11. பிரிவு
விக்ரம் வாடிய முகத்துடன் வீட்டிற்குள் நுழைய தன்னவள் கண்மணி அவளது பெற்றோருடன் மகிழ்ச்சியாய் அளாவிக் கொண்டிருந்தாள். அவனது உள்ளத்தில் ஏழு எரிமலைகளின் சீற்றம் நிகழ்ந்து கொண்டிருக்க, "வாங்க மாப்ளே..." என்ற எனது மாமானாரின் குரல் ஏதோ கணபூதங்களின் குரலாய் காதில் விழுந்தது.
நடுஹாலில பூக்கள், பழங்கள், புதுத்துணிமணிகள், சீர்பட்சணங்கள் என தட்டுகள் நிறைந்திருக்க, அவனை தவிர அனைவரின் வதனங்களும் ஜொலித்துக் கொண்டிருப்பதை கண்டான். அனைவரை விடவும் தன்னவளின் மகிழ்ச்சி அவனுக்கு எரிச்சலை கிளம்ப, "போய் ப்ரெஸ்ஸாயிட்டு வரேன் மாமா..." என சொன்னவன் தனதறைக்கு நுழைந்து கையிலிருந்த பேகை தூக்கியெறிய அது சுவற்றில் பட்டு கீழே விழுந்தது.
உள்ளே நுழைந்த கண்மணி "விக்கி" என கொஞ்சியவாறு பின்னால் இருந்து அணைக்க, அவனோ எரிச்சலாய் அவளை தள்ளிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான். எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் தன்னவள் ஏமாற்றத்துடன் திரும்புவதை கண்டவாறு.
சில நிமிடங்களில் விக்ரம் வெளியே வர, அவன் தன்னவள் மற்றும் பெற்றோருடன் இணைந்து ஆடிமாத சீர்வரிசைகளை பெற்றுக் கொண்டான். இனி மூன்று மணிநேரம்தான் தன்னவள் இருக்க போகிறாள்.. இனி ஒருமாதம் கழித்துதான் அவள் முகத்தை நேரில் காண இயலும் என்ற எண்ணமே அவனை வாட்டியது ஆனால் கண்மணி அவள்விழிமணிகள் சிறிதும் கலங்காது நிற்க கண்டவன், இந்த இரண்டு மாதங்கள் தன்னுடன் நிறைவான வாழ்வு வாழவில்லையா... தன்ஏக்கம் அவளுக்கு இல்லையா.. அவள் பெற்றோர் அளவுக்கு தன்குடும்பம் அவளை கவனிக்கவில்லையா.. என்னைவிடு என்ம்மா பெத்த மகளை விட பாசமாக பார்த்துக் கொண்டாரே... அவளது முகத்தில் சிறிதேனும் பிரிவு துயர் உள்ளதா... என கொதித்து கொண்டிருந்தான்.
"மச்சான்! காங்கிராட்ஸ் நீங்க அப்பாவாக போறிங்க..." என்றவாறு உள்ளே வந்த கண்மணியின் அண்ணன் அவனுக்கு இன்பஅதிர்ச்சியாய் சொல்ல நினைத்த விசயத்தை சட்டென உடைத்தான் இனிப்பை நீட்டி., விக்ரம் தன்னவளை காண, அவள்முகம் தரை பார்த்தது. அதுவரை உள்ளத்தில கொதித்த எரிமலைகள் பனிமலைகளாய் மாறி, ஏதோ ரோஜாவனத்தில் நின்றது போன்ற உணர்வில் அவன்மயிர்க்கால்கள் சிலிர்த்து மேலெந்து நின்றன.
"மாப்ளே! நாங்க கண்மணியை ஆடிமாசம் அழைச்சிட்டு போகதான் வந்தோம்.. அவ இப்படி சொன்னதும் இனி அதுக்கு தேவையில்லாம போயிடுச்சு... அதனால நாங்க மட்டும் நைட் டிரெயினுக்கு ஊருக்கு கௌம்புறோம்... இரண்டு நாள் இருக்க ஆசைதான்.. ஆனா ஏற்கனவே ரீசரவ் பண்ணது... நீங்க நாளைக்கு கண்மணியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க..." என்ற மாமாவை ஓடிச்சென்று கட்டிக்கொண்டு முத்தமிட்ட விக்ரம் மற்றவர்கள் சிரிப்பில் விலகினான்.
கண்மணியின் குடும்பம் இரவு ஊர்ச்செல்ல, அறையில் தன்னவள் வருகைக்காக காத்திருந்தான். அவள் வந்ததும் பின்னிருந்து அணைக்க அவளோ தள்ளிவிட்டு மெத்தையில் அமர்ந்தாள்.
"ப்ளீஸ் ப்ளீஸ் குட்டிம்மா... ஈவினிங் கோபத்திலே..." என்றதும் அவனது கன்னத்தில் அறைந்த கண்மணி, அவனது தோளிலேயே முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.
"ஏய்! குட் நியூஸ் சொல்லிட்டு ஏன் அழுவுற??.." என்றவனும் அவளை தன்னுள் புதைத்து கொண்டான்.
"சாரி விக்கி! நான் ப்ரக்னெட் கெடையாது... பொய் சொல்லிட்டேன்..." என்றதும் தன்னுள் ஏமாற்றம் தோன்ற, கோபத்துடன் அவளை தன்னிடமிருந்து பிரித்தான்.
"எனக்கு உங்கூட, என்அத்தைம்மா கூட இருக்கனும்... இந்த குடும்பத்தே விட்டு என்னாலே இருக்கமுடியாது ...அதான்... இப்படி.. என்ப்பா பத்திதான் தெரியுமே.... பழைய பஞ்சாங்கம்... சடங்கு சம்பிராதாயத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தே மகளுக்கு கொடுக்க மாட்டாரு... அதான் இப்படி பொய் சொல்லிடடேன்... சாரி விக்கி... நான் ஈவினிங் இதேதான் சொல்ல வந்தேன்..." என மேலும் அழுதவளை சமாதானப்படுத்த முடியாமல் போனது
, "கண்ணா..." என அவளது அத்தையம்மா அழைப்பில் ஓடிசென்று அவரை கட்டிக் கொண்டவள், "சாரி அத்தைம்மா..." என அவள் சொல்லும் போதே,
"எதுக்கு நீ பொய் சொன்னதுக்காக...." என்றதும் விலகியவள் நீர் திரண்ட விழிகளுடன் அச்சத்துடன் அவரை பார்த்தாள்.
"கண்ணா... டூ மன்த்ஸ் எங்கூடவே இருக்க... உன்னே பத்தின எல்லா விவரமும் எனக்கு தெரியும் டா..." என்றார்.
"அப்பாவுக்கு பயந்து சொல்லியிருந்தாலும் அவரு மொகத்தே பாத்தியா... பேரன் வரப்போறான்னு.. தப்பில்லே.. பர்ஸ்ட் டைம்னாலே மன்னிச்சு விடுறேன்.... இனி பண்ணே...." என்றதும் குற்றவுணர்ச்சியுடன் மாட்டேன் என வேகமாக தலையாட்டும் மருமகளை கண்டவர் அவள் கன்னத்தில் இரண்டு இடித்தார்.
"நான் மார்னிங் அண்ணாவுக்கு கால்பண்ணி அவ கார்டு பாக்க தெரியுமா பார்த்து சொல்லிட்டா... டாக்டர் கன்பார்ம் பண்ணலே... நீங்க வரவேணாம்.. நான் கண்மணியே பத்திரமா பாத்துக்கிறேன்னு சொல்லிடுறேன்... என்பேச்சுக்கு மறுபேச்சு வராது.." என்றதும்தான் அவள் முகமும் விழிகளும் ஒன்றாய் சிரிக்க பெண்ணவள் ஜொலித்து நின்றாள்.
"இனி கொஞ்சநேரம் நீ இப்பிடியிருந்தே உன்புருசன் அவ்வளவுதான்... என்னே கண்ணுலயே எரிச்சிடுவான்... நான் கௌம்புறேன்..." என்றவரிடம்,
"அத்தேம்மா... நீங்க இங்கே தூங்கு....." என்றவளின் பாதிவார்த்தையில் இடைமறித்தவர்,
" எனக்கு உங்க ரெண்டு பேரு மேலே நம்பிக்கை இருக்குடா..." என அவர் வெளியேறிய அடுத்த நொடி விக்ரம் கைவளைவில் கண்மணி சிறையானாள். ஆதவன் ஆழ்கடல் சிறைவிடுத்து வந்தப்பின்னும் அவனது சிறைபிடிப்பு நீண்டு கொண்டிருந்தது.
கருப்பை சிசுவின் உயிர்ப்பை என்றாலும் பிரித்தலும் பிரிதல் நிமித்தமும் உலகவாழ்வு அவன்(ள்) காண...
பெற்றோரின் நிழல் உயிர்பாதுகாப்பு என்றாலும் பிரித்தலும் பிரிதல் நிமித்தமும் மழலை கல்லிக்கண் பெற...
கல்லூரிக்காலம் பொற்காலம் என்றாலும் பிரித்தலும் பிரிதல் நிமித்தமும் புத்துலகில் நீ எதிர்நீச்சல் அடிக்க...
இருமனம் ஓர்மனமாகி காதலில் திளைக்க, பிரித்தலும் பிரிதல் நிமித்தமும் சாதிஅரக்கன் என்ற கொடும் அரக்கன் மகிழ...
ஈரூயிர் ஓரூயிராகி இல்லறத்தில் சிறக்க, பிரித்தலும் பிரிதல் நிமித்தமும் வரும் சந்ததி நலம்பெற....
ஆயிரம்கோடி செல்வம் கொண்டாலும் மரணம் இவ்வுலகை பிரித்தலும் பிரிதல் நிமித்தமும் பூமித்தாய் பாரம் போக்க...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro