Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8

அடுத்து வந்த நாட்களில் மீனாக்‌ஷியால் க்ரிஷ்ஷை சந்திக்க முடியவில்லை. சந்திக்க முடியவில்லை என்பதை விட சந்திக்க விரும்பவில்லை. அன்று அவள் அவனது வீட்டில கண்ட காட்சி அவளை அணு அணுவாக கொன்றது.

நாளை ஜனவரி முதலாம் நாள்,  எல்லோர் வாழ்விலும் விடியலை கொண்டு வரும் என்று நினைது பல முடிவுகளை எடுக்கும் நாள். நம்மிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் பலவற்றை துடைத்தெறிந்து புதிய மனிதனாக எல்லோரும் இனி வரும் நாட்களை வாழ ஆசைப்படும் நாள். ஆனால் இந்த ஜனவரி ஒன்று நம் கதையின் மாந்தர்களுக்கு என்ன செய்ய போகின்றது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.

" க்ரிஷ், இன்னைக்கு நியூ இயர் என்றதால எனக்கு வேற ஒரு பெரிய கஸ்டமர்கிட்ட இருந்து கால் வந்திருக்கு. ஹி ஈஸ் லீவிங்க் யூ எஸ் டுனைட். நம்ம நாளைக்கு மீட் பண்ணலாமா? " என்று ரூபினி கால் செய்து கேட்க மறுமுனையில் அவன் அமைதியாக இருந்தான்.

"இங்க பாரு க்ரிஷ், அவரு எனக்கு இருபத்தஞ்சாயிரம் கொடுப்பாரு. இன்னைக்கு அவருகிட்ட போனா நான் இந்த மாசம் வேற யார்கிட்டயும் போக தேவையில்ல. இந்த வேசி வாழ்க்கை இந்த மாசம் மட்டும் ஒரே நாளோட போயிடும். புரிஞ்சிக்க" என்று கூற அவன் இப்போதும் அமைதியாக இருந்தான். அவன் அமைதியில் கோபம் கொண்டவள்

" நான் ஒன்னும் உன் பொண்டாட்டியோ இல்லை உன் லவ்வரோ கிடையாது. ஒன்னு ஆமானு சொல்லு இல்லை இல்லைன்னு சொல்லு. அதென்ன எதுக்கு எடுத்தாலும் அமைதியா இருக்க. உன் மனசு அறிஞ்சி நடக்க நான் ஒன்னும் நீ கட்டிக்க போற பொண்ணு இல்ல. உன்னால முடிஞ்சா இருபதாயிரத்த இன்னைக்கு பேமண்டா கொடு. நான் உன் வீட்டுக்கு வர்றேன். இல்லைன்னா நான் நாளைக்குத்தான் வருவேன். இதுக்கும் நீ எதுவும் பேசாம அமைதியா இருந்தின்னா இனிமே உன் வீட்டு பக்கம் கூட வர நான் மாட்டேன்" என்று கோபமாக பேசினாள்.

பழகிய இத்தனை நாட்களில் ரூபினி அவனிடம் கோபமாக பேசியதே இல்லை. அதற்கு சந்தர்ப்பம் அமையவும் இல்லை. ரூபினி அவன் மீது கோபப்பட்டு பேசியது க்ரிஷ்ஷிற்கு ஒரு வகையான சந்தோசத்தை கொடுத்தது.

" என்கிட்ட அவ்வளவு காசில்ல ரூபினி. ஒரு பத்தாயிரம்னா என்னால முடியும். இந்த மாசம் பைக்க சர்வீஸ்கு விடனும்" என்று கூற மறுமுனையில் சிரித்தவள்

" சரி நான் இந்த கஸ்டமர மீட் பண்ணிட்டு நேரா உன்வீட்டுக்கு வர்றேன். நாளைக்கு காலையில இருந்து முழு நாளும் உன் வீட்டுல இருக்கேன். போதுமா?" என்று கூறினாள். எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் ரூபினி ஒருவருடன் மூன்று மணித்தியாலங்கள் மேல் இருக்க மாட்டாள். ஆனால் அவள் தன்னுடன் முழு நாளும் இருக்க சம்மதித்தாள் என்பது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

மறு நாள் காலை விடிந்ததும் ரூபினியிடம் இருந்து க்ரிஷின் கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவன் வீடு வருவதாகவும் காலை உணவை வாங்கி வைக்கும்படியும் கூறியிருந்தாள். உடனே க்ரிஷ் குளித்து விட்டு வீட்டை ஒழுங்குபடுத்தியவன் வெளியில் கதவு தட்டப்பட

' இரண்டு மணிநேரத்துல வர்றேன்னு சொன்னா. நேரத்தோட வந்துட்டா போல' என்று நினைத்து கதவை திறந்தவன் அவன் முன் நின்றவளை பார்த்து அதிர்ச்சியானான்.

தாய் இல்லாமல் வளர்ந்த தன்னை தாய்க்கு தாயாகவும், தந்தையின் அன்பு கொஞ்சமும் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்ட தந்தையின் அன்பை முழுமையாகவும் அவனுக்கு வாரி வழங்கிய தன் உயிரிலும் மேலாக மதிக்கும் தனது அக்கா ராதா நின்று கொண்டிருந்தாள்.

இதே போல ஒரு ஜனவரி முதலாம் நாள்தான் கடைசியாக அவளை பார்த்தான். ஆனால் இன்று அதே ஜனவரி முதல் நாள் அவளை இங்கே காண்போம் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

ராதவின் பின்னால் மீனாக்‌ஷியும் தன் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். இவர்கள் இருவரின் வரவையும் அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அன்று மீனாக்‌ஷியை அவன் மட்டும்தான் கண்டான் என்று தவறாக புரிந்து கொண்டான் என்பது இன்றுதான் க்ரிஷிற்கு புரிந்தது.

ராதாவின் முகத்தை பார்க்காமல் தலை குணிந்திருந்தவனை பார்த்தவள்

"என்ன கிருஷ்னா, வீட்டுக்குள்ள கூப்ப்பிட மாட்டீங்களா?" என்று கேட்க அவன் கதவை விட்டு விலகி நின்றான். உள்ளே வந்த ராதா, மீனாக்‌ஷியை பார்த்து அவளையும் உள்ளே அழைக்க  க்ரிஷின் முகத்தை நேரடியாக பார்க்க தயங்கியவள் குணிந்த தலையுடன் உள்ளே சென்றாள்.

க்ரிஷிற்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. வீட்டிற்குள் வந்த ராதா எதுவும் பேசாமல் வீட்டையே சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தவள் அவள் கண்களில் ஒரு பொருள் தென்பட அவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

' என் தம்பி அப்படிபட்டவன் இல்லை'
என மனதுக்குள் நினைதவள் ஒரு தலையனையை எடுத்து அந்த பொருளின் மேல் வைத்தாள்.

உடனே க்ரிஷிடம் திரும்பியவள் அவன் கைகளை தன் கைகளுடன் சேர்க்க பார்க்க, அவனோ வெடுக்கென்று தன் கைகளை பற்றிய ராதாவின் கைகளை தட்டிவிட்டான். இதை கண்ட ராதாவுக்கு கவலை மேலோங்கியது. கண்களில் கண்ணீர் முட்டியது. எக்காரணம் கொண்டும் இன்று க்ரிஷ் முன் ஒரு துளி கவலையை கூட காட்டிவிடக்கூடாது என்று சபதமிட்டு வந்தவளுக்கு க்ரிஷின் இந்த செயல் அவளின் சபதத்தை சுக்கு நூறாக்கியது.

" என்னடா கைய தட்டிவிடுற, நான் உன் அக்காடா?" என்று கூற அவளை பார்த்து விரக்தியாக புன்னகைத்தான். அவனின் இதழ்களில் இருந்து ஒரு இகழ்ச்சியுடன் கூடிய ஒரு வரட்டு புன்னகையே வந்தது அன்றி அவன் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.

" என்ன கிருஷ்னா பேசமாட்டியா? உன்ன எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா. நானும் மீனாக்‌ஷியும் இந்த ஒரு மாசமா உன்ன தேடாத இடமில்ல. உன் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், உன் பேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோர்கிட்டயும் கேட்டு பார்த்தோம். யாருக்குமே உன்ன பத்தி தெரியலடா. எங்க போறேன்னாச்சும் சொல்லிட்டு போயிருக்கலாம்ல. எவ்வளவு தவிச்சி போயிட்டோம் தெரியுமா?" என்று கூற அவன் அமைதியாகவே நின்றான்.

தன் அக்காவின் கழுத்தை பார்க்க அதில் மஞ்சள் கயிறுடன் கூடிய தாலி மின்னியது. அவன் பார்வை தன் கழுத்தில் மேய்வதை உணர்ந்தவள்
"போன வருசம்தான் நானும் மாமாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்று கூற மீனாக்‌ஷியின் கழுத்தையும் அவன் பார்க்க இருவரும் அமைதியாகினர்.

" நானும் ஷக்தியும் இரண்டு வருசம் முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இது எங்களோட குழந்தை. இப்போ எட்டு மாசமாகிது" என்று கூற அவன் குழந்தையை பாசமாக பார்த்தான். அவன் குழந்தையை ஏக்கமாக பார்ப்பதை கண்டவள் அவன் கைகளில் குழந்தை கொடுக்க வர அவன் குழந்தையை கைகளில் வாங்கவில்லை.

நிலமை அங்கு கொஞ்சம் கூட சுமூகமாக இல்லை என்பது மூவருக்கும் தெளிவாக புரிந்தது. இவர்கள் வந்ததில் இருந்து க்ரிஷ் ஒரு வார்த்தை கூட பேசாதது மீனாக்‌ஷியை விட ராதாவை மிகவும் பயம் கொள்ள செய்தது. க்ரிஷ் சாதாரணமாகவே ஒரு வார்த்தை கூறினால் அதற்கு மூன்று வார்த்தைகளில் பதில் அளிப்பான். இதுவே அவனது சுபாவம். ஆனால் இப்போது இவர்கள் இவ்வளவு பேசியும் க்ரிஷ் ஒரு வார்த்தை கூட பேசாதது ராதாவின் மனதுக்குள் ஒரு அபாய மணி அடித்தது.

" க்ரிஷ் ஏதாச்சும் பேசுடா. என் மேல ஏதும் கோபம் இருந்தா திட்டிடு. இல்ல அடி. இப்படி பேசாம இருக்காத. இது உன்னோட சுபாவம் இல்லை. நீ இப்படி அமைதியா இருக்குறத என்னால பார்க்க முடியல. உன் அக்கா கெஞ்சிகேட்குறேன். ப்ளீஸ் ஏதாச்சும் பேசுடா. என் செல்ல தம்பிதானேடா நீ. இவ்வளவு கெஞ்சுறேன்ல, ஒரு வார்த்தை பேசுடா. ஏன்கா இப்படி பண்ணீங்கன்னாச்சும் கேளுடா. இதோ நீ காதலிச்ச பொண்னு மீனாக்‌ஷிய கேளு. ஏன் உன்ன விட்டுட்டு ஷக்திய கல்யாணம் பண்ணான்னு. ஏதாச்சும் பேசு க்ரிஷ்" என்று கண்களில் கண்ணீருடன் குரல் பிசிற பேசினாள். இது எல்லாவற்றிற்கும் அவனிடம் வந்தது என்னமோ மெளனம் என்கிற பதில் மட்டுமே.

ராதா இங்கு கண்ணீர் மல்க பேசிக்கொண்டிருக்க வாசலில் அரவம் கேட்டு க்ரிஷ் வாசலை பார்த்தான்.  க்ரிஷ் பார்த்த அதே நொடி மீனாக்‌ஷியும் வாயிலை பார்க்க அங்கு ரூபினி நின்று கொண்டிருந்தாள்.  மீனாக்‌ஷியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. அதுவும் இந்த காலை வேலையில் ஒரு விலைமகளை தன் வீட்டிற்கு வரவைக்கும் அளவிற்கா க்ரிஷ் தரம் தாழ்ந்துவிட்டான் என்று அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro