36
நாளை ரூபினியை சந்திக்க ஏற்பாடுகளை ராதா செய்திருக்க மீனாக்ஷிக்கு அன்றிரவு வேலை என்றானது. இரவு எட்டு மணி அளவில் அவள் வேலைக்கு செல்ல தயாராகுவதை ஷக்தி பார்த்துக்கொண்டு இருந்தான்.
" மீனாக்ஷி, அடியேய் மீனாக்ஷி, மீனு குட்டி .. இன்னைக்கு கண்டிப்பா வேலைக்கு போய்த்தான் ஆகனுமா? ப்ளீஸ்டி புருசன் கெஞ்சி கேட்குறேன்ல. இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடுடி" என்று அவளை பார்த்து கெஞ்சுதலும் கொஞ்சுதலுமாக கேட்டான். மீனாக்ஷிக்கு ஷக்தியிடம் மிகவும் பிடித்ததே அவன் அவளிடம் வரும் போது அவன் ஒரு ஆண்மை பொருந்திய அழகனாக இருந்தாலும் அந்த நேரத்தில் அவன் ஆண்மை திமிர் எதுவுமே இருக்காது. கம்பனியிலாகட்டும் அல்லது தன் நண்பர்களிடம் ஆகட்டும் கொஞ்சம் கரார் பேர்வழியாக இருந்தவன் மீனாக்ஷியிடம் மட்டும் அப்படியே தாயிடம் அடைக்கலம் புகும் சேயாக மாறிவிடுவேன். இவ்வளவு ஏன் சிவா பிறந்த ஆரம்பத்தில் தன்னை விடுத்து அவள் தங்கள் மகனிடம் அதிகம் நேரம் செலவழிப்பதாக கூறி சண்டையிட்டவன் அவன்.
" டேய் நான் அழகா இருக்கேன்னு எனக்கு தெரியும். அதுக்காக இப்படியா என்ன சைட் அடிப்ப" என்று மீனாக்ஷி சினுங்க அவன்
" அடியே இப்படி சினுங்காத. அப்புறம் உன்ன ஹாஸ்பிடல் போக விடமாட்டேன்" என்று சீரியசாக கூறினான்.
" இங்க பாருங்க. நேத்தைக்கும் வேலைக்கு போகல்ல. இன்னைக்கு போகல்லன்னா அப்புறம் என்ன வேலை விட்டு தூக்கிடுவாங்க" என்று கூற அவன் அவளை பார்த்தவன்
" எது என் பொண்டாட்டிய தூக்குவானா. எவன் டா அவன் என் பொண்டாட்டிய தூக்க போறவன். எவனாச்சும் என் பொண்டாட்டி பக்கதுல வந்தான் மவனே அவன் கை கால் உடைஞ்சிடும்" என்க அவனை பார்த்து உதட்டை துருத்திக்காட்டியவள்
" போதும் சார் உங்க டிராமா. இப்படி பேசுரவருதான் அன்னைக்கு நான் க்ரிஷ் கூட என்ன பண்ணாலும் உங்களுக்கு ஒக்கேயான்னு கேட்டப்போ ' உனக்கு வேண்டியத பண்ணிக்க' ன்னு சொன்னாருக்கும்" என்று கூற ஷக்தியின் முகம் சுருங்கியது. அவனுக்கு தெரியும் மீனாக்ஷி காலத்துக்கும் இதை மறக்காமல் அவ்வப்போது அவனுக்கு குத்தி காட்டுவாள் என்று. ஏனென்றால் மீனாக்ஷியின் இயல்பு அது. வேண்டுமென்று அவள் அப்படி செய்வதில்லை. பேச்சு வாக்கிலே அது வந்துவிடும். இருந்தாலும் ஷக்தி தான் செய்த தவறுக்கு அதை தண்டனையாக ஏற்றுக்கொண்டான். என்ன இருந்த போதும் மீனாக்ஷி இனி அவனை விட்டு போகபோவதில்லையே. அது ஒன்றே அவனுக்கு போதும். ஷக்தியின் முகவாட்டத்தை கவனித்தவள்
" நாளைக்கு ரூபினிகூட பேசுறதுக்கு அண்ணி என்னையும் வர சொல்லிருக்காங்க. நாளைய நாள் என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்குப்பா. இந்த குழப்பம் எல்லாத்துக்கும் நாளைக்கு ஒரு முடிவு வந்திடனும்" என்றவள் ஹாஸ்பிடல் கேப் வர கிளம்பினாள்.
ஹாஸ்பிடல் வந்தவள் முதல் ரவுண்ட்ஸ் முடித்து தனது மேசையில் உட்கார்ந்திருக்க அவளை நோக்கி டியூட்டி நர்ஸ் ஒருவர் வந்தார். தன்னை நோக்கி அவர் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்துள்ளார் என்பதை புரிந்துகொண்ட மீனாக்ஷி என்ன என்று கேட்க
" டாக்டர், அன்னைக்கு உங்க ரூம்ல இருந்து ஒரு பொண்ணு போச்சில்ல ரேவதி, அவ உங்களுக்கு தெரிஞ்சவங்களா?" என்று கேட்க சிறிது குழம்பிய மீனாக்ஷியை பார்த்து அந்த நர்ஸும் சிறிது யோசித்தார்.
" அந்த பொண்ணு உங்ககிட்ட என்ன பேரு சொல்லொச்சோ தெரியலயே" என்று கூற மீனாக்ஷி அவர் கூறும் தினத்தில் அந்த அறையில் இருந்தது ரூபினி மட்டுமே.
" நீங்க ரூபினிய கேட்குறீங்களா?" என்று கேட்க அவர்
" ஓஹ் அந்த பொண்ணு உங்ககிட்ட ரூபினி என்றா சொல்லிச்சி. பாவம் அந்த பிள்ளை. அதோட வியாதி முத்திபோறதுக்கு முன்னாடி அந்த பொண்ண குணப்படுத்திடனும்" என்று கூற மீனாக்ஷி ரூபினிக்கு என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டாள்.
அந்த நர்ஸுக்கு ரூபினி மேல் அதிக பாசம் இருக்க ஒரு காரணம் உண்டு. அவரும் அவளை மிக நல்லவளாக காட்டி அவளின் கடந்த காலம் முதல் அவள் மனதார க்ரிஷ்ஷை காதலிப்பது வரை கூறினார். ரூபினியின் சகல கேஸ் ஹிஸ்டரியும் இந்த நர்ஸுக்கு தெரிய காரணம் மனநல பகுதியில் ரூபினியை பார்த்துக்கொண்டவர் இந்த நர்ஸே. அந்த நர்ஸுக்கு அவசரமாக ஒரு பத்தாயிரம் ரூபா தேவைப்பட அதை அவருக்கு கொடுத்த ரூபினி அந்த பணத்தை மீண்டும் கேட்கவே இல்லை. இந்த நர்ஸுக்கும் அதை முழுவதும் கொடுக்க வசதி ஏற்படவும் இல்லை. பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரூபினியிடம் கொடுத்து வந்த அந்த நர்ஸ் கடைசியில் ஒரு இரண்டாயிரம் பாக்கி இருக்க அதை ரூபினி வாங்க மறுத்துவிட்டாள். அதனாலேயே அவளை இவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ரூபினியின் முழு கதையையும் கேட்ட மீனாக்ஷிக்கு அவள் மேல் பரிதாபம்தான் முதலில் வந்தது. இப்போது என்ன செய்வது என்ற குழப்பம் மீனாக்ஷி. இதை க்ரிஷ்ஷிடம் கூறினால் ராதா அவளை நிராகரித்தாலும் அவன் அவளை விடப்போவதில்லை. அதனால் முதலில் ராதவிடமே ரூபினியை பற்றி கூற முடிவெடுத்தாள். ராதாவுக்கு கால் செய்து ரூபினியின் முழு கதையையும் கூற ராதா மறுமுனையில் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள். அவள் பதிலாக எதுவுமே கூறவில்லை. கடைசியில்
" சரி மீனாக்ஷி, நாளைக்கு அவ வர்றாள்ள. அவகிட்ட நம்ம பேசலாம். க்ரிஷ் கூட அவ பழகுறதுக்கான அவளோட மோட்டிவ் என்னான்னு நம்ம தெரிஞ்சிக்கலாம். அப்புறம் மனநலம் பாதிக்கப்பட்டவளங்கள பராமரிக்கிறதுக்கு நம்ம ஒன்னும் சாரிட்டி நடத்தல்ல.
எது எப்படியோ நாளைக்கு பேசிக்கலாம். அப்புறம் இது பத்தி நீ க்ரிஷ் கிட்ட எதுவுமே சொல்லாத" என்று கூறி காலை செய்தாள். ராதாவின் பேச்சு மீனாக்ஷிக்கு புதிதாக இருந்தது. எப்போதும் மற்றவரின் நலனில் அதிக அக்கறை எடுக்கும் ராதா கூட தன் அன்பு தம்பி என்று வரும் போது சுய நலமாக யோசிப்பதை எண்ணி அவள் உள்ளுக்குள் நகைத்தாள்.
சிறிது நேரம் கழித்து ஷக்திக்கு கால் செய்ய முதலில் ரிங்க் முழுவதும் சென்று கால் கட் ஆனது. மறுபடி கால் செய்ய சிறிது நேரத்தின் பின் காலை ஷக்தி அட்டண்ட் செய்தவன் பதற்றத்துடன்
" மீனாக்ஷி என்னாச்சி. ராத்திரி ஒரு மணிக்கு கால் பண்ணியிருக்க, ஏதும் அர்ஜண்டாடா? நீ எப்போமே வேலையில இருக்கும் போது தேவை இல்லாம கால் பண்ண மாட்டியே. என்னாச்சுமா?" என்று கேட்க தன் கணவனின் அன்பில் நெகிழ்ந்தவள் அவனை கலாய்க்க எண்ணினாள்.
" அது ஒன்னுமில்லங்க. ஒருவேலை நீங்க தனியா கானடா போனா வீட்டு துணைக்கு க்ரிஷ்ஷ கொஞ்ச நாள் தங்க சொல்லலாம்னு இருக்கேன்" என்றவள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி வர
" சாரிங்க நான் சும்மாதான் அப்படி சொன்னேன். எப்போ அவன் என்ன அண்ணினு ஏத்துக்கிட்டானோ அன்னையில இருந்து நான் அவனுக்கு அம்மா ஆகிட்டேன். அண்ணி அம்மா மாதிரின்னு சொல்வாங்கள்ள. அது மாதிரி. ஆனா உங்க கிட்ட பேசும் போது மட்டும் இந்த விளையாட்டுத்தனம் விட்டு போக மாட்டேங்குது. உங்கள விட்டா வேற யாருகிட்ட நான் இப்படி விளையாட முடியும் சொல்லுங்க. அப்புறம் உங்க மனச ஹர்ட் பண்ணியிருந்தா சாரிங்க." என்றாள். மீனாக்ஷியின் பேச்சில் அப்படியே உருகிய ஷக்தி
" அடிபோடி பொண்டாட்டி. என்ன மாதிரி உனக்கு அன்ப யாராலயும் கொடுக்க முடியாதுடி. அப்புறம் நீ எது பண்ணாலும் எனக்கு ஹேர்ட் ஆகாது. பிகாஸ் ஐ லவ் யூ ஃப்ரம் பாட்டம் ஒஃப் மை ஹார்ட்" என்று கூறினான்.
ஷக்தியின் காதலை கேட்டவளுக்கோ இங்கு வெட்கம் பிடுங்கியது. இருந்தாலும் அதை எல்லாம் தள்ளிவைத்து ரூபினி பற்றியும் அதன் பின் ராதாவிடம் ரூபினியின் கடந்த காலம் பற்றி பேசியதையும் கூற ஷக்தி எல்லாவற்றையும் மிக நிதானமாக கேட்டான்.
" மீனாக்ஷி, எனக்கு என்னமோ ரூபினியும் க்ரிஷ்ஷும் சேர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு தோனுது. அந்த பொண்ணும் ஓரளவுக்கு நல்லவன்னுதான் தோனுது. இப்போ இருக்குற நிலமையில க்ரிஷ் எப்படியும் புது வாழ்க்கை ஒன்ன தேடி போகமாட்டான். ராதா அக்கா பேசுறத பார்க்கும் போது அவங்க ரூபினிய ஈசியா ஏத்துக்க மாட்டாங்க போல இருக்கு. ராதா அக்கா ஏதும் ஏடாகூடமா பேசினா கண்டிப்பா ரூபினி அவங்கள நோஸ் கட் பண்ணிவிடுவா. அதுக்கு அப்புறம் அவங்கள சமரசம் செய்றது ரொம்ப கஷ்ட்மா இருக்கும். இதுக்கு என்கிட்ட ஒரு வழி இருக்கு. ஆனா அதை நீதான் செய்யனும்" என்று கூற மீனாக்ஷி என்ன என்று கேட்டாள். ஷக்தி அவனின் ப்ளான் பற்றி கூறிய வன் லைன் (one line) மீனாக்ஷிக்கு மிகவும் பிடித்திருந்தது.
" நீங்க சொல்ரதுதான் கரக்ட் ஷக்தி. க்ரிஷ் ரூபினிமேல கொஞ்சம் இல்ல ரொம்பவே ஈர்க்கப்பட்டிருக்கான். முதல்ல ரூபினியோட மனநிலை எப்படி இருக்குன்னு பார்த்து நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம்" என்றவள்
" டேய் கேடி உனக்கு மட்டும் எப்படிடா இப்படி கிரிமினல் ப்ளான்லாம் வருது. ஹ்ம்ம்ம் அது இல்லன்னா இந்த மீனாக்ஷி உனக்கு கிடைச்சிருப்பாளா?. சரிடா புருசா நீ போய் தூங்கு. எனக்கு வேலை இருக்கு முடிச்சிட்டி காலையில பார்க்கலாம்" என்று கூறி காலை கட் செய்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro