Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

38

நாம் நம்மை பெரிய மேதை என்று நினைத்திருப்போம். அது சில விடயங்களில் உண்மையாக கூட இருக்கும். ஆனால் சில நேரங்களில் நாம் சிலரை அவர்களின் தொழில் மற்றும் அவர் படித்த பட்டங்களை வைத்து அவருக்கான அங்கீகாரம் அல்லது அவருக்கான மரியாதையை கொடுப்போம். பொதுவாக காரியாலங்களில் மேசையில் உட்கார்ந்து வேலை செய்பவருக்கு கொடுக்கும் அதே மரியாதையை அங்கு தரையை துடைப்பவருக்கு கொடுப்பதில்லை. அதுதான் மனித இயல்பு. இங்கும் அதேதான். ராதா ரூபினியை ஒரு விலைமகளாக தெரியுமே அன்றி அவளுக்குள் இருக்கும் பேச்சு திறமை பற்றி அவளுக்கு கொஞ்சம் கூட தெரியாது. இறுதியில் ராதா அவளின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்தது. ஆனாலும் ராதாவால் தன்  தோல்வியை ஒரு விலைமகளிடம் ஒப்புக்கொள்ள அவளின் ஈகோ கொண்ட மனது இடம் கொடுக்கவில்லை.

" சரி ரூபினி, நான் நாகரீகம் தெரியாத முட்டாளாவே இருந்துட்டு போறேன். இந்த பிரச்சினையில மீனாக்‌ஷிக்கு அடுத்து எந்த ஒரு தப்புமே செய்யாம வருந்திக்கிட்டு இருக்குறது நான் ஒருத்திதான். எல்லோரிகிட்டயும் நான் தோத்துட்டேன். எங்கப்பாகிட்ட க்ரிஷ்ஷ ஒரு நல்லவனா வளர்க்க முடியாம தோத்துட்டேன். மீனாக்‌ஷிகிட்ட அவ மனசால காதலிச்ச க்ரிஷ்ஷ சேர்த்து வைக்க முடியாம தோத்துட்டேன். அம்மா இல்லாம வளர்ந்த க்ரிஷ்ஷ ஒழுங்கா வளர்க்கல என்று ஊர் பேசுற அளவுக்கு அவன் விசயத்துலயும் தோத்துட்டேன்.

நீ இங்க இருந்து போனதும் க்ரிஷ் என்கிட்ட கேட்பான் 'ரூபினி என்ன சொன்னா?' அப்படின்னு. அதுக்கு நான் ஒரு பதில் சொல்லனும்" என்̀று கூற ரூபினியின் உதட்டில் ஒரு வெற்றிப் புன்னகை தவழ்ந்தது. ராதாவை சந்தித்த முதல் அன்றே அவள் ராதாவால் காயப்பட்டிருந்தால். அதன்பிறகு சந்தித்த ஒவ்வொரு தடவையும் ராதா வார்த்தைகளில் விஷம் வைத்து பேச அது அவளை மேலும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. ஆனால் இன்று ராதாவே தன் தோல்வியை ஒப்புக்கொண்டு நிற்பது அவளுக்கு பெருமையாக இருந்தது. ஆனால் அதே நேரம் அவளுக்குள் இருக்கும் இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸ் இந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்க விடவில்லை.

" எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொல்லுங்க. எனக்கு உங்கள பிடிக்கலன்னு சொல்லுங்க. நீங்க எங்கிட்ட என்ன எல்லாம் பேசினீங்கன்னு சொல்லுங்க" என்று கூறினாள்.

" அப்போ இதுதான் உன் முடிவா ரூபினி? " என்று கேட்க ராதாவை பார்த்து ஒரு வெற்றி புன்னகையை கொடுத்தவள்

" இப்போ நான் என்ன சொல்லனும்னி நினைக்கிறீங்க?" என்று கேட்க ராதா அமைதியாக இருந்தாள். சிறிது நேரம் யோசித்தவள் ரூபினியை நோக்கி

" நான் வெளிப்படையாவே சொல்ரேன் ரூபினி. உன்ன என் தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால நீ யாரு, உன்னோட பூர்வீகம் எதுன்னு எங்க குடும்பத்து ஆளுங்க கிட்ட சொல்ல முடியாது. ஏன்னா அப்படி சொல்ல உனக்கு எதுவுமே இல்ல. நீ சின்ன வயசுல இருந்தே பம்பாய்ல இருந்தேன்னு தெரியும். உனக்கு அம்மா, அப்பா, தம்பினுகூட யாருமே இல்லை. அது எல்லாமே நீ க்ரிஷ் கிட்ட சொன்ன பொய்கள்தான். எதுக்கு நீ அப்படி சொன்னேன்னு நான் கேட்க போறதில்ல. அது உன் இஷ்டம்.

நீ முன்னாடி கேட்ட எல்லா கேள்விகளுமே நியாயமானது. நமக்குள்ள இருக்குற இருக்குற inferiority , superiority காம்ப்ளக்ஸ அப்புறமா பேசிக்கலாம். ஒரு வேலை அது ஒரு முடிவுக்கு வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அதுக்கு அப்புறமா உங்க வாழ்க்கையில நிறைய ப்ராப்ளம்ஸ் வரும். இப்போ நான் பேச போறது உன்ன குத்திக்காட்டவோ இல்லை கேவலப்படுத்தவோ இல்லை. ரியாலிட்டிய பேச போறேன்
ஒரு வேலை நீயும் க்ரிஷ்ஷும் கல்யாணம் பண்ணி ஒன்னா இருக்கும் போது யாராச்சும் உன்ன முன்னாடி தெரிஞ்சவங்க வந்து ' இன்னைக்கு நீ ஃப்ரீயா' அப்படின்னு கேட்டா நீயும் க்ரிஷ்ஷும் அத எப்படி ஃபேஸ் பண்ணுவீங்க என்பது பத்தி நீங்கதான் பேசி முடிவெடுக்கனும். இது ஒரு சாம்பள் தான். இது மாதிரி நிறைய ப்ராப்ளம்ஸ் வரும்இதை எல்லாம் ஃபேஸ் பண்ண ஒரு பக்குவம் வேணும். அது க்ரிஷ் கிட்ட இருக்கான்னு கேட்டா நான் இல்லைன்னுதான் சொல்வேன். ஏன்னா அவன் ஒரு முன் கோபக்காரன். சரி அவன விடு. இன்னைக்கு க்ரிஷ் உனக்கு தெரிஞ்சவன். ஆனா நாளைக்கே நீங்க கல்யாணம் பண்ணி அவன் உன் புருசன் என்று ஆன பிறகு அவன் முன்னாடி இப்படி யாரும் வந்து கேட்டா உன்னால தாங்கிக்க முடியுமா?

நான் இங்க பேச வர முன்னாடி உன்ன வார்த்தைகளால காயப்படுத்தி என் தம்பி வாழ்க்கைய விட்டு போக வைக்கனும்னுதான் நினைச்சேன். ஆனா உன்கூட பேசின பிறகுதான் புரிஞ்சது எந்த ஒரு நாணயத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும்னு. என் தம்பி கேட்டுட்டான்னு அதை அப்படியே ஏத்துக்குற சாதாரண அக்கா நான் இல்லை. ஏன்னா க்ரிஷ்ஷுக்கு நான் அக்கா மட்டுமில்ல அவனோட அம்மாவும் நாந்தான். இதோ என் வயித்துல இருக்குறது என்னோட ரெண்டாவது குழந்தைதான். க்ரிஷ்தான் என்னோட முதல் பையன்.

ஆரம்பத்துல இருந்தே நான் உன் மனசு வேதனைப்படும்படி நிறைய பேசிருக்கேன். அதுக்கு எல்லாம் நான் என் தம்பி மேல வெச்சிருந்த பாசம்தான் காரணம்னு உனக்கு புரிஞ்சிருக்கும். ஏன்னா அதுகூட புரிஞ்சிக்க முடியாத முட்டாள் நீ இல்லைன்னு எனக்கு உன்கூட பேசின இந்த கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சது. உண்மைய சொல்லனும்னா உன்கூட பேசின பிறகு i am impressed in your attitude. யாரு என்ன வேணா சொல்லுங்கடா நான் இப்படித்தான் அப்படின்னு கெத்தா நின்னா பாரு. அது ஒன்னுதான் உன்மேல எனக்கு நல்ல அபிப்ராயம் வர வைச்சது.

சரி ரூபினி நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். now ball in your court. decission is yours" என்று கூற ராதாவின் பேச்சை கேட்டு ரூபினியுடன் சேர்த்து மீனாக்‌ஷியும் ஆச்சரியமானால்.

ஆனால் ரூபினியின் மனதில் ஓடிய ஒரே விடயம் தனது கடந்த காலத்தை பற்றி தான் க்ரிஷ்ஷிடம் கூறியது பொய் என்று அவனுக்கு தெரிந்திருக்குமோ என்பதுதான்.

" அப்படின்னா என்ன பத்தி எல்லாம் விசாரிச்சிட்டுதான் என்கூட பேச வந்திருக்கீங்கள்ள? அப்போ என் குடும்பம் பத்தி க்ரிஷ் கிட்ட சொன்ன பொய் எல்லாம் அவருக்கு தெரியுமா?" என்று நெஞ்சம் பதை பதைக்க கேட்பதிலேயே ராதாவுக்கும் மீனாக்‌ஷிக்கும் க்ரிஷ் மேல் ரூபினிக்கு இருக்கும் அன்பு புரிந்தது.

" இல்ல இப்போதைக்கு உன்ன பத்தின உண்மைகள் எனக்கும் மீனாக்‌ஷிக்கும் மட்டும்தான் தெரியும். க்ரிஷ்ஷுக்கு இது எதுவுமே தெரியாது. உனக்கு பேமிலின்னு யாருமில்ல என்ற உண்மைய இன்னும் அவனுக்கு சொல்லல. அது மட்டுமில்லாம நீ பாம்பேய்ல இருந்து இங்க வந்தது முதல் எத்தனை வருசமா இந்த கஷ்டத்துல இருக்க என்கிற எல்லாமே எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்" என்று கூற இவ்வளவு நேரமும் ஒரு வகை திமிருடன் நின்று கொண்டிருந்த ரூபினி அப்ப்டியே தரையில் அமர்ந்து கைகளால் தன் தலையை பிடித்துக்கொண்டாள்.

அவளை பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது. எல்லாமே தன் கையை மீறி போகும் வலியில் அவள் இருந்தால். தான் காலேஜ் படித்ததாக கூறிய பொய் முதல், தனக்கு குடும்பம் என்று எவருமே இல்லை என்பது வரையான உண்மை வரை அவனுக்கு இனி தெரிய போகின்றது என்பதே அவளுக்கு மிக பெரிய கவலையாக இருந்தது. க்ரிஷ் அவனை பற்றிய எல்லா உண்மைகளையும் அவளிடம் கூறிய போது அவள் அவனிடம் பொய் கூறியதை அவன் எப்படி எடுத்துக்கொள்வான் என நினைக்கும் போது அவளுக்கு அழுகை வந்தது. க்ரிஷ் மீது ரூபினிக்கு காதல் இருப்பது உண்மை. ஆனால் அவளின் காதலால அவன் சமூகத்தில் தலை குணிந்துவிட கூடாது என்பதே அவளின் எண்ணம். ஆனால் இப்போது அவள் கூறிய பொய்கள் தெரிய வந்தால் அவன் அவளை சந்திப்பதை கூட நிறுத்திவிடுவானோ என்ற பயம் அவளுக்கு. உடனே எழுந்தவள் ராதவின் காலை பிடித்து

" அக்கா நான் இதுக்கு முன்னாடி ராங்கித்தனமா பேசின எல்லாத்தையும் மன்னிச்சிடுங்க. ஆனா தயவு செய்து க்ரிஷ் கிட்ட என்ன பத்தி பொய் சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. நான் பார்த்த ஆம்பளைங்கள்ளயே என்ன ஒரு மனுஷியா பார்த்தது க்ரிஷ் மட்டும்தான். க்ரிஷ் ஒரு ஜெம். நான் இந்த தொழில மட்டும் பண்ணாம இருந்திருந்தா க்ரிஷ் மாதிரி ஒருத்தர் என் வாழ்க்கையில என்ன வேணாலும் நான் செஞ்சிருப்பேன்" என்று கூற இப்போது மீனாக்‌ஷியின் முகம் கவலையில் வாடியது. மீனாக்‌ஷியும் க்ரிஷ்ஷை அடைய எவ்வளவோ முயன்ற போதும் அவளுக்கு அவன் கிடைக்கவில்லையே.

" க்ரிஷ் கூட எனக்கு வாழ தகுதி இல்லை. அதனாலதான் நான அவர அவாய்ட் பண்ண முயற்சித்தேன். ஆனா அவரு முன்னாடி பொய் சொன்ன ஒரு குற்றவாளியா நிற்க விரும்பல்ல. இதுக்கு முன்னாடி நான் பேசினது உங்க மனச காயப்படுத்தி இருக்கும். அதுக்கு நீங்க என்ன வேணா பண்ணுங்க. அடிங்க, இல்ல உங்களுக்கு எவ்வளவு கேவலாமா திட்டனுமோ திட்டிக்கோங்க. ஆனா க்ரிஷ் கிட்ட என்ன பத்தின உண்மைகள மட்டும் சொல்லாதீங்கக்கா. நான் இரண்டு வருசமாத்தான் இந்த தொழில் பண்றேனு அவரு நினைச்சிக்கிட்டு இருக்காறு. இதுக்கு முன்னாடி நான் பாம்பேய்ல இருந்தத சொன்னீங்கன்னா என்ன பத்தி ரொம்ப கேவலமா நினைப்பாரு.

இனி நான் உங்க தம்பி பக்கமே வரமாட்டேன்கா. உங்க யாரையும் சந்திக்க கூட மாட்டேன். ஆனா என்ன பத்தி நான் அவருகிட்ட சொன்ன பொய்கள்னால என்மேல அவருக்கு கொஞ்சமாச்சும் ஒரு அன்பு வந்திருக்கும். அதை பாழாக்கி வேணாம்கா" என்று கூறியவள் யாரின் பதிலையும் எதிர்பாராமால் அங்கிருந்து வெளியேறினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro