44
18 வருடங்கள் கழித்து கனடாவில்,
" அம்மா, அம்மா" என்று மீனாக்ஷியை ஏலம் விட்டுக்கொண்டு வந்தான் சிவா.
" டேய் ஏண்டா என்ன ஏலம் போடுற. ஒரு வாட்டி கூப்பிட்டா வரமாட்டேனா?" என்று சிறிது கடுகடுக்க சிவாவின் முகம் மாறியது.இதைக் கண்ட மீனாக்ஷி,
" ஆமா இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல" என்ற போதுதான் அவன் கைகளை பார்த்தால். சிவாவின் முழங்கையில் அவன் கீழே விழுந்ததற்கு அடையாளமாக சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
" டேய் என்னாச்சுடா. கையில எப்படி காயம்?" என்று கேட்க அவனுக்கு தெரியும். அவன் அம்மாவுக்கு அவன்தான் உலகம் என்று. சிவா எது கேட்டாலும் ஷக்தியும் மீனாக்ஷியும் அதை அவனுக்கு கிடைக்க செய்துவிடுவார்கள். அவர்களின் உலகமே அவன்தான். சிவா கேட்டு அவனுக்கு கிடைக்காமல் போன ஒரு விடயம் என்றால் அவனுக்கு அடுத்ததாக அந்த வீட்டில் ஒரு இன்னுமொரு குழந்தை. அதை மட்டும் இவர்கள் செய்யவில்லை.
" அய்யோ அம்மா இன்னைக்கு பாஸ்க பால் மேட்ச்ல கொஞ்சம் அடிபட்டுடிச்சி. வேற ஒன்னுமில்லமா. அப்புறம் இன்னையோட சம்மர் ஹாலிடேய்ஸ் ஆரம்பிக்க போகுது. இந்த வருசம் இந்தியாவுக்கு போகலாம்னு சொன்னீங்கள்ள. எனக்கு ராதா அத்தைய ஃபோன்ல பார்த்து பார்த்து போர் அடிச்சி போச்சு. அதுவும் அந்த ரம்யா குரங்குகிட்ட போய் சொல்லனும். உங்கம்மாவுக்கு உன்ன விட என்னதான் ரொம்ப பிடிக்கும்னு" என்று கூற தன் மகனை ஏற இறங்க பார்த்தால்.
" சிவா உட்காரு.உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும். அத பேச இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறேன்" என்றவள் அவன் கைகளை தன் கைகளுக்கு வைத்துக்கொண்டாள்.
" நான் காலேஜ் சேர்ந்த அன்னைக்குத்தான் உங்க அப்பாவ முதன் முதலா பார்த்தேன்....." என்று ஆரம்பித்து அவள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க சிவா தன் தாயின் கைகளை தட்டி விட்டான். சிவாவின் செயல் மீனாக்ஷிக்கு பயத்தை வரவழைத்தது. எங்கே தன் மகனும் தன்னை பற்றி தவறாக எண்ணிவிடுவானோ என்று. மீனாக்ஷியின் கையை தட்டி விட்டு அவன் கேட்ட கேள்வியில் மீனாக்ஷி ஆடிப்போனால்.
" அப்போ நான் இல்லைன்னா அப்பாவ விட்டுட்டு நீ போயிருப்பியாமா? நான்தான் உன் வாழ்க்கைக்கு தடையா இருந்துட்டேனா?" என்று கேட்க மீனாக்ஷியின் கண்ணில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது.
" சொல்லுமா, நான்தான் உன் வாழ்க்கைக்கு தடையா இருந்துட்டேனா?" என்று கேட்க சிறிது நேரம் அவள் மெளனமாக இருந்தால்.
" சிவா, அம்மாவ தப்பா நினைக்கிறியா. தவறு யாரு செய்யல சிவா. சொல்லு பார்க்கலாம். தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்ட ஜீவன் தான் மனிதன். தவறு செய்யலன்னா அவன் மனிசனே இல்ல. வாழ்க்கை வெறுத்து போய் இருந்த எனக்கு, இருக்குற மீதி வாழ்க்கைய சந்தோசமா வாழனும்னு ஆசைபட வெச்சது நீ. அப்பா பண்ணது தப்புதான். ஆனா க்ரிஷ் சித்தப்பா பண்ணது அதவிட பெரிய தப்பு. ஒரு பொண்ணுகிட்ட எத கேட்கனும் எத கேட்க கூடாதுன்னு அவருக்கு தெரியல. ஆனா ஒரு விசயம் சிவா. அப்பா மாதிரி ஒருத்தர உலகத்துல எங்கயுமே பார்க்க முடியாது. நான் என்றால் அவருக்கு உசிரு. நீ வேணா கேட்டுப்பாரேன், உங்களுக்கு அம்மாவ பிடிக்குமா இல்ல என்ன பிடிக்குமான்னு. அவரு உடனே அம்மாவத்தான் பிடிக்கும்னு சொல்வாரு. இப்படி எத்தனை அப்பாக்களுக்கு தான் பெத்த பிள்ளைகிட்டயே எனக்கு பொண்டாட்டியத்தான் பிடிக்கும்னு சொல்ர தைரியம் இருக்கு. உன்கிட்ட எங்க வாழ்க்கையில நடந்தத சொல்லனும்னு தோனிச்சி சொன்னேன். பதினெட்டு வருசம் கழிச்சு இந்தியா போறோம். எங்களுக்குள்ள நடந்தத மத்தவங்க சொல்லி நீ தெரிஞ்சிக்கிறத விட நான் சொல்லி தெரிஞ்சிக்கிறதே ரொம்ப நல்லதுன்னு தோனிச்சி. அதான் சொல்லிட்டேன்" என்று கூற சிவா தன் தாயை அணைத்திருந்தான். அவன் அணைப்பின் பிடி இறுகியது.
சிவா சிறு வயதில் இருந்தே கவலையில் இருந்தால் அவனின் அணைப்பில் ஒரு இறுக்கம் இருக்கு. " உங்கள எப்படிமா நான் தப்பா நினைப்பேப். ஐ லவ் யூ சோ மச் மா. உங்கள மாதிரி ஒரு பொண்ண இந்த உலகத்துல இனி பார்ப்பேன்னான்னு தெரியல. அப்படி எவளாச்சும் என் கண்ணுலபட்டான்னா அவதான் உங்க மருமகள்" என்று கூற அவனை தன்னிடம் இருந்து விளக்கினாள்.
" அப்போ எனக்கு மருமகள் பார்க்குற வேலைய சார் ஆரம்பிச்சிட்டீங்க போல. ஹ்ம்ம் இரு அப்பா வரட்டும் அவருகிட்ட போட்டு கொடுக்கிறேன்" என்று கூற மீனாக்ஷியின் நெற்றியில் இருந்த காயத்தின் தழும்பை தடவிக்கொடுத்தவன் " இப்பவும் வலிக்குதாம்மா" என்று கேட்டான். அதற்கு மீனாக்ஷி " ரொம்ப நாள் பட்ட காயம் சிவா. வலியெல்லாம் இப்போ இல்ல. தடம் மட்டுதான் இருக்கு" என்றால்.
இரவு ஷக்தி, மீனாக்ஷி, சிவா மூவரும் உணவு அருந்திக்கொண்டிருந்தனர்.
"அப்பா இந்த சம்மர் ஹாலிடேஸ்கு இந்தியா போகலாம்பா. எனக்கு ராதா அத்தை, க்ரிஷ் சித்தப்பாலாம் பார்க்கனும் போல இருக்கு" என்று கூற முதன் முதலாக தனது மகன் க்ரிஷ்ஷை பார்க்க வேண்டும் கூறியது அவனுக்கு வியப்பாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஷக்தி,
" சரி சிவா. முதல்ல நீ ஊருக்கு போ. எனக்கு இரண்டு வாரம் இங்க வேலை இருக்கு. முடிச்சதும் நாங்க வர்றோம். நான் தாத்தாகிட்ட சொல்லிடுறேன்" என்று கூற சிவா முந்திக்கொண்டு " இல்லப்பா நான் க்ரிஷ் சித்தப்பா வீட்டுல தங்கிக்கிறேன் ப்ளீஸ்" என்றான். தன் மகனுக்கு தங்களது கடந்த காலம் தெரிந்துவிட்டது என்று ஷக்திக்கு புரிய ஆரம்பித்தது. முன்னாடியே ஷக்தியும் மீனாக்ஷியும் சேர்ந்து எடுத்த முடிவுதான் தங்களின் கடந்த கால வாழ்க்கையை தங்கள் மகனிடம் கூறுவது என்பது. ஆனால் அவன் அதை எப்படி ஏற்றுக்கொள்வான் என்ற பயம் இருவருக்கும் இருந்தது.
"இங்க பாரு சிவா எப்பவுமே உங்க தாத்தா எனக்கு சொல்ரதுதான். நம்ம எப்போமே ஜெயிச்சிக்கிட்டே இருக்கனும். இல்லைன்னா ஜெயிக்கிறவங்க பக்கம் இருக்கனும். தோல்விதான் வெற்றியின் முதல் படின்னு சொல்றவங்க ஜெயிக்க தெரியாதவங்க. தோல்விதான் வெற்றியின் முதல் படி என்றால் நம்ம இரண்டாவது படியான வெற்றிக்கே போயிடனும். நீ ஜெயிக்கனும்னா எது வேணா பண்ணு தப்பில்ல. உலகத்துல ஜெயிச்சவன் எல்லோரும் ஏதோ ஒரு வழியிலதான் வந்திருப்பான். ஸ்டீவ் ஜாப்ஸ், ரிச்சர்ட் ப்ரான்சன், பில்கேட்ஸ், மார்க் சக்கர்பேர்க் இவங்க எல்லோரும் அவங்க கூட இருந்தவங்கள ஏமாத்திதான் முன்னுக்கு வந்தாங்க. இன்னைக்கு யாருமே அவங்க ஏமாத்தினத பேசமாட்டாங்க. இப்போ இவங்க எல்லாம் நமக்கு மோடிவேசனல் பர்ஸ்னாலிட்டி என்று ஆகிடிச்சி.
எதனால அப்படி? அவங்க வெற்றிதான் காரணம். செத்து இருபத்தியேழு வருசமாகியும் ஸ்டீவ் ஜாப்ஸ பத்தி இப்பவும் நம்ம ஏன் பேசுறோம். அவரோட வெற்றிகள்தான் காரணம். ஆனா ஆரம்பத்துல ஒரு பொண்ண அவரு ஏமாத்தினது, தன் உயிர்த்தோழனான வொஸ்னியாக்க ஏமாத்தினது எல்லாம் உலகம் மறந்திடிச்சி. இப்போ நமக்கு தெரிஞ்ச ஸ்டீவ் ஜாப் ஒரு சக்ஸஸ்புல் பர்ஸ்னாலிட்டி.
எப்பவுமே வெற்றிய நோக்கி ஓடாத. எப்படி வெற்றி பெறலாம் என்பதை மட்டும் யோசி. இன்னொரு முக்கியமான விசயம், நம்ம வெற்றி தற்காலிகமானதா இருக்க கூடாது. அவசரத்து எதையுமே வென்றுவிட கூடாது. நாளைக்கு அது நம்மலோட இன்னொரு வெற்றிக்கு முட்டுக்கட்டையா இருந்திடும். சரியான திட்டமிடலோட வெற்றியை அடையனும். அப்போதான் வெற்றி நம்ம கூட என்னைக்குமே இருக்கும்" என்று கூற சிவா கூறிய பதில் அவனை திக்குமுக்காட செய்தது.
" நீங்க சொல்ரது கரக்ட்தான்பா, ஆனா வாழ்க்கையில சில நேரங்கள்ள தோல்வி கூட நமக்கு நல்லத கொடுக்கும்" என்றவன் கதிரையில் இருந்து எழுந்து தன் தாயின் நெற்றியில் முத்தமிட்டு தனது அறைக்குள் சென்றான். தன் மகன் தன்னை பற்றிதான் கூறிவிட்டு செல்கின்றான் என்பதை நினைக்கும் போது மீனாக்ஷிக்கு சிவா தன்னை முழுவதும் புரிந்து கொண்டான் என்ற நிம்மதியும் சந்தோசமமும் வந்தது.
இரவு ஷக்தியின் கைவலைவில் இருந்த மீனாக்ஷி, " என்ன ஷக்தி, சிவாகிட்ட செம்மயா பல்ப் வாங்கினீங்க போல இன்னைக்கு" என்று கேட்டால்.
" மீனாக்ஷி நான் நல்லவனா இருந்து, எனக்கு பிடிச்சவ நான் இல்லாம வேற ஒருத்தர் வாழ்றத பார்க்குறத விட, நான் கெட்டவனா இருந்து எனக்கு பிடிச்சவ கூட என் வாழ்க்கையை வாழ்ந்துட்டு போறதுதான் என்ன பொறுத்த வரைக்கும் நல்லதுன்னு தோனுது மீனாக்ஷி. நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பார்க்க முடியல. உன் விசயத்துல நான் பண்ணதுக்கு என்னைக்குமே கவலைபட மாட்டேன்" என்றவனின் கன்னத்தை மீனாக்ஷி கடித்தால்.
" இதுதாண்டா, இதுதான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சது. எனக்காக எது வேணாலும் செய்ய ரெடியா இருக்க பாரு. இந்த அன்புதான் என்ன உன்னவிட்டு அங்கிட்டு இங்கிட்டு அசையவிடாம தடுக்குது" என்றாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro