Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9

வாசலில் நின்ற ரூபினி வீட்டிற்குள் இருந்த இரு பெண்களையும் வித்தியாசமாக பார்த்தாள்.

" என்னப்பா நாந்தான் வர்றேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன.." விளையாட்டாக பேசதொடங்கியவள் நல்லவேலை அவள் மீனாக்‌ஷியின் கையில் இருந்த குழநதையை கண்டு கொண்டாள். இல்லை என்றால் விளையாட்டாக அவள் எதையும் ஏடாகூடமாக கேட்ட்டிருந்தால் அவ்விடம் ரணகளம் ஆகி இருக்கும்.

ரூபினி கூற வந்தது என்னவென்று ராதாவுக்கு புரியவில்லை. ஆனால் மீனாக்‌ஷிக்கு அவள் கூற வந்த விடயம் நன்றாகவே புரிந்தது. ருபினியின் பேச்சில் இருந்த எகத்தாளம் மீனாக்‌ஷிக்கு புரிய அவள் உடல் கூசியது. உடனே க்ரிஷ்

" உள்ள வா ரூபினி" என்று கூற இவ்வளவு நேரமும் தான் அழுதும் பேசாத தன் தம்பி எவளோ ஒரு பெண்ணை வீட்டிற்குள் அழைத்தது ராதாவின் இதயத்தை யாரோ ரம்பம் வைத்து அறுத்தது போல இருந்தது.

ரூபினிக்கு வீட்டில் இருந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு அசம்பாவிதம் மட்டும் நடக்க போகிறது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

" யாரு க்ரிஷ் இவங்க தெரிஞ்சவங்களா?" என்று கேட்டுக்கொண்டு ரூபினி வீட்டிற்குள் நுழைய க்ரிஷ்

" இவங்க யாரோ கிருஷ்ணாவ தேடி வந்திருக்காங்க. என்னோட பெயரும் க்ரிஷ் என்றதால யாரோ அட்றஸ தப்பா சொல்லிட்டாங்க போல. அதனாலதான் சின்ன கன்ஃப்யூசன். நீ இரு ரூபினி நான் இவங்கள அனுப்பிச்சிட்டு வர்றேன்" என்று கூற ரூபினிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் க்ரிஷ் பேசும் வசனங்கள் மணிரத்னம் படத்தில் வருவது போல ரத்தின சுருக்கமாக இருக்கும். இன்றுதான் அவன் பெரிய வசனம் ஒன்று பேசி இவள் கண்டிருக்கின்றாள்.

க்ரிஷின் பதில் கேட்டு கவலை கொண்ட ராதா

" மீனாக்‌ஷி நம்ம ஏதோ அட்றஸ் மாத்தி வந்துட்டோமாம். சார் சொல்றாரு. ஆமா நீங்க இவரோட ஃப்ரெண்டா?" என்று ராதா ரூபினியை நோக்கி கேட்க என்ன பதில் கூறுவது என்று ரூபினி தயங்கிக் கொண்டிருந்தாள். இங்கு மீனாக்‌ஷிக்கோ தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.

ரூபினி பதில் கூற தயங்குவதை கண்ட ராதாவுக்கு அப்போதுதான் ஒன்று புத்தியில் உரைத்தது. தான் தலையணை வைத்து மறைத்த பொருள் இவளுக்காகத்தான் என்று. ஆம், ராதா தலையணை வைத்து மறைத்தது ஒரு காண்டம் பாக்கெட்.

ராதவால் ரூபினியை பார்த்ததும் அவளை ஒரு விலைமகள் என்று நினைக்க தோன்றவில்லை. இருந்தாலும் மறுபடியும் அதை நிரூபணம் செய்து கொள்ள

"நீங்க க்ரிஷ் ஃப்ரெண்டா?" என்று அழுத்தமாக அவளை நோக்கி கேட்க ரூபினி இப்போது தலை குனிந்தாள். அவளின் தலை குனிவே அவளை யார் என்று ராதாவுக்கு தெரிவித்தது.

கோபமாக ரூபினியின் பக்கம் வந்தவள்

"வெளிய போடி. இனிமே உன்ன என் தம்பி கூட பார்த்தேன் கொன்னு எரிச்சிடுவேன்" என்று கூற ரூபினியால் பதில் எதுவும் கூற முடியவில்லை. அவள் உடனே அவ்விடத்தை விட்டு செல்ல பார்த்தாள்.

"ரூபினி நில்லு, நான் இவங்க ரெண்டு பேருக்கும் அவங்க தம்பியோட சரியான அட்றஸ தேடிக்கொடுத்திட்டு வர்றேன்" என்று கூறிய சமயம் க்ரிஷின் கன்னத்தில் ராதாவின் கை வேகமாக இறங்கியது. இதை கண்ட மற்ற இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தனர்.

" க்ரிஷ், எனக்கு வேற வேல இருக்கு. நான் போறேன்" என்று செல்ல முற்பட ரூபினியின் கையை பற்றியவன்

"இப்போ நீ எதுக்கு போற. இவங்க யாருன்னு தெரியனுமா?" என்றவன் ராதாவை கையை காட்டி

" இதோ இவங்க தம்பிய நம்பாத என்னோட அருமை அக்கா. மத்தவங்க நான் காதலிச்ச, என்ன உயிரா காதலிச்ச என்னோட முன்னாள் காதலி" என்றவன் ராதாவை நோக்கி

" இவ யாருன்னு கேட்டீங்கள்ள. இவ ரூபினி. எனக்கு பைத்தியம் பிடிக்காம இவ்வளவு நாளா இவதான் உதவி செஞ்சிக்கிட்டு இருக்கா. அன்னைக்கு நான் ஒரு பொம்பள பொறுக்கின்னுதான் நீங்க எல்லோரும் என்ன விட்டு போனீங்க. உங்களவிட ஆம்பிளைங்கள பத்தி ரூபினிக்கு நல்லாவே தெரியும். உங்க எல்லாரவிடவும் என்ன பத்தி ரொம்ப நல்லா புரிஞ்சவ அவ. உங்க தம்பிய நீங்க நம்பல. இப்போ அவகிட்ட என்ன பத்தி கேளுங்க, அவ சொல்லுவா. நான் பொம்பள பொறுக்கியா இல்லையான்னு. அப்புறம் அவ இங்கதான் இருப்பா. நீங்க எது பேசனும்னாலும் அவ முன்னாடியே பேசுங்க" என்று கூற ராதா தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"டேய் நீ என் தம்பியாடா? ஏண்டா இப்படி பண்ற. கடைசில அம்மா இல்லாம அக்கா வளர்த்த பையந்தானே, அதான் தப்பா போயிட்டான்னு ஊரு பேசுற மாதிரி பண்ணிட்டியேடா" என்று கூறினாள்.

இங்கு நிலமை மோசமாவதை உணர்ந்த ரூபினி

"க்ரிஷ் நான் போயிட்டு பிறகு வர்றேன்" என்று கூற அவளை பார்த்து முறைத்தவன்

" நீ ஒன்னும் புடுங்க தேவையில்ல. உனக்கு டபுள் பேமண்ட் நான் கொடுக்குறேன். இன்னைக்கு நீ இங்கதான் இருக்கனும்" என்று கட்டளையாக கூற க்ரிஷ்ஷால் இப்படி கூட பேச முடியுமா என அவள் வாய் பிளந்து பார்த்தவளால் அவன் கூறியதை தட்ட முடியவில்லை.

" க்ரிஷ் ப்ளீஸ்டா நம்ம பிரச்சினைய நமக்குள்ள பேசி தீர்த்துக்கலாம்டா. அவள போக சொல்லுடா" என்று ராதா கெஞ்ச அவன் கொஞ்சமும் அசராது நின்றான்.

" சரி ஒரு வேசி முன்னாடி என்ன அவமானப்படுத்துறேல்ல" என்று பேச முற்பட்ட ராதாவை கைகளால் நிறுத்துமாறு கூறியவன்

" என்ன சொன்ன வேசியா? ஆமா அப்படியே வெச்சிக்க. ஆனா நான் அவளத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். உன் தம்பியா இருந்தவன் உங்க பார்வையில வேசியா இருக்குற ஒத்தியத்தான் கல்யாணம் பண்ணிக்க போறான். என்ன பொறுத்த வரைக்கும் இவ என்ன காக்க வந்த தேவதை. உங்களுக்கு எப்படியோ அது பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூற ராதா அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தாள். ராதா மயங்கியதும் மீனாக்‌ஷி குழ்நதையை ருபினியிடம் கொடுத்துவிட்டு ராதாவுக்கு என்னவாகிற்று என்று செக் செய்தாள். சாதாரன அதிர்ச்சியில்தான் அவளுக்கு மயக்கம் வந்திருப்பது புரிந்தவள் க்ரிஷ்ஷை நோக்கி

" என்ன ஜென்மம்டா நீ, வாயும் வயிறுமா இருக்குற ஒரு பொண்ணுகிட்ட இப்படியா பேசுவ. அண்ணிக்கும் அவங்க பாப்பாக்கும் ஏதும் ஆச்சு உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றவள் உடனே தனது ஹாஸ்பிடலுக்கு கால் செய்து அம்ப்யூலன்சஸை வரவைத்தாள்.

க்ரிஷ் ராதாவை தன் கைகளில் தாங்க செல்ல மீனாக்‌ஷி

" தொடாத அவங்கள. அன்னைக்கு நடந்த முழுப் பிரச்சினைக்கும் நாந்தானே காரணம். அவங்க மேல என்ன தப்புடா இருக்கு. இப்படி கண்டவ முன்னாடி அக்காவ கேவலபடுத்துற. உன்ன பாராட்டி சீராட்டி வளர்த்ததுக்கு நீ காட்டுற நன்றி இதுதானா. த்த்தூ, உன்ன போய் நான் லவ் பண்ணேன் பாரு. ஏதோ நீ பண்ணாத தப்பால நம்ம பிரிஞ்சிட்டோம். எனக்கும் சில நாட்களாக பண்ணாத தப்புக்கு உன்ன தண்டிச்சிட்டோமோன்னு ஒரு கவலை இருந்திச்சி. ஆனா இன்னைக்கு உன்னோட பேச்சுலதான் நீ எப்படி பட்ட ஆளுன்னு தெரிஞ்சிது.

நீ என்னடா எங்கள போக சொல்றது. இப்போ சொல்றேன் கேட்டுக்க. இனிமே அக்கா ஆட்டுக்குட்டினு சொல்லிக்கிட்டு அண்ணிய தேடி வந்த அப்புறம் உன்மேல முன்னாடி கொடுத்த போலீஸ் கம்ப்ளைய்ண்ட நான் மறுபடி தோண்டி எடுக்க வேண்டும் வரும்" என்றாள்.

மினாக்‌ஷியா இப்படி பேசியது என்று க்ரிஷ்ஷால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. ஆனால் ரூபினியின் நிலைமைதான் பாவமாக இருந்தது. ஆளாளுக்கு அவளை கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு பேசுவது க்ரிஷ்ஷிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவனுக்கே இப்படி என்றாள் ரூபினி இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை தன் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அவளுக்கு இப்போது என்ன செய்வது என்றும் புரியவில்லை. ஆம்ப்யூலன்ஸ் வந்ததும் ராதாவை ஸ்ட்றெச்சரில் வைத்து தூக்கி செல்ல ரூபினி அவள் குழந்தையை மீனாக்‌ஷியிடம் கொடுத்தாள்.

ருபினியிடம் இருந்து குழந்தையை வாங்கியவள் க்ரிஷ்ஷை நோக்கி

" அண்ணி கீழ விழுந்த அவசரத்துல கூட நான் ஏன் தெரியுமா என் குழந்தைய உன்கிட்ட கொடுக்காம இவகிட்ட கொடுத்தேன். என்னதான இவ காசுக்கு உடம்ப விக்கிறவளா இருந்தாலும் அவகிட்ட ஒரு நேர்மை இருந்திச்சி. நம்ம குடும்ப பிரச்சினைக்குள்ள தான் வர கூடாதுன்னு அவ நாசூக்கா விலக பார்த்தா. ஆனா நீ, நம்ம குடும்ப பிரச்சினைய மூனாவது ஆளுக்கு தெரியபடுத்த டிரை பண்ண. உன்ன மாதிரி ஒரு கேவலமான ஆளுகிட்ட என் குழந்தைய கொடுக்குறத விட இவகிட்ட கொடுக்கலாம். நீ என் குழந்தைய தொட்டா அப்புறம் என் குழந்தைக்கும் உன் புத்திதான் வரும்.

அப்புறம் என்ன சொன்ன, இவள கல்யாணம் கட்டிக்க போறியா? உன் தரத்திற்கு இவ ரொம்ப அதிகம். இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும் என் மனசுல உன்ன பத்தி நான் என்ன நினைச்சிருக்கேன்னு" என்று கூறி ராதாவை ஏற்றிக்கொண்டு அவன் வீட்டை விட்டு செல்ல முன் ரூபினியை பார்த்தாள்.

" இவன் மாதிரி ஆளுகூட எல்லாம் பழகாத. எந்த மாதிரி ஆளுகூடவும் பழகலாம். ஆனா நன்றி மறந்து வாழுற ஜென்மங்க கூட மட்டும் என்னைக்குமே பழக கூடாது. ஏன்னா இவன மாதிரி ஆளுங்க கூட பழகினா இதோ இவங்கள மாதிரிதான் ஆகனும்" என்று ராதாவை சுட்டிக்காட்டி அவ்விடத்தை விட்டு சென்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro