30
க்ரிஷ்ஷிற்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. மீனாக்ஷிதுடன் பேசிய பின் தனது கைபேசி கானாமல் போய் உள்ளது. ஆனால் ரேஷ்மா அவனின் கைபேசியில் இருந்து அவளுக்கு மீனாக்ஷியின் ஆபாச படங்கள் வந்ததாக கூறுகின்றால். ரேஷ்மாவிற்கு தன்னை பிடிக்காது என்று தெரியும். ஆனால் என்ன இருந்த போதும் அவள் தன் மீது இப்படி அபாண்டமாக பழி போடுபவள் கிடையாது. அதுவும் பொய்யான பாலியல் புகார் கூறும் அளவுக்கு அவள் ஒன்றும் மோசமானவள் இல்லை. ஆனால் எங்கோயோ தவறு நடந்துள்ளது. எங்கே? என்பதுதான் கேள்வி. அந்த கேள்விக்கு பதிலை கூற தன் தந்தை இடம் அளிப்பாரா என்று அவனுக்கு தெரியவில்லை.
" டேய் உன்னால என் மானம் மரியாதை எல்லாம் போனது பத்தாதாடா. இன்னும் ஏண்டா என் உயிர வாங்குற" என்று சத்தமிட்டவர் சிறிது ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். சிறிது நேரம் என்ன யோசித்தாரோ தெரியவில்லை உடனே தனது அறைக்கு சென்றார். இங்கு இவர்கள் மூவரும் தனித்து விடப்பட்டிருக்க க்ரிஷ்ஷிற்கு இந்த கொஞ்ச நேரத்தில் ரேஷ்மாவிடம் ஏன் தன்மீது அபாண்டமாக பழி போட்டாய் என்பதை கேட்பதை விட ராதா தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நம்பினாலா இல்லையா என்பது தெரியவேண்டும் என்ற ஆசை வந்தது. அது எத்தகைய ஆசை என்றால் தூக்குத் தண்ட்னை கைதியிடம் கேட்கப்படும் கடைசி ஆசை போல.
" அக்கா நான் போட்டோ கேட்டது உண்மைதான். ஆனா அது விளையாட்டுக்கு கேட்டேன்கா. ஆனா சத்தியமா மீனாக்ஷி எனக்கு அப்படி ஒரு போட்டோவும் அனுப்பல்லக்கா" என்று கூற ராதா உடைந்து போனால். அவளுக்கு புரிந்தது காதலர்களுக்குள் ஏதோ ஊடல் வந்துதான் தன் உயிரிலும் மேலான தம்பி இப்படி செய்துள்ளான் என்று. ஏன் சுரேஷை காதலிக்கும் அவளுக்கு தெரியாதா. ஆண்கள் ஒரு வீடியோகால் செய்தால் பத்தாவது நிமிடம் என்ன கேட்பார்கள் என்று. ஆரம்பத்தில் ஆசையாக கேட்பது. தன் காதலன் தானே என்று அந்த பெண் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் வந்தவரை லாபம் என்று நினைப்பது. ஆனால் அதுவே எதிர்புறம் இருப்பவர் மறுத்தால் ஆரம்பத்தில் ' என்ன நம்பலையா' என்று எமோசனல் ப்ளாக் மெயில் பண்ணுவது. இல்லை என்றால் 'சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்' என்று கூறுவது.
ஆனால் இங்கு தவறு எங்கே நிகழ்ந்தது என்று ராதாவுக்கு புரியவில்லை. தன் தம்பியும் ஒரு சாதாரன ஒரு ஆண்தானே. அவனுக்கும் ஆசைகள் இருக்கும். எந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணை அரைகுறை ஆடையில் பார்க்க ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது சரியா தவறா என்றால் கண்டிப்பாக அது தவறு. தான் இன்னுமொரு பெண்ணிடம் பார்க்க ஆசைப்படும் அதே விடயத்தை தன் சகோதரிகள், மகள், மனைவியிடம் இன்னொருவன் கேட்டால் நாம் ' ஒரு ஆணுக்கு இதெல்லாம் சகஜம்' என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அந்த நேரத்தில் நமக்கு கோபம் வரும். நமக்கு வரும் போது வலிக்கும் செயல் மற்றவருக்கு எனும் போது இனிப்பது கொடுமையிலும் கொடுமை.
" அக்கா ஏதாவது பேசுக்கா. நான் உன் தம்பிக்கா. நான் மீனாக்ஷி கிட்ட அப்படி கேட்டது தப்புதான். என்ன மன்னிச்சிடு. ஆனா நான் சத்தியமா சீரியசா கேட்கல. மீனாக்ஷி எப்போ பார்த்தாலும் என்கிட்ட சண்டை போடுவா. அவள கொஞ்சம் சுத்தல்ல விடலாம்னுதான் அப்படி பண்ணேன். ப்ளீஸ்கா என்கூட பேசு" என்று கெஞ்சினான். அவனின் தலையில் கைவைத்து அவள் ஏதோ கூறவர அவர்களின் அப்பா கையில் பணக்கட்டுடன் வந்தார்.
" இந்தா. இதுல இரண்டு லட்சம் ரூபா பணம் இருக்கு. காரிய செலவுக்கு தேவைப்படும்னு எடுத்து வந்த பணம். இந்த பணத்த எடுத்துக்கிட்டு எங்க வாழ்க்கைய விட்டு போயிடு. இனிமே எங்க முகத்துலயே நீ முழிக்க கூடாது. இல்ல இதுக்கு மேலயும் ஏதும் சீன் போடனும்னு நினைச்சின்னா இந்த வீட்டுல இப்போ இன்னொரு இழவு விழும். அது வேற யாருமில்ல , நாந்தான்" என்றவர் ராதாவை திரும்பி பார்த்து
" இவனுக்கு யாராச்சும் உறவுன்னு சொல்லிகிட்டு இந்த வீட்டுல இனிமே பேசினா அவங்களும் என்ன விட்டு போகலாம்" என்றவர் க்ரிஷ்ஷிடம் திரும்பினார்.
" இப்போ நீ இங்க இருந்து போகல, குடும்பத்து ஆளுங்க முன்னாடி உன்ன கேவலப்படுத்தி அனுப்புவேன்" என்று உறுதியாக கூறினார். அவரின் குரலில் இருந்த உறுதி அம்மூவரையும் ஆட்டிப்பார்த்தது.
ரேஷ்மாவிற்கு இப்போதைய சூழ்நிலை மிகவும் சங்கடத்துக்குள்ளாகியது. க்ரிஷ்ஷை அவனின் தந்தை அடிப்பார், அல்லது கேவலமாக திட்டுவார் என நினைத்து வந்தவளுக்கு அவர் இப்படி ஒரு பயங்கரமான முடிவை எடுப்பார் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று புரியாமல் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தால்.
ராதாவை நிமிர்ந்து பார்த்த க்ரிஷ் கண்களாலேயே அவனை மன்னிக்கும்படி கேட்க அவள் கண்களில் இருந்த வந்த கண்ணீர் அவள் என்ன நினைக்கின்றால் என்பதை மறைத்துவிட்டது.
" அப்பா நான்.." என்று க்ரிஷ் ஏதோ பேச வர
" டேய் இப்போ நீ போகல்ல. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று சத்தமிட்டார். க்ரிஷ்ஷும் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவன் அவனின் தந்தை கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்.
இங்கு ராதவுக்கு அவன் பணத்தை எடுத்துக்கொண்டு போனது பயத்தை உருவாக்கியது. காரணம் பணம் இல்லாமல் சென்றாலாவது சிறிது நேரத்தில் எல்லாம் சுமூகமானதும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தவளுக்கு அவனின் இந்த செயல் இடியை கொடுத்தது. இருந்தாலும் எப்படியும் சில நாட்களில் அவன் தன்னை மறுபடி தொடர்புகொள்வான் என நினைத்தால். ஆனால் கையில் தனது கைபேசி இல்லாமல் கால் போன போக்கில் சென்றவன் அவர்கள் பார்வையில் இருந்து கடந்த சில நாட்கல் முன்பு வரை மாயமாகவெ மறைந்து போனான்.
க்ரிஷ் வீட்டில் நடந்ததை ரேஷ்மா மீனாக்ஷியிடம் கூற அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போலானது. க்ரிஷ்ஷை அவள் உயிருக்கும் மேலாக காதலித்தால். அவன், அவளின் உடலை கேட்டிருந்தால் கூட அவனுக்கு அர்ப்பனிக்க தயாராகி இருந்தால். முட்டாள் பெண். காதலிக்கும் போது உடலை காணிக்கையாக்குவது அந்த காதலை கொச்சைப்படுத்துவது என்பது அவளுக்கு தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் காதல் பெரிது. இங்கு புனிதம் என்பதற்கான அர்த்தம் அவரவர் தத்தமது தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டனர்.
சில மாதங்களின் பின் ஷக்தி அவனின் பெற்றோருடன் மீனாக்ஷியை திருமனம் செய்ய அவளின் பெற்றோரிடம் அனுமதி கேட்க, அவர்களும் சந்தோசமாக ஒத்துகொண்டனர். காரணம் கலகலப்பாக இருந்த அவர்களின் மகள் திடீரென்று அமைதியானது அவர்களுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அதனாலேயே நல்ல சம்பந்தம் வந்ததும் அவர்கள் அந்த வாய்ப்பை நழுவ விட விரும்பவில்லை. தங்களின் மூத்த மகளின் வாழ்வு என்னானது என்பதே தெரியாமல் தவித்தவர்களுக்கு இரண்டாவது மகளும் ஏதோ ஒரு மனக்கஷ்டத்தில் இருப்பது அவர்களுக்கு பெரிய மனத்தாக்கத்தை கொடுத்தது. அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் அவளின் திருமன சம்பந்தம் வர அதை அவர்கள் சந்தோசமாக ஏற்றுக்கொண்டனர்.
ஷக்தியின் குடும்பத்தார் மீனாக்ஷியை பெண் கேட்டு வந்து சென்ற பின் மீனாக்ஷி ராதாவுக்கு கால் செய்தால்.
" அண்ணி, எனக்கு பண்றதுன்னே தெரியல" என்று ஷக்தி வீட்டில் இருந்து தன்னை பெண் கேட்டு வந்தது பற்றி கூறினால். ராதாவால் எதுவுமே கூற முடியவில்லை. காரணம் க்ரிஷ்ஷை அவர்களல் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவன் எங்கே சென்றான், என்ன ஆனான் என்ற எந்த தகவலும் இல்லைல்.
" பெஸ்ட் விஷஸ் மீனாக்ஷி. நீயாச்சும் நல்லா இருடா. ஷக்தியும் எனக்கு தம்பிதான். நீ என்ன இப்பவும் அண்ணின்னே கூப்பிடலாம்" என்று கூறி காலை கட் செய்தால்.
யாரோ ஒருவரை திருமணம் செய்து, நாளை தனது கடந்த கால காதல் தெரிய வருவதை விட, எல்லாம் தெரிந்த ஷக்தியை கல்யாணம் செய்து கொண்டால் தனது எதிர்காலம் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தால். ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் வரை க்ரிஷ் வர மாட்டானா என்று அவள் ஏங்காமல் இல்லை. அப்படி அவன் வந்திருந்தால் கண்டிப்பாக அவள் அவனுடன் சென்றிருப்பால். ஆனால அவன் வரவில்லை.
முதலிரவன்று ஷக்தி பேசிய விடயங்கள்தான் அதன் பின் அவளுக்கு க்ரிஷ்ஷின் மீதான காதலை மறக்கடிக்க செய்தது. அதன் பின் வந்த நாட்களில் ஷக்தி காட்டிய அளவிலா அன்பு அவளை ஒரு மகாராணி ஸ்தானத்திற்கு கொண்டு சென்றது. மீனாக்ஷிக்கு ஷக்தியின் காதலால் நல்ல ஒரு வாழ்க்கை அமைந்தது. ஆனால் அதே காதல் அவள் வாழ்வை இப்படி நாசம் செய்யும் என அன்று நினைக்கவே இல்லை.
----------------
எல்லோருக்கும் ஹாப்பி ரமழான் (ரம்ஜான்....)
அனேகமா நாலைக்கு ரமழான் மாத நோன்பு ஆரம்பமாகிவிடும். வாட்பெட்டில் அதிகமாக உலவ முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை அப்டேட்கள் தாமதம் ஆகாமல் கொடுக்க முயற்சிக்கின்றேன். காமெண்ட்ஸுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் கோபிக்க வேண்டாம்.
கடந்த ஒரு மாதமாக இருந்த வேலைப்பழு காரணமாக புது கதை எதுவும் படிக்கவில்லை. யாருடைய கதைகளையும் எனது அப்டேட்களில் குறிப்பிடவுமில்லை. நோன்பு பெருநாள் முடிந்த பின் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் என உள்ளேன்.
அவ்லோதான் வட்டீஸ்..
ஹாப்பி ரமழான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro