25
ரேஷ்மா சென்றதும் மீனாக்ஷி ஒரு சில நிமிடங்கள் உணர்வற்று இருந்தாள். ஆனால் ராதா அவளிடன் ஹாஸ்பிடலில் வைத்து கூறிய வார்த்தைகளும் ரேஷ்மா கூறிய வார்த்தைகளும் அவள் காதில் மாறி மாறி ஒலிக்க அவசரமாக ஒரு முடிவை எடுத்தாள். ஆனால் மீனாக்ஷிக்கு தெரியவில்லை அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் தெளிவானவை அல்ல என்பது.
ரேஷ்மா சென்று சரியாக பத்து நிமிடங்களில் பட்டம்மா குழந்தையுடன் வீட்டிற்கு வர மீனாக்ஷிக்கு தங்கள் வீட்டில் நடக்கும் விடயங்களை ரேஷ்மாவிற்கு யார் கூறியிருப்பார் என்று ஓரளவு ஊகித்தாள். அப்போதுதான் மீனாக்ஷி தடாலடியாக ஒரு முடிவெடுத்தாள். இவ்வளவு நாளும் மற்றவர்களுக்காக நல்லவளாக வாழ்ந்தது போதும். இனிமேல் என் வாழ்க்கைக்கு நாந்தான் ' பாஸ்' என்று.
" பட்டம்மா இங்க வாங்க" -மீனாக்ஷி
" சொல்லு பாப்பா" என்று பட்டம்மா கேட்க
" சமீபத்துல ரேஷ்மா கிட்ட பேசினீங்களா?" என்று கேட்க அவர் வெளிரிப்போனார். காரணம் எடுத்த எடுப்பிலேயே மீனாக்ஷி இப்படி கேட்பாள் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை.
" இல்லையே பாப்பா, ரேஷ்மாவா யாரு அது?" என்று கேட்க அவரை பார்வையாலேயே அருகில் அழைத்தவள் தன் குழந்தையை அவரிடம் இருந்து வாங்கியவள்
" இனிமே இந்த வீட்டுல உங்களுக்கு வேலை கிடையாது. நீங்க போகலாம்" என்று கூற அவர் ஒரு கணம் ஆடிப்போனார்.
" பாப்பா! " என்றவரை கைகளால் அமைதியாகுமாறு கூறியவள்
" ஷக்திக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கள வேலையை விட்டு போக சொன்னதும் ஷக்திகிட்ட பேசி மறுபடி வேலையில சேர்ந்துக்கலாம்னு யோசிக்காதீங்க. சமீபமா எங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு உங்களுக்கு அரசல் புரசலா தெரிஞ்சிருக்கும். அப்புறம் இன்னொரு விசயம், நான் எது சொன்னாலும் ஷக்தி அதை முடிச்சிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பாரு" என்று கூறினாள்.
" நாந்தான் பாப்பா சொன்னேன். என்ன மன்னிச்சிடுன்னுலாம் நான் கேட்க போறதில்ல. எனக்கு ஷக்தி தம்பி வாழ்க்கைதான் முக்கியம். நீயும் ஷக்தி தம்பியும் அன்னைக்கு பேசிக்கிட்டப்போதான் புரிஞ்சது அவரோட தம்பி க்ரிஷ்ஷால உங்க வாழ்க்கையில ஏதோ ஒரு ப்ராப்ளம்னு. ஆனா நீங்க பேசினத வெச்சி பார்க்கும் போது, ஏதோ ஒரு தப்பான முடிவை நோக்கி நீங்க போற மாதிரி இருந்திச்சி. ஷக்தி தம்பி ரேஷ்மா பாப்பாவ காதலிச்சது எனக்கு முன்னாடியே தெரியும். அதனாலதான் அந்த பாப்பாவோட போன் நம்பர தேடி கண்டுபிடிச்சி நான் இங்க நடந்த எல்லாம் சொன்னேன். அந்த பொண்ணும் ஷக்தி தம்பிய இன்னும் காதலிக்கிறதா சொன்னா. சரி நீங்க ஷக்தி தம்பிய விட்டு போனாலும் அவரு வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதான் நான் இப்படி பண்ணேன்" என்று கூறினார்.
இதை கேட்ட மீனாக்ஷி பதில் ஏதும் கூறாமல் இருந்ததை கண்டவர் மேலும் பதட்டமாகி
" நான் பண்ணது என்ன பொறுத்தவரைக்கும் கரக்ட்தான் பாப்பா. ஏன்னா ஷக்தி தம்பி எனக்கு பிறக்காத பையன் மாதிரி. அவருக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். ஏன் கொலை கூட பண்ணிட்டு ஜெயிலுக்கு போவேன்" என்று கூற இப்போது மீனாக்ஷி அவளின் முதுகு வடம் ஜில்லிட்டது.
" இப்போ சொல்லு பாப்பா நான் செய்யனும்னு. என்னால ஷக்தி தம்பிய விட்டுட்டு போக முடியாது. நீ அவருகூட சந்தோசமா வாழ்றதுன்னா சொல்லு நான் போயிடுறேன். அப்படி இல்லாம அவரு வாழ்க்கைய நாசம் பண்ண போறின்னா, நான் கடைசியா சொன்னத செய்ய வேண்டி வரும்" என்றார்.
சோபாவில் இருந்து எழுந்த மீனாக்ஷி பட்டம்மாவின் அருகில் சென்று அவரை அணைத்துக்கொண்டு அழுதாள். அவளின் அழுகை எதற்கென்று அவருக்கு முதலில் புரியவில்லை. தன் வாழ்வில் நடந்தவைகளை அவள் பட்டம்மாவிடம் கூற அவருக்கு இடி விழுந்தாற் போலானது. இப்போது யார் பக்கம் தான் சாய்வது என்று புரியவில்லை.
" அழாத பாப்பா. உன் வாழ்க்கையில இவ்வளவு நடந்திருக்குன்னு எனக்கு தெரியாம போயிடிச்சி. நீ ஒன்னும் கவலை படாத. அந்த ரேஷ்மா பொண்ண பத்தி இனிமே எதுவுமே யோசிக்காத. அந்த பொண்ண இனிமே இதுல மூக்கை நுழைக்காம பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும். நீ அதை பத்தி யோசிக்க வேணாம்" என்று கூற மீனாக்ஷி
" ஏன் பட்டம்மா, ஷக்திக்காக கொலை எல்லாம் செய்வேன்னு சொல்றீங்க. ஷக்திய உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?" என்று கேட்க அவர் கூறிய பதில் அவளை வாயடைக்க வைத்தது.
" ஷக்தி தம்பிக்காக நான் எது வேணாலும் செய்வேன். அதே போல ஷக்தி தம்பி உங்களுக்காக எது வேணாலும் செய்யும்" என்றவர் அவளின் நெற்றியில் கைவைத்து ஆசீர்வதிப்பது போல செய்தார். அவர் கூறியதில் ஆயிரம் ஆர்த்தங்கள் பொதிந்திருந்ததை மீனாக்ஷி உணராமல் இல்லை.
மீனாக்ஷி எடுத்த முடிவானது இனி எந்த சந்தர்ப்பத்திலும் ஷக்தியை விட்டு விலக கூடாது என்பதுதான். ஆனால் அவன் செய்த செயலுக்கு அவனை அவ்வப்போது தண்டிக்கலாம் என்றும் நினைத்தாள். ஆனால் தண்டனையை விட மன்னிப்பு பெரியது என்பது அவளுக்கு புரியவில்லை.
----------------
" டாக்டர் இப்போ நம்ம என்ன செய்யனும். ரேவதிக்கு குணமாகிடும்ல?" என்று கேட்க அவள் எதிரில் இருந்த பெண் மனோதத்துவ டாக்டர்
" இது கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்டான கேஸ் பூர்ணி. தொடர்ச்சியா டிரீட்மண்ட் எடுத்துக்கிட்டா குணப்படுத்த ஐம்பது விகிதம் வாய்ப்பிருக்கு. ஆனா ரேவதி ரொம்ப இண்டலிஜண்ட் ஆன பொண்ணு. அவளுக்கு மனசுல ஒரு குழப்பம் இருக்குறது அவளுக்கே தெரியும். இப்படி மனப்பிறழ்வு ஏற்பட்டவங்க அத அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. ஆனா இவ அத அக்சப்ட் பண்ணிக்கிறா. அதுவே நம்ம வேலைய ரொம்ப ஈசியாக்கிடும். நேத்தைக்கு அவ சொன்ன கதைய வெச்சி கேட்கும் போது அவளோட கற்பனை உலகம் அதிகமாகிகிட்டு போகுதுன்னு தெரியுது. அவ கற்பனைதான அவளுக்கு எதிரி. அந்த கற்பனை உலகத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமாத்தான் அவள வெளியில கொண்டு வரனும்" என்றார்.
பூர்ணியும் ரூபினியும்( ரூபினியா?ரேவதியா?) மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் சிறு வயதில் இருந்தே பல ஆண்டுகளாக இருந்தவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழக அமைச்சரை மிரட்ட அவருடைய மகளை கடத்தி சென்றது ஒரு கும்பல். அந்த பெண்ணை அவர்கள் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியில் பணயக்கைதியாக வைத்திருந்தனர். வேறு எங்கு வைத்தாலும் போலீஸ் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதாலேயே அவர்கள் இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
ஆனால் தமிழக போலீஸ் மிகவும் திறமையாக செயல்பட்டு அந்த பெண்ணை மீட்டு கொண்டு வரும் போதுதான் மீடியா என்ற புது வகை பிரச்சினை அவர்களை நோக்கி வந்தது. அமைச்சரின் மகள் சிவப்பு விளக்கு பகுதியில் இருந்தாள் என்பது மீடியாவுக்கு தெரிந்தால் அது மிகப்பெரிய பிரச்சினையில் முடியும் என்பது தெரிந்த போலீசார், அந்த சிவப்பு விளக்கு பகுதியில் பதினெட்டு வயதுக்கு கீழ் இருந்த தமிழ் பெண்கள் பத்து பேரை மீட்டு வருவது போல அமைச்சரின் மகளை ரெக்கார்ட்டில் இல்லாமல் அழைத்து வந்தனர்.
போலீஸ் கஸ்ட்டடியில் வந்ததால் அந்த பத்து பெண்களுக்கும் இலவச rehabilation வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதில் ஏழு பெண்கள் குணமானதுடன் இரண்டு பெண்கள் அந்த கொடுமையான அனுபவத்தில் இருந்து வெளிவர முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இறுதியில் எஞ்சியது ரூபினி மட்டுமே. மற்ற எல்லோரை விடவும் அவளின் மனநிலைதான் அதிகம் சிதைந்து காணப்பட்டது. அவள் ஒரு ஆணுடன் உறவு வைத்தாள் அந்த ஆணை தனது கற்பனை காதலனாக நினைக்க தொடங்கினாள். ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு பெயர் கூறினாள். க்ரிஷ்ஷிடம் எப்படி ரூபினி என்று கூறினாலோ அதே போல ரீட்டா, ரஞ்சினி, ரக்ஷா என பல பல பெயர்கள் ஒவ்வொருவரிடமும். பத்து கஸ்டமரில் ஒரு கஸ்டமர்தான் இப்படியான பெண்களிடம் அவர்களின் கடந்த காலத்தை கேட்பார்கள். அப்படி யாரும் அவளின் கடந்த கால வாழ்க்கைய பற்றி கேட்டால் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை கூறினாள். இங்குதான் அவளின் சாமர்த்தியம் இருந்தது. ஒருவரிடம் கூறிய பெயரையோ அல்லது அவளது கடந்த கால வாழ்க்கை கதையையோ இன்னொருவருக்கு கூற மாட்டாள். ஆனால் அவளிடம் வந்த எல்லா ஆண்களும் அவளை ஒரு சக மனுசியாக பார்க்காமல் உடல் பசியை தீர்க்கும் மிருகமாகவே பார்த்தனர். அதுவே அவளை மிகவும் பாதிக்க செய்தது. அவள் மனம் காதலை நாடியது. கூடலின் போதாவது காதல் கிடைக்கும் என்றெண்ணியவளுக்கு அங்கு வக்கிரமான வார்த்தைகளும் இயற்கைக்கு முறனான செயல்களுமே அவளுக்கு கிடைத்தது. ஆனால் அவள் மனம் சோர்ந்து போகவில்லை. தன் கற்பனை காதலனை ரகசியமாக தேடினாள். கண்டும் பிடித்தாள்.
ஆரம்பத்தில் மனநல டாக்டரை தவறாமல் சந்தித்தவள் கடந்த சில மாதங்களாக சந்திக்கவில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் க்ரிஷ். எல்லா ஆண்களும் தங்களின் வக்கிரங்களை அவளிடம் தீர்த்துக்கொண்ட போது அவன் மட்டுமே அவளை ஒரு பெண்ணாக மதித்து உறவு கொண்டான். தான் உறவு கொள்ளும் எல்லா ஆண்களையும் தன் கற்பனை காதலனாக நினைக்கும் அவளால் க்ரிஷ்ஷுடனான உறவின் பின் மற்ற ஆண்களை அவர்களுடனான உறவின் போது தன் கற்பனை காதலனாக நினைக்க முடியவில்லை. காரணம் அவள் அதன்பின் யாரிடம் சென்றாலும் அங்கிருப்பது க்ரிஷ் என்றே மனதளவில் எண்ணினால். இங்குதான் அவள் மனதில் பிரச்சினை உருவாகியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro