27
இவர்களின் சண்டையின் பின் மூண்று நாட்கள் க்ரிஷ் காலேஜ் வரவில்லை. மீனாக்ஷியும் அவனின் மொபைலுக்கு கால் செய்ய அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக காட்டியது. இந்த நேரத்தில்தான் மீனாக்ஷிக்கு க்ரிஷ்ஷை ரொம்பவும் அலைக்கழித்து விட்டோமோ என்ற எண்ணம் வந்தது.
க்ரிஷ்ஷை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து அவள் அவனை காதலனாக பார்க்காமல் கணவனாகவே பார்க்க ஆரம்பித்தாள். கணவன் என்றால் சிலப்பதிகார கால கணவன் மனைவி போல கிடையாது. டேய், வாடா, என்னடா செல்லம் என அடைமொழி வைத்து பேசும் நவநாகரீக கணவனாக அவனை அவள் மனது நினைக்க தொடங்கியது. அதனாலேயே பல இடங்களில் மீனாக்ஷி அவனை டாமினேட் செய்ய ஆரம்பித்திருந்தாள். அவனுக்கும் அவள் டாமினேட் செய்வது பிடிக்கும் என்று மீனாக்ஷிக்கு தெரியும். ஒரு பெண்ணால் ஒரு ஆண் டாமினேட் செய்யப்படுவது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தவறாக தோன்றலாம். ஆனால் டாமினேட் என்றால் என்ன என்பதை பொறுத்தே அது சுகமா, வலியா என்று அந்த தம்பதியினருக்கு இருக்கும்.
இன்றைய உலகில் பெண்களின் கல்வியறிவு பாரியளவில் வளர்ச்சி பெற ஆண்கள் தங்களுக்கு இருந்த சுமைகளில் பாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். ஆனால் பெண்களின் சுமை அதிகமாகிவிட்டதை பெண்களும் ஆண்களும் மறந்து விட்டனர். சுமையை சுமப்பது ஒன்றும் பெண்களுக்கு புதிதில்லையே. மஞ்சத்தில் தன் மனதுக்கு பிடித்தவனை சுமக்க ஆரம்பித்ததில் இருந்து அவள் பயணமானது குழந்தை, பேரப்பிள்ளைகள் என்று அவள் மரணம் வரை நீண்டு கொண்டே செல்லும். இன்றைய நவநாகரீக உலகில் குடும்ப உறவை சீர்குலையச் செய்யும் நடைமுறைகளான ' லிவ் இன் டுகெதர்' , ' சிங்கிள் பேரண்ட்' போன்ற வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை முழுவதும் ஒரு போராட்டமாக மாற்றிவிட்டது.
மீனாக்ஷியால் காலேஜில் இருப்புக்கொள்ள முடியவில்லை. எத்தனையோ தடவை அவள் க்ரிஷ்ஷை தொடர்பு கொள்ள முயன்றும் அது கைகூடாமல் போக அவனின் வீட்டிற்கு தனியாக செல்ல முடிவெடுத்தாள். முதன் முறையாக க்ரிஷ்ஷை அவள் தனியாக சந்திக்க முடிவெடுத்ததுதான் அவளின் முதல் சறுக்கல்.
க்ரிஷ்ஷின் வீடு வந்ததும் அங்கு அவளை வரவேற்க கதவில் ஒரு பெரிய பூட்டு தொங்கியது. அக்கம் பக்கம் விசாரித்ததில் க்ரிஷ்ஷின் பாட்டி அதாவது அவனது தந்தையின் தாய் இறந்துவிட்டதாகவும், இறுதி சடங்கிற்காக அவர்களின் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறினர்.
வீட்டிற்கு வந்தவள் மறுபடி மறுபடி அவனின் மொபைலுக்கு முயன்று கொண்டே இருந்தாள். என்னதான் க்ரிஷ் மரண வீட்டுக்கு சென்றிருந்தாலும் அவளை தொடர்புகொள்ளாமல் அவனால் இருக்க முடியாது என்று அவளுக்கு தெரியும். உடனே அவளுக்கு க்ரிஷ்ஷின் தந்தையும், ஷக்தியும் தந்தையும் அண்ணன் தம்பி என்பது நினைவுக்கு வர ஷக்திக்கு கால் செய்தாள். கால் சென்ற இரண்டாவது ரிங்கிலேயே அவன் அழைப்பை ஏற்றான்.
" ஹலோ ஷக்தி, நான் மீனாக்ஷி பேசுறேன். க்ரிஷ் மூணு நாளா காலேஜ் வரல்ல. க்ரிஷ் வீட்டிற்கு போனேன். அங்க யாருமே இல்லை. அக்கம் பக்கத்துல விசாரிச்சப்போ அவங்க பாட்டியோட சாவுக்கு ஊருக்கு போய் இருக்குறதா சொன்னாங்க. க்ரிஷ் மொபைலுக்கு கால் பண்ணா நாட் ரீச்சபிள்னு வருது. சில அசைன்மண்ட்ஸ் பேப்பர்ஸ் இருக்கு. அது பத்தி கொஞ்சம் பேசனும். உங்க மொபைல கொஞ்சம் க்ரிஷ்கிட்ட கொடுக்க முடியுமா?" என்று கேட்க ஷக்தி மறு முனையில்
" சரி மீனாக்ஷி, நான் அவன் கிட்ட போயி உனக்கு கால் பண்றேன்" என்றவன் அவள் காலை கட் செய்து விட்டு உடனே சுரேஷிற்கு கால் செய்தான். தன் காதலின் ராஜகுருவான் சுரேஷ் கூறியதை அப்படியே செய்ய ஷக்தி தயாரானான்.
" ஹலோ, நான் அவன்கிட்ட சொன்னேன் மீனாக்ஷி. அவன் உன்கூட பேச விரும்பல்லன்னு சொல்லிட்டான்" என்று கூற அவள் மறுபுறம் விசும்ப ஆரம்பித்தாள்.
" ஹேய் மீனாக்ஷி அழுகுறியா? என்னாச்சு. எனி ப்ராப்ளம்" என்று கேட்க அவள்
" இல்லை ஷக்தி ஒன்னுமில்ல. நான் அப்புறமா கூப்பிடுறேன்" என்று காலை கட் செய்தால்.
காரியம் எல்லாம் முடிந்ததும் கிராமத்தில் இருந்த அவர்களின் பெரிய வீட்டில் சொந்தங்கள் எல்லோரும் கூடி இருந்தனர். பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும்தான் சொந்தங்கள் எல்லோரும் கலைந்து செல்வது என்று முடிவானது. இவ்வளவு நாளும் வீட்டின் கீழ் பகுதியில் இருந்த ஷக்தி தானும் க்ரிஷ்ஷும் மேலே தங்குவதாக கூறி மாடியில் இருந்த அறையை இன்று காலையில் இருந்தே ஒழுங்குபடுத்தினான். அந்த நேரத்தில்தான் மீனாக்ஷியின் கால் அவனுக்கு வந்த்தது.
தன் அறைக்குள் வந்த க்ரிஷ் ஷக்தியை பார்க்க அவன் தனது காதில் apple airpods pro வை வைத்திருந்தவன் தனது ipad இல் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். airpods pro வில் இருக்கும் active noice cancellation ஐ ஆன் செய்தாள் வெளியில் இருந்து ஒரு கிச்சென்ற சத்தம் கூட அதை காதினுள் வைத்திருப்பவருக்கு கேட்காது. அதே நேரம் transparency mode இட்கு மாற்றினால் வெளியில் இருக்கும் எல்லா சத்தங்களும் கேட்கும். இதை ஜஸ்ட் ஒரு க்ளிக் மூலம் செய்யலாம்.
ஷக்தி தனது காதில் airpod ஐ வைத்திருக்க கண்டவன் அவனிடம் எது பேசினாலும் அவனுக்கு கேட்காது என நினைத்து தனது மொபைலை பார்க்க அதில் கவலேஜ் இல்லாமல் இருந்தது. அவர்கள் இருந்து கிராமம் ஆகையால் அங்கு அடிக்கடி இப்படி மொபைல் நெட்வேர்க் கவரேஜ் ப்ராப்ளம் வரும். தனது மொபைலை ஆஃப் செய்து மறுபடி அவன் ஆன் செய்ய அவனது மொபைலில் சிறிது கவரேஜ் வந்தது. அதற்கு காரணமும் இருந்தது. இவர்களின் பாட்டி வீட்டில் மாடியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கவரேஜ் கிடைக்கும். வீட்டின் கீழ் பகுதியில் கவரேஜ் கிடைப்பது கஷ்டம்.
க்ரிஷ்ஷின் மொபைல் ஆன் ஆனதும் மீனாக்ஷியின் மிஸ்ட் கால் மற்றும் அவளது மெசேஜ் எல்லாமே வந்திருந்தது.
' ரோசக்காரா, பேசமாட்டியாடா'
' புஜ்ஜி குட்டி பேசுடா என்கூட'
' க்ரிஷ் ஏன் இப்படி பண்ற, கடுப்பேத்தாம போன ஆன்சர் பண்ணு'
' க்ரிஷ் ப்ளீஸ், என்னால உன்கூட பேசாம இருக்க முடியல. ப்ளீஸ் கால் மீ'
' ஐ அம் சாரி க்ரிஷ். ப்ளீஸ் பிக் த கால்'
' க்ரிஷ் நீ எது சொன்னாலும் கேட்குறேன். என்கூட பேசாம இருக்காத ப்ளீஸ்' என்று மொத்தம் 47 மெசேஜ்கள். கடைசியாக அவள் கூறிய ' நீ எது சொன்னாலும் கேட்குறேன் என்ற மெசேஜை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. மனதுக்குள் அவன்
' என் மேல எவ்வளவு காதல் இருந்தா இவ இப்படி ஒரு மெசேஜ் பண்ணுவா. ஐ லவ் யூ டி என் பட்டு குட்டி. கவரேஜ் இல்லாம போனதுக்கு நான் என்னடி பண்ணுவேன். உன்ன நான் அவாய்ட் பண்ணுவேனா? இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உன்ன டென்சன் பண்ணிட்டுத்தான் உன்கூட நான் பேசுவேன்' என தனக்கு தானே கூறிக்கொண்டான்.
ஷக்தியை மறுபடி க்ரிஷ் கூப்பிட அவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருக்க அவனுக்கு புரிந்தது இப்போது ஷக்தியின் காதில் எதுவுமே விழாது என்று. உடனே அவன் மீனாக்ஷிக்கு கால் செய்து பேச தொடங்கினான்.
" என்ன மீனாக்ஷி ஆச்சரியமா சாரிலாம் கேட்டு மெசேஜ் பண்ணியிருக்க. வழமையா நான் தானே சாரி கேட்பேன்" என்று கூற மறுமுனையில் அவள் அழுதுவிட்டாள்.
" டேய் ஏண்டா இப்படி பண்ண. நீ போறேன்னு சொல்லிட்டு போய் இருக்கலாமே. என்கூட நீ ஒரு நாள் கூட பேசாம இருந்ததில்லையே. இந்த மூணு நாள்ள நான் செத்து செத்து பிழைச்சேண்டா" என்று கூற க்ரிஷ்ஷிற்குள் இருந்த குறும்புத்தனம் வெளிவந்தது. இன்று பகல் முழுவதும் அவளை அலையவிட்டு இரவு நேரத்தில் சமாதானமாகலாம் என நினைத்தவன்
" இட்ஸ் ஓவர் மீனாக்ஷி. என்னால உன்ன இனிமே லவ் பண்ண முடியாது. உனக்குத்தான் என்ன விட ரேஷ்மா முக்கியமா போயிட்டாளே. தனியா எங்க கூப்பிட்டாலும் வரமாட்ட. ஒரு முத்தம் கேட்டாலும் தரமாட்ட. ஏன்னா உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை. அதான் நான் எதை கேட்டாலும் முடியாதுன்னு சொல்ர. என்னால இப்படி எல்லாம் லவ் பண்ண முடியாது" என்று கூற மறுமுனையில் உடனே
" ப்ளீஸ் க்ரிஷ் அப்படி சொல்லாத. இனிமே நீ எது கேட்டலும் நான் பண்றேன்" என்று கூற அவன் மனதில் மேலும் குறும்புத்தனம் மேலோங்கியது.
" அப்போ நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப" என்று கேட்க அவள்
" கண்டிப்பா, நீ என்ன வேணா சொல்லு நான் கேட்குறேன்" என்று கூற மறுமுனையில் க்ரிஷ்
" உன்னோட நியூட் பிக்சர் ஒன்னு செண்ட் பண்ணு" என்று கூற மறுமுனையில் மீனாக்ஷி ஸ்தம்பித்து நின்றாள். ஆனால் இந்த பக்கம் க்ரிஷ்ஷிற்கு சிரிப்பு தாளவில்லை. இவ்வளவு கெத்தாக இருந்த மீனாக்ஷியை நன்றாக கலாய்த்து விட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு. அவளை மேலும் சங்கடத்துக்குள்ளாக்காமல் இருக்க எண்ணி அவன்
" சரி நியூட் பிக்சர் எல்லாம் வேணாம். டைட்டா ஒரு டீசேர்ட் போட்டு ஒரு போட்டோ செண்ட் பண்ணு. அதுக்கு அப்புறமா நான் டிசைட் பண்றேன் உன்ன தொடர்ந்து காதலிக்கிறதா வேணாமன்னு" என்று கூறி முடித்த சமயம் பார்த்து அவனது மொபைலில் மறுபடி சிக்னல் இல்லாமல் போனது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro