7
இரண்டு நாட்களுக்கு முன் க்ரிஷ்ஷை அவனது வீட்டில் ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான பிணைப்பில் கண்ட மீனாக்ஷிக்கு மனமெல்லாம் ரனமாக வலித்தது. தன்னால்தான் க்ரிஷ் இப்படி ஆகிவிட்டானோ என்ற நினைப்பே அவளின் சிந்தனையை சிதறடிக்க செய்தது. ஹாஸ்பிடலில் அவளால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை. அவளின் எட்டு மாத மகனிடம் கூட அவளால் சரியாக கவனத்தை செலுத்த முடியவில்லை. பட்டம்மா இருக்கும் தைரியத்தில் அவள் அன்றைய நாளின் தாக்கத்தை மறக்க பெரும்பாடு பட்டாள். ஆனால் முடிவு என்னவோ பூச்சியம்தான்.
க்ரிஷ்ஷை அவன் வீட்டில் கண்டுவிட்டு வந்த மறு நாள் மீனாக்ஷி ராதாவுக்கு கால் செய்து பேசினாள். ராதாவிடம் அவள் க்ரிஷ்ஷின் வீட்டை கண்டுபிடித்ததாக கூறியவள் அவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததை மறந்தும் கூறவில்லை.
" பாப்பா ஷக்தி தம்பி வந்திருக்கும்மா" என்று பட்டம்மா கூறினார். பட்டம்மா ஷக்தியின் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்க்கும் பெண்மனி. ஷக்தியின் வீட்டில் ஒரு உரிமை உள்ள நபரை போலவே அவர் வாழ்ந்து வந்தார். ஷக்தியை சிறு வயதில் இருந்தே அவருக்கு மிகவும் பிடிக்கும். ஷக்தியை திருமணம் முடித்து மீனாக்ஷி புகுந்த வீட்டிற்கு வந்த போது பட்டம்மாவுக்கு மீனாக்ஷியை மிகவும் பிடித்து விட்டது. அதே போல ஒரு வேலைக்காரி என்ற ஸ்தானத்தையும் தாண்டி தன் மேல் பாசத்தை கொட்டிய ஒரு ஜீவனாக பட்டம்மாவை மீனாக்ஷிக்கும் மிகவும் பிடித்து போனது. பட்டம்மாவுக்கு ஷக்தி என்றால் உயிர். அவனுக்காக அவர் எது வேண்டுமானாலும் செய்வார்.
ஷக்தி தன்னை தேடி வந்திருக்கின்றான் என்றதும் மீனாக்ஷிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. கடந்த ஒரு மாதம் முன் வரை தன்னை கண்னை இமை காப்பது போல கடந்த இரண்டு வருடங்களாக அவளை காதலில் திக்குமுக்காட செய்த கண்ணியமான ஆண். ஆனால் கடந்த ஒரு மாதத்தில் இருந்து???? ஏன் தன் வாழ்வில் மட்டும் இப்படி? முதலில் நல்ல தாய், தந்தை, அக்கா என்று இருந்த குடும்பத்தில் அக்கா காணாமல் போனதில் இருந்து முதல் பூகம்பம். அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது இரண்டாவது பூகம்பம். காதலில் விழுந்து அதில் பட்ட அடி மூணாவது பூகம்பம். கடைசியாக ஒரு மாதம் முன் நடந்தது மிகப்பெரிய ஆழிப்பேரலை. தன் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வளவு பூகம்பங்கள் என்று மீனாக்ஷியால் புரிந்து கொள்ளவே முடியவிலை.
ஹாலில் தன் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த்த ஷக்தி மீனாக்ஷி வருவதை கண்டதும் சிறிதாக புன்னகைத்தான். ஆனால் தன்னை அன்பாக பார்த்து புன்னகைக்கும் தன் கணவனை விரக்தியாக பார்த்து சிரித்தவள்
" எப்படி இருக்கீங்க" என்று கேட்டாள். அவன் ஜீவனே இல்லாமல்
" நீ இல்லாம நான் ரொம்ப கஷ்டபடுறேன் மீனாக்ஷி" என்று குறி தலை குணிந்தான்.
"நான் கரிஷ்ஷ சந்திச்சேன்" என்று மீனாக்ஷி கூற ஷக்தி கண்களில் காதல் வலியுடன் அவளை நோக்கினான். அவன் கண்களில் தெரிந்த வலி மீனாக்ஷியை ஏதோ செய்தது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்
" நாந்தான் அவர பார்தேன். நான் பேச முன்னாடியே அவரு போயிட்டாரு" என்று கூற ஷக்தி
" அவன் இப்போ எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா? எங்க சந்திச்ச?" என்று கேட்க அவள் நக்கலாக
" என்ன தம்பி மேல பாசம் பொங்கி வழியுதோ?" என்றவள்
" நான் எங்க ஹாஸ்பிடல்லதான் பார்த்தேன்" என்றாள். அவளின் பதில் ஷக்திக்கு மிகப்பெரிய ஏமாற்றத்ததை கொடுத்தது. ஹாஸ்பிடலில் அவனை இவள் சந்தித்தாள் என்றால் கண்டிப்பாக அவன் எப்படியோ அவனது படிப்பை முடித்து டாக்டராகி இருப்பா. தினமும் பிரிந்த இரு உள்ளங்கள் சந்தித்து கொள்ளும் போது அவர்களுக்குள் ஏதும் புதிய உறவு உருவாகி விடுமோ என்று பயந்தான்.
மீனக்ஷியின் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. அவள் மேல் அவன் பூரன நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் இந்த காயம் பட்ட மனதின் மேல்தான் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அது எப்போது எப்படி வேண்டும் என்றாலும் மாறும். அதுவும் ஏற்கனவே ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்கள் மீண்டும் சேர்வது என்பது மிகவும் எளிதான ஒன்று. அவனின் ஏதோ ஒரு சிறிய செயலோ அல்லது இவளின் ஏதோ ஒரு சிறிய செயல் ஒன்றே போதும். பழைய நினைவுகள் கொழுந்துவிட்டு எரிய. அப்படி எரிய போகும் நெருப்பில் அழிய போவது எண்ணமோ அவனின் வாழ்க்கைதான்.
" ஹாஸ்பிடல்லன்னா? டாக்டராவா இருக்கான்?" என்று ஷக்தி தன் சந்தேகத்தை கேட்டான். அதற்கு அவள்
" அவனதான் டாக்டர் ஆக விடாம எல்லோரும் அவன் வாழ்க்கைய அழிச்சிட்டீங்களே" என்று அவள் கூற ஷக்தி அவளை ஒரு பார்வை பார்த்தான். அதில்
' உனக்கும் அதில் பங்கில்லையா?' என்று கேட்பது போல இருந்தது.
"உங்க பார்வைக்கான கேள்வி புரியுது. எனக்கு இதுல பங்கு இல்லையான்னு கேட்குறீங்க அதுதானே. நான் மூணாவது ஆளு. நீங்க எல்லோரும் அவனோட குடும்பம். அவன் தப்பே செஞ்சிருந்தாலும் நீங்க யாரும் அவன விட்டு விலகி இருக்க கூடாது. தனிமை எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? தனியா இருக்குறவன பார்க்குறபோ உங்க எல்லோருக்கும் அவன் ரொம்ப சந்தோசமா இருப்பது போல தோன்றும். ஆனால் மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டங்களை பூட்டி வெச்சிருப்பான்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும்.அவன் இப்போ டாக்டர்லாம் இல்லை. ஒரு ஃபார்மா கம்பனியில சேல்ஸ் ரெப் ஆ இருக்கான். எங்க ஹாஸ்பிடலுக்கு டெலிவரிக்கு வந்தப்போதான் நான் பார்த்தேன். ஆனா அவன்கிட்ட போறதுக்கு முன்னாடி அவன் போயிட்டான்" என்றாள்.
இதை கேட்ட ஷக்திக்கு க்ரிஷ் அவளுடன் ஒன்றாக வேலை செய்யவில்லை என்பதே ஒரு சிறிய சந்தோசத்தை கொடுத்தது. அது அவன் முகத்தில் வெளிப்படையாக தெரிய மீனாக்ஷி
" ரொம்பலாம் சந்தோசப்பட்டுக்காதீங்க ஷக்தி. நான் எப்படியும் அவன மீட் பண்ணுவேன்" என்றவள் ஷக்தியை நேராக பார்த்து
" நான் அவன் மீட் பண்ணலாம்ல. மீட் பண்ணி என்ன வேணா பண்ணலாம்ல" என்று கேட்க ஷக்திக்கு வார்த்தைகள் வரவில்லை. அவன் பார்வையாலேயே மீனாக்ஷிக்கு ' நீ எது வேணா பண்ணிக்கலாம். ஆனா என்ன விட்டு மட்டும் போயிடாத' என்பது போல ஒரு பதிலை கொடுத்தான். ஷக்தியை மீண்டும் சீண்டிப்பார்க்க நினைத்து
" இல்ல உங்களுக்கு கஷ்டம்னா நம்ம இப்பவே பிரிஞ்சிடலாம். பையன கூட நீங்க வெச்சிக்கோங்க. எனகு எந்த அப்ஜக்சனும் இல்ல" என்று கூற ஷக்தி
" இல்ல மீனாக்ஷி, என்னோட தவறுக்கு எனக்கு இந்த தண்டனை கண்டிப்பா வேண்டும்தான். ஆனால் நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது" என்று கூற பெருமூச்சொன்றை விட்ட மீனாக்ஷி
" சரி லஞ்ச் சாப்பிட்டிட்டு கிளம்புங்க" என்று கூறினாள். அவளின் கூற்றில் அவனை பகல் உணவை உண்ணுமாறு கூறியதை விட அவனை போக சொன்னதுதான் அழுத்தமாக இருந்தது. அவனும் அதை புரிந்தவன்
" எனக்கு வேற வேலை ஒன்னு இருக்கு. நீ இங்க தனியா இருப்பேன்னுதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்" என்றவனை அவள்
"ஆமாமா, இப்போ நான் தனியாதான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ள க்ரிஷ் கூட இருப்பேன்" என்று கூற ஷக்தி பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
ஷக்தி சென்றதும் மீனாக்ஷியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னை மிகவும் காதலிக்கும் தன் கணவனை இப்படி எல்லாம் வார்த்தைகளால் குத்திக்கிழிக்க வேண்டியிருகின்றதே என்ற எண்ணம் அவளை கொல்லாமல் கொன்றது.
தான் பேசிய வார்த்தைகள் தன்னை காதலிக்கும் தன் கணவனுக்கு எப்படியான கஷ்டத்தை கொடுத்திருக்கும் என்பதை புரிந்தவள் உடனே ஷக்திக்கு கால் செய்து அவனிடம் மன்னிப்பு கேட்கலாமா என்றும் தோன்றியது. இருந்தாலும் அவன் செய்த ஒரே ஒரு தவறு அவள் உள்ளத்தில் தோன்ற அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை.
மிகவும் சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு புயல் வீசுகின்றது என்பது பட்டம்மாவுக்கு தெரியும். ஆனால அதற்கு காரணம் ஷக்தியின் தம்பி க்ரிஷ்தான் என்பது இன்றுதான் அவருக்கு தெரியும். என்ன நடந்தாலும் ஷக்தியின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பட்டம்மா மனதில் தோன்றிய அதே நேரம் க்ரிஷ் மீது இனம்புரியாத ஒரு கோபமும் முளைக்க ஆரம்பித்தது.
---------
IlmaIfam3 சீக்கிரமா அப்டேட் போட சொல்லி காமண்ட்ஸ்ல சொன்னாங்க. எவ்வளவு சீக்கிரம்னு கேட்டதுக்கு நாளைக்கு போடுங்கன்னு நேத்தைக்கு சொன்னாங்க. ஒரு வாசகர் இப்படி கேட்கும் போது நமக்கு அத விட வேற என்ன வேணும். அதான் unusual ah இன்னைக்கு அப்டேட்.
Rudhra_vikram இன் " அழைப்பாயா" நன்றாக உள்ளது. ஹீரோயின் செம்ம க்யூட் பப்ளி.. அண்ட் ஒரே இம்சை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. டைம் கிடைக்கிறவங்க படிங.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro