பேகில் துணிகளை அடுக்கியவள், பூஜையறை சென்று அன்னை மறைவாக வைக்கும் பீரோ சாவியை எடுத்தாள். தனக்கு தேவையான நகைகளை எடுத்துவைத்தவள், பெற்றோர் அறைக்கு சென்று அவர்கள் பாதம் வணங்கி, "சாரிப்பா... நான் என் பிரபா கூட போறேன்.. இங்கேயிருந்தா இந்த வில்லேஜ்லே என் லைப் வீணாய் போயிடும்... என்பிரபா கூட சிட்டி லைப் வாழப்போறேன்..." என மனதில் எண்ணியவள் வாசற்கதவை திறக்க செல்ல,
"ஜெய் ஜக்கம்மா.... நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது.... இந்த வீட்டு கன்னிக்கு ஆபத்து வரப்போகுது...அது பனிபோல விலக மகராசன் வருவான்...." என அவன் அடித்த உடுக்கையின் ஒலியும்... அவன் குரல் சத்தமும் அவளது அன்னையை கண்விழிக்க வைத்தது. இந்தவீட்டு கன்னி என தன்மகளை கூறியதும் தன்னவரை எழுப்ப, பெற்றோர் விழத்ததை அறிந்த வித்யா தனதறைக்கு சென்று பேகை மறைத்து வைத்து போர்வை போர்த்தி படுத்துக் கொண்டாள்.
இங்கே அன்னையவள் தன்மகளுக்கு ஏதோ ஆபத்து என புலம்பியவர், மறுநாள் காலையில் வந்து ஏதாவது பரிகாரம் சொன்னால் செய்துவிடலாம்... என நச்சரிக்க, தன்னவளை திட்டி உறங்க சொல்லிய தந்தைமனம் மகளை நினைத்து வருந்தியது. அடுத்த நொடி மகளறைக்கு வநதவர் வித்யா அருகே அமர்ந்து அவள் தலை வருடினார்.
தனக்காக தன்காதலன் காத்திருப்பானே.. நான் வராததால் கால் செய்தால் என்ன செய்வது என்ற பதைப்பதைப்புடன் இருந்தவள் போர்வைக்குள் அலைப்பேசியை மௌனமாக்கினாள். அவளுக்கு பதட்டத்தில் வியர்த்து வழிய, தந்தையவர் ஜன்னல்கதவை திறந்து விட்டு, தன் துண்டால் துடைத்தார். சிறிது வியர்த்தாலும் மகள் விழித்துவிடுவாள் என எண்ணி அவளை தட்டிக்கொடுக்க அனைத்தையும் மறந்து சிறிது நேரத்தில் உறங்கிப்போனாள்.
விடியலில் எட்டுமணிக்கு மேல் எழுந்தவள் வெளியே வர, நிலைக்கதவு மூடியிருக்க, அன்னையின் குரல் பின்வாசல்பக்கம் கேட்டது. பக்கத்துவீட்டில் வசிக்கும் சுஜாக்கா., "அக்கா! உனக்கு நியூஸ் தெரியும்.. நம்ம தெருமுனையிலே ஒருத்தன் நைட் மூணுமணிக்கு நின்னு இருக்கான்... என்வீட்டுக்காரரு டியூட்டி முடிஞ்சு வந்தப்போ சந்தேகப்பட்டு ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போனா... அவன் பொண்ணுபுள்ளைகளே காதலிச்சு ஏமாத்தி அந்தமாதிரி இடத்துல வித்திடுவானாம்... இப்பவும் நம்ம தெருவிலே ஏதோ பொண்ணுக்காக தான் வெயிட் பண்ணியிருக்கான்.. அவர்கால் ஸ்வீட்ச் ஆப்ன்னு ஸ்டேசனுக்கு கால் பண்ணா இந்த அசிங்கம் தெரிஞ்சது... யாருக்கா அது.. ஒருவேளே கடைசிவீட்டு... " என சுஜா புறம்பேச தொடங்க வித்யாவிற்கு சப்த நாடியும் அடங்கியது.
"வேணா சுஜாம்மா... வயசு பொண்ணு பத்தி புரளிபேசுறது மகாபாவம்... ஏதோ அவளே பெத்தவங்க செஞ்ச புண்ணியத்திலே தப்பிச்சியிருக்கா.... யாரா இருந்தாலும் சரி அந்தப்பொண்ணே காப்பாத்துன கருப்புசாமிக்கு தேங்கா உடைக்கனும்...." என அன்னையின் சொல்லில் வித்யாவிற்கு குற்றவுணர்வு தோன்ற தலைகுனிந்தவள், தந்தை அந்த இன்ஸ்பக்டர் விஜய் உடன் வருவதை கண்டவள் இருதயம் துடிக்க மறந்தது.
பிரபா எப்பிடியும் தன்பெயரை சொல்லியிருப்பான்.. இவர் தன்தந்தையிடம் சொல்லிவிடுவாரோ என்ற பேரச்சம் தோன்ற அவளது உடல் விதிர்விதித்து போனது. தந்தை நீர் எடுத்து வர சொல்ல, அவள்சமையலறை சென்று எடுத்துவர, தந்தை இல்லாமல் விஜய் மட்டும் இருந்தான் கைநடுக்கத்தில் சொம்பு குலுங்க தண்ணீர் அவர்மீதுசிந்தியது.
திடீரென தந்தை பீரோ திறக்கும் ஓசை கேட்க, அவளோ சொம்பை விஜய் மீதே போட்டாள். "சாரி சார்... சாரி..." என அவள் பதற, அவனோ சொம்பை மேசைமீது வைத்துவிட்டு தன்மேல் கொட்டிய தண்ணீரை பக்கத்திலிருந்த துண்டால் துடைத்துவிட்டான்.
"ரிலாக்ஸ் வித்துமா..நான் எதுவும் உன்ப்பாகிட்டே சொல்லமாட்டேன்... ஆனா நீ இனியாவது இப்படி முட்டாள்தனமா எதுவும் செஞ்சிடாதே... எவனோ ஒருத்தனவிட பெத்தவங்க மட்டம் இல்லே... அவங்க வாழுறதே உனக்காகதான் புரிஞ்சி நடந்துக்கோ..." என அறிவுரை வழங்க வித்யா அழ, உள்ளிருந்து வந்த தந்தைமனம் என்ன ஏதுவென பதைப்பதைப்புடன் மகள்முன் வந்தார்
"வித்து! தெரியாம தண்ணி கொட்டுனதுக்கு இப்படி அழுவுறா... சமாதானப்படுத்துங்க அஙகிள்.." என்றதும் வித்யா தோளில் தந்தைகரம் விழ, அவளோ அவரது மார்பில் தலை சாய்ந்தாள். மகளின் அழுக்குரல் கேட்டு தாயும் ஓடிவந்து சமாதானப்படுத்தினார்.
"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்... சம்பளம் வந்ததும் இந்த பைவ்டவுசண்ட்ஸ் திருப்பி கொடுத்திடுறேன்.." என மூவரிடமும் சொல்லிக்கொண்டு தனக்காக கடனாளியாய் வெளியேறுபவரை நன்றியாய் பார்த்தாள் வித்யா.
மீண்டும் அந்த குறிசொலபவனின் குரல் கேட்டு தந்தை முணுமுணுக்க தொடங்க, அன்னைமனம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என கேட்க வெளியே ஓடியது. இவர் மட்டும் வந்து குரல் எழுப்பவில்லையெனில் தன்வாழ்வு திசைமாறி சின்னபின்னமாகி இருக்கும் என நினைத்த வித்யா தந்தை எதிரே வந்து நின்றாள்.
"ப்பா... அவர் சொன்ன வாக்கு மேலே உனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் எனக்காக ஏதாவது பண்ணுப்பா... ப்ளீஸ் பா... ப்பா... அவருக்குன்னு ஒருவிடியல் இல்லேன்னாலும் நம்ம வாழ்வோட விடியலுக்காக பனியிலே ஊர்சுத்துறாரு... ஏதாவது செய்ப்பா... அவங்க நடமாடுறதாலே பலகுற்றங்கள் கம்மியாகும்லே அப்பா..." என வித்யா தந்தையிடம் சொல்லியவள்,
"என்னே மாதிரி எத்தன பொண்ணுங்க வாழ்க்கையே அவங்களுக்கே தெரியாம காப்பாத்தியிருபப்பாங்க... என உள்ளுக்குள் சொல்லியவளிடம் தந்தை ஐநூறு ரூபாயை நீட்ட, அவளோ இன்னொரு தாளை பிடுங்கி கொண்டு வெளியே ஓடிவந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro