24
அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை ஊகித்திருந்த ரேஷ்மா
" ஷக்தி வாழ்க்கை என்னாகும்னு யோசிக்கிறியா? அதை பத்தி ரொம்ப யோசிக்காதடா. நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதே ஷக்திக்காகத்தான். நான் ஷக்திய கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ சரியான ஒரு முடிவ எடுத்தா நம்ம நாளு பேரு வாழ்க்கையும் நல்லா இருக்கும். அப்புறம் உன் பையன கண்டிப்பா க்ரிஷ் ஏத்துப்பான். இல்லைன்னா கூட பரவாயில்லை. நாங்க பார்த்துக்கிறோம்" என்று கூற மீனாக்ஷிக்கு எங்கிருந்து கோபம் வந்தது என்று புரியவில்லை.
" எந்திரிடி" என்று ரேஷ்மாவை பார்த்து கோபமாக கூற ரேஷ்மாவிற்கு ஒரு கணம் மீனாக்ஷியின் இந்த கோபமான தோற்றம் புரியவில்லை. காரணம் அவள் அறிந்த வகையில் மீனாக்ஷியிடம் கோபத்தை கண்டதேயில்லை. எப்போதும் அமைதியாக இருப்பவள் சடுதியாக கோபப்பட்டால் அதை பார்ப்பவர்களுக்கு முதலில் அதிர்ச்சியும் பின்னர் பயமும் ஏற்படும். இங்கு ரேஷ்மாவிற்கும் அதுதான் நடந்ததது. இருந்தாலும் அவள் தன் முகத்தில் அதிர்ச்சியை காட்டினாலும் பயத்தை காட்டிக்கொள்ளவில்லை. இவை எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் ரேஷ்மா மீனாக்ஷியை சந்திக்க வந்திருந்தாள்.
" என்ன மீனாக்ஷி ஏன் இப்போ கோபமாகிற?" என்று கேட்க மீனாக்ஷி எதுவும் கூறமால்
" வெளிய போடி" என்றாள். மீனாக்ஷியின் இந்த பதில் ரேஷ்மா எதிர்பாராத ஒன்று. ரேஷ்மாவிற்கு இன்றே அவள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டிய கட்டாயம். காரணம் அவளின் தந்தை அவளது திருமணத்திற்கு கொடுத்திருந்த கெடு அடுத்த மாதத்துடன் முடிவடைகின்றது. அவளின் தந்தை எப்போதும் ஒரு விடயத்துக்கு போதியளவு கெடு கொடுப்பார். அது முடிந்ததும் அவர் சொல்வதை கேட்க வேண்டும். இதுதான் அவரது பாணி. இன்னும் ஒரு மாதத்தில் கண்டிப்பாக தான் யாரையும் கைகாட்டாமல் விட்டாள் அவளின் தந்தை ஒரு மாப்பிள்ளையை கொண்டு வருவார் என்று அவளுக்கு தெரியும்.
ரேஷ்மாவிற்கு மீனாக்ஷியின் வீட்டில் நடந்த குளறுபடிகளை கூறியது பட்டம்மாதான். இன்றும் அவர் இவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொள்ளட்டும் என்று எண்ணித்தான் மீனாக்ஷியின் மகனை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக மீனாக்ஷியின் செயற்பாடுகள் ஷக்தியை மிகவும் பாதிக்கின்றது என்பதை புரிந்து கொண்ட அவர், தனக்கு மகனை போல இருக்கும் ஷக்தி மனதால் வேதனைபடுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரேஷ்மாவை பற்றி ஏற்கனவே பட்டம்மாவுக்கு தெரியும். ஷக்தி காலேஜில் படிக்கும் போது ரேஷ்மா அவனுக்கு ப்ரபோஸ் செய்ததை அவரிடம் கூறியுள்ளான். ஆனால் இப்போது எப்படியோ ரேஷ்மாவை அவர் தேடிப்பிடித்து அவளின் நாடி பிடித்து பார்க்க அவள் இப்போதும் ஷக்தியை நினைத்து திருமணத்தை தள்ளி வைத்திருப்பது தெரிந்தது. இந்த சந்தர்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள பட்டம்மாவும் ரேஷ்மாவும் சேர்ந்து போட்ட திட்டம்தான் இது.
பட்டம்மாவை பொறுத்தவரை இதில் யாருடைய வாழ்க்கையும் சூனியமாக போவதில்லை. மீனாக்ஷி காதலித்த க்ரிஷ் அவளுக்கு கணவனாகவும், ரேஷ்மா காதலித்த ஷக்தி அவளுக்கு கணவனாகவும் வரப்போவது அவர்கள் வாழ்வில் சந்தோசத்தை ஏற்படுத்தும். ஆனால் இங்கு ஷக்தி தான் காதலித்த மீனாக்ஷியை இழக்க வேண்டி வரும். அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை. மீனாக்ஷியால் ஷக்தி கவலைப்படுவதை விட ரேஷ்மாவின் காதலால் சில நாட்களில் மீனாக்ஷியை மறந்து அவனால் சந்தோசமாக வாழ முடியும் என்று எண்ணினார்.
" மீனாக்ஷி பொறுமையா யோசி. இதனால பல பேரோட வாழ்க்கை நல்லா அமையும். அவசரப்படாத. நீயும் ஷக்தியும் இப்போ ஒழுங்கா பேசுரல்லன்னும் தெரியும். ஏன் அடம்பிடிக்கிற" என்று கேட்டாள்.
" ஏண்டி, அடுத்தவ புருசன இப்படி கேட்குறியே உனக்கு கேவலமா இல்ல. நீ எல்லாம் என்ன ஜென்மம்டி. காலேஜ்ல என்கூட பழகின அந்த ரேஷ்மா எங்க. நீ அவ இல்ல. உன்ன பார்க்கவே அருவருப்பா இருக்கு. எனக்கும் என் புருசனுக்கும் ஆயிரம் இருக்கும். நீ அதுக்குள்ள எதுக்கு வர. உன்னை எல்லாம் என்ன சொல்லி உங்க வீட்டுல வளர்த்தாங்களோ" என்று மிக மோசமாக திட்ட, இந்த பிரச்சினையை மிகவும் பொறுமையாக கையாள நினைத்த ரேஷ்மாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
" என்னடி சொன்ன, நான் பண்றது கேவலமா இல்லையான்னு கேட்குறியா? நீ மட்டும் என்ன உத்தமியாடி. ஷக்திய கல்யாணம் பண்ண முன்னாடி ஸ்கூல்ல ரெண்டு பசங்கள லவ் பண்ண. அப்புறம் உன்ன விட வயசுல சின்ன பையன் க்ரிஷ்ஷ லவ் பண்ண. சரி காதலிச்சதுல எவனயாச்சும் கல்யாணம் பண்ணியிருந்தாலும் பரவாயில்ல. நீ காதலிக்காத ஷக்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையும் பெத்துக்கிட்ட. இதுல நீ என்ன பார்த்து கேவலமா இல்லையான்னு கேட்குறியே, முதல்ல நீ பண்ணத நினைச்சு உனக்கு அது கேவலமா தோனல்ல. உடம்பால ஒருத்தங்கிட்ட போறது மட்டும் விபச்சாரம் இல்ல. மனசால போறதும் விபச்சாரம்தான். என்ன பொறுத்தவரைக்கும் நான் இதுவரைக்கும் காதலிச்ச, காதலிச்சிக்கிட்டு இருக்குற ஒரே ஆம்பள ஷக்திதான். என்ன பார்த்து நீ எப்படி கேவலமா இல்லையான்னு கேட்கலாம். ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க மீனாக்ஷி. இப்போ நான் சொன்னதுக்கு நீ ஒத்துக்கல்ல, அப்புறம் உன் வாழ்க்கை நரகமா மாறிடும். எப்படின்னு யோசிக்கிறியா? க்ரிஷ் தெரியும்ல க்ரிஷ். உன்னோட பல காதலர்கள்ள ஒருத்தன். அவன நான் கல்யாணம் பண்ணி, உன் மொத்த குடும்பத்துக்குள்ளேயும் பெரிய பிரச்சினைகளை உண்டாக்கி, உங்க எல்லோரோட வாழ்க்கையையும் சீரழிப்பேன். எனக்கு கிடைக்காத நிம்மதியான வாழ்க்கை உங்க யாருக்குமே கிடைக்க விட மாட்டேன். உனக்குத்தான் க்ரிஷ் அக்கா ராதா மேல ரொம்ப பாசம்ல. இதுல அவங்க வாழ்க்கையும் சேர்ந்து நாசமாகும். எப்படி வசதி" என்று கூற மீனாக்ஷி ஒரு கணம் ஆடிப்போனால். ரேஷ்மா ஒன்றும் சாதாரனமானவள் கிடையாது. தனக்கு பிடித்த ஒன்று கிடைக்க அவள் எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவள்.இருந்தாலும் எதையோ யோசித்த மீனாக்ஷி ரேஷ்மாவை நோக்கி நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள்.
" ஹாஹா, நீ டூ லேட் மா. ஆல்ரெடி க்ரிஷ் ஒரு பொண்ணுகூட மிங்கிள் ஆகிட்டான். உன்னால க்ரிஷ்ஷ நெருங்க கூட முடியாது" என்றதற்கு கூற அதற்கு ரேஷ்மா கூறிய பதில் மீனாக்ஷியை பயம் கொள்ள செய்தது.
" யாரு அந்த ப்ராஸ்டிட்யூட் ரூபினிய சொல்றியா. ஏன்மா இந்த ரேஷ்மாவ பத்தி தெரிஞ்சுமா நீ அவ எல்லாம் எனக்கு போட்டின்னு நினைக்கிற. அவள சீன்ல இருந்து எப்படி தூக்கனும்னு எனக்கு தெரியும். உனக்கு ஒன்னு தெரியுமா மீனாக்ஷி. க்ரிஷ் இப்போ ஒரு உடைஞ்சி போன பொம்ம மாதிரி. அத பயன்படுத்துறவங்க எப்படி வேணா தனக்கு ஏத்தமாதிரி மாத்திக்கலாம். அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒரு பொண்ணோட அன்பு. அதை அவன் ஒரு ப்ராஸ்டிட்யூட் கிட்ட எதிர்பார்த்திக்கிட்டு இருக்கான். ஒரு ப்ராஸ்டிட்யூட் கு தேவையானது பணம். அது என்கிட்ட எக்கச்சக்கமா இருக்கு. ரூபினிக்கு பணத்த கொடுத்து அவள சரி பண்ணிடுவேன். க்ரிஷ்ஷிற்கு அன்ப கொடுத்து சரி பண்ணிடுவேன். சோ இப்போ சொல்லு செல்லம், க்ரிஷ்ஷ என்னால நெருங்குறது ஈசியா இல்லையான்னு" என்று கண்ணடித்தவளை மீனாக்ஷி மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
" அப்புறம் இன்னொரு விசயம். நான் க்ரிஷ்ஷ கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட நீ அப்போ என்ன விட இரண்டு ஆம்பளைங்க லீடிங்க்லதான் இருப்ப. காதலிச்சது மூனு பேரு அப்புறம் கட்டிக்கிட்டது ஒருத்தன். மொத்தமா நாளு ஆம்பளைங்க. என் லைஃப்ல காதலிச்சது ஒருத்தன் கட்டிக்க போறது இன்னொருத்தன். சோ ரெண்டே பேருதான். இதுல முக்கியமான மேட்டர் என்ன தெரியுமா? உனக்கும் ரூபினிக்கும் வித்தியாசமே இல்லை. அவ காசுக்காக ஆம்பிளைங்ககிட்ட போறா. நீ ஏதோ ஒரு தேவைக்காக உன் வாழ்க்கையில ஆம்பளைங்கள வெச்சிருந்திருக்க. அதுக்கு நீ வெச்சிக்கிட்ட பேரு காதல்.
உன்கிட்ட தன்மையாதான் பேசனும்னு வந்தேன். உன் மனச காயப்படுத்தனும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. ஆனா நீ விடக்கூடாத வார்த்தை எல்லாம் சொல்லிட்ட. சோ உனக்கு இந்த ரேஷ்மா யாருன்னு காட்ட வேணாமா செல்லம். அதுக்குத்தான் என் ப்ளான் எல்லாம் முன்கூட்டியே உன்கிட்ட சொல்லிட்டேன். என் ப்ளான் எப்போமே ரொம்ப பக்காவா இருக்கு. இன்னும் உனக்கு நிறைய டைம் இருக்கு. நீ க்ரிஷ்ஷ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னின்னா நான் எதுவுமே பண்ண தேவையில்ல. எல்லோரோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும். என்ன ஷக்திதான் கொஞ்ச நாளைக்கு உன்ன மிஸ் பண்ணிட்டோம் என்ற கவலைல இருப்பாரு. அத நான் பார்த்துக்குறேன். உனக்கு ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ள உன் முடிவ சொல்லு. இப்போ நான் போறேன்" என்று கூறி ரேஷ்மா சென்றாள்.
ரேஷ்மா சென்ற சில நொடிகள் என்ன நடந்தது என்றே மீனாக்ஷிக்கு புரியவில்லை. இது ஒரு கனவாக இருக்க கூடாதா என்று அவள் மனம் ஏங்கியது. ஆனால் இந்த பிரச்சினையை எப்படியும் சுயமாக யோசித்து இதில் இருக்கும் சிக்கல்களை விடுவிக்க வேண்டும் என்று எண்ணி தனது அடுத்த நடவடிக்கைக்கு தயாரானாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro