Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

இன்று....
ரூபினியின் இடையை அழுத்தமாக கட்டிப்பிடித்திருந்தவன் ஒரு சில நிமிடங்கள் வாய்விட்டு அழுதான். ரூபினியால் க்ரிஷை எப்போதும் கணிக்க முடியவில்லை. அவளுடைய வாடிக்கையாளர்கள் எல்லோரையும் இலகுவாக அவர்களுடனான இரண்டாவது சந்திப்பிலேயே அவள் சரியாக கணித்து விடுவாள். ஆனால் கடந்த எட்டு மாதங்களாக க்ரிஷுடன் மாதம் ஒரு நாள் என பழகி இருந்தாலும் அவனை அவளால் சரியாக எடை போட முடியவில்லை.

அவளை அணைத்திருந்த அவனது கைகளை சிறிது விலக்கியவள்

" க்ரிஷ், எனக்கு நேரமாகுது. வீட்டுல தேடுவாங்க. நான் போகனும்" என்று கூற அவளை அணைத்திருந்த அவன் எழுந்தான்.

" சாரி நான் ஏதோ எமோசனல்ல உங்கள கஷ்டப்படுத்திட்டேன்" என்று கூற அவனது தலையில் கைவைத்து அவளது விரல்களால் அவனது கேசத்தை கலைத்துவிட்டவள்

" என்ன வாங்க, போங்கன்னு மரியாதையா கூப்பிடுற ஒரே ஆளு நீங்க மட்டும்தான்" என்று சிரித்தவள்

"என்ன கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் டிராப் பண்ண முடியுமா?" என்று கேட்க அவனின் தேவைக்காக அவள் வந்திருந்த காரணத்தால் அவளை டிராப் செய்ய தயாரானான்.

அவனின் பைக்கில் ஏறி அமர்ந்தவள் அவன் உடலில் இவள் உடல் கொஞ்சமும் படாமல் மிகவும் நேர்த்தியாக அமர்ந்தாள். என்னதான் அவள் ஒரு விலைமகளாக இருந்தாலும் க்ரிஷிற்கு அவளின் இப்படியான சிறிய செயல்கள்தான் அவளை ஒரு வேசியாக பார்ப்பதைவிட்டும் தவிர்த்தது.

சிறிது தூரம் இருவரும் சென்றதும் கண்ணில் ஒரு காபி சாப் தென்பட ரூபினி

" க்ரிஷ், நான் பகல் சாப்பிட்டது . இப்போ ரொம்ப பசிக்குது. அந்த காபி சாப்ல கொஞ்சம் நிறுத்துறீங்களா? உங்களால என்கூட சாப்பிட முடியுமா? இல்லை யாரும் பார்த்தா அசிங்கமாயிடும்னு நினைச்சீங்கன்னா நம்ம போயிடலாம்" என்று கூறினாள். பசி என்ற ஒரு வார்த்தையில் மனம் இளகியவன்

" பரவாயில்லை, எனக்கும் லேசான பசிதான். வாங்க ரெண்டு பேருமே போய் சாப்பிடலாம்" என்று கூறி அந்த காபி சாப்பை அடைந்தனர். இருவரும் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆடர் செய்து காத்திருந்தனர்.

" க்ரிஷ் உங்கள எனக்கு எட்டு மாசமா தெரியும். நான் என்னோட கஸ்டமர்ஸ் யாருகிட்டயும் அவங்களோட பர்சனல் விசயங்களை பத்தி பேசமாட்டேன். ஆனா..." என்று ஏதோ ஒன்றை கூற வந்து பாதியில் நிறுத்திக்கொண்டவளை

" ரூபினி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்கள்ள" என்று கேட்க இந்த எட்டு மாதத்தில் அவன் முதல் முறையாக அவள் உடல் அல்லாத வேறு ஒரு விடயம் பற்றி கேட்க போகின்றான் என்பது புரிந்தவள் உற்சாகமானாள்.

" கேளுங்க, நான் தப்பாலாம் எதுவும் நினைக்க மாட்டேன்" என்று கூற அவன்

" நீங்க ஏன் இப்படி ஆகினீங்க? ஐ மீன் ப்ராஸ்ட்டிட்யுசனுக்கு எப்படி வந்த்தீங்க. பார்க்க அழகா இருக்கீங்க. இதோ இப்போ நீங்க டிறஸ் பண்ணியிருக்க அழக பார்க்கும் போது கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு. இப்போ கூட என் பைக்ல வரும் போது என்ன உரசாம கண்ணியமா வந்தீங்க. அதுக்கும் மேல உங்க முகத்துல தேவை இல்லாம கொஞ்சம் கூட மேக்கப் இல்லை. ஒரு அழகான குடும்ப பெண்ணுக்கு இருக்க வேண்டிய எல்லா காரக்டரிஸ்டிக்கும் இருந்தும் ஏன் நீங்க இந்த தொழிலுக்கு வந்தீங்க?" என்று கேட்க ரூபினி ஒரு கணம் ஆடிப்போனால்.

' நீ ஏன் இந்த தொழிலுக்கு வந்தேன்னு இவன் கேட்டிருந்தா ஒத்த வார்த்தையில பதில் சொல்லியிருக்கலாம். ஆனா எனக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பெண்மைக்குரிய அடையாளங்கள ரொம்ப உன்னிப்பா கவனிச்சி, அதை எனக்கு உணர்த்தி என்கிட்ட இப்படி கேட்குறானே? நான் என்ன பதில் சொல்ல' என்று ரூபினி மனதுக்குள் யோசித்தாள். இருந்தாலும் அவனின் நேர்மையான பேச்சுக்கு மதிப்பளித்தவள்

" நான் இந்த தொழிலுக்கு வந்து இரண்டு வருசம் ஆகுது. எங்க அப்பா கவர்ன்மண்ட் ஆபீஸ்ல குமாஸ்தாவா வேலை செஞ்சாரு. திடீரென்று ஒரு நாள் அப்பாக்கு பக்க வாதம் வந்திடிச்சி. எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் 12 வருச வித்த்தியாசம். அம்மா கல்யாணம் பண்ணும் போது அவங்களுக்கு 16 வயசு. உலகம் என்னவென்று தெரியாத வயசுல கல்யாணம். அடுத்த வருசம் நான் பிறந்திட்டேன். அன்னைல இருந்து அம்மாவோட வாழ்க்கை ஒரு இயந்திரதனமாவே போயிட்டு இருந்திச்சி.

அப்போதான் எங்க வாழ்க்கையில எங்க பக்கத்து வீட்டு அங்கிள் மூலமா புயல் வந்திச்சி. அவரு அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாரு. எங்க கூட எல்லாம் ரொம்ப அன்பா இருப்பாரு. இயந்திரத்தனமா வாழ்ந்துக்கிட்டு இருந்த எங்கம்மாவ அவரு அடிக்கடி சிரிக்க வெச்சாரு. இப்படி வாழ்க்கை போயிகிட்டு இருந்தப்போதான் எங்கப்பா திடீரென்று வாத நோயினால பாதிக்கப்பட்டாரு. எங்கம்மாவால அந்த அதிர்ச்சிய தாங்கிக்க முடியல. வாழ்க்கையில கொஞ்சமும் சந்தோசத்தை காணாத அவங்கள அந்த பக்கத்து வீட்டு அங்கிள் ஈசியா மனச மாத்திட்டாரு. அப்பாவுக்கு நோய் வந்து சரியா இரண்டு மாசத்துல எங்கம்மா எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டாங்க. ஜஸ்ட் லைக் தட் அப்படிங்கிற மாதிரி எல்லாமே போயிடிச்சி.

ஒரு பக்கம் அப்பாவோட நோய். இன்னுமொரு பக்கம் அம்மாவோட இந்த செயல். இன்னொரு பக்கம் என்னோட படிப்பு. அடுத்த பக்கம் தம்பியோட படிப்பு. நாலு பக்கத்தாலயும் எனக்குத்தான் நெருக்குதல். இந்த கலோபரத்தில ஒரு மூனு மாசம் நான் காலேஜ் போகல்ல. அந்த வருசம் எனக்கு அட்டண்டெண்ட்ஸ் ரொம்ப கம்மி. அட்டண்டன்ஸ் கம்மியா இருந்தா எக்சாம் எழுத விடமாட்டாங்க. சரி எப்படியாசும் HOD கிட்ட பேசி எக்சாம் எழுத ஸ்பெசல் பர்மிசன் வாங்கலாம்னு போனேன்" என்றவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

" உங்களுக்கே புரிஞ்சிருக்கும் அவரு ஸ்பெசல் பர்மிசனுக்கு என்ன கேட்டிருப்பாருன்னு. இந்த உலகம் ஏந்தான் இப்படி இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியல. ஒரு இரண்டு வாரம் ரொம்ப யோசிச்சேன். சரி அந்த ஆளு சொன்னத செய்யலாம்னு போனா, அது அவனோட முடியாது போல இருந்திச்சி. இவனுங்க கூட படுத்து எக்சாம் எழுதுறத விட பேசாம படுக்குறதயே தொழிலா பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தான். இது என்னோட தொழில். நான் இஷ்டப்பட்டா மட்டும்தான் யாருகூட வேணும்னாலும் போவேன். என்ன யரும் மிரட்டவோ இல்ல கம்பல் பண்ணவோ முடியாது"  என்றவள் அவனை பார்த்து கொஞ்சம் தயக்கமாக

" க்ரிஷ் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என ரூபினி கேட்க

" கேளுங்க ரூபினி. உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" என்றான். அவளும் அவனின் அனுமதி கிடைத்த சந்தோசத்தில்

" உங்கள  இரண்டு மாசம் சந்திச்சப்போதான் புரிஞ்சது உங்களுக்கு தேவையானது உடம்பு சுகமில்ல. உங்களுக்கு தேவை ஒரு பொண்ணோட அரவணைப்புன்னு. இன்னைக்குத்தான் அது உங்க வாயில இருந்து வந்திச்சி. என்ன அணைச்சிக்கட்டுமான்னு நீங்க உங்க வீட்டுல வெச்சி கேட்டப்போதான எனக்கு அது தெளிவா தெரிஞ்சது. நான் எத்தனையோ தடவ 'என்னால இன்னைக்கு வரமுடியாது. எனக்கு தெரிஞ்ச வேற ஒரு பொண்ண அனுப்பவா' னு கேட்டா அதுக்கு எப்போமே உங்க பதில் மெளனம்தான். எனக்கு அப்பவே புரிஞ்சது. என்கிட்ட என்னோட உடம்பையும் தாண்டி எதையோ ஒன்னுக்காக உங்க மனசு ஏங்குதுன்னு. அது நட்பா இல்லை அதுக்கும் மேலயான்னு எனக்கு தெரியல. அது எதுவா இருந்தாலும் இந்த காபியோட முடிய போகுது. இதுக்கு அப்புறம் நான் உங்கள காண்டாக்ட் பண்ண போறதில்ல. நான் ஒரு கால் கேர்ள். அவ்ளோதான் நான். இதுக்கு அப்புறமா நாம சந்திச்சிக்க போறது கிடையாது. உங்களால இப்பவும் என்கிட்ட உங்க வாழ்க்கையில நடந்தத சொல்லனும்னு தோனிச்சின்ன சொல்லுங்க. நான் கேட்குறேன்" என்று கூற இதுவரைக்கும் அவளிடம் பேசிக்கொண்டிருந்தவன் கடைசியில் அவள் நாம் இனிமேல் சந்தித்துக்கொள்ள போவதில்லை என்று கூறியதை அவன் மனது ஏற்கவில்லை. அதை அவன் முகமே தெளிவாக காட்டியது. ஒரு 15 நிமிடம் க்ரிஷ் அமைதியாக இருக்க ரூபினி

" சரி க்ரிஷ், நீங்க எதுவும் செயார் பண்ணிக்க வேணாம். உங்க கூட பழகின இந்த எட்டு மாசமும் ரொம்ப ஹாப்பியா இருந்திச்சி. இனிமே நம்ம சந்திச்சிக்க வேணாம்" என்று கூறினாள். க்ரிஷின் முளைக்குள் ஆயிரம் யோசனைள். என்ன பதில் கூறுவது என்று கூட அவனுக்கு புரியவில்லை. அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளியே எட்டிப்பார்த்தது.

க்ரிஷின் நிலையை கண்ட ரூபினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அவளது பர்ஸை திறந்தி அதில் இருந்து பணத்தை எடுத்து பில்லை செலுத்த போனாள். அதற்கு அவளை தடுத்த க்ரிஷ்

" வேணாம் நானே காசு கொடுக்குறேன்" என்று கூற கொஞ்சம் முறைப்பாக அவனை பார்த்து புன்னகைத்தவள்

" உங்க பர்ஸ் ஆல்ரெடி காலியான மாதிரிதான் இருக்கு. பரவாயில்லை நானே கொடுக்குறேன். என் மனசுல இருந்த முழு பாரத்தையும் நீங்க கேட்டீங்கள்ள.அதுக்கு பிரதி உபகாரமா இருக்கட்டும்" என்றவள் பணத்தை கட்டினாள். இருவரும் வெளியில் வர வானம் லேசாக மழையை தூவ தொடங்க அங்கு வந்த பஸ்சில் ரூபினி ஏறப்போனாள். அவளின் கையை பிடித்தவன்

"ரூபினி, முதலாம் திகதி வழமை போல நம்ம சந்திக்கலாமா? நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" என்று கூற அவனை முறைப்பாக பார்த்தவள்

" இப்போதானே சொன்னேன், நம்ம இனிமே மீட் பண்ணிக்க வேணாம்னு" என்று கூறினாள். அதற்கு க்ரிஷ்

"கடைசியாக ஒரே ஒரு தடவை சந்திக்கலாம். நான் என்னோட வாழ்க்கையில நடந்தத சொல்றேன். அதுக்கு அப்புறமா நம்ம சந்திக்கிறத நிறுத்திக்கலாம்" என்று கூற அவளும் " சரி" என்று கூறி விடைபெற்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro