1. சிநேகிதியே என்ரதியே
"அனிமா.. லேசா வலி எடுத்தாலே சொல்லிடு அம்மாகிட்டே... வேளாவேளைக்கு மருந்து சாப்பிடு..., ஆமா நேத்து ஸ்கேன் பண்ண போயிருந்தியே.... பேபி வெயிட் எவ்ளோன்னு சொன்னாங்க..., தலை திரும்பிடுச்சா..." என அதீத அக்கறையுடன் பேசிக்கொண்டிருந்த தனது மனையாளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் வினோத்..
அரைமணிநேரங்கள் கடந்தும் பேச்சு தொடரவே, "சாப்பாடு கெடைக்குமா டி..." என அவன் கத்தலில் உடல் குலுங்கியவள் அலைப்பேசியை சட்டென மறைத்து வைத்தாள் அவனின் பாதியானவள் ஸ்ருதி.
"சாரிங்க...பைவ் மினிட்ஸ்லே சட்டினிஅரைச்சு தோசை ஊத்தி கொடுத்திடுறேன்..." என முகத்தில் அரும்பிய வியர்வைத்துளிகளை சேலைத்தலைப்பில் துடைத்தவள், அலைப்பேசியை மறைத்து எடுத்து சென்றாள். ஆனால் அவனோ அலைப்பேசியை பிடுங்க செல்ல, அவள் முன்னும் பின்னும் மறைத்து போக்கு காட்ட, ஆணவன் தனது வன்மையை மெண்மையாய் கையாண்டு அலைப்பேசியை கைப்பற்றி பார்க்க, அதுவோ உயிரின்றி கிடந்தது.
தனது இயலாமை தன்னவனுக்கு தெரிந்துவிட்டதென அவளோ மெத்தையில் சரிய, அவனோ அவளருகே சென்று படுத்தவன் பூவையவளை தன்மேல் அள்ளியெடுத்து போர்த்திகொண்டான்.
"இவ்ளோ ஏங்குறவ உன்ப்ரண்ட் அனிதாகூட பேச வேண்டியது தானே டி..." என அவளது நெ்றியில்விழுந்த முடிகற்றையை ஒதுக்கி கன்னம் வருடி கேட்க, அவளது நினைவோ தன் வாழ்க்கையை திருப்பி பார்த்தது.
ஸ்ருதி அனிதா பள்ளி பருவம் தொட்டே உயிர்தோழிகள். இளங்கலையில் வேறு வேறு பிரிவு என்றாலும் ஒரே கல்லூரியில் படித்தனர். அனிதா உயர்கல்விக்கு செல்ல, ஸ்ருதி தாயின் உடல்நிலை கருத்தில் கொண்டு தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வினோத் கையில் மாங்கல்யம் கொண்டு அவனின் துணைவியானாள்.
அடு்த்த மாத்திலேயே இனிய செய்தியை சொன்ன ஸ்ருதி அதை முழுமையாக உணரும்முன் எட்டாம் மாத்திலேயே ஆண்குழந்தை குழந்தை இறந்தே பிறந்தது. அந்த சோகம் தோழியின திருமணச்செய்தியில் மறைய, அடுத்ததாக அவள் கருவுற்றாள். இந்தமுறை வினோத் எந்தவேலையும் செய்யாது ஸ்ருதியை பார்த்துக் கொண்டாலும் ஐந்தாம்மாதத்திலேயே கரு கலைந்தது.
இந்தமுறை மனம்நொந்து எதிலும் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்த ஸ்ருதிக்கு தோழியின் கர்ப்பச்செய்தி உயிர்நீராய் பாய்ந்தது. அளவில்லா மகிழ்ச்சி கொண்ட ஸ்ருதி, தினமும் ஒருமணி நேர ஆட்டோ பயணம் செய்து தன்நட்பை பார்த்துவிட்டு வருவாள். ஆனால் இது அனிதாவின் புகந்த பிறந்த இருவீட்டாருக்கும் பிடிக்காமல் போனது.
அனிதா விரும்பி கேட்ட தேய்காய் போளியை செய்து கொண்டிருக்க,, அனிதாவின் பெற்றோர் ஸ்ருதி இல்லத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்று சோபாவில் அமரவைத்து முதலில் நீர்கொடுத்து, பின் பழுச்சாறு கொடுத்தவளிடம்
"இருமுறை குழந்தையை பறிகொடுத்த நீ அடிக்கடி கர்ப்பமானவளை பார்ப்பது குழந்தைக்கு நல்லதல்ல... உண்கண்ப்பட்டாலே அந்த உயிருக்கும் ஏதாவது ஆகிவிடும்... உனக்கு அனிதா நன்றாக இருக்கவேண்டுமென்றால் இனி அவளை பார்க்க செல்லவேண்டாம்.." என வார்த்தை என்னும் ஆலகால விடத்தை அவளுக்கு கொடுத்து விட்டு வெளியேறினர்.
அழுது புலம்பி மனதால் செத்து, தனக்குதானே சிதைமூட்டி வெந்து போனாள். ஸ்ருதியாய் இசைக்க எழுந்தவள் அபஸ்வரமாய் அடக்கிகொள்ள நினைத்தாள். தன்னால் அந்த சிறுஉயிருக்கு அவர்கள் சொன்னதுபோல் ஆபத்து வந்துவிடுமோ என பயம் கொள்ள வைத்தது அவள் தாய்மைமனம். பின் அனிதாவிடம் சிறிதுகாலம் பார்க்கவேண்டாம் என சொன்னால் கேட்காமல் அடம்பிடிப்பாள் என எண்ணிய ஸ்ருதி, தன் தோழிக்கு அழைப்பு விடுத்தாள்.
"உனக்கு பிடிக்கலன்னா நீயே சொல்ல வேண்டியதுதானே.. உன்ம்மாவே விட்டு சொல்றியா... எனக்கு தெரியும்டி உன்னே கேட்காம உன்ம்மா எதுவும் செய்யமாட்டாங்க... ஊரு சொன்னப்போகூட கவலேயில்லேடி... ஆனா நீ... இனி இந்த ஜென்மத்துக்கு என்கூட பேசாதே...,"என பொரிந்து தள்ளியவள், எதிர்முனை பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை தூண்டித்தாள்.
பின் அனிதா அடிக்கடி தன்தோழியை தொடர்பு கொள்ள முயல, ஸ்ருதி ஒருநிலைக்கு பின் அவளை ப்ளாக்கில் போட்டு வைத்தாள். நேரில் சந்திக்க வந்தவளை கடிந்துபேசி முகம் காணாது வாசல்கதலை அறைந்து சாத்தி அனுப்பி வைத்தாள். இதோ இன்றோடு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அவர்கள் நட்பு பிரிய, அவளின் குரலை கேட்காது நாட்களை கடத்தினாலும், ஏனோ அவளிடம் பேசாது நாட்கள் கழியாது என தினமும் அலைப்பேசியில் அவளிடம் பேசுவது போல் பேசிக் கொள்வாள்.
வினோத் முதலில் இதை எதிர்த்தாலும் தன்னவளின் இன்பம் இதில்தான் என தெரிந்து கொண்டு அமைதியாய் இருந்தான்.. இன்று அதிக நேரமாகவே அவன் கத்தி தன்மனையாளை இயல்புக்கு கொண்டு வந்தான்.
"என்ன மேடம் டீரீம்ஸா... அதிலேயாவது எனக்கு இடமிருக்கா.." என கேலியாய் கேட்க, நினைவு வந்தவள் தன் சோகம் மறைய சிறுகாற்றுக்கு இடம்கொடுக்காது இறுக அணைத்தவள் அவனுள் தன்னை தொலைக்க முயன்றாள்.
தூரங்களில் இல்லையடி பிரிவு..
உள்ளங்களில் தொலைவே பிரிவு...
பலமணிகள் கதைத்து களிப்புற்று காலம் நகர்த்துவதல்ல நட்பு.....
ஒருநொடி உன்னை நினைத்து சிந்தும் துளி விழிநீர் தான்டி நட்பு...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro