46
ஒரு பெண்ணின் அழகென்பது ஆணை மயக்கும் மந்திர சக்தி. பண்டையகாலம் தொட்டு இன்று வரை பெண்களால் அழிந்த சாம்ராஜ்யங்கள் அதிகம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் வரலாற்றை எழுதியவர்கள் ஒரு விடயத்தை இங்கு கவனிக்க தவறிவிட்டார்களோ? சாம்ராஜ்யத்தை இழந்த ஆண்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை விடவும் அந்த பெண் மேல் கொண்ட காதல் பெரிது என்பதாலேயே தங்களின் சாம்ராஜ்யங்களை அந்த பெண்களுக்காக உதற தயாராக இருந்தனர். ட்றாய் இல் தொடங்கி நம் அக்பர் வரைக்கும் இதுதானே நடந்தது. அவர்கள் விரும்பியது எல்லாம் தன் உள்ளம் கவர் காதலியே அன்றி சாம்ராஜ்யங்களை அல்ல.
எந்த ஒரு ஆணும் அழகான ஒரு பெண்ணை பார்த்ததும் " என்ன பொண்ணுடா" அப்படின் என்று கூறத்தோன்றும். அதேதான் இங்கு சிவாவிடமிருந்து ஆங்கிலத்தில் வந்தது. அவனது கெட்ட நேரம் அதை பார்வதி கேட்டுவிட்டால். அந்த வார்த்தையை கேட்டதில் அவளுக்கு அவன் மீதான் கோபம் இன்னும் அதிகமாகியது.
" உள்ள வாங்க" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தவள் அவனை சட்டை செய்யாமல் சென்றுவிட்டால். தாம்பூழத்தட்டில் ஆராதனை செய்து, தன்னை ஆசீர்வதித்து வீட்டுக்குள் அழைப்பார்கள் என்று வந்த சிவாவுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்த்தது.
" பாரும்மா யாரு வந்திருக்கா?" என்று சமையல் அறையில் இருந்து ரூபினி கேட்க பார்வதி பதில் ஏதும் கூறாமல் சென்றால். " ஹேய் உனக்கு வர வர கொழுப்பு அதிகமாகிகிட்டே போகுது. நாளைக்கு சிவா தம்பி வரும் போது இப்படி பண்ண உன்ன் கொன்னே போட்றுவேன்" என்று கூற பார்வதிக்கு சிரிப்புத்தான் வந்தது. தன் மகளை திட்டிவிட்டு ஹாலுக்கு வர அங்கு சிவா அனாதரவாக நின்று கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் ரூபினிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
" வாங்க தம்பி . நீங்க நாளைக்குத்தானே வரேன்னு சொன்னீங்க. சித்தப்பா வெளியில போய் இருக்காங்க. இருங்க நான் அவருக்கு கால் பண்றேன். முதல்ல நீங்க உட்காருங்க" என்றவள் மின்விசிறியை அவனுக்கு போட்டுவிட்டால். சிவா கண்களாலேயே வீட்டை அளந்தான். சிறித வீடுதான் என்றாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஹாலில் ஒரு டீப்பாய் இருக்க, அதோடு சேர்த்து ஐந்து பிளாஸ்டிக் கதிரைகள். தான் கனடாவில் வசித்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனாலும் தன் வீட்டில் இல்லாத உயிர்ப்பு இந்த வீட்டில் இருந்தது. அது என்ன என்றுதான் புரியவில்லை.
அறைக்குள் சென்ற ரூபினி " ஏன் பார்வதி இப்படி பண்ற. அந்த பையன் தான் வந்திருக்கான்னு சொல்லிருக்கலாம்ல. நான் வேற உனக்கு அவன் இங்க வர்றது பிடிக்கல என்ற மாதிரி பேசிட்டேன். அந்த பிள்ளை என்ன நினைச்சதோ தெரியல" என்று கூற பார்வதி மனதுக்குள் ' அவன் ஒன்னு நினைக்க மாட்டான். அப்பனுக்கு தப்பாம இருக்கான். பொறுக்கி' என்று திட்டினால்.
க்ரிஷ்ஷுக்கு சிவா வந்திருப்பதை கூற அவனும் தனது வேலைகளை முடித்துவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்தான். மகனும் சித்தப்பாவும் மிகவும் அன்புடன் கட்டியனைத்து பரஸ்பரம் விசாரித்துக்கொண்டனர். சிவா வந்திருப்பது தெரிந்ததும் ராதாவும் தன் குடும்பத்துடன் க்ரிஷ்ஷின் வீட்டுக்கு வந்துவிட்டால். ராதாவின் மகளான ரம்யாவுக்கு எப்போதும் க்ரிஷ்ஷின் வீடு செல்ல மிகவும் பிடிக்கும். காரணம் பார்வதியின் துள்ளலான் பேச்சும் துடுக்குத்தனமான செயல்களும்தான். ரம்யாவும் சிவாவும் ஏற்கனவே அறிமுகம் ஆனவரக்ள் என்பதால் இருவரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். இது பார்வதிக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. தனது தோழி தன்னை விட்டு புதிதாத வந்தவனிடம் பேசுவது அவளுக்கு கோபத்தை வரவைத்தது. அவள் கோபமாக அங்கிருந்து சென்று சுரேஷின் அருகில் அமர்ந்துகொண்டால்.
பார்வதிக்கு சுரேஷ் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவனின் அறிவுரைகள். எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும், பிரச்சனைகளை எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்று அவன் கூறும் அறிவுரைகள் ரம்யாவுக்கு கசப்பாக இருந்தாலும் பார்வதிக்கு மிகவும் பிடிக்கும். சுரேஷும் பார்வதியை தன் இன்னொரு மகளாகவே நினைத்தான். அவளுக்கு எது வேண்டும் என்றாலும் அவன் செய்து கொடுக்க தயாராக இருந்தான். ஆனால் க்ரிஷ் மற்றவர்களின் உதவியை நாடுவதில் நாட்டம் காட்டவில்லை. அவனின் சுய கெளரவத்தை கேள்விக்குறியாக்கி சுரேஷ் பார்வதிக்கு உதவிகள் செய்ய தயங்கினான். ஆனாலும் அவனின் இதயத்தில் பார்வதிக்கு என்று தனி இடம் என்றுமே உண்டும். தங்கள் வாழ்க்கையை பார்வதியிடம் கூறிய க்ரிஷ், சுரேஷ் செய்த விடயங்களை மட்டும் கொஞ்சமும் கூறவில்லை. சுரேஷை அவன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த தயாராக இல்லை. காரணம் ராதாவின் வாழ்க்கை. ராதா சுரேஷை திருமணம் செய்த பின் மிகவும் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்துவந்தால். அந்த வாழ்க்கைக்கு தன்னால் எந்த ஒரு தடங்களும் வந்துவிட கூடாது என்பது க்ரிஷ்ஷின் எண்ணம்.
சுரேஷ் பல தடவை க்ரிஷ்ஷுக்கு பண உதவிகள் செய்ய முயல அவன் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் எப்போதாவது தனக்கு மிகவும் அவசியம் என்றால் அவன் சுரேஷிடம் கேட்பதாக கூறியிருந்தான். கண்டிப்பாக அவன் அப்படி ஏதும் உதவி கேட்டால் அது பார்வதியின் படிப்புக்காகத்தான் இருக்கும் என்பது சுரேஷுக்கும் தெரியும்.
" ஹேய் ரம்யா, வீடியோ கால்ல பார்த்தத விட ரொம்ப குண்டா இருக்க. கனடால எல்லாம் பொண்ணுங்க சீரோ ஹிப் சைஸ்லதான் இருப்பாங்க தெரியுமா?" என்று கூற ரம்யா அவனை பார்த்து முறைத்தால்.
" போடா டேய், நான் இப்போ சீரோ சைஸ்ல இருந்தா என்ன, பத்து சைஸ்ல இருந்தா உனக்கென்ன. மவனே நீ பேருக்குத்தான் எனக்கு மாமா. இந்த சைட் அடிக்கிற வேலை எல்லாம் எங்கிட்ட வெச்சிக்காத" என்று கூறிய சமயம் பார்வதி க்ரிஷ்ஷை " அப்பா"என்று அழைத்தால். இன்று அவன் இங்கு வந்ததில் இருந்து அவன் க்ரிஷ்ஷை பார்வதி இப்படி அழைத்து முதல் முதலாக கேட்கின்றான். அப்போதுதான் அவன் மனதில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது.
'சித்தப்பாவா? அந்த பொண்ணு அப்பான்னு கூப்பிடுது. அப்போ அந்த பொண்ணு எனக்கு தங்கச்சியா? கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி' என்று மனதுக்குள் தன் நிலையை எண்ணி திட்டிக்கொண்டான். சிவாவின் முக வாட்டத்தை கண்ட ரம்யா அவன் முகத்துக்கு முன் சொடக்கு போட்டால்.
" என்ன சார் ரொம்பதான் யோசனை?" என்று கேட்க அவன்,
" ரம்யா சித்திக்கும், சித்தப்பாக்கும் குழந்தைங்க இல்லைல்ல. அப்போ இந்த பொண்ணு சித்தப்பாவ அப்பான்னு கூப்பிடு" என்று தன மனதுக்குள் ஓடும் மிகப்பெரிய சந்தேகத்தை கேட்டான். அவனின் முகவாட்டத்தை வைத்தே அவன் ஏதோ சங்கடத்தில் இருகின்றான் என்பதை புரிந்துகொண்டவள், தன்னை அவன் கலாய்த்ததுக்கு பதிலாக இவளும் கலாய்க்க தயாராகினால்.
" இல்லடா அது அவங்க பொண்ணுதான். யார்கிட்டயும் சொல்லாம வளர்த்திருக்காங்க. இது எங்க அம்மாக்கு மட்டும்தான் தெரியும்" என்று கூற அவன் உலகமே அவன் காலடியினுல் புதைந்தது போன்ற ஒரு உணர்வு வந்தது அவனுக்கு.
சிவாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கனடாவில் அவன் பல பெண்களுடன் பழகி உள்ளான். எல்லாம் லேசான முத்தம் மற்றும் மெல்லிய அணைப்புடன் முடிந்துவிடும். ஆனால் யாரிடமும் அவன் தீவிரமாக தனது மனதை தொலைக்கவில்லை. என்று அவன் தன் தாயின் கதையை கேட்டானோ அன்றே அவனுக்கு காதல் ஒரு இன்றியமையாத ஒன்றாகியது. காதல் என்பதை விட ஒரு பெண்ணின் அன்பு, தாயையும் தாண்டிய ஒரு பெண்ணின் அன்பு அவனுக்கு தேவைப்பட்டது. அவன் இந்தியா வர காரணமும் அதுதான். அந்த அன்பை தன் அத்தையிடம், அல்லது சித்தியிடம் பெற்றுக்கொள்ளலாம் என்பதே அவன் எண்ணம். ஆனால் இங்கு வந்த நேரம் பார்வதி எல்லாவற்றையும் மாற்றிவிட்டால். முதல் பார்வையிலேயே அவனை அலட்சியமாக பார்த்தது அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அது என்ன என்று அவனுக்கு தெரியவில்லை. அதற்கு அவகாசமும் கிடைக்கவில்லை.
சிவாவின் கண்களில் ஒரு ஏமாற்றம் தெரிவதை கண்ட ரம்யா " டேய் என்ன உன் பார்வையே சரியில்லையே. அவ உனக்கு தங்கச்சி முறை வேணும்" என்று கலாய்க்க அவன் முகம் சிரிப்பை பூசிக்கொண்டது. அவனுக்கும் தான் நினைப்பது அபத்தம் என்று தோன்ற ரம்யாவுடன் பேச்சை வேறு பக்கம் திருப்பினான்.
இரவு நேரம் ஆனதும் ராதா தன் குடும்பத்துடன் வீடு செல்ல தயாரானாள். ஆனால் ரம்யாவோ இன்று பார்வதியுடன் தங்க போவதாக கூற க்ரிஷ்ஷுக்கும் ரூபினிக்கும் சங்கடமாகியது. பார்வதியின் அறையில் சிவாவுக்கு தங்க ஏற்பாடு செய்திருக்க அவர்கள் மூவரும் ஒரு அறையில் தங்க நினைத்திருந்தனர். ஆனால் ரம்யா தானும் இன்று இங்குதான் தங்குவேன் என அடம்பிடித்தால்.
" அக்கா ஒரு நாள்தானே. நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். பாவம் ரம்யா. எப்பவாச்சும்தான் இங்க வர்றா. ஒரு ப்ராப்ளமும் இல்லை. நீங்க வீட்டுக்கு போங்க. நான் நாளைக்கு ஈவ்னிங்க் இவள வீட்டுக்கு கொண்டு வந்து விடுறேன்" என்றான். ராதாவும் எதுவும் மறுப்பு கூறாமல் ரம்யாவை முறைத்து விட்டு வீடு சென்றால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro